Results 1 to 10 of 4013

Thread: Makkal Thilakam MGR -PART 15

Threaded View

  1. #11
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Muthaiyan Ammu View Post
    நிலைக்க முடியாத அதிகாரம்

    கல்லூரிகளில் மாணவர் அமைப்புகள் செயல்படுவது வழக்கமான ஒன்றுதான். அதன் பின்னணியில் அரசியல் சாயம் இருப்பதும் தவிர்க்க முடியாததாகி விட்டது. அதுபோன்று அரசியல் சாயம் இருக்கக் கூடாது என்றால் எந்த மாணவர் அமைப்புமே அரசியல் சாயம் இல்லாததாக இருக்க வேண்டும். ஒரு சில அரசியல் சாயம் உள்ள அமைப்புகள் மட்டும் இருக்கலாம். வேறு சில அமைப்புகள் இருகக் கூடாது என்பது பாரபட்சம்.

    சென்னை ஐ.ஐ.டி. அகில இந்திய அளவில் புகழ் பெற்றது. இங்கும் சில மாணவர் அமைப்புகள் உண்டு. அதில் ஒன்று அம்பேத்கர்- பெரியார் வாசிப்பு வட்டம். இந்த அமைப்பு மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் உத்தரவையடுத்து தடை செய்யப்பட்டுள்ளது. காரணம், மத்திய பா.ஜ.க. அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டம் உட்பட சில செயல்பாடுகள், அரசின் முடிவுகள் குறித்து இந்த அமைப்பு விமர்சித்ததாம். அதற்காக தடை விதித்துள்ளனர். (தடை செய்யப்படவில்லை என்று ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஒருவருக்கு ஐஐடி இயக்குநர் மின்னஞ்சல் அனுப்பியுள்ளதாக தகவல். ஆனால் இயக்குநர் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அப்படி அறிவித்தால் போராட்டம் ஏன் நடக்கப் போகிறது?) இதை எதிர்த்து மாணவர்களும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் போராடி வருகின்றனர்.

    அதே ஐ.ஐ.டி.யில் பா.ஜ.மற்றும் ஆர்எஸ்எஸ் பின்னனி கொண்ட மாணவர் அமைப்பும் செயல்படுகிறது. அதுவும் கடந்த காலங்களில் காங்கிரஸ் அரசின் கொள்கைகளை விமர்சித்திருக்கிறது. பா.ஜ. மற்றும் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள் அந்த அமைப்பின் சார்பில் ஐ.ஐ.டி வளாகத்துக்கு அழைக்கப்பட்டு கூட்டங்களில் பேசியுள்ளனர். காங்கிரஸ் அரசை கடுமையாக தாக்கியுள்ளனர். இப்போதைய அரசை ஆதரித்தும் தீர்மானங்கள் போட்டுள்ளனர். அப்போதெல்லாம் பா.ஜ.ஆதரவு மாணவர் அமைப்பு தடை செய்யப்படவில்லை.

    இப்போது, பா.ஜ. அரசின் கொள்கைகளை விமர்சிப்பதற்காக அம்பேத்கர் - பெரியார் வாசிப்பு வட்டத்தை தடை செய்வது ஜனநாயகமற்ற செயல். படிக்கும் மாணவர்களுக்கு அரசியல் எதற்கு? என்றால் எல்லா அமைப்புகளையுமே தடை செய்யலாமே? அம்பேத்கர் - பெரியார் (தடைக்கு இந்தப் பெயர்களும் ஒரு காரணம் என்று குற்றச்சாட்டு உள்ளது) வாசிப்பு வட்டத்தை மட்டுமே தடை செய்வது என்ன நியாயம்?

    ஒரு அரசை குறிப்பிட்ட கட்சி ஆளலாம். ஆனால், அரசு எல்லாருக்கும் பொதுவானது. சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட அமைப்பையோ, பிரிவையோ பாரபட்சமாக நடத்துவது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.

    ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக போராடி காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்ததற்காக மக்கள் திலகத்தை கைது செய்து சர்வாதிகாரியாக நடிக்கும் திரு.மனோகரின் தர்பாருக்கு அழைத்து வருவார்கள். கையில்லாத ரோஸ் நிற பனியன் போன்ற அங்கியில் தலைவரின் அழகை பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.

    ‘எந்தக் குற்றமும் செய்யாத நான் நிரபராதி’ என்று தலைவர் ஆக்ரோஷமாக கூறுவார். தலைவர் கூறும் சமாதானங்களை ஏற்க மறுக்கும் திரு.மனோகர், ‘நிலைத்து நிற்கும் என் அதிகாரத்தின் வலிமை புரியாமல் பேசுகிறாய்’ என்று கூறுவார்.

    ஸ்டைலாக தோள்களை குலுக்கி லேசான புன்சிரிப்புடன் தலைவர் சொல்லும் பதிலால் அரங்கமே அதிரும். இதை கடந்த ஆண்டுகூட பார்த்த அனுபவம் நமக்கு உண்டு. தலைவரின் பதில்....

    ‘உங்கள் அதிகாரம் என்ன சிலப்பதிகாரமா? என்றென்றும் நிலைத்து நிற்பதற்கு?’

    சிலப்பதிகாரத்தை தவிர எந்த அதிகாரமும் நிலைக்க முடியாதுதானே? ஜனநாயகத்தில் மக்கள்தான் எஜமானர்கள். ஆனால், ஆட்சியாளர்கள் இதை மறந்து விடுவது வேடிக்கை.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  2. Likes ainefal liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •