-
11th July 2015, 03:01 PM
#1741
Junior Member
Seasoned Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
11th July 2015 03:01 PM
# ADS
Circuit advertisement
-
11th July 2015, 05:10 PM
#1742
Junior Member
Seasoned Hubber
திரு குமார் சார் , மிக்க நன்றி - உங்களுக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் நடிகர் திலகத்தை தகுந்த ஆவணங்கள் மூலம் வெளிக்கொண்டு வருவதற்கு . உங்களிடம் இருந்து இன்னும் நிறைய இந்த திரியில் எதிர்ப்பார்க்கிறோம் . பம்மலாரை தொலைத்து விட்டோமே என்று வருத்தத்தில் இருந்த எங்களுக்கு உங்கள் பதிவுகள் , மனதில் உண்டான புண்ணை ஒரு மயில் இறகினால் ஆறுதலுடன் தடவிக்கொடுப்பதுபோல் உள்ளது . உங்கள் பரந்த உள்ளத்திற்கு மீண்டும் மனமார்ந்த நன்றி
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
11th July 2015, 05:39 PM
#1743
Senior Member
Diamond Hubber
'மோகம் அது முப்பது நாள்
ஆசை அது அறுபது நாள்'
கலைவேந்தன் சார்,
இதோ உங்களுக்காக ஒரு பாடல். நீங்கள் அடிக்கடி ஞாபகம் வைத்து எழுதும் கருணாநிதி அவர்களின் புதல்வர் மு.கமுத்து சொந்தமாகப் பாடி நடித்த ஒரு பாடல். கருணாநிதி மேல் உங்களுக்கிருக்கும் தனிப்பட்ட மரியாதை, அவரது கலைத்திறமைக்கு தாங்கள் அளிக்கும் அதே மதிப்பு அவரிடத்தில் எனக்கும் உண்டு.
அரசியலைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் மு.க.முத்து ஒரு சிறந்த பாடகர். நல்ல குரல்வளம் கொண்டவர். தி.மு.க மாநாடுகள் மற்றும் அரசியல் மேடைகளில் கட்சிப் பாடல்களை டேப் அடித்துப் பாடுவதில் வல்லவராம் இவர் என்று என் அம்மா சொல்லக் கேட்டிருக்கிறேன்.
'பிள்ளையோ பிள்ளை' என்று கருணாநிதி இவரைத் தாங்கு தாங்கு என்று தாங்கி முன்னுக்குக் கொண்டுவர முயன்றும், ஆரம்பகால சில படங்கள் வசூல் வெற்றி அடைந்தும், இந்தப் பிள்ளை மதுவை முழுதும் உடலிலே தாங்கி, மயங்கி விழுந்து, 'தொல்லையோ தொல்லை' ஆனது அவர் தந்தைக்கு.
தனக்கென்று ஒரு தனிப் பாணியை உருவாக்க முத்து முயற்சி செய்யாமல் திரு.எம்.ஜி.ஆர் அவர்களின் பாணியை அப்படியே ஈயடிச்சான் காப்பியாகத் தந்ததன் விளைவு அதல பாதாளச் சறுக்கல்களில் சறுக்கி எழ முடியாமல் விழ வேண்டியதாயிற்று. மேனி நோகாமல் குறுகிய காலத்தில் வெற்றிக்கனியை பறிக்க வேண்டும் என்ற எண்ணமும் பறி போனது.

வெற்றியடைந்த ஒரு சில (பிள்ளையோ பிள்ளை, பூக்காரி) படங்களும் வண்ணம், மற்றும் 'மெல்லிசை மன்ன'ரின் அருமையான இசை கொண்ட பாடல்களால் மட்டுமே வெற்றி பெற்றன. 'சமையல்காரன்' சுமாரான வெற்றியே அடைந்தது. ('சொந்தக் காரங்க... எனக்கு ரொம்பப் பேருங்க'... டாப் ரகப் பாடல்)
அதற்குப் பிறகு வந்த 'அணையா விளக்கு' (1975) ஒளி வீசாமல் அணைந்து போயிற்று. 'இங்கேயும் மனிதர்கள்' (1975) எங்கே தேடியும் கிடைக்கவே இல்லை. 'நம்பிக்கை நட்சத்திரம்' (1975) நம்பிக்கை இழந்தது. 'எல்லாம் அவளே' (1977) எழுந்திருக்க முடியாமல் சுருண்டது.

அப்புறம் மறுபிரவேசம் எல்லாம் பண்ணியும் கூட வேலைக்கு ஆகவில்லை.
ஆனால் குரல் அருமை என்பது உண்மை. நன்றாகவும் திரைப் பாடல்களைப் பாடினார் என்பதும் உண்மைதான். குரல் படுபாந்தம்.
இவர் பாடிய,
கூன் பிறையைத் தொழுதிடுவோம்
குர்-ஆனை ஓதிடுவோம்
மேன்மை மிகு மெக்காவின்
திசை நோக்கிப் பாடிடுவோம்
நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா
பிறர் நலத்தை நினைத்து உன்னை நானும் வேண்டவா
யாரும் வருவார் யாரும் தொழுவார்
நாகூர் ஆண்டவன் சந்நிதியில்
நானும் ஒன்று நீயும் ஒன்று
நபிகள் நாயகம் முன்னிலையில்
என்ற அற்புதமான இஸ்லாமியப் பாடல் எனக்கு நிரம்பப் பிடித்தம் ஆனதாகும்.
ஆனால் அதிலும் ஒரு பெரிய குறை. பாடல் முழுதும் இஸ்லாத்தின் புகழ் பாடியிருந்தால் அற்புத பக்திப் பாடலாக ஜொலித்திருக்கும்.
ஆனால் எம்.ஜி.ஆர் அவர்களைத் தாக்கும் நோக்கத்துடன் சரண வரிகள் அமைந்தது துரதிருஷ்டவசமானது. சரணங்கள் முழுதும் அரசியல் நெடி அதிகம். இஸ்லாம் புகழ் பல்லவிக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு பின் இஷ்டத்திற்கும் அரசியலே முழுதும் விளையாடியது.
'ஊரார்க்கு உழைத்தவர்க்கே உயர்பதவி நீ கொடுத்தாய்
யார் யார்க்கு எது கொடுத்தால் ஏற்கும் என்று நீ வகுத்தாய்'
என்று அல்லாவை குறிப்பிடுவது போல அப்பாவைப் போற்றும் வரிகள்.
'பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை
நல்லோர்கள் அவர் பேச்சை எந்நாளும் கேட்பதில்லை'
என்று எம்.ஜி.ஆர் அவர்கள் பாணியில் பாடல் வரிகள். 'நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்' என்று முத்து மக்களிடம் வெறுப்பை சம்பாத்தித்துக் கொண்டதுதான் மிச்சம்.
இதனால் இந்த நல்ல பாடல் முழுமை பெறாமல் அரசியல் வரிகளால் கரும்புள்ளி தாங்கியது. ஆனால் முத்து நல்ல பாடகர் என்பதை நிலைநிறுத்திய பாடலாய் அமைந்தது அவருக்கு ஆறுதலே. ஒரு பாடகராய் அவர் வெற்றி பெற்றது பாராட்டத்தக்கதே.
சரி! ஏன் பழசையெல்லாம் கிளறிகிட்டு?
அதையெல்லாம் விட்டு விடுவோம்.
முத்து பாடிய அருமையான பாடல் ஒன்றுக்கு வருவோம்.

அஞ்சுகம் பிக்சர்ஸ் தயாரித்த 'அணையா விளக்கு' வண்ணப் படத்தில் அழகுப் பதுமை பத்மபிரியாவுடன் திரு எம்.ஜி.ஆர் அவர்கள்
மன்னிக்கவும் திரு.முத்து அவர்கள் ஆடிப் பாடும் டூயட்.
முத்துவே சொந்தக்குரலில் பாடியிருப்பார் சுசீலா அம்மாவுடன் இணைந்து. அப்போது மிகப் பெரிய ஹிட் இந்தப் பாடல். ஆனால் முத்துவின் ஒவ்வொரு அசைவும் அப்படியே எம்.ஜி.ஆர் அவர்களையே கொண்டு வந்து கண் முன் நிறுத்தும். பாடலைப் பார்த்தால் ஒரு சமயம் இந்த 'ஜெராக்ஸ் காப்பி' நினைத்து ஆச்சர்யமாக இருக்கும். இன்னொரு சமயம் கோபமாயும் வரும். மற்றொரு புறம் சிரிப்பும் வரும். இன்னொருபுறம் 'பரவாயில்லையே' என்று தோன்றும். எந்த முடிவுமே எடுக்கத் தோன்றாது.
ஆனால் முத்துவின் குரலும், பாடும் விதமும் ஜோர் என்பதை மறுப்பதற்கில்லை.

'மோகம் அது முப்பது நாள்
ஆசை அது அறுபது நாள்'
என்று தொடங்கும் பாடல். முத்து உடுத்தியிருக்கும் உடை, நாயகியின் முகத்தை விரல்களால் விருட்டென்று சுண்டுவது, கைகளால் இடுப்பு வளைப்பு, நிற்கும் போஸ், தூரத்தில் வரும் நாயகியை வா என்று கைகளால் அழைக்கும் சைகை அழைப்பு, கால்களால் நாயகியின் கால்களை இடிப்பது, ஹீரோயின் முதுகுப் பக்கம் நின்று அதே போல நிற்கும் அவரின் கைகளைக் கோர்த்துக் கொள்வது என்று ஏகத்துக்கும் எம்.ஜி.ஆர் ஸ்டைல். கூலிங் கிளாஸ், விக் வகையறாக்களும் இத்யாதி இத்யாதிகளும் ஒரு இம்மி கூட பிறழாமல் எம்.ஜி.ஆர் போலவே காப்பியடிக்கப் பட்டிருக்கும். நாயகி பின்னால் கொஞ்சம் ஓடி, பின் கொஞ்சம் நடந்து. பின் மறுபடி ஓடி தன்னை எம்.ஜி.ஆராகவே காட்டிக் கொள்வார். இந்தப் பாடலில் இன்ச் பை இன்ச் இதைப் பார்க்கலாம்.
ஆனால் முதல் படத்தில் டூயட் காட்சிகளில் லஷ்மியுடன் (மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ... மீனாட்டம் கண் கொண்ட மீனாட்சி) அநியாயத்துக்கு நம்மை சிரிக்க வைத்தவர், எரிச்சலடைய வைத்தவர் இந்தப் பாடலில் கொஞ்சூண்டு மெச்சூரிட்டி காட்டுவார். கொஞ்சம் அலட்சியம் தெரியும். காமிராக் கூச்சம் கொஞ்சம் குறைந்திருக்கும்.
பத்மபிரியா ஒன்றுமே செய்யவே வேண்டாம். ஒன்றும் செய்யவும் தெரியாது. ஆனால் வந்து நின்றாலே போதும். இளையவர் வரை முதியோர் வரை, ஆதிராம் முதல் வாசுதேவன் வரை அனைவரும் ஆள் அவுட் இந்த வண்ணப்பட அழகி நாயகியிடம்.
சுசீலா இனிமையோ இனிமை.
'பருவ கலை மழையைப் போல இளமை காணும் உறவு
அந்த மழைக்குப் பின்னால் தூவானம் போல் முதுமைக் கால நினைவு
குமரியாக இருக்கும் போது ஊடல் என்பது இனிக்கும்
அந்த இனிப்பு என்றும் கசப்பதில்லை பாட்டியாகும் வரைக்கும்'
இடையிசை உற்சாகம் தரும். மிக மிக இனிமைதான். அவுட்டோர் படப்பிடிப்பும் அம்சம். இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளில் மனம் லயித்துப் போய்விடும்.
ஊறும் தேனை மூடி வைத்தது உதடு என்னும் கதவு
அதில் உனக்குப் பாதி எனக்குப் பாதி எடுத்துக் கொள்ள உதவு
ஆசைக் கடலில் ஆட வந்தது அழகு என்னும் படகு
(சுசீலா 'படகு' என்பதை உச்சரிக்கும் போது முடிவில் உ...உ..உ... என்று இழுத்து ஒரு மந்திர ஜாலம் புரிவார் பாருங்கள். தப்பாக நினைக்காதீர்கள்....கேட்பவன் செத்தான்)
அது மிதக்கும் போது மயக்கம் வந்தது புரிந்து கொண்டது பிறகு
சோழன் மகனை சூழ்ந்த வண்ணம் வாழும் எனது உள்ளம்
அவன் பொன்னி நதியைப் போல இந்தக் கன்னி நதியின் உள்ளம்
நீந்த வேண்டும் ஆசை நீந்த தீர வேண்டும் கண்ணே
நான் முத்திரை போடும் மேனி அழகு பத்தரை மாற்றுப் பொன்னே
அருமையான தமிழ் கொஞ்சும் வரிகள். சுசீலாவுடன் அருமையாக மேட்ச் ஆவார் முத்து. 'மோகம்' என்று 'மோ' வை முத்து சற்று இழுத்துப் பாடுவது ஆனந்தமாய் இருக்கும்.
'மெல்லிசை மன்னர்' அஞ்சுகம் பிக்சர்ஸுக்கு வஞ்சனை எதுவும் வைக்காமல் அருமையான டியூனில் இப்பாடலை இனிமையாகத் தந்திருப்பார்.
எது எப்படியோ எல்லாவற்றையும் மீறி இப்பாடல் என் மனதை எப்போதோ கொள்ளையடித்து விட்டது. எம்.ஜி.ஆர் அவர்கள் பாணியில் நடித்திருந்தாலும் மு.கமுத்துவும் இப்பாடலில் கவரவே செய்கிறார். அது ஏன் என்றும் புரியவில்லை.
நான் அடிக்கடி ரசித்து கேட்டு மாத்திரமல்ல... பார்த்து மகிழும் பாடலும்கூட. இனி நீங்கள்தான் சொல்ல வேண்டும். என்னைப் போல நீங்களும் மு.க.முத்து குரலுக்கு மட்டும் ரசிகர்தானே!?
நிச்சயம் முன்னமேயே ரசித்திருப்பீர்கள். இப்போதும் கண்டிப்பாக ரசிப்பீர்கள்.
நன்றி கலை சார்.
Last edited by vasudevan31355; 11th July 2015 at 08:04 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 1 Thanks, 5 Likes
-
11th July 2015, 06:20 PM
#1744
Junior Member
Seasoned Hubber
வாசு
கல்தூண் உடுக்கை பதிவு - திரு ராகவேந்திரா அவர்களுக்கு அன்பு பரிசு !
மோகம் முப்பது நாள் - கலை அவர்களுக்கு அருமை பரிசு
"அடி ஆத்தாடி என்ன ஆனந்தம் எனக்கு " - ராஜேஷுக்கு ஒரு காணிக்கை
ராட்சஸி, ராகவன் குரல்களில் பாடல் - திரு ஆதிராமுக்கு ஒரு அன்பளிப்பு
'துலாரி'யும் 'கல்யாணி'யும் - திரு ராஜ்ராஜ் அவர்களுக்கு , கடலின் ஆழத்திலிருந்து எடுத்துவந்த முத்தான பாடல்
உங்கள் பெயரை மாற்றி " கர்ணன் " என்று வைத்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
11th July 2015, 06:26 PM
#1745
Senior Member
Diamond Hubber
ரவி சார்,
அய்யய்யோ! உலகத்திற்கே ஒரே ஒரு 'கர்ணன்'தான் ரவி சார். யாரென்று தாங்களே அறிந்ததுதானே! நன்றி!
உங்களுடைய முத்தான பதிவுகளை இனிமேல்தான் படிக்கப் போகிறேன்.
அடி ஆத்தாடி என்ன ஆனந்தம் எனக்கு.
-
11th July 2015, 07:08 PM
#1746
Senior Member
Diamond Hubber
குமார் சார்,
பிடியுங்கள் பாராட்டுதல்களை. நடிகர் திலகத்தின் சத்யம், ரங்கோன் ராதா, புதையல் பட விளம்பரங்கள் அருமையோ அருமை. அதுவும் இந்த வேடம் எந்தப் படத்தில் குவிஸ் போடத் விளம்பரமும் அருமை. சிவாஜி அண்ணன் அவர்களை அவர் பிள்ளைகள் செல்லமாய் கேலி செய்த நியூஸும் ருசிகரமானது. உங்களுக்கு என் ஆயிரமாயிரம் நன்றிகள்.
-
11th July 2015, 07:10 PM
#1747
Senior Member
Diamond Hubber
கல்ஸ், சி.க வந்தா நானும் ரவி சாரும் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கலாம்னு பார்த்தா யாரும் காணவில்லையே?
கிருஷ்ணா! வருக விரைந்து.
-
11th July 2015, 10:18 PM
#1748
Junior Member
Seasoned Hubber
வாசு , நான் லீவ் எடுத்துக்கொள்ளலாம் - யாருக்கும் எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படாது - ஆனால் நீங்கள் எடுத்தால் - நினைக்கவே பயமாக இருக்கிறது . இப்பவே சரளாவும் , குசல குமாரியும் புலம்புவது என் காதில் கேட்க்கிறது - பின்னிசையில் உடுக்கை சப்தம் வேறு ! இன்னும் தடம் பதித்தவர்கள் பலர் உங்கள் கைவண்ணத்தில் மீண்டும் உயிர் பெற்று வரவேண்டும் ." பாலா "வின் நிலைமை எப்படி இருக்கும் என்று தெரிந்துதான் சொல்கிறீர்களா ? வேண்டாம் இந்த விஷ பரீட்சை . வானம் பொழிவது உங்களால் நிற்க வேண்டாம் .....
-
11th July 2015, 11:15 PM
#1749
Senior Member
Veteran Hubber

Originally Posted by
vasudevan31355
கிருஷ்ணா! வருக விரைந்து.
This MKT song might help! 
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
12th July 2015, 05:11 AM
#1750
Senior Member
Veteran Hubber
Funny Girl (1968) - A musical
In memory of Omar Sharif
From Funny Girl
Barbra Streisand sings
Don't rain on my parade........
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
Bookmarks