Page 192 of 400 FirstFirst ... 92142182190191192193194202242292 ... LastLast
Results 1,911 to 1,920 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #1911
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy: Tamil Hindu


    எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு மெல்லிசை மன்னர் பட்டம் வழங்கியது யார்?


    திருவல்லிக்கேணி கல்சுரல் அகாடமி ஆதரவில், என்.கே.டி. கலா மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் (இடமிருந்து) சிவாஜி கணேசன் தலைமை தாங்க, கவிஞர் கண்ணதாசன் முன்னிலை வகிக்க, மெல்லிசை மன்னர்கள் விருதுடன் டி.கே.ராமமூர்த்தி, எம்.எஸ்.விஸ்வநாதன்.
    திருவல்லிக்கேணி கல்சுரல் அகாடமி ஆதரவில், என்.கே.டி. கலா மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் (இடமிருந்து) சிவாஜி கணேசன் தலைமை தாங்க, கவிஞர் கண்ணதாசன் முன்னிலை வகிக்க, மெல்லிசை மன்னர்கள் விருதுடன் டி.கே.ராமமூர்த்தி, எம்.எஸ்.விஸ்வநாதன்.
    இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு மெல்லிசை மன்னர் பட்டம் வழங்கியது யார், எப்போது, எங்கே என்பது குறித்து பலவிதமான செய்திகள் வெளியாகின்றன.

    எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும், அவருடன் இணைந்து இசையமைப்பில் ஈடுபட்ட டி.கே.ராமமூர்த்திக்கும் சேர்த்தே மெல்லிசை மன்னர்கள் என்ற பட்டம் வழங்கப்பட்டது. இதுதொடர்பாக 1963-ம் ஆண்டு ஜூலை 6-ம் தேதி வெளியான தி இந்து ஆங்கில நாளிதழில் வெளிவந்த தகவல் இதோ:

    தி இந்து மற்றும் ஸ்போர்ட் & பாஸ்டைம் பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்த கஸ்தூரி சீனிவாசன் நினைவாக நூலகம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. அந்த நூலகத்துக்கு நிதி திரட்டும் நல்ல நோக்கத்தில் பிரபல திரைப்படக் கலைஞர்கள் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. திருவல்லிக்கேணி கல்சுரல் அகாடமி ஆதரவில் என்.கே.டி. கலா மண்டபத்தில் 1963 ஜூன் 16 மாலை 6 மணிக்கு கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தலைமை தாங்கினார். கவிஞர் கண்ணதாசன் முன்னிலை வகித்தார். ஜெமினி கணேசன், சாவித்திரி, ஏ.எல்.சீனிவாசன், இயக்குநர் ஸ்ரீதர், சித்ராலயா கோபு, சந்திரபாபு உட்பட பலர் கலந்துகொண்டு விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை இரட்டையர்களை பாராட்டிப் பேசினர். அப்போது இருவருக்கும் மெல்லிசை மன்னர்கள் என்ற பட்டம் வழங்கப்பட்டது. அதற்கு நன்றி தெரிவித்து எம்.எஸ்.விஸ்வநாதன் பேசினார். அந்த நிகழ்ச்சியில் 45 இசைக் கலைஞர்களைக் கொண்ட குழு 3 மணி நேரத்துக்கு அற்புதமான இசை விருந்து அளித்தது. பீ.பி.ஸ்ரீனிவாஸ், பி.சுசீலா, எஸ்.ஜானகி, எல்.ஆர்.ஈஸ்வரி, வீரமணி, சந்திரபாபு ஆகியோர் பாடினர். பின்னணி இசைக் கலைஞர்கள் வழங்கிய அந்த மெல்லிசை விருந்தில் 3,000 ரசிகர்கள் மூழ்கித் திளைத்தனர். குறிப்பாக ஸ்ரீனிவாஸ், சுசீலா, ஜானகி ஆகியோரின் பாடல்களை வெகுவாக ரசித்தனர்.

    இசையமைப்பாளர்கள், பாடகர்களுக்கு லட்சுமி திருவுருவம் பொறித்த கேடயங்களை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நினைவுப் பரிசாக வழங்கி நன்றி தெரிவித்தனர். நிகழ்ச்சிக்கு வந்தவர்களை வரவேற்றும், நிகழ்ச்சி முடிந்த பிறகு நன்றி தெரிவித்தும் திருவல்லிக்கேணி கல்சுரல் அகாடமி துணைத் தலைவர் ஆர்.ரங்காச்சாரி பேசினார். இவ்வாறு தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

  2. Thanks vasudevan31355, eehaiupehazij thanked for this post
    Likes vasudevan31355, Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1912
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    டியர் குமார் சார்,

    உங்கள் ஆவண அணிவகுப்பு மலைக்க வைப்பதுடன் அந்தந்த காலங்களுக்கு மனதை பயணிக்க வைக்கிறது.

    ஏற்கனவே ஆவணப் பதிவுகளை அள்ளித்தந்து கொண்டிருந்த பம்மலார் சார், வினோத் சார் இருவரும் என் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளனர். அவர்களுக்கு அருகில் உங்களுக்கும் ஒரு சிம்மாசனம் போட்டுவிட்டேன். (ஆய்வு பதிவுகள் எழுதும் வாசு சார், கோபால் சார், ராகவேந்தர் சார், ரவி சார், ஆகியோருக்கான சிம்மாசனங்கள் அடுத்த அறையில்).

    உங்கள் அபார உழைப்புக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்கள், நன்றிகள்.

    அருமை... அற்புதம்... அட்டகாசம்...

  5. Likes vasudevan31355 liked this post
  6. #1913
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    மது
    தங்கள் உடல் நிலை எவ்வாறுள்ளது. உடல் நலன் பேணவும்.
    தங்களுக்கு எப்பொழுதெல்லாம் அவகாசம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் இங்கு பங்கு கொள்ளவும்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #1914
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    மெல்லிசை மன்னர்கள் பட்டம் பற்றி ...
    திருவல்லிக்கேணி கல்சுரல் அகாடெமி சார்பில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவருக்கும் பட்டம் அளிக்க தீர்மானித்த போது உறுப்பினர்களிடையே பல்வேறு பட்டங்களைத் தரச்சொல்லி அதற்கேற்ப அவர்களிடமிருந்து வந்திருந்த பல்வேறு பட்டங்களிலிருரந்து தேர்ந்தெடுக்கப்பட்டது தான் மெல்லிசை மன்னர்கள் பட்டம்.
    அவ்வகையில் நடிகர் திலகம், மெல்லிசை மன்னர்கள் இரண்டுமே ரசிகர்கள் அளித்த பட்டங்கள். இவையே இவர்களுக்கு நிரந்தரமாக அமைந்தது இறைவனின் சித்தம்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. Likes vasudevan31355 liked this post
  9. #1915
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'நான் தன்னந்தனிக் காட்டு ராஜா'

    ரவி சார்,

    'கருவின் கரு' - 201 ல் நடிகர் திலகத்தின் 'எங்க மாமா' படப் பாடலான 'நான் தன்னந்தனிக் காட்டு ராஜா' பாடலைப் பதிவிட்டு கொன்று விட்டீர்கள் கொன்று.

    இந்தப் பாடலும், பாடலில் நடிகர் திலகம் என்னுள் ஏற்படுத்திய தாக்கமும் சொல்லி மாளாது. இன்றுவரை வியந்து, வியந்து பார்த்து ரசிக்கும் சந்தோஷப் பாடல் இது.

    உணர்ச்சிக் கலவைகளுக்கு இடம் தராமல் குழந்தைகளோடு குழந்தையாய் 'நடிகர் திலகம்' என்ற தெய்வக் குழந்தை விளையாட்டாய், படுஜாலியாய், கவலை கிஞ்சித்தும் இல்லாமல் எல்லாவற்றுக்கும் மேல் ஆர்ப்பரிக்கும் கொள்ளை அழகால், இணையே இல்லாத ஸ்டைலால் அத்துணை பேரையும் கட்டிப் போட்ட பாடல் இது.

    நடிகர் திலகத்திற்கென்றே எழுதப்பட்ட வரிகள்.



    'நான் தன்னந்தனிக் காட்டு ராஜா'

    உண்மைதானே! எங்கும் எதிலும் அவர் 'தன்னந்தனிக் காட்டு ராஜா' தானே!

    அதை வாயால் சொல்லிப் பார்க்கும் போதே அப்படி இனிக்கும். ('எங்கள் தங்க ராஜாவும்' அப்படியே)


    இந்தப் பாடல் ஆரம்பிக்கும் போது அழகான ஒரு ஏரியில் (வேடந்தாங்கல்?) தண்ணீரில் மூழ்கி இருக்கும் மரக்கிளைகளில் இருந்து பறவைகள் ரம்மியமாக சிறகடித்துப் பறக்கும். அது ஏன் தெரியுமா?

    அந்தப் பறவைகள் உல்லாசமாகப் பறந்து அனுபவிப்பதைப் போல இந்தப் பாடலை அதே சந்தோஷத்துடன் நீங்கள் அனுபவிக்கத் தொடங்குங்கள் என்று அர்த்தம் சொல்வதாகவே நான் நினைக்கிறேன்.

    (நடிகர் திலகத்தோடு குழந்தைகள் உல்லாச பிக்னிக் என்பதற்கு பறவைகள் குதூகலம் என்ற திருலோக்கின் டைரெக்ஷன் 'டச்' அது என்பது வேறு)

    சென்னை சிட்டியின் சென்ட்ரலுக்கு எதிரே பிரதான சாலைகளில் குழந்தைகள் அனைவரையும் ஏற்றிக் கொண்டு, அந்த 'டப்பா' சிகப்புக் கலர் ஓப்பன் காரை ஆரம்பக் காட்சியில் நடிகர் திலகமே ஓட்டி வருவார். பின்னால் ஒரு பிளாக் அம்பாஸிடர் வந்து கொண்டிருக்கும். உங்கள் 'கரு'வின் தந்தை ஒருவர் அவர் மகனை கைப்பிடித்தபடி அழைத்து வருவார்.

    ரோடின் பக்கவாட்டு சாலையில் நடிகர் திலகம் காரோட்டும் அழகைப் பார்த்தவாறு ஷூட்டிங்கை ரசித்தபடி சிலர் மிதிவண்டிகளில் வேகமாக காருக்கு இணையாக சைடில் வந்து கொண்டிருப்பார்கள். இரண்டு கார்கள் கூட வந்து கொண்டிருக்கும். நல்ல உச்சி வெயிலில் இந்தக் காட்சியை எடுத்திருப்பார்கள். பிறகு பேக் புரஜெக்ஷன்.


    மிக அழகான பூஞ்சிறகு பதித்த ரெட் ஹேட் அணிந்திருப்பார் நடிகர் திலகம். உள்ளே ரெட் ஷர்ட்டும், வெளியே வெளிர் சந்தன கோட்டும் கோலாகல கோமானாய்க் காட்டும் அவரை.



    'நான் தன்னந்தனிக் காட்டு ராஜா'

    என்று வலது கை ஆள்காட்டி விரலை முகத்துக்கு நேரே உயர்த்தும் போதே ரசிகர்களின் ஆள்காட்டி விரலும், கட்டை விரலும் ஒன்றாகச் சேர ஆரம்பித்து விசில் வீ(பீ)றிட்டுக் கிளம்ப ஆரம்பித்து விடும். கொட்டகை இரண்டு படும்.

    'ராஜா' என்னும் போது அந்த காந்த வார்த்தையை அமர்க்களமாக நம் 'ராஜா' அழுத்தமாக வாயசைப்பில் கொண்டு வருவார். ராஜா இல்லையா? 'ராஜான்னா ராஜா'தான்.

    தலைகளில் வித வித தொப்பி அணிந்து, கைகளில் இசைக்கருவிகள் சுமந்து, எத்தனை அழகு கொட்டிக் கிடக்குது அந்தக் குழந்தைகளிடம்!



    ஜெய கௌசல்யா, ('தங்கை'யில் தங்கை, 'நீதி'யில் உடன் பிறவா தங்கை, 'ஞான ஒளி' யில் தலைவரின் பேத்தி பிரமோஷன் என்று நிறைய) ரோஜாரமணி, ('இரு மலர்களி'ல் ஒரு மலரின் மகள், பின்னால் 'என் மகனி'ல் மகள் மற்றும் தங்கை என்று இவரும் நிறைய) மற்றும் பிரபாகர், சேகர், லட்சுமி, விஸ்வேஸ்வரராவ், ரஜனிஸ்ரீ, சுரேந்திர குமார், ஜிந்தா, மாஸ்டர் ராமு, சுமதி, ரமேஷ் என்று நீளமான பட்டியலில் குழந்தை நட்சத்திரங்கள் நடித்திருப்பார்கள் நம் பெரிய குழந்தை பேரழகனுடன்.



    'நான் தன்னந்தனிக் காட்டு ராஜா' என்று மறுபடி பாடும் போது நெற்றியையும், வலது கண்ணையும் மறைக்குமளவிற்கு தொப்பியை ஸ்டைலாக முன்னால் இழுத்து விடுவார் இந்த மூக்கழகர். மூக்குப் பகுதியிலிருந்து முகவாய்க்கட்டை வரை குறுக்கி, பெருமிதம் பொங்க 'இந்தத் தனிக்காட்டு ராஜாவுக்கு' நிகர் எவருமில்லை என்று உணர்த்துவார். நாக்கை சற்று முன் வைத்து கடித்தவாறு வாயசைப்பு அருமையாக இருக்கும். குழந்தைகள் 'ஊ ஊ' என்று இரைச்சல் இடும் போது டிரைவ் செய்தபடி அழகாக அவர்களைத் திரும்பிப் பார்ப்பார். இப்போதும் பக்கத்தில் ஷூட்டிங் பார்க்கும் ஜனங்களைப் பார்க்கலாம்.

    அடுத்து மெரினா கடற்கரை. 'என்னப் பார்வை உந்தன் பார்வை?' என்று முத்து கார் ஓட்டியபடி காஞ்சனாவுடன் காதல் புரிந்த அதே இடம். அங்கு ரொமான்ஸ் செய்யும் ஒரு காதல் ஜோடியை குழந்தைகள் செமையாய்க் கத்திக் கலாய்க்கும்.

    அப்படியே எல்.ஐ.சி கட்டிடம். மவுண்ட் ரோடு. குழந்தைகளின் வாத்தியங்கள் வாசிப்பு சப்தம் கேட்டு தாங்க முடியாதவாறு மிக அழகாக காதுக்குள் விரல் விட்டு அடைத்து குடைவார். (கோபால் சாருக்கு மிக மிக பிடித்த சீன் இது)

    'முத்தம் கொடுக்கையில் மூக்கைக் கடித்திடும்'

    வரிகளில் குழந்தைகளின் குறும்பைத் தாங்க மாட்டாமையை விழிகளை அகல விரித்துக் காட்டுவார்.


    அடுத்து மெட்ராஸ் மிருகக் காட்சி சாலையில் குழந்தைகளோடு Midget train விளையாட்டு ரயில் பயணம். எஞ்சின் டிரைவருடன் சேர்ந்து நீராவிப் புகை முகத்திலடிக்க பயணம் செய்வார்.

    அடுத்து வரும் காட்சிதான் மிக மிக அற்புதம்.



    ரயிலிலிருந்து இறங்கி, ரயில் பக்கத்தில் வந்து கொண்டிருக்க, ரயிலின் கூடவே விசலடித்தபடி, பேண்ட்டின் இரண்டு பாக்கெட்டுகளிலும் கை விட்டுக் கொண்டு, அப்படியே தொப்பியையும் சரி செய்து கொண்டு, மெதுவான ஸ்டைலான ஓட்டத்தில் கைகளை மிக அழகாக வைத்துக் கொண்டு பின்னி விடுவார் பின்னி. பிரவுன் நிற பேன்ட் பிரமாதம்.

    சப்பாத்திக் கள்ளிச் செடியின் தடிமனான கடின இலைகளின் மேல் முள்ளால் எழுத்துக்கள் எழுதினால் எக்காலமும் அது அழியாதாம். அது போல இந்தக் காட்சி என் மனதை விட்டு அழியவே அழியாது. நான்கே விநாடிக் காட்சி. நாற்புறம் எரித்த சிவனே ஆனாலும் அதை அழிக்கவே முடியாது.

    இந்த ஒரு காட்சிக்காகவே இப்பாடலின் ஆய்வை எடுத்தேன்.

    மறுபடி ரயிலில்.

    மெல்ல வளர்ந்திடும் செல்லக் குழந்தைகள்
    நாளை உலகத்தை ஆளும் தலைவர்கள்
    வஞ்சம் அறியாத பிஞ்சுக் கரங்களில் வாழத்
    துடிக்கின்ற வேகம் இருக்குது

    அப்படியே பொருட்காட்சிக்கு காட்சி நகரும்.

    இள மனதில் தோன்றும் நினைப்பு
    புது உலகைக் காணும் துடிப்பு
    இதன் இடையில் ஏது களைப்பு
    அதைக் காணத்தான் எந்தன் உழைப்பு

    (என்று படத்தில் மட்டுமே வரும் வரிகள். வானொலிகளில் 'கட்')




    மேற்கண்ட வரிகளில் அப்படியே 'மக்களைப் பெற்ற மகராசி'யின் 'பொன்னு விளையிற பூமியடா' செங்கோடனை நாகரீக பேன்ட், கோட், சூட் போட்ட 'கோடீஸ்வரனி'டம் இங்கு காணலாம். (குறிப்பாக 'அதைக் காணத்தான் எந்தன் உழைப்பு' வரிகளில் காட்டும் பின்வாங்கல் தலையாட்டலில் கண்டு கொள்ளலாம்) ஒரு காலைத் தரையில் வைத்து, பேரல் இருக்கும் அந்த மர ஸ்டாண்டில் இன்னொரு காலைத் தூக்கி வைத்து கைகளைக் கொட்டி, தொப்பியைச் சரி செய்து, சிரித்துக் குதூகலித்தபடி செம ஸ்டைல் )

    ராட்டினம் சுற்றும் குழந்தைகளிடம் வெளியே நின்று சிரித்தபடியே கை சைகையால் சுற்றச் சொல்லிக் காட்டுவது அருமையோ அருமை.

    'Merry Go Round' ராட்டினத்தில் வெள்ளைக் குதிரை பொம்மை மேல் இன்னொரு பொம்மைக் குழந்தை பேபி சுமதியுடன் அமர்ந்து ராட்டினம் சுற்றுவார்.

    'அல்லா முதற்கொண்டு இயேசு புத்தன் வரை
    எல்லோர் மதங்களும் எங்கள் வழித்துணை'

    என்று மத நல்லிணக்ககத்தை மழலைகளிடம் விதைப்பார்.

    பின் ராட்சத சுழலும் ராட்டினத்தில் பலூன்கள் மத்தியில் மழலைகளுடன் அமர்ந்து பாடுவார்.

    பாதி காட்சிகள் நிஜமாயும், மீதி புரஜெக்ஷன் காட்சிகளாயும் ரசிக்கும்படி படமாக்கப் பட்டிருக்கும்.

    'நடிகர் திலகம்' தான் நடிகர் என்றே நினைக்காமல், படமென்று நினைக்காமல், படப்பிடிப்பு என்று நினைக்காமல், குழந்தைகளோடு குழந்தையாகவே மாறிவிடுவதை நாம் கண்கூடாக கண்டு கொள்ள முடியும். அதே போல் மற்ற குழந்தைகளாக ரசிகர்களாகிய நாமும் மாறி அவருடன் இணைந்து விடுவோம் என்பதும் மறுக்க முடியாத உண்மையே.

    அத்தனை நடிகர்களும் குழந்தைகளோடு சேர்ந்து பாடல் காட்சிகளில் பல படங்களில் நடித்திருந்தாலும்... அவ்வளவு ஏன் நடிகர் திலகமே பல படங்களில் குழந்தைகளுடன் நடித்திருந்தாலும் இந்தப் பாடல் காட்சி தனி மகத்துவ விசேஷம் கொண்டது. இதற்குப் பிறகுதான் மற்ற எல்லா குழந்தைப் பாடல்களும்.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குதூகலிக்கும் பாடல்களில் என்றும் முதலிடமாக,

    'நான் தன்னந் தனிக் காட்டு ராஜா'

    என்று இறுமாப்புக் கொண்டு மார் தட்டும் பாடலும் கூட. பிள்ளைகள் கைகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வாத்தியக் கருவிகள் இருக்கும் டிரம்பென்ட், பேண்ட் என்று. அதற்கேற்றார் போல் 'மெல்லிசை மன்னர்' அத்தனை வாத்தியங்களையும் பயன்படுத்தி பாடலை இன்னும் பிரம்மாண்டப் படுத்தியிருப்பார் காட்சியமைப்பிற்குத் தக்கவாறு.

    (வினோத் சார் உடனே 'சிக்கு மங்கு' பாடலைப் பதிவிடலாம். அதுவும் குழந்தைகளை நல்வழிப்படுத்தும் நல்ல கருத்துக்கள் நிறைந்த, நன்கு ரசிக்கத் தகுந்த பாடலே! அருமையான படமாக்கமே!)




    ரவி சார்! உங்கள் எண்ணம் நிறைவேறியதா? இதில் போன் செய்து வேறு வெறி கிளப்பி விட்டீர்கள். 'எங்க மாமா' என்று குழந்தைகள் உரிமை கொண்டாடிய எங்க (நம்ம) அண்ணனை, அவர் நடித்த பட்டை கிளப்பும் பாடல் காட்சியை இங்கு பதிவிட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளிவிட்டு விட்ட தங்களுக்கு என் தங்கமான நன்றிகள்.

    இதோ மீண்டும் ஒருமுறை


    Last edited by vasudevan31355; 17th July 2015 at 06:06 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. Thanks RAGHAVENDRA, adiram thanked for this post
  11. #1916
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு - பதிவிட வேண்டாம் சற்றே ( நீண்ட )ஒய்வு எடுக்கலாம் என்று நினைத்திருந்தேன் - உங்கள் " நான் தன்னந்தனிக் காட்டு ராஜா'" பதிவு என் "ஒய்வு எடுக்கலாம்" என்ற எண்ணத்தை கெடுத்து விட்டது .இந்த பதிவு எனக்கு நீங்கள் தந்த பரிசாக கருதுகிறேன் - உடுக்கை சத்தம் இன்னும் ஒலித்துக்கொண்டிருக்கும் போதே இளமையின் சத்தம் இன்னும் அதிகமாக கேட்க்கும் படி செய்து விட்டீர்கள் .

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் - நான் 2வது பாகத்தை முடிப்பதற்குள் நெய்வேலிக்கு இந்த பாடல் ஓடிப்போய் விடக்கூடாதே என்று எல்லா இடத்திலும் போலீஸ் படையை நிறுத்தி வைத்திருந்தேன் - நல்ல வேலை , நான் 2வது பாகத்தை முடித்த பின் தான் அலசி உள்ளீர்கள் . இந்த பாட்டில் இவர் காட்டும் ஸ்டைல் , அழகு , நளினம் , இளமை , இனிமை -" தங்கை "யில் வரும் " இனியது இனியது உலகம் " என்ற பாட்டில் இவர் காட்டும் அழகை விட அதிகம் . வினோத் சாருக்கும் இந்த பாடல் மிகவும் பிடிக்கும் என்று அவரே சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன் . யாருக்குத்தான் வாசு இந்த பாடல் பிடிக்காது ? அப்படியே ஓரிருவர் இருந்தால் , உங்கள் அழகான , அருமையான அலசலை படித்த பின்பும் மரக்கட்டையாக இருக்க மாட்டார்கள் .

    மீண்டும் நன்றி
    Last edited by g94127302; 17th July 2015 at 09:10 PM.

  12. Thanks vasudevan31355 thanked for this post
  13. #1917
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார்
    பறவைகள் பறந்த வுடன் முதன் முதலில் காட்டப்படுவது

    எங்கள் செனட் ஹவுஸ்..

    சென்னைப்பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நூற்றைம்பது ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டிடம். அக்காலத்தில் பட்டம் பெற்று வருபவர்களைக் காட்ட இந்த இடத்தைத் தான் திரைப்படங்களில் பயன்படுத்துவார்கள்.

    பாபு வில் அந்த உணர்வு மயமான காட்சி நினைவுக்கு வரும்.. நிர்மலா பட்டம் பெற்று வரும் போது ந.தி. வாயிலில் பூரிப்போடு கண்டு களிக்கும் உன்னதமான காட்சி. அதே போல் காதலிக்க நேரமில்லை என்ன பார்வை பாடலின் ஒரு பகுதியும் இந்த இடத்தில் தான் படமாக்கப்பட்டது.

    அடுத்து சென்னை அண்ணா சாலை ஆயுள் காப்பீட்டு நிறுவனக் கட்டிடம்.

    இதற்குப் பிறகு வருவது சென்னையில் அப்போது இருந்த மிருகக் காட்சி சாலை.

    இதே கடற்கரையில் நடிகர் திலகத்தின் எத்தனை காட்சிகள்.. அதே போல் நினைத்ததை முடிப்பவன் படத்தில் இடம் பெற்ற பூமழை தூவி பாடலின் பெரும் பகுதியும் இங்கு தான் படமாக்கப்பட்டது.

    நாகேஷ் நடித்த பாடல் காட்சி, மெட்ராஸ் நல்ல மெட்ராஸ், அதுவும் இங்கே தான் படமாக்கப்பட்டது. உழைப்பாளர் சிலையின் அருகில் நாகேஷ் நிற்கும் போது பின்னணியில் கடலில் கரை தட்டிய கப்பலைப் பார்க்கலாம்.

    இது கிடக்கட்டும் ஒரு புறம்.

    இப்பாடலைப்பற்றிய தங்கள் வர்ணனை.. ஆஹா... (வினோத்துக்கு நீங்கள் மட்டும் தான் பாடல் எடுத்துக் கொடுப்பீர்களா என்ன.. இப்போது பாருங்கள் இன்னொன்றும் கிடைத்து விட்டது.)
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  14. Thanks vasudevan31355 thanked for this post
  15. #1918
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    மாற்றார் தோ(போ)ட்ட மெல்லிசையும் மதுரமே
    பகுதி 5 : யு ஒன்லி லிவ் ட்வைஸ் / YOU ONLY LIVE TWICE (1967)
    Sean Connery is James Bond OO7!

    இம்முறை ஜேம்ஸ் பாண்ட் வானவெளியில் 'லபக்'கப் படும் விண்கலங்களின் கடத்தல் மூளையை செயலிழக்க வைக்கும் பணியில் செய்யும் சாகசங்கள்

    மெய் சிலிர்க்க வைக்கும் முரட்டுத்தனமான டூப் போடாத சண்டைக் காட்சிகளின் மன்னர் ஷான் கானரி !! ராட்சஷ மேக்னட்டின் துணை கொண்டு அடியாட்களுடன் பின் தொடரும் காரை அந்தரத்தில் பற்றியெடுத்து கடலுக்குள் வீசும் காட்சி.....லிட்டில் நெல்லி ஹெலிகாப்டரில் பறந்து எரிமலை வாய்களை வில்லனின் இருப்பிடம் கண்டறிய ஜேம்ஸ் பாண்ட் ஆய்வு செய்யும்போது வழிமறிக்கும் பெரிய ஹெலிகாப்டர்களை சிதறடிப்பது ....எரிமலை செட்டப்புக்குள் கயிறு கட்டிக் குதித்து சண்டையிடும் சாகசம்....இக்காட்சிகளில் பட்டையைக் கிளப்பும் ஜான் பேரியின் தீம் இசைச் சிதறல்...மெய்மறக்க வைக்கும் டைட்டில் இசைப் பாடலுடன் (by Nancy Sinaatra the daughter of Star/Singer Frank Sinaatra, the Von Ryon Express movie fame!) கூடிய மாரிஸ் பைண்டரின் கிராபிக்ஸ் அதிரடி.....அவ்வாண்டின் முதலிட வெற்றிப் படம்....அகில உலக சூப்பர் டூப்பர் ஸ்டார் அந்தஸ்தை எப்போதும் போல தக்க வைத்துக் கொண்டார் கானரி !!


    The title credits with Maurice Binder's excellent graphics of the day alongside the tantelizing song by Nancy Sinatra!



    Just a drop in the ocean!! Usual reception to baddies!!



    The excellent fight choreography with a sumo fighter!
    Cheers!...Siamese Vodka?!



    The ever green action scene in the sky with this Little Nelli!!
    The theme music enhances the tempo and makes the audience to their edge of seats restless till the end!!

    Last edited by sivajisenthil; 17th July 2015 at 06:16 PM.

  16. #1919
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    இதே கடற்கரையில் நடிகர் திலகத்தின் எத்தனை காட்சிகள்.. அதே போல் நினைத்ததை முடிப்பவன் படத்தில் இடம் பெற்ற பூமழை தூவி பாடலின் பெரும் பகுதியும் இங்கு தான் படமாக்கப்பட்டது.
    ராகவேந்தர் சார்,

    பூமழை தூவி பாடல் படமாக்கப் பட்ட இடம் சென்னை கடற்கரை அல்ல. வேறு ஏதோ மலைப்பகுதியில் இருக்கும் அழகிய சாலை. (ஊர்வலம் திரும்பத்திரும்ப அதே இடத்தில் நகர்ந்து கொண்டிருக்கும்). அந்தப்பாடல் சாரதா காதில் விழுவதாக வரும் இடம் மட்டுமே சென்னை கடற்கரை.

  17. Thanks vasudevan31355, RAGHAVENDRA thanked for this post
    Likes RAGHAVENDRA, Richardsof liked this post
  18. #1920
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய நண்பர் திரு குமார் சார்

    அண்ணா மற்றும் நவமணி தின இதழ்களில் வெளிவந்த தமிழ் படங்களின் விளம்பரங்களை மீண்டும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில காணும் அரிய வாய்ப்பை தந்தமைக்கு நன்றி . சென்னை நகர அன்றைய திரை அரங்குகள் இன்று 99% மூடப்பட்டு விட்டது மிகவும் ஏமாற்றமாக உள்ளது .

    இனிய நண்பர் திரு ஆதிராம் சார்
    உங்கள் மனதில் எனக்கு இடமிருப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி .சமீப காலங்களில் ஆவணங்கள் கிடைக்காததால் பதிவுகளை தர இயலவில்லை பூ மழை தூவி பாடல் பெரும்பாலான காட்சிகள்
    காஷ்மீரில் படமாக்கப்பட்டது .சாரதா சம்பந்த பட்ட ஓரிரு காட்சிகள் மட்டும் சென்னையில் படமாக்கபட்டது .

    இனிய நண்பர் திரு வாசு சார்

    எங்க மாமாவில் இடம் பெற்ற நான் தன்னந்தனி காட்டு ராஜா பாடலை பற்றிய விரிவான வர்ணனைகள் அமர்க்களம் .
    பாராட்டுக்கள் .

  19. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355, RAGHAVENDRA liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •