-
9th June 2015, 09:43 AM
#11
Junior Member
Veteran Hubber

Originally Posted by
esvee
தேர்தலில் சாதனை படைத்த எம்.ஜி.ஆர்
வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்- அதை
வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னைச் சேரும்
என்று தன் ரசிகர்களுக்கும், தொண்டர்களுக்கும் தனது வெற்றியைக் காணிக்கையாக்கிய எம்ஜிஆரின் தேர்தல் வரலாறு சுவையானது.
முதன்முதலாக அவர் மக்களை கடந்த 1962ல் திமுக கட்சியின் சார்பில் சந்தித்து வாக்கு சேகரித்தார். பின்னர் திமுக தலைவர் அண்ணா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க 1967ல் பரங்கிமலைத் தொகுதியில் வேட்பாளர் ஆனார்.
அந்த ஆண்டு அக்டோபர் 12ம் தேதி அன்று மாலை ஐந்தரை மணியளவில் பிரச்சாரத்திற்குக் கிளம்பிகொண்டிருந்த எம்ஜிஆரைச் சந்தித்த எம்.ஆர். ராதா அவரைத் துப்பாக்கியால் சுட்டார். கழுத்தில் கட்டுப்போட்ட எம்ஜிஆரின் சுவரொட்டிகள் திமுகவுக்கு பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்தது.
1972ம் ஆண்டு திமுகவை விட்டு வெளியேற்றப்பட்ட எம்ஜிஆர் தனிக்கட்சி தொடங்கி ஆறே மாதத்தில் திண்டுக்கல் இடைத்தேர்தல் வந்தது. அங்கு நிறுத்தப்பட்ட மாயத்தேவர் அமோக வெற்றிபெற்றார்.
அதிமுகவை எதிர்த்து நின்று நான்கு முக்கிய கட்சிகளும் டெபாசிட்டை இழந்தன. எம்ஜிஆர் மத்திய அரசோடு இணக்கமாக இருக்க விரும்பி இந்திரா காங்கிரசுடன் கூட்டுச்சேரும்போது நாடாளுமன்றத்துக்கு 2:1 என்று தொகுதிப் பங்கீடு செய்வார்.
இதுவே சட்டமன்றத்தேர்தல் என்றால் தமக்கு இரண்டு பங்கும் கூட்டணிக் கட்சிக்கு ஒரு பங்கும் பிரித்துக்கொள்வார். தனது வெற்றி பெரும்பான்மையான வெற்றியாக அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்.
கிறிஸ்தவ மதம் வலுவாக இருக்கும் சாத்தான் குளத்திலும், இசுலாமியர் நின்றால் மட்டுமே வெற்றிபெற முடியும் என்று கருதப்படும் வாணியம்பாடியிலும் இந்து வேட்பாளரை நிறுத்தி தனது செல்வாக்கால் வெற்றிப்பெறச் செய்வார். 1985ல் அவர் அமெரிக்காவில் சிகிச்சைபெற்று வந்த நிலையிலும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடினார்.
தொடர்ந்து மூன்றுமுறை சட்டசபை தேர்தலைச் சந்தித்து வெற்றி பெற்று தன் ஆயுட்காலம் வரை முதலமைச்சராக இருந்தவர் இவர் ஒருவரேயாவார்.
1980 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள், சாதகமாக அமையாததால், நம் புரட்சித்தலைவர் அவர்கள் தோற்றுவித்த பேரியக்கமாம் அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து, நாஞ்சில் மனோகரன், மொடக்குறிச்சி சுப்புலட்சுமி ஜெகதீசன், பி. டி. சரஸ்வதி, பி. சவுந்திர பாண்டியன், எட்மண்ட் போன்றோர் விலகினர். நம் புரட்சித்தலைவருக்கு துரோகம் செய்தவர்கள் வெட்கப்படும்படி மக்கள் சரியான தீர்ப்பினை 1980 சட்டமன்ற தேர்தல் மூலம் வழங்கினர்.
நம் புரட்சித்தலைவரின் புகழுக்கு களங்கம் கற்பிப்போரையும், அவரது செல்வாக்கை குறைக்க முயற்சிப்பவர்களையும் எந்த காலத்திலும் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை !
Last edited by makkal thilagam mgr; 9th June 2015 at 07:45 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
9th June 2015 09:43 AM
# ADS
Circuit advertisement
Bookmarks