-
15th June 2015, 04:02 PM
#11
Senior Member
Senior Hubber
எல்லாரும் இங்கிட்டு வந்தாக்க நான் எங்கிட்டு ப் போறது..அதான் வந்துட்டோம்ல
அதுல பாருங்கோ ஆணுக்கும் இடை இருக்கு பொண்ணுக்கும் இருக்கு
ஆணோட வெய்ஸ்ட அவனே கண்டுக்காம தொப்பை போட்டுருவான்..ஆனா பொண்ணுங்களுக்கு மட்டும் அந்த இடைப் பிரதேசம் ஒல்லியா இருக்கணுமாம்.
அதே மாதிரிப் பாத்தீங்கன்னாக்க அந்தக்காலத்துல அழகான் ராட்சஸிகள்ளாம் தனது காதலனையோ கணவனையோ மயக்குதற்கு அணியும் அணிகலன் மேகலை எனப்படும் ஒட்டியாணம்..
வேகமாய் ஒடியாமல் வெட்கமுடன் நிற்கத்தான்
மேகலை சாதிக்கு மே..
இடையழகைக் கூட்ட இடையிலே இஃதே
தடையை மெலச்சொலும் தான்..
அப்படியா..
ராகவேந்தர் ஜி..கைராசில அன்புள்ள அத்தான்ல இப்படித் தான் சர்ரூ..
இவ்வளவு சொல்லியும் நான் வராவிட்டால்ங்கறா மாதிரி ஜெ சொல்ல
பொன்மணி மேகலை பூமியில் வீழும்
புலம்பும் சிலம்பிரண்டும் எனை விட்டு ஓடும்
கைவளை சோர்ந்துவிழும் கண்களும் மூடும்
காண்பவர் உங்களைத்தான் பழிசொல்ல நேரும்
அதாவது ஜெமினி இல்லாமல் சர்ரூ இளைச்சுடுவாங்களாம் (கற்பனைதான்.. நிஜத்துல நடக்கிற காரியமா என்ன)
அவர் நினைப்பினிலேயே மோட்டு வளையைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு சிறுமூச்சு விட்டு
பால் பழம் பணியாரம்னு எதுவுமே சாப்பிடாம சீ போன்னு இருந்தா என்ன ஆகுமாம்
இடையும் மெலிஞ்சு மேகலை கீழே விழுந்துடுமாம்
மெல்லிசா இளம் வாழைத் தண்டாட்டம் வெளிர் மஞ்சள் நிறத்துல கண்ணைக் கொத்தும் இளங்கன்னியின் கால்களாகப்பட்டது
இன்னும் இளைத்து க் குச்சியா இளைக்க சிலம்பு கழண்டு ஓஓஒடுமாம்
கைவளையும் சோர்ந்துவிடும் .. கண்ணுக்குக் கீழ ஹாய் அப்படின்னு கவலை வந்து கண்மை மாதிரி கருவளையம் போட்டுடுமாம்..
ஏண்டாப்பா ஜெமினி..இப்படி சர்ரூவப் பண்ணிட்டியேடான்னு பார்க்கறவால்லாம் பாட்டி மாதிரி ஜெமினிகிட்டயே குசலம் விசாரிப்பாங்களாம்.. நான் சொல்லலை சர்ரூ சொல்றாங்க 
அன்புள்ள அத்தான் வணக்கம்
சர்ரூவோட நர்ஸ் டிரஸ்ஸப் பத்தி சொல்லவே இல்லையே ராகவேந்த்ராசார்
Last edited by chinnakkannan; 15th June 2015 at 04:11 PM.
-
Post Thanks / Like - 2 Thanks, 2 Likes
-
15th June 2015 04:02 PM
# ADS
Circuit advertisement
Bookmarks