-
12th June 2015, 08:25 PM
#11
Junior Member
Senior Hubber
மலைகோட்டை மாநகரில் திரையுலக மன்மதன் சிவாஜியின் வசந்த மாளிகை தொடர் வசூல் வேட்டை
சென்ற மாதம் கெய்ட்டியில் ஹவுஸ்புல் சாதனையை தொடர்ந்து சென்ற வாரம் ஸ்ரீரங்கம் ரெஙராஜவில் கணிசமான வசூலுடன் ஓடியதுடன் தற்போது மீண்டும் திருச்சி உறையூர் அருனாவில் வியாழன் முதல் சூப்பரான வசூலுடன் நடை பெற்று கொண்டிருக்கிறது. வியாழன் வெள்ளி இரண்டு நாட்களும் ரசிகர்களின் விசில் சத்தத்துடன் கம்பீரமாக கலக்கி கொண்டிருக்கிறார் தலைவர்.நேற்று இரவு காட்சியில் குறிப்பாக ஏன் ஏன் பாடலின் போது பலர் நடனமாடியதை திரையரங்கு மானேஜர் பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து வருகிற வெள்ளி முதல் திருச்சி முருகனில் பவனி வருகிறார் சின்ன ஜமீன். கெய்டிக்கும் அருணாவிற்கும் முருகனுக்கும் இடையே 1 கிலோ மீட்டர் தூரமே இருக்கும் நிலையில் இப்படி தொடர்ந்து திரையிட்டும் சக்கை போடுபோடுவது வியப்புதான்
திருச்சியில் புதுப்படங்களுக்கு ஷிப்டிங்கு தியேட்டர் கிடைக்கிறதோ இல்லையோ வசந்த மாளிகையை திரையிட்டு வசூலை அள்ளி கொண்டிருக்கிறார்கள்
இறந்தும் கொடுக்கும் எங்கள் வள்ளல் சிவாஜியின் புகழை மீடியாக்கள் பயமின்றி மக்களுக்கு பறைசாற்றுவது பெருமையாக உள்ளது.
Last edited by SPCHOWTHRYRAM; 12th June 2015 at 09:37 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
12th June 2015 08:25 PM
# ADS
Circuit advertisement
Bookmarks