-
4th June 2015, 03:56 PM
#621
Senior Member
Senior Hubber
பூப்பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை
புல் விரியும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை// வாரும் கல் நாயக்.. நேத்துக்கு வருத்வருத் வருத்தமெல்லாம் பட்டிருந்தீங்க நோ ப்ராப்ளம்..
பாருங்க ஓசைக்குஇந்தப் பாட் போடலாம்னு நினைச்சு க் கடைசியில அபிராமி ப்ட்டர் கிட்டபோய்ட்டேன்.. பார்த்த நீங்க குடுத்துட்டீங்க..அழகான பாட்.. படம் அவ்வளவா எனக்குப் பிடிக்கலை.. நன்றி..
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
4th June 2015 03:56 PM
# ADS
Circuit advertisement
-
4th June 2015, 04:54 PM
#622
அன்பு வாஸ்,கல்ஸ்,கலைஸ்,ராஜேஸ்,ராஜ்ஸ்,ரவிஸ்,கன்ஸ் (சி கே)
சில பல சொந்த மற்றும் அலுவலக பளுவினால் ஜோதியில் சங்கமிக்க முடியவில்லை. மன்னிக்கவும்.
பதிவுகள் அனைத்துமே அருமை . எதை சொல்ல எதை விட.
இன்று பாடும் நிலா பாலுவின் பிறந்த நாள் . வாசுவின் மாலதி பாடல் அதற்கு வாழ்த்தாக அமைந்து விட்டது. இதில் பாலாவின் இன்னொரு பாடல் கூட உண்டு 'சிடு சிடு சிடு சிடுவென எங்கே போவோம் . சிடு சிடு சிடு சிடுவென எங்கும் போவோம் ' செட் போட்டு காதல் மன்னன் அபிநய சரஸ்வதி ஸ்கூட்டர் ஓட்டுவது போல் ஒரு பாடல் வரும். ரவி அபிநய சரஸ்வதி ஜோடி rare combination .


சி கே கூறியது போல் வாசுவின் முத்தான பதிவு மாலதி பற்றியது
பதிவு 2121 ஜூலை 2014 'மாலதி' (1970) ஒரு சிறப்பு பிளாஷ்பேக்
1970 தீபாவளி ரிலீஸ் -நடிகர் திலகத்தின் சொர்க்கம்,எங்கிருந்தோ வந்தாள்,காவிய தலைவி ,மாலதி எல்லாமே நெல்லையில்
சொர்க்கம் - நெல்லை பாபுலர்
எங்கிருந்தோ வந்தாள் - நெல்லை ரத்னா
காவிய தலைவி - நெல்லை பார்வதி
மாலதி - நெல்லை லக்ஷ்மி
நன்றி வாசு நல்லதொரு மலரும் நினைவுகளை அசை போட வைத்ததற்கு
Last edited by gkrishna; 4th June 2015 at 05:08 PM.
gkrishna
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
4th June 2015, 05:20 PM
#623
என்னமோ போ கோபாலா
இன்று காலை எனக்கு என் நண்பர் (அவரை நாங்கள் செல்லமாய் கூப்பிடுவது அம்பி (துணிவே துணை அசோகன் அழைப்பது போல் கூபிடுவோம்-அம்பி அண்ணனை அள அள) அனுப்பி இருந்த மின் அஞ்சல் .ஒரு ப்ளாக் படித்ததாகவும் உடன் என்
நினைவு வந்ததாகவும் இதை நகல் எடுத்து அனுப்பி இருக்கிறார் .
நண்பர் கலை மற்றும் வினோத் அவர்களுக்கு சமர்ப்பணம் இந்த பதிவு

இது வெளிவராத படம் - நம்ம வாத்யார் என்றும் சொல்லி உள்ளார் .
எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா இணைந்து நடித்த 28 படங்களின் பட்டியல்
மக்கள் திலகமும் , புரட்சித் தலைவியும் இணைந்து நடித்துள்ள படங்கள் 28 , 14 வண்ணப் படங்களும் , 14 கருப்பு வெள்ளை படங்களிலும் நடித்த படங்கள் வெளி வந்துள்ளது .
28 படங்களின் பெயர்களும் , அவர்கள் நடித்த கதாப்பாத்திரங்களின் பெயர்களும் முறையே :
09/07/1965 - ஆயிரத்தில் ஒருவன்
கதாப்பாத்திரங்களின் பெயர் : ( மணிமாறன் / பூங்கொடி )
10/09/1965 - கன்னித்தாய்
கதாப்பாத்திரங்களின்பெயர் : ( சரவணன் / சரசா )
18/02/1966 - முகராசி
கதாப்பாத்திரங்களின் பெயர் : ( ராஜ்/ஜெயா )
27/05/1966- சந்திரோதயம்
கதாப்பாத்திரங்களின் பெயர் : ( சந்திரன்/தேவி )
16/09/1966 - தனிப்பிறவி
கதாப்பாத்திரங்களின் பெயர் : ( முத்தையா/மாலதி )
19/05/1967 - அரச கட்டளை
கதாப்பாத்திரங்களின் பெயர் : ( விஜயன்/மதனா )
07/09/1967 - காவல் காரன்
கதாப்பாத்திரங்களின் பெயர் : ( மணி /சுசீலா )
11/01/1968 - ரகசிய போலீஸ் 115
கதாப்பாத்திரங்களின் பெயர் : ( ராமு /லீலா )
23/02/1968 - தேர்த்திருவிழா
கதாப்பாத்திரங்களின் பெயர் : ( சரவணன் / வள்ளி )
15/03/1968 - குடியிருந்த கோயில்
கதாப்பாத்திரங்களின் பெயர் : (ஆனந்த் /ஜெயா )
24/04/1968 - கண்ணன் என் காதலன்
கதாப்பாத்திரங்களின் பெயர் - ( கண்ணன்/மல்லிகா )
27/06/1968 - புதிய பூமி
கதாப்பாத்திரங்களின் பெயர் - ( கதிரவன்/ கண்ணம்மா )
15/03/1968 - கணவன்
கதாப்பாத்திரங்களின் பெயர் - ( முருகன்/ராணி )
20/09/1968 - ஒளி விளக்கு
கதாப்பாத்திரங்களின் பெயர் -( முத்து / கீதா )
21/10/1968 - காதல் வாகனம்
கதாப்பாத்திரங்களின் பெயர் - ( பாலு / ராதா )
01/05/1969 - அடிமைப்பெண்
கதாப்பாத்திரங்களின் பெயர் - ( வேங்கைய்யன் - ஜீவா )
07/01/1969 - நம் நாடு
கதாப்பாத்திரங்களின் பெயர் - ( துரை / அம்மு )
14/01/1970 - மாட்டுகாரவேலன்
கதாப்பாத்திரங்களின் பெயர் -( வேலன் / லலிதா )
12/05/1970 - என் அண்ணன்
கதாப்பாத்திரங்களின் பெயர் - ( ரங்கன் / வள்ளி )
29/08/1970 - தேடி வந்த மாப்பிள்ளை
கதாப்பாத்திரங்களின் பெயர் - ( சங்கர் / உமா )
09/10/1970 - எங்கள் தங்கம்
கதாப்பாத்திரங்களின் பெயர் - ( தங்கம் / கலா )
26/01/1971 - குமரிக்கோட்டம்
கதாப்பாத்திரங்களின் பெயர் - ( கோபால் / குமரி )
18/09/1971 - நீரும் நெருப்பும்
கதாப்பாத்திரங்களின் பெயர் - ( மணிவண்ணன் / காஞ்சனா )
09/12/1971 - ஒரு தாய் மக்கள்
கதாப்பாத்திரங்களின் பெயர் - ( கண்ணன் / ராதா )
13/04/1972 - ராமன் தேடிய சீதை
கதாப்பாத்திரங்களின் பெயர் - ( ராமன் / சீதா )
15/09/1972 - அன்னமிட்ட கை
கதாப்பாத்திரங்களின் பெயர் - ( துரைராஜ் / சீதா )
10/08/1973 - பட்டிக்காட்டுப் பொன்னையா
கதாப்பாத்திரங்களின் பெயர் - ( பொன்னையா / கண்ணம்மா )
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
4th June 2015, 05:30 PM
#624
Junior Member
Seasoned Hubber
Courtesy: Tamil Hindu
எஸ்.பி. பாலசுப்ரமணியம் 10
உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இடம் பெற்றவரும் பன்முகத் திறன் கொண்டவருமான எஸ்.பி. பாலசுப்ரமணியம் (S.P.Balasubramaniam) பிறந்த தினம் இன்று (ஜுன் 4). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
# ஆந்திரப் பிரதேசம் நெல்லூர் மாவட்டத்தில் பிறந்தவர் (1946). தந்தை ஒரு இசைக் கலைஞர். ஹரிகதா காலட்சேபம் செய்வதில் புகழ் பெற்றவர். காளஹஸ்தி பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி.யும் திருப்பதி ஆர்ட்ஸ் கல்லூரியில் பி.யு.சி.யும் பயின்றார். இளம் வயதிலேயே பாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.
# தெலுங்கு சங்கம் ஒன்று நடத்திய பாட்டுப் போட்டியில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் முதல் பரிசை வென்றவர்களுக்கு வெள்ளிக் கோப்பை வழங்குவது வழக்கம். இரண்டு ஆண்டுகள் முதலில் வந்த இவருக்கு வெள்ளிக் கோப்பையைக் கொடுக்காமல் இருப்பதற்காக மூன்றாம் ஆண்டு வேண்டுமென்றே இரண்டாவது பரிசு என அறிவித்தனர்.
# அந்தப் போட்டிக்குத் தலைமை தாங்கிய பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி, இவர்தான் எல்லோரையும்விட சிறப்பாக பாடினார் என்று நிர்வாகிகளிடம் வாதாடி முதல் பரிசைப் பெற்றுத் தந்தார். வெள்ளிக் கோப்பையும் கிடைத்தது.
# சென்னை இன்ஜினியரிங் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்பதால் தொழில் கல்வி பயின்றார். 1966-ல் கோதண்டபாணி இசையமைத்த தெலுங்குத் திரைப்படத்தில் முதன் முதலாகப் பாடினார். தொடர்ந்து பல பாடல்களைப் பாடினார். தமிழில் முதன் முதலாக சாந்தி நிலையம் திரைப்படத்தில் பாடினார்.
# ஆனால் அது வெளிவரும் முன்பே எம்.ஜி.ஆர். நடித்த அடிமைப் பெண் படத்தில் இவர் பாடிய ‘ஆயிரம் நிலவே வா’ பாடல் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து ஏராளமான வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் ஷங்கர், ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட அனைத்து இசையமைப்பாளர்கள் இசையிலும் பாடியுள்ளார்.
# முறையாகக் கர்நாடக இசையைப் பயிலாத இவர், சங்கராபரணம் படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடல்களைச் சிறப்பாகப் பாடி உலகம் முழுவதும் பிரபலமானார். அதற்காக தேசிய விருதைப் பெற்றார். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட இவர், எந்த மொழியில் பாடினாலும் அந்த மொழிக்கேற்ற இயல்பான உச்சரிப்புடன் பாடுவது இவரது சிறப்பம்சம்.
# 40 ஆயிரம் பாடல்களுக்கும் மேல் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்றுள்ளார். தமிழக, கர்நாடக அரசுகளின் பல விருதுகளையும் ஆந்திர அரசின் நந்தி விருதினை 25 முறையும் வென்றுள்ளார். தமிழக அரசின் கலைமாமணி விருதைப் பெற்றுள்ளார்.
# 1981-ம் ஆண்டு பெங்களூரில் உள்ள ஒரு ரெகார்டிங் தியேட்டரில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரே நாளில் 21 பாடல்களைக் கன்னட இசையமைப்பாளர் உபேந்திர குமாருக்காகப் பாடிச் சாதனை புரிந்துள்ளார். தமிழில் ஒரே நாளில் 19 பாடல்களையும், இந்தியில் 6 மணி நேரத்தில் 16 பாடல்களையும் பாடிச் சாதனை செய்துள்ளார்.
# கமல், ரஜினி, பாக்யராஜ் உள்ளிட்ட பலருக்கு பல்வேறு மொழிப் படங்களில் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார். தென்னிந்திய மொழிகளில் 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் 45 திரைப்படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ளார்.
# 60-களில் தொடங்கிய இவரது இசைப் பயணம் நான்கு தலைமுறை நடிகர்களுக்குப் பின்னணி பாடிய ஒரே பாடகர் என்ற பெருமையுடன் அரை நூற்றாண்டைக் கடந்தும் இன்றும் அதே இளமைத் துள்ளலுடன் தொடர்கிறது.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
4th June 2015, 05:40 PM
#625
Senior Member
Senior Hubber
-
4th June 2015, 05:43 PM
#626
Senior Member
Senior Hubber
ஒரு சின் விளக்கம்.. நுங்கா அப்படின்னா என்ன - என்பதற்கு அதை அருந்தி ஒரு சில யுகங்கள் ஆகிவிட்டதென அர்த்தம்
-
4th June 2015, 06:46 PM
#627
Senior Member
Diamond Hubber
-
4th June 2015, 06:49 PM
#628
Senior Member
Diamond Hubber
//வாடையில் மல்லிகை நல்லாவா இருக்கும் ப்ரெளன் கலர்னா ஆகும்//
நான் வாசத்தை சொன்னேனாக்கும். வாடையில் வாடா மல்லிகை ரொம்ப மணக்கும் தெரியுமோ! பிராக்டிகலா பார்த்ததில்லையா?
Last edited by vasudevan31355; 4th June 2015 at 06:56 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
4th June 2015, 06:56 PM
#629
Senior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
4th June 2015, 06:58 PM
#630
Junior Member
Platinum Hubber
Krishna sir
thanks for your detailed list about our makkal thilagam mgr- jaya movies list with characters name.
Bookmarks