-
9th June 2015, 11:10 AM
#831
Junior Member
Seasoned Hubber
மிகவும் அருமையான பதிவு - கிருஷ்னாஜி - மிகவும் ரசித்துப்படித்தேன் - உங்களிடம் எங்கள் எதிர்பார்ப்புக்கள் மிகவும் அதிகமாகி கொண்டுருக்கின்றன . உங்கள் வேகம் எங்கள் எதிர்பார்ப்புகளுடன் போட்டிப்போட முடியுமா ??
-
9th June 2015 11:10 AM
# ADS
Circuit advertisement
-
9th June 2015, 11:31 AM
#832
Senior Member
Veteran Hubber
krishna: I think the last line in 'anjana vaNNan' is "unjivar poividil naaik kugan endrenai odhaaro". I had this in intermediate in 1954 -1956 !
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
9th June 2015, 11:43 AM
#833
வாசுவின் பாலா நெடுந்தொடர் அருமை.
இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் பாலுவின் சாதனை பற்றி வெளியிட்டு உள்ள ஒரு செய்தி
SPB is Magic, No Matter What the Language
By Express Features Published: 09th June 2015 06:00 AM Last Updated: 08th June 2015 11:09 PM
CHENNAI: S P Balasubrahmanyams singing and songs transcend boundaries. Though it was mostly Telugu songs that were performed, the centenary auditorium at the Madras University was packed on Saturday evening.
People of all ages were present in the audience, enjoying the songs sung by SPB himself or his songs performed by the other playback singers for Swarabhishekam a musical extravaganza over the weekend. Telugu solo hits of SPB such as Antha Ramamayam from the film Sri Ramadasu and duets such as Kammani ee Premalekha from Guna and Edalo Tholi Velape, were performed by the singer. Children dancing and the older audience nodding their heads and tapping their feet to the rhythm were consistent throughout the show, which had no noticeable dull moments.
SPB pulled a massive fan following at the show on Saturday | R SATISH BABU
Although mainly a show for Telugu fans, the Tamil audience was not disappointed. A few Tamil songs such as Unakkenna Mele Nindrai one of the singers hit songs were performed. The song had perhaps been performed by the singer several times on stage before, but it still brought on a standing ovation from some members in the crowd. One of them was overheard saying, This is an M S Viswanathan composition and he was very young when he actually sung in the film. Look at how he reproduces it now, even in his 60s.
If Unakkenna Mele Nindrai received applause from the audience after the performance, claps for the mere mention of the film Sagara Sangamam (Salangai Oli in Tamil) ensued. And SPB sang Thakita Thadimi Thakita Thadimi Thandaana, which particularly pleased the older members of the audience, during whose time the film and the song were popular.
Besides his performance, there were also songs rendered by playback singer Karthik who sang the Telugu version of the song Aye Sinamika from Ok Kanmani (OK Bangaram in Telugu) that went Hey Anamika. He also sang the Tamil version of the song. Another noteworthy performance of his was Nee Maatalo Mounam from the film 180, which again has a Tamil equivalent Nee Korinaal from the same film. The Tamil-speaking fans enjoyed this even more, because they could sing along.
Other popular Telugu songs were rendered by playback singers such as Geetha Madhuri, Gopika Purnima, Hemachandra, Kalpana, Malavika and Mallikarjun. An appreciated performance of A R Rahmans Alaipayudhey, in Telugu again, was delivered by Kalpana and Gopika Purnima
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
9th June 2015, 11:48 AM
#834
Originally Posted by
g94127302
மிகவும் அருமையான பதிவு - கிருஷ்னாஜி - மிகவும் ரசித்துப்படித்தேன் - உங்களிடம் எங்கள் எதிர்பார்ப்புக்கள் மிகவும் அதிகமாகி கொண்டுருக்கின்றன . உங்கள் வேகம் எங்கள் எதிர்பார்ப்புகளுடன் போட்டிப்போட முடியுமா ??
ரவி
உங்கள் உடன் நிச்சயம் போட்டி போடவே முடியாது
-
9th June 2015, 11:49 AM
#835
Originally Posted by
rajraj
krishna: I think the last line in 'anjana vaNNan' is "unjivar poividil naaik kugan endrenai odhaaro". I had this in intermediate in 1954 -1956 !
ராஜ்ராஜ் சார்
திருத்தத்திற்கு நன்றி. உங்கள் நினைவு திறன் அபாரம்
‘அஞ்சன வண்ணன், என் ஆர்
உயிர் நாயகன், ஆளாமே,
வஞ்சனையால் அரசு எய்திய
மன்னரும் வந்தாரே!
செஞ் சரம் என்பன தீ
உமிழ்கின்றன, செல்லாவோ?
உஞ்சு இவர் போய்விடின், “நாய்க்குகன்”
என்று, எனை ஓதாரோ?
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
9th June 2015, 11:50 AM
#836
Senior Member
Seasoned Hubber
வாசு சார்
எம்.எல்.ஸ்ரீகாந்த் பற்றிய பதிவு சூப்பர்.ஞாபகப்படுத்திய முரளி சாருக்கும் சபாஷ்.
தாலாட்டு இசையமைப்பாளராயிற்றே..
கல்யாண வளையோசை படத்திற்கு இசையமைத்து அப்பாடலைப் பாடியவர் எம்.எல்.ஸ்ரீகாந்த்.
அக்னிப்பிரவசேம் கல்யாணப் பெண் போல பாட்டைப் பாடியவர் ஜாலி ஆபிரகாம்...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
9th June 2015, 01:45 PM
#837
Originally Posted by
vasudevan31355
நெல்லைச் சீமைக்கு நேரம் சரியில்லை.
வாசு,
நடிகர் திலகம் அவர்தம் சாதனை என்றாலே ஒரு சிலருக்கு அஸ்தியில் புளியை கரைக்கும் என்பதை நாம் இப்போதும் பார்த்துக் கொண்டுதானே வருகிறோம். அதுதான் யதார்த்தம் எனும்போது கிருஷ்ணாஜியை ஏன் காபராப்படுத்த வேண்டும்? அது நெல்லை சீமையானாலும் நெய்வேலி சீமையானாலும் நடிகர் திலகம் திரியில் அனைவரும் safe என நான் சொல்கிறேன். அனைவரும் வாருங்கள்.
அன்புடன்
-
9th June 2015, 02:01 PM
#838
Senior Member
Senior Hubber
//நெல்லை சீமையானாலும் நெய்வேலி சீமையானாலும் நடிகர் திலகம் திரியில் அனைவரும் safe என நான் சொல்கிறேன். அனைவரும் வாருங்கள்.// அந்தக் கால மதுரைக் காரவுக சொன்னா உண்மையாய்த்தான் இருக்கும்
-
9th June 2015, 03:12 PM
#839
Senior Member
Diamond Hubber
கலை சார், வினோத் சார்,
எம்.ஜி.ஆர் அவர்களின் பாடல் கொடுத்து ரொம்ப நாட்களாகி விட்டது. அதனால் எனக்குப் மிகப் பிடித்த இந்தப் பாடலை உங்களுடனும், வினோத் சாருடனும், மற்ற எல்லோருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
எம்.ஜி.ஆர் அவர்கள் கதை எழுதி, சொர்ணம் அவர்கள் வசனம் எழுதி, வாலி மற்றும் ஆலங்குடி சோமு பாடல்கள் இயற்றி, 'மெல்லிசை மன்னர்' இசையமைத்து, ப.நீலகண்டன் இயக்கிய 'வள்ளி பிலிம்ஸ்' தயாரிப்பில் 1968 ஆம் ஆண்டு வெளிவந்த 'கணவன்' திரைப்படத்தின் கலக்கல் பாடல்.
இந்தப் படத்திற்கு உதவி இயக்குனராக இருந்தவர் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார் இதே எம்.ஜி.ஆரை வைத்து மிகப் பெரிய ஹிட் படமொன்றை பின்னாளில் தரப் போகிறோம் என்று.
அந்த இயக்குனர் ஏ.ஜெகந்நாதன். அந்தப் படம் 'இதயக்கனி'
பணக்காரத் திமிர் பிடித்த பெண் ஜெயலலிதா தன் சொத்துக்களை காப்பாற்ற வேண்டி சிறையில் இருந்து வரும் எம்.ஜி.ஆரை சூழ்நிலை காரணமாக தன் கணவனாக நடிக்க வைக்கிறார். காரியம் முடிந்ததும் கழற்றி விட்டு விடுகிறார். அப்புறம் ஜெயாவின் மானேஜர் வில்லன் அசோகன் பிளாக்மெயில். ஜெயலலிதா உலகம் தெரிந்து கொள்ளட்டும் என்று எம்.ஜி.ஆர் மௌனம். பிறகு எம்.ஜி.ஆர் மௌனம் கலைத்து வில்லனை புரட்டுதல். ஜெயாவுக்கு புத்திமதி புகட்டி விலகல். பிறகு ஜெயலலிதா திருந்தல். விரட்டி விட்டு விட்ட எம்.ஜி.ஆரை பின் ஏழைப்பெண்ணாக மாறி, பெயர் மாற்றி, விரட்டி விரட்டி ஜெயா காதலித்து அவரைக் கைப்பிடித்தல் என்று கதை போகும்.
அப்படி எம்.ஜி.ஆர் ரோடுகளில் தார் போடும் தொழிலாளியாய் வேலை செய்யும் போது ஜெயா ஏழைப் பெண்ணாக நடித்து அவர் மனம் கவர்வார்.
அந்த மாதிரி சிச்சுவேஷனில் ஒரு இனிய காதல் டூயட். பாடகர் திலகமும், இசையரசியும் தந்த இன்னொரு லட்டு.
சாதாரண வெள்ளை வேட்டி, கருப்பு சட்டையில் எளிமையாக எம்.ஜி.ஆர். சற்றே கவர்ச்சியாக ஜாக்கெட் இல்லாத சுங்கிடிச் சேலை அணிந்து ('தாய்', 'வைரம்' படங்களிலும் இது போல் வருவார்) ஜெயா கழுத்தில் கருகுமணியும், கொண்டையில் சுற்றிய பூவுமாக அம்சம்.
இங்கும் வைக்கோற் போரில் காதலர்களின் அக்கப்போர்தான். வாழை மரங்களும், புடலங்காய் தோட்டமும், கயிற்றுக் கட்டிலும், கிணறும், பரணும், அழகான குடிசையும், அதன் மேல் தாவும் புறாக்களுமாக செட்டோடு சேர்ந்து பாடலும் புழுதி பறக்கிறது.
தலையில் உட்கார்ந்து சிறகடிக்கும் வெண்புறாவைக் கூட கவனியாமல் தன் மடியில் கொஞ்சி விளையாடும் பெண் புறாவை விருந்தாக சுவைக்கும் எம்.ஜி.ஆர் இளமையாக காட்சி அளிக்கிறார். அழகாகவும் இருக்கிறார். ஷர்ட் நச்சென்று பொருந்துகிறது. ஷாட்டும்தான். பேண்ட், ஷர்ட்டில் ஓடாமல், தாவாமல், துள்ளிக் குதிக்காமல், நல்ல பிள்ளையாய் சமர்த்தாய் உட்கார்ந்த இடத்தில், நடந்த இடத்தில் காதல் புரிவது புதுமை கலந்த ஆச்சரியம்தான். விரும்பத்தக்க விஷயம்தான். அதுவும் தமிழகத்தின் பாரம்பரிய எளிமை உடையில். வண்ணப் படமல்லாமல் கருப்பு வெள்ளையில்.
எல்லோரும் சொல்வது போல சரியான பொருத்தம்தான். அதிக நெருக்கம்தான். அதனால் எல்லோருக்கும் மயக்கம்தான்.
முகத்தோடு முகம் புதைத்தும், மூக்கோடு மூக்கு உராசியும், பின்பக்கம் வளைத்து உள்வாங்கலும், கழுத்தைச் சுற்றி வளைத்தல்களும், முகவாய்க் கட்டைகளோடு முகவாய்க் கட்டை சேர்த்தலும், கட்டிலில் கட்டிப் பிடித்தல்களும், பாடலை நீலகண்டன் இயக்கவில்லை... ஜெகந்நாதன்தான் இயக்கியிருக்கிறார் என்று படுகிறது. சென்ஸாரும் கொஞ்சம் சென்ஸிட்டிவாய் இல்லை என்றும் தெரிகிறது.
அப்படி இருந்தால்தானே நமக்குக் கோலாகலம்... கொண்டாட்டம்.
'மெல்லிசை மன்னர்' உற்சாகத் துள்ளல் போட்டு பிரித்து மேய்ந்து விட்டார். அடடா! என்ன ஒரு டியூன்! வீட்டிலிருந்து வரும் போது குஷியாயிட்டு வந்திருப்பார் போல. ஹார்மோனியம், மவுத் ஆர்கன், மோர்சிங் (நாமுழவு), சிதார், வயலின் என்று எங்கெங்கு என்ன பொருத்தமோ அங்கங்கு அவற்றின் இனிமையைப் பொருத்தி மயங்க வைத்து விட்டார் போங்கள்.
பாடல் வரிகள் மட்டும் என்னவாம்! கொஞ்சம் கூட நாங்கள் குறைவில்லை என்று எதிர் சவால் விடுகின்றன இசைக்கும், பாடகர்களுக்கும்.
'மயங்கும் வயது' (சைக்கிள் கேப்பில் வரும் அந்த இனிய பிட் இசை 'டர டர டர டைன்' டக்கரோ டக்கர். அதே போல 'மடி மேல் விழுந்து' முடிந்தவுடன் அப்படியே தொடரும். இன்னும் கொஞ்சம் வாராதா என்று ஏங்க ஏங்க வைக்கும்.)
பாடலில் வரிகளின் முடிவில்
வயது.. விழுந்து... மலர்ந்து... விருந்து
என்று வாலிப வார்த்தைகள் வாகாக, தோதாக நமக்கு. மருந்து எதுவும் தேவையே இல்லை. இந்த விருந்து ஒன்றே போதும்.
அழகிருக்க... துடித்திருக்க... வரவழைக்க... அணைத்திருக்க... குறைந்திருக்க... முத்தம் பதிக்க
என்று பாடல் முழுதும் 'க்க' மயம். முழுக்க, முழுக்க இன்ப மயம்.
தொடங்கும்... அடங்கும்... தொடரும்... வளரும்... என்று வார்த்தைகள் முடிந்து மேலும் மேலும் இனிமை தொடரும்.
'இதழ்கள் மலர்ந்து' ரெண்டாம் தரம் ஒலிக்கும் போது முதல் தரம் ஒலிப்பதைவிட வேறு விதமாக இன்னும் இனிமையாக ஒலிக்கும்.
'ஆடையில் மூடிய ஒரு அழகிருக்க
ஆயிரம் ஆசையில் அது துடித்திருக்க'
என்று எம்.ஜி.ஆர் பாடும் போது கட்டிலில் படுத்து என்னமாய்க் கைகளை நெட் முறிக்கிறார் ஜெயா!
'மூவகைத் தேன்கனி ஒன்று குறைந்திருக்க' (ஓஹோ! 'பலா'வோ அது!)
(சின்னாவுக்கு 'quote' பண்ண செம சான்ஸ்.)
'மாமரத் தோப்பினில் வண்டு பறந்து வரும்
மாம்பழச் சாறினில் வந்து மயங்கி விழும்'
வரிகளைப் படிக்கும் போதே கிறக்கமும் மயக்கமும் உண்டாகிறதே! பொல்லாத கவிஞன். அனுபவித்து எழுதியிருக்கிறான்.
அதே போல நினைத்தவுடன் தொடங்குமாம்... அணைத்தவுடன் அடங்குமாம்....தொட்டால் தொடருமாம்... தொடர்ந்தால் வளருமாம்
என்னது அது? தெரியலையே!
காமத்துப் பாலை ஆபாசக் கசப்பில்லாமல் இன்பத்துப் பாலாய் அப்படியே தந்த கவிஞனுக்கு வாழ்த்துக்கள். ஆனால் அர்த்தங்கள் பொல்லாதவை. அளவிட முடியாதவை.
இனிமை வரவாக வேண்டுமானால் இளமையை செலவு செய்துதானே ஆக வேண்டும். அதையும் கவிஞன் சுவைபடவே கூறுகிறான்.
'இனிமேல் வரவு
இளமை செலவு'
என்று.
சுசீலா அம்மாவின் குரல் ஜவ்வுமிட்டாய்க்காரன் மிட்டாய் போல் இஷ்டத்திற்கும் எப்படி வேண்டுமானாலும் நீளுகிறது...சுருங்குகிறது...வளைகிறது... குழைகிறது... நெளிகிறது.
('மடி மேல்' எனும் போது 'மே' வுக்கு ஒரு அதிர்வு தருவார் பாருங்கள்!)
இணையாகப் பாடும் பாடகர் திலகத்திற்கு வஞ்சனை செய்யத் தெரியுமா? சும்மா சுசீலா 'சுனாமி'க்கேற்ற 'தானே'வாய் தன் வாயால் சௌராஷ்டிரர் தகதகப்பார்.
இப்போது முழுப் பாடலையும் படித்து, கேட்டு, பார்த்து இன்புறுங்கள். செலவு மூன்று நிமிடங்கள்தான். வரவோ இன்பமான இன்பம் இதயம் இனிக்க இனிக்க.
மயங்கும் வயது
மடிமேல் விழுந்து
மயங்கும் வயது
மடிமேல் விழுந்து
இதழ்கள் மலர்ந்து
வழங்கும் விருந்து
இதழ்கள் மலர்ந்து
வழங்கும் விருந்து
ஆடையில் மூடிய ஒரு அழகிருக்க
ஆயிரம் ஆசையில் அது துடித்திருக்க
ஆடையில் மூடிய ஒரு அழகிருக்க
ஆயிரம் ஆசையில் அது துடித்திருக்க
வாவென ஜாடையில் எனை வரவழைக்க
வந்தது கைகளும் மெல்ல அணைத்திருக்க
மூவகைத் தேன்கனி ஒன்று குறைந்திருக்க
மூவகைத் தேன்கனி ஒன்று குறைந்திருக்க
முல்லைப்பூ கன்னத்தில் முத்தம் பதிக்க
முல்லைப்பூ கன்னத்தில் முத்தம் பதிக்க
முதலில் தயக்கம்
முடிவில் மயக்கம்
இடையில் நெருக்கம்
இருந்தால் இனிக்கும்
மயங்கும் வயது
மடிமேல் விழுந்து
இதழ்கள் மலர்ந்து
வழங்கும் விருந்து
இதழ்கள் மலர்ந்து
வழங்கும் விருந்து
விருந்து
மாமரத் தோப்பினில் வண்டு பறந்து வரும்
மாம்பழச் சாறினில் வந்து மயங்கி விழும்
மாமரத் தோப்பினில் வண்டு பறந்து வரும்
மாம்பழச் சாறினில் வந்து மயங்கி விழும்
மீறிய போதையில் தன்னை மறந்திருக்கும்
போனது போகவும் மிச்சம் சுவையிருக்கும்
ஆடிய நாடகம் நெஞ்சில் நினைவிருக்கும்
ஆடிய நாடகம் நெஞ்சில் நினைவிருக்கும்
அம்மம்மா என்னென்ன நடந்திருக்கும்
அம்மம்மா என்னென்ன நடந்திருக்கும்
நினைத்தால் தொடங்கும்
அணைத்தால் அடங்கும்
தொடத்தான் தொடரும்
தொடர்ந்தால் வளரும்
இதுதான் உறவு
நெடுநாள் கனவு
இனிமேல் வரவு
இளமை செலவு
இதுதான் உறவு
இதுதான் உறவு
இதுதான் உறவு உறவு உறவு
Last edited by vasudevan31355; 9th June 2015 at 06:04 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
9th June 2015, 03:38 PM
#840
Junior Member
Seasoned Hubber
Courtesy: Tamil Hindu
நாங்கள் மொத்தம் ஆறு பேர். கல்லூரி முடித்த தருணம் அது. தீபாவளியை முன்னிட்டு திரைப்படம் பார்க்கலாம் என்று திட்டம்.
கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் அஜித் நடித்த 'வரலாறு' வெளியாகியிருந்தது.
கே.எஸ்.ரவிகுமார் பிறந்து வளர்ந்ததெல்லாம் எங்கள் ஊருக்குப் பக்கத்தில் உள்ள வங்கனூர் கிராமத்தில்தான். பத்து வயது வரைக்கும் அங்கேதான் பாட்டி வீட்டில் ரவிகுமார் வளர்ந்ததாக சொல்வார்கள். அதனாலேயே ரவிகுமார் நம்ம ஏரியா ஆள் என்ற பாசம் எங்கள்
பக்கத்து கிராமங்கள் முழுக்க ஒட்டிக்கிடந்தது. அஜித் நடித்த படம் என்றால் இன்னும் சொல்லவா வேண்டும்?
நான், மணி, உதயன், புருஷோத், சந்துரு, பாபு என்று ஆறு பேரும் ராணிப்பேட்டை ராஜேஸ்வரி தியேட்டருக்கு 'வரலாறு' படம் பார்க்க பேருந்தில் பயணித்தோம்.
சினிமா குறித்து பேச ஆரம்பித்த எங்கள் பேச்சு, எப்படி காதல் தலைப்புக்குள் வந்தது என்றே தெரியவில்லை. யாரும் எதிர்பார்த்திராத அந்தக் கணத்தில் புருஷோத் தான் அந்த வார்த்தையை உதிர்த்தான்.
''எனக்கு ப்ரியா மேல ஒரு இது இருந்துச்சுடா'' என்றான்.
''என்னடா சொல்ற? நீயா!'' என்று நம்பமுடியாத ஆச்சர்யத்தோடு கோரஸாகக் கேட்டோம்.
''ஆமாம்'' என்றான்.
டவுசருக்கு குட் பை சொல்லிவிட்டு பேன்ட்டுக்கு வெல்கம் சொன்ன அந்த ஒன்பதாம் வகுப்பில்தான் ப்ரியாவின் மறுவருகை நிகழ்ந்தது.
பக்கத்து ஊர் ஸ்கூலில் படித்தவள் புதிதாக எங்கள் வகுப்பில் வந்து சேர்ந்தாள். புது ஆசிரியர்கள், புதிய சூழல் என்று கொஞ்சம் திணறிய அவளுக்கு உதவ ஏராளமான நட்புக்கரங்கள் நீண்டன. நோட்ஸ் கொடுப்பதும், புரியாத கணக்கை புரிய வைப்பதுமாக அவள் சொல்லும் ஒற்றை நன்றிக்காக ஒரு கும்பலே காத்துக் கிடந்தது.
அப்போதுகூட புருஷோத், ப்ரியாவிடம் பெரிதாய் ஒன்றும் பேசிவிடவில்லை. நெருக்கமாகப் பழகியதுமில்லை. அப்புறம் எப்படி இவனுக்கு காதல் முளைத்தது?
உதயன் கூட சின்ன சின்ன சேட்டைகள் செய்திருக்கிறான். மாணவர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால், பெண்கள் அமரும் பகுதியில் 2 பெஞ்ச் மட்டும் ஆண்களுக்காக ஒதுக்கப்பட்டு இருந்தது. உயரம் குறைவான உதயனும், இன்னும் சில பேரும் மட்டும் 2-வது பெஞ்சில் அமர்ந்தனர். அதற்கடுத்த பெஞ்ச்சில்தான் ப்ரியா இருந்தாள்.
அப்போதெல்லாம் உதயன் செய்யும் ஹீரோயிஸம் ஒன்றே ஒன்றுதான். ஆசிரியர் பாடம் நடத்தாமல் வெட்டியாய் பொழுது கழியும்போது ஏதாவது சேட்டைகள் செய்வான் உதயன். உச்சபட்சமாக ஒரு நாள் எல்லா பெண்களையும் சிரிக்க வைத்துவிட்டான்.
பேசுகிறவர்கள் பெயரை போர்டில் எழுதிக்கொண்டிருந்தான் வகுப்புத் தலைவன். உதயன் பெண்கள் அணியிடம் பேச்சு கொடுத்தான். முதலாவதாக அவன் பெயர் எழுதப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த உதயன் உடனே பேன்ட்டை கழட்ட ஆரம்பித்தான்.
பயப்படாதீர்கள்... உள்ளே டவுசர் போட்டிருந்தான். உதயன் இப்படி பேன்ட்டுக்குள் டிரவுசர் போட்டு வந்திருப்பான் என்றோ, பெண்கள் மத்தியில் அதிரடியாய் இறங்குவான் என்றோ எதிர்பார்க்கவில்லை. ஆனால், அந்த நேரத்தில் எல்லோரும் கொல்லென்று சிரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்த சிரிப்பு ஒர்க் அவுட் ஆனதால் உதயன் இதையே வழக்கமாக்கிக் கொண்டான்.
இப்படி இருந்த உதயனுக்கே புருஷோத் காதல் அரும்பியதாகச் சொன்னது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருந்தது. உதயன் தான் காதலில் விழுவான் என்று எல்லோரும் எதிர்பார்த்த தருணத்தில் புருஷொத் தனக்கு காதல் பூத்த தருணத்தை சொல்ல ஆரம்பித்தான்.
இத்தனைக்கும் ப்ரியா 5-ம் வகுப்பு வரை எங்களுடன்தான் படித்தாள். ஆறாம் வகுப்பு படிக்க பக்கத்து ஊர் சென்றவள் 9-ம் வகுப்பு படிக்க மீண்டும் வந்தாள். புதிதாக ஒரு பெண் வந்ததும் புருஷோத் தனக்கு ஏற்பட்ட குறுகுறுப்பையும், உணர்வுகளையும் எங்களிடம் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தான்.
அந்த வயதில் காதல் கதை கேட்பதை விட வேறு என்ன சுவாரஸ்யம் இருந்துவிடப் போகிறது?
புருஷோத் ஒவ்வொரு சம்பவமாய் சொல்லிக்கொண்டே போனதும், எனக்கு 'அழியாத கோலங்கள்' பட்டாபி ஞாபகம் வந்தது. தமிழில் இப்படி ஓர் உலக சினிமா எப்படி சாத்தியம் ஆனது என்று இன்றளவும் யோசிக்க வைக்கும் திரைப்படம் 'அழியாத கோலங்கள்'.
பரபரப்பான நகரத்தில் அலுவல் நிமித்தமாக காரில் பயணிக்கிறார் கமல்ஹாசன். லிஃப்டில் ஏறி தன் இருக்கையை அமர்ந்ததும், அங்கு வரும் உதவியாளரிடம் மெயில் குறித்து ஆங்கிலத்தில் எழுதச் சொல்கிறார்.
ஒரு போன் கால் வருகிறது. அதற்குப் பிறகு அந்த உதவியாளர் வந்திருக்கும் பெர்சனல் கடிதங்களை கமலிடம் கொடுக்கிறார். எல்லா கடிதங்களின் அனுப்புநர் முகவரியைப் பார்க்கும் கமலுக்கு, ஒரு கடிதம் மட்டும் புன்னகையை வரவழைக்கிறது.
''10 நிமிடங்களுக்கு நோ போன் கால்ஸ். வந்தாலும் கொடுக்காதீங்க'' என்ற கட்டளையிட்டு, கடிதத்தைப் பிரித்துப் படிக்கிறார் கமல்.
''டேய் ராஸ்கல். நான் பட்டாபி எழுதுறேன்டா... எப்படிடா இருக்கே? ஊர் பக்கமே வர்றதில்லை. வருஷத்துக்கு ஒரு முறை வருவ. இப்போ அதுவும் இல்லை... நான் ஏன் இந்த லெட்டரை எழுதுறேன்னா... இந்து டீச்சர் இல்ல... நம்ம இந்து டீச்சர். அவங்க முந்தாநாள் காலமாயிட்டாங்கடா'' என்று எழுதியிருக்கும் கடிதத்தைப் படித்ததும் கமலின் நினைவுகள் பின்னோக்கி நகர்கின்றன.
அந்த கிராமம், அந்த ஜனங்க எதையும் மறக்கலை நான் என்று வாய்ஸ் ஓவரில். ஒரு கிராமம் நம் கண் முன் விரிகிறது.
ரகு, கௌரி, பட்டாபி எனும் மூன்று நண்பர்களை நீங்கள் எந்த கிராமத்திலும் சந்தித்திருக்கலாம்.
வயல்வெளி, ஆறு, ரயில்வேகேட், சிமெண்ட் பெஞ்ச் என்று சுற்றித் திரியும் இந்த மூன்று பேர் வாழ்க்கை அவ்வளவு அழகானது. இந்து டீச்சரின் வருகையை இந்த சிறுவர்கள் கொண்டாடும் தருணம் அலாதியானது.
ஊரில் ஆட்டம்போட்டு காசு பார்க்கும் ஒரு பெண் போஸ்ட் மாஸ்டர் வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் காதல் ரசவாதத்தில் ஈடுபடுகிறார். பழைய கோயில் மண்டபத்தில் அந்தப் பெண்ணுக்கும், வெண்ணிற ஆடை மூர்த்திக்கும் நடக்கும் ரசவாதத்தை மூவரும் பார்க்கின்றனர்.
ஆனால், இதில் எந்த ஆபாசமும் இல்லாமல் க்ளோஸப் காட்சிகள் மூலம் உணர்வுகளை படம் பிடித்திருப்பார் இயக்குநர்.
அந்த காட்சியைப் பார்த்த அதே வேகத்தில் அந்த பெண் வீட்டுக்குச் சென்று ரகு, கௌரி (சின்ன வயது கமல்), பட்டாபி ஆகிய மூவரும் அதே மாதிரி இருக்க வேண்டும் என்று ஆசையோடு கேட்கத் துணிவார்கள். கேட்க முடியாமல், திணறி, அக்கா... தண்ணி கிடைக்குமா என்று கேட்டு, குடித்துவிட்டு வருவார்கள்.
'அழியாத கோலங்கள்' படத்தில் இந்து டீச்சர் முக்கியமான படலம். இந்து டீச்சராக ஷோபாவின் நடிப்பு அத்தனை இயல்பாய் இருந்தது.
''என் பேரு இந்து. உங்க பேர்லாம் சொல்லுங்கம்மா'' என தயக்கமும், வெட்கமும், படபடப்புமாய் சொல்லும்போது அந்த வகுப்பறை இன்னும் அழகாகத் தெரிந்தது. பக்கத்து வகுப்பறையில் பாடம் நடத்தும் சத்தமும் பின்னணியில் ஒலித்துக்கொண்டிருக்கும்.
இந்து டீச்சர் அந்த கிராமத்துக்கு வந்த புது தேவதையாகவே மூவரும் பார்க்கிறார்கள். மளிகை சாமான் பொருட்களை இந்து டீச்சர் தவறுதலாக கீழே போட்டு விட, அதை எடுத்து வீடு வரை கொண்டு சேர்க்கும் கௌரி, டீச்சரின் அன்புக்குப் பாத்திரமாகிறான்.
பரணில் இருக்கும் பொருளை எடுக்க, ஏணியில் ஏறும்போது தவறி விழப் பார்க்கும் கௌரியின், தொடைப் பகுதியை இந்து டீச்சர் அழுத்திப் பிடித்து, பார்த்தும்மா எனும் சொல்லும்போது அந்தப் பால்ய வயதில் அவன் பாலுணர்வை எந்த விகல்பமும் இல்லாமல் அழுத்தமாகப் பதிவு செய்திருப்பார் இயக்குநர் பாலு மகேந்திரா.
பிரதாப் போத்தன் படத்தைக் காட்டி, ''எப்படி இருக்காரும்மா? அவர் தான் என் வருங்காலக் கணவர்'' என்று இந்து டீச்சர், கௌரியிடம் சொல்கிறார். அவரை கௌரி பிடிக்காமல் பார்க்கிறான். தன் கனவைக் கலைக்க வந்த வில்லனாகவே பார்க்கிறான். பிரதாப் போத்தன் சிகரெட் பிடிப்பதைப் பார்த்து ரசித்து சிரிக்கிறார் இந்து டீச்சர்.
சிகரெட் பிடித்தால் ஆம்பளையாகிடலாம் போல என்று மூவரும் சிகரெட் பிடிக்க ஆரம்பிக்கிறார்கள். இப்படிக் கழியும் விடலைப் பருவத்தில் பட்டாபிக்கு அத்தை மகள் வருகை அவன் வாழ்வை வசந்தமாக்குக்கிறது.
''பட்டணத்துல கடைசியா என்ன பிக்சர் பார்த்த?'' என்று அத்தை மகள் மரகதத்திடம் கேட்கிறான் பட்டாபி.
''இருவர் உள்ளம்'' என்கிறாள் மரகதம்.
''என்னது இருவர் உள்ளம் பார்த்தியா. சரோஜாதேவி எப்படி இருக்கா. '' என்கிறான் பட்டாபி.
''ம்ம்ம் அவசியம் தெரிஞ்சுக்கணுமோ?''
''என் ஃபேவரைட் தெரியுமா?''
''அந்த அம்மா நடை பிடிக்கலை'' என்கிறாள் மரகதம்.
அந்த இடத்தில் பட்டாபியிடம் பாலுமகேந்திராவின் தொனியை நீங்கள் பார்க்கலாம். பிரதாப் போத்தனுக்கு இது அறிமுகப் படம். இதில் பாலு மகேந்திராதான் பிரதாப்புக்கு டப்பிங் பேசியிருப்பார்.
இரவுப் பொழுதில் மரகதம் தூங்கிக்கொண்டிருக்கையில், பட்டாபி அவள் கெண்டைக் காலைத் தடவி, நெற்றியில் ஆரம்பித்து உதட்டில் விரல்கள் பட்டு கழுத்தில் இறங்க இருமல் சத்தம் அந்த நிலையைக் குலைக்கும்.
சம்மர் ஆஃப் 42 என்ற ஆங்கிலப் படத்தின் தழுவல் கிழுவல் என்றெல்லாம் உலக சினிமா போராளிகள் சொன்னாலும், தமிழ் சினிமாவில் பதின்ம வயதினரின் பாலுணர்வுகளை இவ்வளவு அழகாக, நேர்த்தியாக, வரம்பு மீறாமல் நம் மண்ணுக்கே உரிய தன்மைகளுடன் பதிவு செய்தவர் எவரையேனும் சுட்டிக் காட்ட முடியுமா?
ரகு ஆற்றில் குளிக்கப்போய் நீச்சல் தெரியாமல் தண்ணீருக்குள் மரணமடைகிறான். அவன் மரணத்தோடு கௌரி, பட்டாபியின் மகிழ்ச்சி காணாமல் போகிறது.
ரகுவின் மரணத்தை தாங்க முடியாத இந்து டீச்சர் கௌரியைக் கட்டிப்பிடித்துக் கதறுகிறார். இதெல்லாம் நெஞ்சில் இட்ட அழியாத கோலம் என்று லெட்டரை படித்து முடித்த கமல் சொல்கிறார்.
நடிகை ஷோபா இதில் துணை இயக்குநராகவும் பணி செய்திருக்கிறார். சொந்தக் குரலில் பேசி இருந்தால் ஷோபாவுக்கு நிச்சயம் விருது கிடைத்திருக்கும்.
அத்தை மகள் குறித்த பதிவுகள் பாலு மகேந்திராவின் சொந்த வாழ்க்கை என்று சொல்வதும் உண்டு மட்டக்களப்பில் பிறந்த பெஞ்சமின் எந்த சமரசமும் இல்லாமல் இந்தப் படத்தை எடுக்கத் துணிந்தார். ஆனால், இரு பாடல்கள் வைத்தது உறுத்தல் என்று அவரே ஒப்புக்கொண்டார். இப்படி சமரசங்கள் செய்துகொண்டதைக் கூட மிக நேர்மையாக சொல்ல முடிவதால்தான் அவரை வாத்தியார் என்று தமிழ் சினிமா சொல்கிறது. பாலு மகேந்திரா என்று சினிமா உலகம் அழைக்கிறது.
அந்த பட்டாபியாய் இருந்த புருஷோத்? அதற்குப் பிறகு அவன் அட்டகத்தி நாயகனாய் மாறிப்போனதுதான் எங்களுக்கு அடுத்த ஆச்சர்யம்.
மான்டேஜ் மனசு இன்னும் சுழலும்...
Last edited by s.vasudevan; 9th June 2015 at 03:40 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks