-
4th June 2015, 10:25 AM
#611
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
chinnakkannan
ராஜேஷ்.. கோட்க்கு ரிப்ளை பண்ணும் போது முழுதாகத்தரவேண்டியதில்லையே.. கொஞ்சம் டெலீட் பண்ணி ப் போடுங்களேன்..இது சின்ன ரெக்வஸ்ட்..
Naan quote panradhe illa. romba naal kazhichu mannava mannavakku thaan potten
ok will delete & put
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
4th June 2015 10:25 AM
# ADS
Circuit advertisement
-
4th June 2015, 10:26 AM
#612
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
g94127302
Ck - நீங்கள் சொல்வதிலும் , திரு கல்நாயக் சொல்வதிலும் , மிகுந்த முரண்பாடு உள்ளது - காதல் பாடல்களை மட்டும் ஒருவர் போடுவதால் அவர் என்றுமே மார்கண்டேயனாகவும் , பாடல்களில் முதுர்ச்சி இருந்தால் , அந்த ஒருவர் 90 வயதிற்கும் அதிகமாக இருக்ககூடும் என்று நீங்கள் இருவரும் சொல்வது --- எங்கோ உதைக்கின்றதே !! - இந்த சின்ன வயதில் நான் உங்கள் தத்துவங்களை புரிந்துகொள்வேன் என்று நீங்கள் இருவரும் என்னிடம் எதிர்ப்பார்ப்பது உங்கள் இருவரின் வயதிற்கும் , அனுபவத்திற்கும் , முதுர்ச்சிக்கும் அழகல்ல - காதலுக்கு வயதில்லை - வாத்தைகளில் பக்குவம் 4 வயதில் கூட வரலாம் என்பதே என்னுடைய வாழ்க்கை அனுபவம் ..
அன்புடன்
அப்ப பக்தி பாடல்கள் போடும் என்னை எந்த லிஸ்டில் சேர்ப்பார்கள்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
4th June 2015, 10:31 AM
#613
Senior Member
Seasoned Hubber
மறந்த பாடல்களின் தொடர்ச்சி
இது சித்ரா வந்த புதிதில் பாடிய பாடல். சித்ராவின் குரல் சன்னமாக இருக்கும். இளையராஜா கொஞ்சம் அடக்கியே வாசிச்சுருப்பார்.
வாலி ஐயாவின் வரிகளில்
மலரே பேசு மெளன மொழி
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
4th June 2015, 11:00 AM
#614
Senior Member
Senior Hubber
மலரே பேசு மெளன மொழி நல்ல பாடல் ராஜேஷ்.. தாங்க்ஸ்.. கோச்சுக்கலையே..
நீர் ஞானசம்பந்தர்ங்காணும்.. மதுரை பொன்னுக்கோனார் பால் கடையில் பசும்பால் அருந்தினீரே! ( நினைவிருக்கா.. கிருஷ்ணன் கோவில் பக்கத்திலன்னு நினைவு)
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
4th June 2015, 11:47 AM
#615
Senior Member
Senior Hubber
பதினைந்தாம் தேதிவரை வெய்யிலாம்..கடுமையாக இருக்குமாம்.. இன்று 47 நாளை 48 என டிகிரி கூடினாலும் ஹ்யுமிடிட்டியும் 38 வரை இருப்பதால் அனல் பறக்கிறது.. நேற்றிரவு பத்து மணிக்கு கீழே ஃப்ளாட் டை விட்டு எதற்கோ சென்ற போழ்தில் ஒரே சோஓஓகம்.. தக தக தக எனத்தகித்த்து..
வீடுவந்து அடங்கவும் கொஞ்சம் சமயமானது.. படுக்கையில் படுத்தாலும் (பதினொன்றரை) உறக்கம் வரவில்லை. ஏசி தானிருப்பினும் என்னமோ ஒரே மனதுக்குள் குடை குடையென்று ஒரு துன்பம்..
ஏசியின் உறுமல்..அப்புறம் வெளியில் கேட்கும் சில பல நுண்ணிய ஓசைகள் கேட்டவண்ணம் கண்ணை இறுக்க மூட “என்ன சேட்டா.. உறக்கம் வல்லையா” என அன்புடன் கேட்டு வந்த லஷ்மி மேன்னைப் புற்ம் தள்ளித்தூங்கியே விட்டேன்..
இப்போது யோசித்தால் தூக்கம் எப்படி வருகிறது.. ஓசையெல்லாம் ஒதுக்கிக் கான்செண்ட்ரேட் செய்தால் வந்துவிடுகிறது..
இதுவே தேவாரத்திலும் வ்ருகிறது..
ஓசையெலாம் அற்றால் ஒலிக்குந் திருச்சிலம்பின்
ஓசைவழிச் சென்றங் கொத்தொடுங்கில் – ஓசையினின்
அந்தத்தான் அத்தான் அரிவையுடன் அம்பலத்தே
வந்தொத்தான் அத்தான் மகிழ்ந்து.
ஓசையெலாம் அற்றால் ஒலிக்கும் திருச்சிலம்பின்
ஓசை வழியே சென்று ஒத்து ஓடுங்கின் ஓசையினின்
அந்தத் தானத்தான் அரிவையுடன் அம்பலத்தே
வந்து ஒத்தான் அத்தான் மகிழ்ந்து.
இறைவன் பரமன்.. உலகில் உள்ளபற்றுகளை விட்டவர்களுக்கு சிவனின் பாதம் கிடைக்கும்..அவர்கள் கீழே வைக்கப் பட்ட மணியின் நாக்கைப் போல அமைதியாக இருப்பர்.
அப்படிப் பட்டவர்களுக்கு என்ன ஆகிறதாம்..
இப்படி பற்றுவிடுபவர்களுக்கு உலகத்தில் உள்ள இக ஓசைகள் ஒரு பொருட்டே அல்ல. அப்படி இறைவனாகிய பரமசிவனின் திருவடிகளில் இருப்பவர்களுக்கு அந்த ப் பரமனின் காற்சிலம்பின் ஒலி மட்டும் தனியாக்க் கேட்குமாம்..
அதுவும் அதைக் கேட்டவண்ணம் இருந்தால், அந்த ஒலியைத்தொடர்ந்தவண்ணம் இருந்தால் தில்லையம்பல ராஜாவாகிய அவனும் உடன் சிவகாமியம்மையும் ஆடும் திரு நடனக் காட்சியைத்தந்து இறைவன் அடியார்களுக்கு அருளுவானாம்..
இப்படி திருக்களிற்றுப்பாடியார் கூறுகிறார்..
*
சிலம்பு பிறந்த்தம்மா சிவலிங்கச் சாலையிலே
பிரம்பு பிறந்த்தம்மா பிச்சாண்டி சன்னிதியில்
உடுக்கை பிறந்த்தம்மா உருத்திராட்ச பூமியிலே
பம்பை பிறந்த்தம்மா பளிங்குமா மண்டபத்தில்.. என்கிறார் கண்ணதாசன்..
*
செங்கலின் வண்டு சிலம்பு புலம்பொடு – என்கிறார் அபிராமி அந்தாதியில் அபிராமி பட்டர்..
அவரையே பாட வச்சுடலாம்.. கொஞ்சம் வெய்யில் குறைக்கறதுக்கு அபிராமி கிட்டச் சொல்லி சிவன் கிட்ட ச் சொல்லிடுவார்..இல்லியோ
*
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
4th June 2015, 01:10 PM
#616
Junior Member
Seasoned Hubber
CK -எங்கேயோ ( இந்த வெயில்லிலே ) போயிட்டீங்க !!
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
4th June 2015, 03:05 PM
#617
Senior Member
Seasoned Hubber
திலக சங்கமம் & Sivaji Ganesan Definition of Style 24
குங்குமம்
வணங்காமுடி மிக உயரமான கட்அவுட்டின் மூலம் தமிழ் சினிமா விளம்பர வரலாற்றிலும் சிவாஜி ரசிகர் மனதிலும் நீங்கா இடம் பெற்றவர் மோகன் ஆர்ட்ஸ் மோகன். நடிகர் திலகத்தின் மேல் உயிரையே வைத்திருந்தார். அது இன்னும் அவருடயை குடும்பத்தில் மூன்றாம் தலைமுறை வரையிலும் தொடர்வது சிறப்பு.
அவருடைய சொந்த பேனரான ராஜாமணி பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டு வெளிவந்த பாசமலர் உலகப் புகழ்பெற்று வரலாற்றில் இடம் பெற்றது. அதனுடைய பிரம்மாண்டமான வெற்றி அந்நாட்களில் மக்களிடையே மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
அதனுடைய தொடர்ச்சியாக நடிகர் திலகத்தை வைத்து அடுத்த படம் தயாரிக்கத் திட்டமிட்டார் மோகன். இயக்குநர்கள் கிருஷ்ணன் பஞ்சு இரட்டையர்கள் இயக்க, விறுவிறுப்பான மர்ம நாவலாக அமைந்த கதை படமாக்கப்பட்டு குங்குமம் என்று பெயரிட்டு வெளிவந்த்து. படத்தில் பல சிறப்புகள் அமைந்தன.
1962ம் ஆண்டில் அமெரிக்க அரசின் அழைப்பை ஏற்று நடிகர் திலகம் அமெரிக்க விஜயம் மேற்கொண்டபோது அங்கு பல இடங்களுக்கு சென்று திரையுலக, நாடக மற்றும் வானொலி அறிவியல்களைப் பற்றி கண்டும் கேட்டும் அறிந்து கொண்டார். அவ்வாறு அங்கு அவர் சென்ற பல இடங்களில் எடுக்கப் பட்ட புகைப்படங்கள் அணிவகுக்க குங்குமம் படத்தின் டைட்டில் காட்சிக்காகவே மக்கள் திரையரங்கைப் படமெடுத்தனர். அது மட்டுமின்றி சென்டிமென்டாக குங்குமம் பாடலும் மக்களிடம் ஆழமாக வேரூன்றி விட்டது.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு என்று சொல்வது போல், நடிகர் திலகம் பெண் வேடமிட்டு நடித்ததும் இப்படத்தில் தான். இதுவும் இன்று வரை ரசிகர்களால் சிலாகிக்கப் படும் காட்சியாக உள்ளது.

குங்குமம் திரைப்படத்தின் கதைச் சுருக்கம், ஆங்கிலத்தில் -
விக்கிபீடியா இணையதளத்தில் - http://en.wikipedia.org/wiki/Kungumam_(film)
குங்குமம் திரைப்படத்தைப் பற்றி NOV அவர்களின் அருமையான கருத்துரை -
http://www.mayyam.com/talk/showthrea...=1#post1134167
இப்படத்தில் நடிகர் திலகத்தின் நடிப்பு குறிப்பாக ஸ்டைல் மிகவும் பிரசித்தி பெற்றது. பூந்தோட்டக் காவல்காரா பாடல் காட்சியில் அவர் இரு கைகளையும் சொடுக்குப் போட்டவாறே நடந்து வரும் காட்சி ரசிகர்களின் பேராதரவை எப்போதும் பெறும், பலத்த கரகோஷம் விண்ணை முட்டும்.
விஜயகுமாரி நடிகர் திலகத்தின் ஜோடியாக நடித்தாலும் புதுமுகம் சாரதாவின் இளமைத் தோற்றமும் ஈடு கொடுத்து நடித்த சிறப்பும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.
இவ்வாறு பல சிறப்புகளைத் தன்னுள் அடக்கியிருந்தாலும் எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடுவது அந்த நடிப்புக் கடவுளின் வித்தியாசமான நடிப்பும் மேனரிஸமும்.
பாடல்களைப் பொறுத்தவரையில் ஒரு பாடலைத் தவிர மற்ற அனைத்தையும் கவியரசர் கண்ணதாசன் எழுதியவை.
ஒரே ஒரு பாடல் ... கே.வி.எம். என்ற பெயர் இருக்கும் வரை பாடப்படும் பாடல்... எஸ்.ஜானகி அவர்களுக்கு, சிங்கார வேலனே பாடலுக்குப் பிறகு மிகப் பெரிய அளவில் புகழ் தேடித்தந்த பாடல்.. தொலைக்காட்சிகளில் அன்றாடம் ஏதாவது ஒரு சேனலில் ஒளிபரப்பாகிக் கொண்டே இருக்கும் பாடல்.. தொலைக்காட்சிப் பாட்டுப் போட்டிகளில் போட்டியாளர்களால் தவறாமல் பாடக்கூடிய பாடல்.. இப்படி பல சிறப்புப் பெற்ற பாடல் ... சின்னஞ்சிறிய வண்ணப்பறவை ... இப்பாடலை இயற்றியவர் பஞ்சு அருணாச்சலம் அவர்கள்.
சிகரம் வைத்தாற்போல் அமைந்தது இன்று நாம் காண இருக்கும் இப்பாடல் காட்சி.
பாடகர் திலகம் டி.எம்.எஸ்., இசையரசி சுசீலா இவர்கள் இணைந்து பாடி, திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவனின் இசையமைப்பில் காலத்தை வென்று நிற்கும் அட்டகாசமான பாடல் தூங்காத கண்ணென்று ஒன்று. இந்தப் பாடலின பாதிப்பில் ஒரு படத்திற்கு தலைப்பாகவே இப்பல்லவி பயன்பட்டதிலிருந்தே இதனுடைய சிறப்பை உணரலாம்.
வித்தியாசமான ஒலியில் இனிமையாக ஒலிக்கும் வீணையுடன் தொடங்குகிறது பாடல். பின் வயலின் தொடரும் போது மாருதி ராவின் கேமிரா மெல்ல நாயகியை நோக்கிச் செல்கிறது. இயக்குநர்களின் இசை ரசனை இப்பாடல் முழுதும் தெரிகிறது. அதற்கு உதாரணமாக, கிடாரின் தாள லயத்திற்கேற்ப நாயகி ஊஞ்சலாடுவதாக அமைத்திருக்கிறார்கள். நாயகி பல்லவியைப் பாடுகிறாள், தூங்காத கண்ணென்று ஒன்று. நாயகியின் பல்லவி முடிகிறது. ரசிகர்களின் ஆரவாரம் ஆரம்பிக்கிறது.
பக்கவாட்டில் பார்த்தவாறு பாடத்துவங்குகிறார் நடிகர் திலகம். பாடியவாறே மிகவும் நளினமாக மெதுவாக முகத்தை இடப்புறம் திருப்பி நேர் பார்வையில் பாடுகிறார். கைகள் கட்டிக் கொண்டிருக்கும் அழகைப் பாருங்கள். தான் மாறுவேடத்தில் நடிப்பதற்காக ஏற்றிருக்கும் அந்த ஆசிரியர் வேடத்திற்குரிய மரியாதையை அந்த கைகட்டுதலில் கொண்டு வருகிறார். தந்தாயே நீ என்னைக் கண்டு என்ற வரிகளின் போது காலைக் கீழிறக்கி மீண்டும் இடப்புறம் திரும்பும் ஒய்யாரம். கை கட்டுதல் அப்படியே உள்ளது. இப்போது நாயகி பாட, இவர் பார்வையாளர் திசையில் நம்மைப் பார்த்த கோணத்தில் நடந்து வரும் கம்பீரம்... ஆஹா... உடனே உதட்டைப் பிரிக்காமல் ஒரு புன்முறுவல்.. அதைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்... வினாடி 1.04. ல் இந்த வசீகரம் ... இடம் பெறுகிறது. இப்போது அவர் முன்னால் அதே கம்பீரத்துடன் நடக்க, காமிரா பின் தொடர்கிறது, நாமும் தான். கதவைத் திறக்கிறார். ... கட்...
இப்போது இந்த 1.11 விநாடியில் அந்த ராட்சஸ ஸ்டைல் களேபரம் துவங்குகிறது.. கதவைத் திறக்கிறார்.. முற்றாத இரவொன்றில் நான் வாட என்ற வரிகளைப் பாடும் போது அந்த உடம்பை ஸ்டைலாக ஆட்டியவாறு நடந்து வரும் அழகு, முடியாத கதையொன்றை நீ பேச,, இந்த வரிகளின் போது குனிந்து கைகளை கட்டை மேல் வைத்து அவளைப் பார்க்க முற்படும் போது ,, எதற்கு தேவையில்லாமல் ஆசைகளை வளர்த்துக கொள்கிறாய், விட்டு விடு எனச் சொல்லும் பொருளில் தன் பார்வையை வீசுவது, ஸ்டைலின் உச்சகட்டமாய் இடது கையை முகவாய்க்கட்டை அருகில் கொண்டு செல்லும் அழகு, பூவோடு சேர்ந்து மணக்கும் நாரைப் போல், புதுமுகம் என்ற பதட்டம் சிறிதும் இன்றி நாயகி சாரதா அதே ஸ்டைலில் அட்டகாசமாக தன் உணர்வை இசையரசியின் ஜீவனுள்ள குரலில் வெளிப்படுத்துகிறார். அடுத்த பல்லவி தொடங்க, நாயகிக்கு பதிலாக இவர் பாடுகிறார், தீராத விளையாட்டு திரைபோட்டு விளையாடி நாம் காணும் உலகிங்கு ஒன்று இந்த வரிகளில் உள்ள உள்ளர்த்தத்தைக் கூட தன் விழிகளிலேயே அதுவும் அந்தக் கண்ணாடியைத் தாண்டி நமக்கு உணர்த்தும் உச்சகட்ட நடிப்பினை அளிக்க இவர் ஒருவரால் தான் முடியும். ஒளிப்பதிவாளர் மாருதிராவ் அவர்களுக்கு இந்த இடத்தில் சிறப்பு சபாஷ்.
இப்பாடலில் திரை இசைத் திலகத்தின் உத்தி மிகவும் பாராட்டுக்குரியது, புதுமையானதும் கூட, பாடலின் இனிமை, பாடல் வரிகளில் உள்ள ஆழம் இவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து சரணத்திற்கும் பல்லவிக்கும் இடையே மிகச் சிறிய நேரமே , சில வினாடிகளே, இடையிசை இடம் பெறுகிறது, அதுவும் பெரும்பாலும் வீணை வயலின் புல்லாங்குழல் மட்டுமே...
அடுத்து.. சூப்பரோ சூப்பர்..
வெகுதூரம் நீ சென்று நின்றாலும் விழி மட்டும் தனியாக வந்தாலும் என்று முதன் முறை பாடும் போது ஸ்டைலாக நடந்து வந்து அமர்வது, கண்ணாடியைக் கழட்டுவது, கண்ணைத் துடைப்பது, இரண்டாம் முறை பாடும் போது அதே உணர்வு, வேகத்துடன் அப்படியே ஒருக்களித்து சாய்வது, வலது கை படுக்கையில் ஊன்றிக் கொள்ள, இடது கை ஒரு ஃப்ரேமை மட்டும் பிடித்துக் கொள்கிறது. இதைத் தொடர்வது இன்னும் அட்டகாசம். ஒரு கையில் அந்த ஒரு ஃபிரேமைப் பிடித்து ஸ்டைலாக ஆட்டியவாறு, ஒய்யாரமாக படுத்திருக்கும் அந்த போஸில் அவர் பாடும் போது நாம் எங்கோ போய் விடுகிறோம். அதுவும் அந்த விழிமட்டும் தனியாக வந்தாலும் என்கிற வரியைப் பாடும் போது கண்ணாடி இப்படியும் அப்படியும் அசையும் போது, அந்தக் கண்ணாடியைக் கூட ரசிக்க வைத்து விடுகிறார் மனிதர். கண்ணாடிக்கும் உயிர் கொடுக்கும் மனிதர் இவர் மட்டும் தான்.. தொடர்ந்து நாயகி சரணத்தை முடித்து வைக்க, இறுதியாக பல்லவி தொடங்குகிறது. ஒருக்களிப்பில் இருந்து எழுகிறார்.. மேஜைக்கருகில் செல்கிறார். விக்கைக் கழட்டுகிறார்.
விக்கைக் கழட்டினால் பார்க்க சகிக்காது என்பார்கள். .. ஆனால் இவரோ ... விக்கைக் கழட்டிய பிறகு இன்னும் அழகாக அல்லவோ காட்சியளிக்கிறார்.
பாடல் முடிகிறது.. ஆனால் நாம் .. இன்னும் அதிலிருந்து மீளவில்லையே..
கை தானாக இந்தப் பாடல் காட்சியை REPLAY செய்யும் வகையில் க்ளிக் செய்கிறதே...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 5 Likes
-
4th June 2015, 03:18 PM
#618
Senior Member
Diamond Hubber
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்

(நெடுந்தொடர்)
5
அடுத்து பாலாவின் இன்னொரு ரசமான பாடல். 'மாலதி' திரைப்படத்திலிருந்து.
அதற்கு முன்னால் 'மாலதி' படத்தின் முன்னோட்டம்.
'மாலதி' (1970)

நடிகர்கள்: ஜெமினி கணேசன், ரவிச்சந்திரன், சரோஜாதேவி, வரலக்ஷ்மி, நாகேஷ், சுந்தரராஜன், 'தேங்காய்' சீனிவாசன்
படம் வெளி வந்த ஆண்டு: 29-10-1970
தயாரிப்பு:-சித்ரா புரொடக்ஷ்ன்ஸ்
பாடல்கள்:-"கவியரசு"கண்ணதாசன்
மூலக்கதை:-கோமதி சுப்ரமணியம்
இசை: "மெல்லிசை மன்னர்" எம்.எஸ்.விஸ்வநாதன்.
திரைக்கதை,வசனம், இயக்கம்: கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.
'இயக்குநர் திலகம்' கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்கள் இயக்கத்தில் வெளி வந்த படம். 'காதல் மன்ன'னும், 'கலை நிலா'வும் இணைந்து நடித்த குடும்பச் சித்திரம்.
'கதை:
ஜெமினியும் சரோஜாதேவியும் காதலர்கள். சந்தர்ப்பவசத்தால் சரோஜாதேவி ரவியைத் திருமணம் செய்ய நேரிடுகிறது. ரவி குடிகாரனாகவும், பெண் பித்தனாகவும் அலைய, சரோஜாதேவி பொறுமை காத்து பழைய காதலனையும் ஆறுதல்படுத்தி, தன் குடிகாரக் கணவரைத் திருத்த சபதமெடுத்து, அவனால் பற்பல இன்னல்களை அனுபவித்து இறுதியில் அவனைத் திருத்தி வெற்றிவாகை சூடுவதே கதை.
இயக்குனர் திலகத்தின் குடும்ப செண்டிமெண்ட் வசனங்கள் ஆழாமாயும், கருத்துள்ளதாகவும் இருந்தது.

ரவியும் குடிகாரனாகவும் பெண் பித்தனாகவும் நன்றாகச் செய்திருப்பார். தான் செய்பவை தவறுகள் என மனைவி உணர்த்தியபின் உணர்ந்து மீண்டும் பழக்க வழக்கங்களில் இருந்து விடுபடமுடியாமல் தவிப்பதும், தன் தவறுகளைத் திருத்திக் கொள்ள முடியாமல் மனைவியிடம் புலம்புவதும் ரவிக்கு நடிக்க சந்தர்ப்பம் வாய்த்த இடங்கள். அதை அவரும் நன்றாகப் புரிந்து பயன்படுத்திக் கொண்டிருப்பார். ஜெமினி ஆரம்ப கால சரோஜாதேவியின் காதலனாக வந்து காதல் லீலைகளில் ஈடுபடுவது வழக்கம் போல. 'சிவந்தமண்' மேஜிக் ராதிகாவும் உண்டு. இவரும் K.S.G.யின் நிறையப் படங்களில் நடித்துள்ளார். (சின்னஞ்சிறு உலகம்' படத்தில் கே. ஆர் விஜயாவுக்கு அடுத்தபடியான ஹீரோயினாக வருவார். 'புதுமைப் பெண்களடி... பூமிக்குக் கண்களடி'...என்ற பாடல் கூட அவருக்கு கோஷ்டியுடன் உண்டு).
ஹீரோயின் சப்ஜெக்ட் என்பதால் அபிநயசரஸ்வதிக்கு படம் நெடுக சுமைதாங்கியாய் வேலை. சற்று வயது முதிர்ந்த இரண்டாவது ரவுண்ட் வந்த சரோஜாதேவியை இதில் காணலாம். எனவே டூயட் சீன்கள் கொஞ்சம் நெருடல். இருந்தாலும் இந்தக் கால ஹீரோயின்களை விட நன்றாகவே சோபிப்பார். (இந்தக் கால இளசுகளின் சுடிதாரை அப்போதே அணிந்து அசத்தியிருப்பார்) தேங்காய் ரவியின் நண்பனாக வந்து சகல பழக்கங்களையும் ரவிக்கு கற்றுத் தருகிறார். அவருக்கு அது ச்சும்மா..என்பது போல.
K.S.G.யின் ஆஸ்தான நடிகை வரலக்ஷ்மி இல்லாமலா?... நாகேஷ் கிச்சு கிச்சு மூட்டுகிறார். மேஜரும் தன் பங்குக்கு குறை வைக்கவில்லை.

மீண்டும் ஒரு சாகா வரம் பெற்ற மார்க்கண்டேய டூயட். பாலா சுசீலா இணைவில்.
இந்தப் பாடலை கேட்க கேட்க கற்பனையையும் மீறிய சுகம்தான். சுகமோ சுகம்தான்.
அடித்தார் இந்த தடவையும் லக்கி பிரைஸ் ஜெமினி. இயற்கை என்னும் இளைய கன்னி துணையுடன் காஞ்சனாவுடன் 'சாந்தி நிலைய'த்தில் ஆட்டம் போட்டவர் 'மாலதி'யில் அபிநய சரஸ்வதியுடன் ஸ்டுடியோ கடற்கரை செட்டில் 'கற்பனை கை வந்தபடி' ஆட்டம் போடுகிறார். இப்போதும் அவருக்கு பாலா குரல்.
ராஜேஷ்ஜியின் செல்ல நாயகிக்கு அவருடைய செல்லப் பாடகி பின்னணி.
ஒரு ஈச்ச மரம், இரண்டு சவுக்கு மரம், இரண்டு மூன்று மணல் திட்டுக்கள் ஒரு மீன் வலை, நான்கைந்து கட்டுமரம் என்று அன்றைய வழக்கமான கடற்கரை செட். கஞ்ச செட். ஆனால் உறுத்தாது. கே.எஸ்.ஜி சிக்கனக்காரர். வசனம் வண்டி வண்டியாக எழுதுவதில் ரொம்ப தாரளக்காரர்.
ஆனால் மனுஷர் பக்திப் படமென்றால் பணத்தை 'கற்பக' விருட்சமாக வாரி இறைப்பார். (ஆதி பராசக்தி, தசாவதாரம்) போட்ட முதலீட்டை மூன்றாக எடுப்பார். அப்புறம் பாலாபிஷேகம், அடுக்குமல்லி என்று கருப்பு வெள்ளையிலும் பணம் கறப்பார்.
'சிக்'கென்ற உடையில் சரோஜாதேவி. எப்போதும் அழகுதான். எளிமையாக ஜெமினி. செட்டை சுற்றி ஓட்டம்.
பாலா வழக்கத்தை விடவும் இனிமை. முன்னால் பாடிய பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் என்பதால் மனிதர் இன்னும் பின்னி குழைவுகளைக் கொடுப்பார்.

கற்பனையோ கைவந்ததோ
சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம்.
சுகமோ சுகம்... சுகமோ சுகம்.
'கற்பனையோ கை வந்ததோ' என்பதை இப்பாடல் முழுதும் அவர் உச்சரிக்கும் விதமே அலாதி. 'கற்பனையோ' என்னும் போது 'க'வுக்கும், 'ப'வுக்கும் நன்றாக அழுத்தம் கொடுத்து, மற்ற வார்த்தைகளுக்கும் தேவையான அழுத்தத்தை விட இன்னும் அதிகம் கொடுத்து (நல்ல பேஸ் வாய்சில் ஆரம்பிப்பார்) அலம்பல் பண்ணி நம்மை இன்பப் புலம்பல் புலம்ப விடுவார் பாலா.
(சுகமோ சுகம்... சுகமோ சுகம் என்ற குழைவில் சுகம் நிஜமாகவே தாலாட்டும்)
கற்பனையோ கைவந்ததோ
சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம்.
சுகமோ சுகம்... சுகமோ சுகம்.
அன்று காதல் கண் கொண்டு
நீ பார்த்த பார்வை
இன்று கனியானதோ
என்ன சுகமோ சுகம்
('நீ பார்த்த பார்வை'... சற்றே சுசீலா வார்த்தைகளை இழுத்து உச்சரிப்பார். இது ஒரு தனி சுகம்)
அன்று காதல் கண் கொண்டு
நீ பார்த்த பார்வை
இன்று கனியானதோ
என்ன சுகமோ சுகம்!
உந்தன் கையில் விழுந்தேனோ கன்னிக் கனியே
இல்லை கள்ளில் விழுந்தேனோ செல்லக் கிளியே
(பனங் கள்ளிலா? தென்னங் கள்ளிலா?
காதலி கையில் விழுவது போதை தரும் கள்ளில் விழுவது போலவாம். கண்ணதாசா! நீயெல்லாம் இறந்திருக்க வேண்டுமா? இருந்திருக்க வேண்டாமா?)
யாரும் சொல்லித் தெரியாத இன்பக் கலையே
அதை அள்ளிக் கொள்ள வந்தேன் தன்னந்தனியே
பார்த்தது...
போதுமா?
கேட்டது...
வேண்டுமா?
சுகமோ சுகம்...
சுகமோ சுகம்...
சுகமோ சுகம்.
(இப்போது வரும் இடையிசையை எப்படி புகழ்வது? டிரம்பெட்டின் அந்த மயக்கும் ஓசை. விசு விஸ்வரூபம் எடுப்பார் இந்த இடத்தில். கவனித்துக் கேளுங்கள்.)
கற்பனையோ கைவந்ததோ
சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம்.
சுகமோ சுகம்... சுகமோ சுகம்...
ஒரு கோடித் தாமரை கொடியோடு வளைத்து
என்னை சிறை செய்ததோ என்ன சுகமோ சுகம்
ஒரு கோடித் தாமரை கொடியோடு வளைத்து
என்னை சிறை செய்ததோ என்ன சுகமோ சுகம்
என்னைக் கட்டி வைத்த விலங்கோ
கண்கள் இரண்டும்
(காதலன் கண்கள் இரண்டும் இவளை முழுதும் பூட்டும் விலங்காம் இவளுக்கு)
அங்கு வெட்டி வைத்த கரும்போ
கன்னம் இரண்டும்
உன்னைக் கண்டு கண்டு ரசித்தே
என்னைக் கொடுத்தேன்
(அடடா! கவிஞன் 'நங்கூரம்' போட்டு நிற்கிறாரய்யா இந்த வரியில். காதலியைப் பார்த்து பார்த்து ரசித்து ரசித்தே அவளிடம் தன்னைக் கொடுத்து விட்டானாம். பார்த்ததற்கே இப்படி என்றால்...)
அங்கு காதலென்னும்
அமுதை அள்ளிக் குடித்தேன்.
பார்த்தது...
போதுமா?
கேட்டது...
வேண்டுமோ?
சுகமோ சுகம்...
சுகமோ சுகம்...
சுகமோ சுகம்.
கற்பனையோ கைவந்ததோ
சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம்.
சுகமோ சுகம்... சுகமோ சுகம்.
வரிகளும், இசையும், பாலாவும், சுசீலாவும் போட்டி போடுகின்றனர். ஆரோக்கியமான போட்டி. வெற்றி நமக்கு. கோடையில் நுங்கு நீர் போல, வாடையில் மல்லிகை போல, வசந்தத்தில் தென்றல் போல, குளிரில் குமுட்டி அடுப்பைப் போல எல்லாக் காலங்களிலும் எல்லையில்லாக் களிப்பை நமக்கு ஊட்டும் அதியற்புத பாடல் இது.
Last edited by vasudevan31355; 4th June 2015 at 03:32 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
4th June 2015, 03:53 PM
#619
Senior Member
Senior Hubber
பூவின் பாடல் 23: "பூப்பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை"
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அடுத்த பூப்பூ பாடல் பயங்கர எதிர்பார்ப்பை உருவாக்கிய படத்திலிருந்து. அழகான கதாநாயகன் அரவிந்த சுவாமி என்ன, இந்தியிலிருந்து வரும் அழகு தேவதை கஜோல் என்ன, நடனப் புயல் பிரபு தேவா என்ன, இசைக்கு ஏ. ஆர். ரகுமான் என்ன. இத்தோடு பிரபலமாகிக்கொண்டிருந்த ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் இயக்கும் முதல் படம். ஏவிஎம்மின் பிரமாண்ட தயாரிப்பு. எதிர்பார்ப்பு எகிறாமல் என்ன செய்யும்? அப்புறம் என்ன வழக்கம் போல்தான் என்றாலும் பாடல்கள் ஓரளவு எதிர்பார்ப்பை திருப்தி படுத்தியது என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்த பூப்பூக்கும் ஓசை பாடல் வைரமுத்து எழுத (வரிகளைப் பார்த்தாலே சொல்ல முடிகிறதே), பாடகி சுஜாதா பாட, கல்லூரி மாணவிகள் ஒரு நடன நிகழ்ச்சிக்கு பாடி ஆடுவதாக வந்தது. இளமைதான். என்ன சி.க.வை நினைவு படுத்துவது போலவும் ஒரு வரி இருக்கிறது. "பசிகொண்ட நேரம் தாளிக்கும் ஓசை சந்தோஷ சங்கீதம்". இதெல்லாம் சரி இந்த வரிகளுக்கு யாராவது பொருள் விளக்கம் தந்தால் சந்தோஷப்படுவேன். பாருங்களேன் சி.க.வே கொடுத்திடுவார்.
ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே மங்கலாரே பங்கலாரே
கோரி கோரி பையா
ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஜங்கலாரே ஜங்கலாரே
தூமீராகே தையா
சரி இந்த பாடல் என்ன சங்கீதத்திற்கு விளக்கமா கொடுக்கிறது? என்னமோ போங்க (சி.க.விற்கு நன்றி)
பாடல் வரிகள் இதோ:
-------------------------------
பூப்பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை
புல் விரியும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை
பூப்பூக்கும் ஓசை..
பட்சிகளின் குக்குக்கூ பூச்சிகளின் ரிங் ரிங் ரிங்
சங்கீதம் சொல்லித்தருமே தங்கப் பெண்ணே
காலோடு சலங்கை பூட்டி கரையெல்லாம் வீணை மீட்டி
நதி பாடும் பாடல் கேளாய் பட்டுப்பெண்ணே
பூமி ஒரு வீணை இதைக் காற்றின் கைகள் மீட்டுதே
கேட்கும் ஒலியெல்லாம் அட சரிகமபதநிசரீ..
பூப்பூக்கும் ஓசை..
கண் தூங்கும் நேரத்தில் மௌனத்தின் ஜாமத்தில்
கடிகாரச் சத்தம் சங்கீதம்
கண்கானா தூரத்தில் சுதி சேறும் தாளத்தில்
ரயில் போகும் ஓசை சங்கீதம்
பசிகொண்ட நேரம் தாளிக்கும் ஓசை
பசிகொண்ட நேரம் தாளிக்கும் ஓசை
சந்தோஷ சங்கீதம்
தாலாட்டும் அன்னைக்கெல்லாம் தங்கள் பிள்ளை மார்பை முட்டி
பாலுண்ணும் சத்தம் சங்கீதம்
ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே மங்கலாரே பங்கலாரே
கோரி கோரி பையா
ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஜங்கலாரே ஜங்கலாரே
தூமீராகே தையா
பூப்பூக்கும் ஓசை..
சிட் சிட்டுக் குருவிகளும் சில்லென்று நீராடி
சிறகுளர்த்தும் ஓசை சங்கீதம்
கரைக்கொண்ட பாறைமேல் கடல் பொங்க அலைவந்து
கைத்தட்டும் ஓசை சங்கீதம்
காற்றோடு தென்னை அசைகின்ற ஓசை
காற்றோடு தென்னை அசைகின்ற ஓசை
சிருங்கார சங்கீதம்
முத்தாடும் நீரின் மேலே தத்தித் தத்தித் தாவிச் செல்லும்
தவளைகள் ஓசை சங்கீதம்
ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே மங்கலாரே பங்கலாரே
கோரி கோரி பையா
ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஜங்கலாரே ஜங்கலாரே
தூமீராகே தையா
பூப்பூக்கும் ஓசை..
காணொளி இதோ:
---------------------------
எதிர்பார்த்து படம் பார்த்தவர்களுக்கு மின்சாரக்கனவாக இருந்தது.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
4th June 2015, 03:53 PM
#620
Senior Member
Senior Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
Bookmarks