-
18th July 2015, 07:31 PM
#841
Junior Member
Veteran Hubber
மடிந்து விட்ட மனசாட்சி ......
நடிகர்திலகத்தின் மாண்பு அறியாத பேதைமை.....
அமரனே !! எம் இதயத்தில் பதிந்த உன் பொற்பாதங்களை எம் கண்ணீரால் நனைப்பதே எம்மால் இயன்ற மனமண்டப அஞ்சலி!!
http://mlife.mtsindia.in/nd/?pid=420190&rgn=tn
உலகப் பொதுமறை திருக்குறள்
உலக நடிப்பிலக்கணம் நடிகர்திலகமே ! தமிழ் மண்ணின் பெருமை உலகெங்கும் பரப்பிய செம்மலுக்கு தமிழை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று கற்றுத் தந்த ஆசானுக்கு தமிழகத்தில் சொந்த மண்ணில் மணி மண்டப அஞ்சலி மறுக்கப்படுவது .....ஆறாத ரணமே!
Last edited by sivajisenthil; 18th July 2015 at 07:44 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
18th July 2015 07:31 PM
# ADS
Circuit advertisement
-
18th July 2015, 10:15 PM
#842
Junior Member
Veteran Hubber
சந்தேகச் சேற்றில் மலர்ந்த அன்பு செந்தாமரைகள் :
புதிய குறுந்தொடர் : Illusions and Hallucinations of Love with the King of Romance!!
பகுதி 8 :அவளுக்கென்று ஒரு மனம் : பாரதி Vs காஞ்சனா
மாமாவையே உயிருக்குயிராக நேசிக்கிறார் பாரதி. ஆனால் ஜெமினி மாமனோ அவரை சிறுவயது முதல் குழந்தைப் பெண் என்ற கண்ணோட்டத்திலேயே பாசம் செலுத்துகிறார். மாமா விலக விலக சந்தேக சேற்றில் சிக்கி காஞ்சனா தொடர்பு மனதை அரிக்க நிம்மதி இழக்கிறார். மாமாவின் உண்மை நிலை தெரிந்ததும் வெறுக்கவும் முடியாமல் அன்பை விளக்கவும் முடியாமல் தவித்து மதுவுக்கும் அடிமையாகிறார். சந்தர்ப்ப சூழலில் முத்துராமனின் கைப்பாவையாகிறார்.....
கலைந்த கனவும் தெளிந்த நினைவும்
Last edited by sivajisenthil; 18th July 2015 at 10:21 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
20th July 2015, 12:17 PM
#843
Junior Member
Veteran Hubber
21/07
நினைவில் நிலைத்த நடிகர்திலகம் ....
அவரது நினைவு நாள் மன அஞ்சலி ...
நடிகர்திலகத்தின் நினைவஞ்சலியை ஒட்டி எனது GG திரி பதிவுகளை 22.07 முதல் தொடர்கின்றேன்.
செந்தில்
Last edited by sivajisenthil; 20th July 2015 at 06:46 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
21st July 2015, 07:42 PM
#844
Junior Member
Seasoned Hubber
Dear Sivaji senthil Sir,
Pl share your views about Manalane Mangayin Bhagyam movie
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
21st July 2015, 08:43 PM
#845
Senior Member
Seasoned Hubber
Manalane mangayin bakkiyam.. Suvarna sundari in telugu & hindi
a very entertaining movie with great songs . handsome gemini with cute anjali devi.
-
21st July 2015, 11:43 PM
#846
Junior Member
Veteran Hubber
For Rajesh!
மணாளனே மங்கையின் பாக்கியம் GG!
Telugu
Hindi
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
22nd July 2015, 07:03 AM
#847
Junior Member
Veteran Hubber

Originally Posted by
ragulram11
Dear Sivaji senthil Sir,
Pl share your views about Manalane Mangayin Bhagyam movie
What Raghul...you have forgotten all of us? Kindly come back and make your rocking presence. I concentrate on GG after I complete my pending postings on Hollywood songs and music in our Madhura Kaanankal thread.
regards, senthil
-
23rd July 2015, 11:22 AM
#848
Senior Member
Diamond Hubber
செந்தில் சார்.
நான் மிக மிக ரசித்த காட்சி ஒன்றை சொல்கிறேன். காவியப்படமான 'காவியத் தலைவி' யிலிருந்து தான்.
தன் கணவர் எம்.ஆர்.ஆர்.வாசுவுக்குப் பயந்து ஹாஸ்டலில் தன் குழந்தையைத் தங்க வைத்துப் படிக்க வைப்பார் நடன மாது சௌகார்.

குழந்தைக்காக துணி எடுக்க சௌகார்துணிக்கடை சென்றிருப்பார். அப்போது பார்த்தால் தான் முன்னால் காதலித்துப் பிரிந்த காதல் மன்னன் அங்கு இருப்பார். இருவரும் ஒருவரையொருவர் பார்த்து அதிர்ச்சி அடைவார்கள். (காதல் மன்னன் இப்போது பெரிய வழக்கறிஞர். வழக்குகளில் வெற்றி பெற்றவருக்கு வாழ்க்கையில் தோல்வி. அதுவும் காதல் மன்னனுக்கே காதல் தோல்வி) இப்போது சௌகார் நேராக ஜெமினியிடம் வருவார். ஜெமினி பழைய நினைவுகளைச் சொல்லி கண் கலங்குவார்.
யாருக்கும் தெரியா வண்ணம் முகம் பார்த்தும், முகம் பார்க்காமலும், கோட்டை தனக்கு அந்த சமயம் துணையாகப் பிடித்து சௌகாரிடம் 'உனக்குக் கல்யாணம் ஆயிடுச்சா?' என்று தாழ்குரலில் கேட்பார் வேதனையோடு. அதற்கு சௌகார் ஜெமினியிடம் நேரிடையாக பதில் சொல்லாமல் மிக புத்திசாலித்தனமாக துணி எடுத்துக் கொடுக்கும் பையனிடம்,
"ஏம்பா! இந்தத் துணியில ஒரு கோட்டும், ஒரு பேண்ட்டும் தைக்கணும்னா எவ்வளவு துணி வேணும்?"
என்பார்.
உடனே கடைக்காரப் பையன் 'வீட்டுக்காரருக்கு சூட்டா?' என்று சௌகாரிடம் கேட்க, சௌகார் புரிய வைத்துவிட்ட தோரணையில் இப்போது ஜெமினியைப் பார்ப்பார். ஜெமினி அவர்களின் சம்பாஷணையிலிருந்து சௌகாருக்குக் கல்யாணம் ஆகி விட்டது என்று புரிந்து கொள்வார்.

'ஓ'..என்று அதிர்ந்து அதிர்ச்சி முகபாவம் காட்டுவார். சௌகாரும் மிக பாவமாக நடித்திருப்பார்.
உடனே கடைப்பையன்,
'இந்தத் துணியைத்தானே கேட்டீங்கம்மா'
என்று துணியை எடுத்துப் போட,
சௌகார்,
'இல்லே! அவர் கேட்டதையேதான் நானும் கேக்கிறேன்' என்று இருபொருள் படக் கூறுவார்.
அதாவது ஜெமினி கேட்ட துணியை கேட்பது போல் ஜெமினி இவரிடம் கேட்ட 'கல்யாணம் ஆயிடுச்சா? என்ற அதே கேள்வியை பூடகமாகக் கேட்பார். கேட்டு ஜெமினியின் பதிலை ஆவலுடன் அவர் முகத்தில் எதிர்பார்ப்பார்.
கடைப்பையன்,
'ஏன் சார் நீங்களும் இதைத்தான் கேட்டீங்களா?'
என்று ஜெமினியிடம் கேட்டவுடன்,
'முதலில் லேடீஸை கவனிப்பா. இந்தத் தனிக்கட்டையைப் பத்தி என்ன? வீட்ல என்ன பெண்டாட்டியா பிள்ளையா? (குரலில் விரக்தி) என்று விரக்தியுடன் கூறி தனக்குக்கு இன்னும் திருமணம் ஆகாததை சௌகாரின் அந்தப் பாணியிலேயே சொல்லி பதிலை உணர்த்துவார். ஜெமினி இன்னும் தன் நினைப்பில் திருமணமே செய்து கொள்ளவில்லை என்று தெரிந்ததும் சௌகார் கண்கலங்குவார் வேதனையோடு.
கடைக்காரப் பையன் 'துணி கிழிக்கட்டுமா?' என்று கேட்டவுடன்
'வேண்டாம்பா! அந்த அதிர்ஷ்டம் எனக்கில்லே!'
என்று சௌகார் கண் கலங்குவார். ஜெமினி இன்னும் குழம்பி அதிர்வார். 'கல்யாணம் ஆகி விட்டது என்று சொல்கிறாள்....ஆனால் துணி வாங்க அதிர்ஷ்டம் இல்லையென்று சொல்கிறாளே... ஒருவேளை புருஷனை இழந்து விதவை ஆகி விட்டாளோ' என்று ஒருகணம் குழம்புவார்.
இருவரும் அப்போது பிரிந்து மீண்டும் கடையில் உடனே சந்திப்பார்கள்.
'நீ ஏன் அப்படி சொன்னே?'
என்று ஜெமினி விடாமல் சௌகாரிடம் கேட்க,
சௌகாரோ பேச்சை மாற்றுவார். ஜெமினி புகழ் பெற்ற பாரிஸ்டர் என்பதை பத்திரிகைகளில் பார்ப்பதாக, படித்ததாக சொல்வார்.
அதற்கு ஜெமினியின் பதில்,
'நினைவுகளை மறக்க நீதிமன்றத்துக்குப் போறேன்'
'துணியெல்லாம் பேக் பண்ணியாச்சு'
என்று பையன் வந்து சொல்ல, அப்போது ஜெமினி சௌகாரிடம்,
'நீ எப்படி? வசதியாக இருக்கியா?'
என்று அடுத்த கேள்வி கேட்பார்.
அதற்கும் சௌகார் நேரிடையாக பதில் சொல்லாமல் பையனிடம்,
'ஏம்பா ஆயிரம் ரூபாய்க்கு துணி வாங்கியிருக்கேன். கொஞ்சம் குறைச்சி போடக் கூடாதா?' என்று கேட்பார்.
அதிலிருந்து சௌகார் வசதியாக இருக்கிறார் என்று ஜெமினி புரிந்து கொள்வார். (பின்னே! அப்பெல்லாம் ஆயிரம் ரூபாய்க்கு துணி வாங்கினா சும்மாவா?)
'நீங்க எப்படி இருக்கீங்க?'
என்று சௌகார் ஜெமினியிடம் திரும்பக் கேட்பார்.
'நான் நெனச்சபடி வாழ்க்கையை நடத்த முடியல்ல. வழக்குகள் நடத்திகிட்டு இருக்கேன்'
என்று ஜெமினி சலிப்போடு சொல்லிவிட்டு,
'உன் கணவருக்கு இந்த ஊருதானா?'
என்று சௌகாரிடம் எப்படியாவது அவர் கணவரைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆவலாய்க் கேட்க,
அதற்கு சௌகாரோ,
'நான் மெட்ராஸில தான் இருக்கேன்'
என்பார் கணவரைப் பற்றி மறந்தும் கூட குறிப்பிடாமல். (எம்.ஆர்.ஆர். வாசு சொல்லக் கூடிய கணவன் வகை இல்லையே)
ஜெமினி வெறுத்து,
'உன் கணவரைப் பத்தி நான் எதுவுமே தெரிஞ்சிக்கக் கூடாதா?'
என்றதும்..
சௌகார்,
'இப்போ எந்த வழக்குல குறுக்கு விசாரணை செய்றீங்க?'
என்பார் அழுகையுடன்.
'எந்த வழக்குல நான் தோத்துப் போய்ட்டேனோ அந்த வழக்குலதான்'
என்று ஜெமினி பதில் சொல்லி வேதனைப்படுவார்.
உடனே சௌகார் அவசரமாகக் கிளம்பி விடுவார்.
என்ன மாதிரி வசனங்கள்! உணர்ச்சிகளின் வெளிப்பாடுகள். டைரக்டோரியல் டச். பாலச்சந்தர் பாலச்சந்தர்தான்

காதல் தோல்வியையும், பிரிந்த காதலர்களின் தற்போதைய நிலைமையையும் பார்வையாளர்கள் ரசனையுடன் புரிந்து கொள்ளுமாறு காட்சி அமைப்புகள். ஜெமினியின் பிரிவு வேதனை நெஞ்சை நெருடும். சௌகார் கிழடு தட்டிப் போய் பார்க்க சகிக்கா விட்டாலும் நடிப்பில் முதிர்ச்சி தெரியும். அளவான முகபாவங்கள்.
வசனங்களுக்காகவே நான் மிக மிக ரசித்த காட்சி இது.
Last edited by vasudevan31355; 23rd July 2015 at 11:48 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
25th July 2015, 07:32 AM
#849
Senior Member
Diamond Hubber
ஜெமினியின் 'குழந்தை உள்ளம்' (1969)
ஜெமினி சொல்ல சொல்லக் கேட்காமல் சாவித்திரி சொந்தப் படம் எடுக்க வேண்டும் என்று பிடிவாதம் செய்ய, அந்த பிடிவாதத்தின் விளைவாக 'குழந்தை உள்ளம்' வந்து விழுந்தது. ஜெமினியின் வாக்கு மெய் ஆனது. சாவித்திரியின் நம்பிக்கை சரிந்து விழுந்தது.
தமிழ், தெலுங்கு இரண்டிலும் கோலோச்சிய, அதுவும் 'நடிகையர் திலகம்' என்று பட்டம் வாங்கிய நடிகை நன்றாக யோசித்து முடிவெடுத்திருக்கலாம். விதி, ஆசை இரண்டும் யாரை விட்டது?
சரி! ஸ்ரீசாவித்திரி புரொடக்ஷன்ஸ் தயாரித்த, அதிகம் பேருக்குத் தெரியாத, 'குழந்தை உள்ளம்' படத்தின் கதையை அனைவரும் தெரிந்து கொள்ளும் வண்ணம் சுருக்கமாக இங்கு அளிக்கிறேன். பிற்பாடு தொடருக்கு வருகிறேன்.



காட்டுக்குள்ளே திரிந்து ஓவியங்கள் தீட்டிக் கொண்டிருக்கும் ஜெமினி அங்கு வேறு என்ன செய்வார்? நிச்சயம் அங்கு ஒரு பெண்ணைப் பார்ப்பார் இல்லையா? காட்டுவாசிப் பெண்ணான வாணிஸ்ரீயை சொன்னபடி பார்த்து லவ்ஸ் விடுகிறார். அவ்விடமும் சம்மதமே. ஆனால் வாணிஸ்ரீயின் முறைமாமன் முரட்டு வில்லன் மனோகர் 'வாணிஸ்ரீயை கட்டிக் கொண்டே தீருவேன்' என்று உறுதியாய் இருக்கிறார். வாணிஸ்ரீ இதற்கு ஒத்துக் கொள்வாரோ? இல்லை. அப்புறம் ஜெமனி வாணிஸ்ரீயை யாருக்கும் தெரியாமல் காட்டிலேயே கல்யாணம் செய்து அங்குள்ள ஒரு வீட்டில் குடித்தனமும் செய்கிறார்.
ஊரிலிருந்து வேலைக்காரப் பெரியவர் ரங்காராவ் ஜெமினியைத் தேடிக் காட்டுக்கு வருகிறார். 'ஜெமினியின் அம்மா சாந்தகுமாரிக்கு உடல்நிலை மோசமாகி விட்டது... உடனே புறப்பட வேண்டும்... அம்மா ஜெமினிக்கு உடனே திருமணம் செய்து வைக்க ஆசைப்படுகிறார்'... என்று ரங்காராவ் கூற, ஜெமினி தனக்கு வாணிஸ்ரீயுடன் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது ரங்காராவிடம் சொல்கிறார். ரங்காராவ் வாணிஸ்ரீயை 'இப்போது அழைத்து வர வேண்டாம்' என்று சொல்லி ஜெமினியைத் தனியே ஊருக்கு அழைத்துப் போகிறார்.
ஜெமினி அம்மாவிடம் தனக்கு வாணியுடன் நடந்த திருமணத்தைப் பற்றி சொல்ல, முதலில் அதை ஏற்க மறுக்கும் சாந்தகுமாரி பின் மனம் மாறி, ஜெமினியிடம் காட்டுக்குச் சென்று வாணிஸ்ரீயை அழைத்து வரச் சொல்கிறார். ஜெமினியும் சந்தோஷமாக வாணிஸ்ரீயை அழைத்து வர காட்டிற்குப் போக, அங்கு அவருக்கு பேரதிர்ச்சி. காட்டில் வெள்ளம் வந்து காட்டையே அழித்துவிட்டதாகவும், அதில் வாணிஸ்ரீ இறந்து விட்டதாகவும் அங்கிருப்பவர் சொல்ல மனம் உடைந்து ஊர் திரும்புகிறார் ஜெமினி.
பின் அம்மாவின் வற்புறுத்தலால் சௌகார் ஜானகியை திருமணம் செய்து கொள்கிறார். முதல் இரவில் தன்னுடைய துயர காதல் கதையை சௌகாரிடம் மறைக்காமல் சொல்லியும் விடுகிறார். எல்லா கதையும் தெரிந்த சௌகார் ஜெமினியிடம் வாணிஸ்ரீயை மறந்து விடுமாறு கேட்டுக் கொள்கிறார். வாணிஸ்ரீயை மறக்க முடியாமல் தவிக்கிறார் ஜெமினி.
இதற்கிடையில் வாணிஸ்ரீ காட்டில் உயிருடன் தப்பித்து ஜெமினியின் குழந்தைக்குத் (ரோஜாரமணிக்கு பையன் ரோல்) தாயாகிறார். தாய்மாமன் வில்லன் மனோகர் இப்போது மனம் திருந்தி அண்ணனாய் இருந்து வாணிஸ்ரீயை கவனித்துக் கொள்கிறார்.
இங்கோ காதல் மன்னனின் இன்னொரு முயற்சியால் சௌகாருக்கு பெண் குழந்தை பிறக்கிறது. காட்டில் வாணிஸ்ரீயும், நாட்டில் சௌகாரும் ஒரே சமயத்தில் குழந்தைகளை தாலாட்டி 'உத்தமபுத்திரன்' பட ரேஞ்சுக்கு ஒரு பாடலில் வளர்க்கிறார்கள். '(பூ மரத்து நிழலமுண்டு')
ஜெமினி தன்னைத் தேடி வராதது கண்டு கவலை கொள்கிறார் வாணிஸ்ரீ. தன் பையன் ரோஜாரமணி, மாமன் மனோகர் சகிதம் பட்டணம் புறப்பட்டு ஜெமினையைத் தேடுகிறார். ஒருவழியாக ஜெமினியின் வீட்டைத் தேடிக் கண்டுபிடித்துப் போனால் அங்கு சௌகார் தான் ஜெமினியின் மனைவி என்று காட்டிக் கொள்ளாமல் வாணிஸ்ரீயைத் தெரிந்து கொண்டு, சென்டிமென்ட் டயலாக் சொல்லி, 'ஜெமினிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது...அவர் மனைவி சந்தோஷமாக இருப்பதை தடை செய்ய வேண்டாம்' என்று சொல்லி வாணிஸ்ரீயை திருப்பி அனுப்பி விடுகிறார். வாணிஸ்ரீயும் சௌகாருக்காகத் தன் வாழ்வைத் தியாகம் செய்து, இறுதியில் ஜெமினியின் நினைவால் தன் உயிரையும் தியாகம் செய்து விடுகிறார். மனோகர் இப்போது பையனை வளர்க்கிறார். ரோஜாரமணியை படிக்க வைத்துப் பெரிய ஆளாக்க வேண்டும் என்று துடிக்கிறார்.



ஜெமினியின் இரு குழந்தைகளும் ஒன்றையொன்று தற்செயலாகச் சந்தித்து இணைபிரியா நண்பர்கள் ஆகின்றனர். அண்ணன் தங்கையாகவே பழகுகின்றன. எல்லா விஷயமும் தெரிந்த ரங்காராவ் நைஸாக வாணிஸ்ரீயின் பையன் ரோஜாரமணியை ஜெமினி வீட்டிற்கு அடிக்கடி கூட்டி வருகிறார். இரு குழந்தைகளின் நட்பும் இறுகுகிறது. சௌகாரின் கோப குணத்தால் தனக்குத் தெரிந்த எதையும் சொல்ல முடியாமல், தெரிந்தால் ஜெமினியின் நிம்மதி கெடும் என்று வாய் பேசாமல் ஊமையாய் இருக்கிறார் ரங்காராவ்.
காட்டுவாசிப் பையன் ரோஜாரமணி என்பதால் 'அவனுடன் பழகக் கூடாது' என்று சௌகார் தன் மகள் ஷகீலாவைத் தடுக்கிறார். ரொம்ப காலமாக அந்த வீட்டை சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு நல்ல பாம்பு யாரையும் ஒன்றும் செய்வதில்லை. ஆனால் அந்த பாம்பை பிடித்துக் கொல்ல சௌகார் ஒரு பாம்புப் பிடாரனை அழைத்துவர ரங்காராவிடம் சொல்ல, ரங்காராவ் பாம்பு பிடிக்கும் பிடாரன் மனோகரைக் கூட்டி வருகிறார். மனோகர் பாம்பைப் பிடிக்கும் போது அது கொத்தி உயிரை விடுகிறார். உயிர் விடும்போது வாணிஸ்ரீயின் பையன் அதாவது தன் மருமகனை ஜெமினி கையில் ஒப்படைத்து விட்டு இறந்து போகிறார் ஜெமினிதான் அக்குழந்தையின் தகப்பன் என்று தெரியாமலேயே.
இப்போது ஜெமினி ரோஜாரமணி தன் பிள்ளை என்று தெரியாமலேயே வீட்டில் பலத்த எதிர்ப்புகளுக்கிடையில் மனோகருக்குக் கொடுத்த வாக்கின்படி வளர்க்கிறார். ரோஜாரமணி சௌகார் மற்றும் அவர் குடும்பத்தினரால் கொடுமைப்படுத்தப்பட, ரங்காராவ் ரோஜாரமணியைத் தன் தோட்டத்து வீட்டில் கொண்டு போய் வளர்க்கிறார். ஜெமினி மனோகர் ஆசைப்படி அவனை கான்வென்ட்டில் சேர்த்து படிக்க வைக்க ஏற்பாடு செய்கிறார்.
ரோஜாரமணியால் ஜெமினிக்கும், சௌகாருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடுகளும், சண்டையும், சச்சரவும் ஏற்படுகிறது.
இதை உணர்ந்த ரோஜாரமணி தன்னால்தானே இவ்வளவு பிரச்னையும் என்று வீட்டைவிட்டுக் கிளம்ப, அதைக் கண்ட தங்கை ஷகீலா பின் தொடர்ந்து ஓடிவர, அந்த நேரத்தில் அங்கிருக்கும் பாம்பு ஷகீலாவைக் கொத்திவிட, காட்டுவாசி சிறுவன் ரோஜாரமணி தங்கையின் உடலில் கலந்த விஷத்தை உறிஞ்சி அவளைக் காப்ற்ற, விஷத்தை உறிஞ்சியதால் தான் உயிருக்குத் தவிக்க, முடிவில் தயாரிப்பாளர் சாவித்திரி டாக்டராக வந்து ரோஜாரமணியைக் காப்பாற்றி படத்தைக் காப்பாற்ற முடியாமல் போக, ரங்காராவும் ஜெமினியிடம் எல்லா விவரங்களையும் கூறி ரோஜாரமணி அவருடைய மகன் என்ற உண்மையை சொல்லி விட, இறுதியில் சௌகார் தவறு உணர்ந்து தன் மகளைக் காப்பற்றிய ரோஜாரமணியைத் தன் இன்னொரு குழந்தையாக ஜெமினி மனம் மகிழும்படி ஏற்றுக் கொள்ள, முடிவு ஒரு வழியாக சுபம்..
அப்பாடா! ஒரு வழியாக எப்படியோ கதை எழுதி முடித்துவிட்டேன். தலை சுற்றுகிறது. என்ன கதையோ! என்ன படமோ!
அப்புறம் ஏன் எழுதினாய் என்று நீங்கள் குமுறுவது புரிகிறது. எல்லாவற்றையும்தான் தெரிந்து கொள்ள வேண்டும். 'குழந்தை உள்ளம்' பற்றி பல பேர் பலவிதமாக நினைத்திருப்பார்கள். அதுவும் சாவித்திரியின் சொந்தப்படம் வேறு. இப்போது தெளிவாகி விடுமல்லவா.


ஜெமினி, வாணிஸ்ரீ, சௌகார் தவிர வி.கே.ஆர், தேங்காய், ரங்காராவ், சுருளிராஜன் மனோகர், வீரப்பன், ரமாப்ரபா, சாந்தகுகுமாரி, , சி.கே சரஸ்வதி, சுந்தரிபாய், கௌரவ நடிகையாக 'நடிகையர் திலகம்' என்று நட்சத்திரக் கும்பல். அத்தனையும் வேஸ்ட்.
படத்தின் மெயின் கதையைவிட நகைச்சுவைக் காட்சிகள் என்ற பெயரில் அனைவரும் செம பிளேடு போடுகின்றனர். ஜெமினிக்கும், சௌகாருக்கும் பழகிப் புளித்துப் போன ரோல். நமக்கும் இதுமாதிரிப் பார்த்து சலித்துப் போன படங்கள் ஏராளம்.
எத்தனை படத்தில்தான் ஜெமினி இரண்டு மனைவிகளுக்குக் கணவனாக வருவாரோ! எங்காவது காடு மலை என்று சுற்றி அங்கு ஒன்றை செட் அப் செய்து குழந்தையைக் கொடுத்துவிட்டு வந்து விட வேண்டியது. அப்புறம் இன்னொரு திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டியது. அப்புறம் முதல் சம்சாரம் திரும்ப குழந்தையுடன் உயிரோடு வரும். அப்புறம் இரண்டு சம்சாரங்களுக்கிடையில் சிக்கி நிம்மதி இல்லாமல் தவிக்க வேண்டியது. சம்சாரங்களையும் தவிக்க விடவேண்டியது. மனிதருக்கு இதே வேலைதானா நிஜ வாழ்க்கையைப் போன்றே?

வாணிஸ்ரீ காட்டுவாசிப் பெண். வயிறு இவருக்கு அடங்காது. சௌகார் எரிச்சல். இதிலும் முதல் இரவுக் காட்சில் அழுவார். இவர் தரும் சித்ரவதை சொல்லி மாளாது. ரங்காராவின் கடைசி காலம். அவரால் முடியாது. சிரமப்படுவார். இவருக்கு பொருத்தமே இல்லாமல் டி.எம்.எஸ்.பாட்டு வேறு.
காட்டுவாசிகள் என்று ஆந்திர வாடை அதிகம். வாணிஸ்ரீ காட்டுவாசிப் பெண். அழகாகவே இருக்கிறார். மனோகர் மேல் உடம்பு காட்டி, டார்ஜான் போல காட்டுவாசி டான்ஸ் ஒன்று போடுவது கொஞ்சம் புதுமை. ஜெமினியுடன் 'திருவாரூர்' தாஸ் புண்ணியத்தில் ஒரு ஃபைட்டும் உண்டு. கொடும் வில்லன் திடுமென்று அநியாயத்துக்கு நல்லவராக ஆகி விடுவார்.
நகைச்சுவை நடிகர்கள் படத்தை சர்வ நாசம் செய்வார்கள். தேங்காய் ஹிப்பி ரேஞ்சுக்கு செம அறுவை. வி.கே.ஆர் முதற்கொண்டு வீரப்பன் வரை அநியாயத்துக்கு நம் பொறுமை சோதிப்பார்கள்.
ஒரே ஒரு நல்ல விஷயம். சில நல்ல பாடல்கள்.
'பூமரத்து நிழலுமுண்டு...பொன்னி நதி பாட்டுமுண்டு'
'அங்கும் இங்கும் ஒன்றே ரத்தம்'
முத்துச் சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு (பாலாவின் அமர்க்களமான ஆரம்பகாலப் பாடல்)
என்று அருமையான பாடல்கள்.
'ஓ...தர்மத்தின் தலைவனே' (சுமார்தான்)
இசை தெலுங்கின் கோதண்டபாணி. நம் தொடர் நாயகர் பாலாவை நமக்கு முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர். (இவருடைய இனிஷியலும் எஸ்.பி.தான்) அருமையான மூன்று முத்தான பாடல்களைத் தந்திருப்பார். ஒளிப்பதிவு சேகர் சிங் அபாரம். தயாரிப்பு திரைக்கதை, டைரெக்ஷன் சாவித்திரி.

சாவித்திரி ஹீரோயின் ரோல் எதுவும் எடுத்துக் கொள்ளாமல் டாக்டராக சிறிது நேரம் வருவார். ஆனால் சற்று உடல் இளைத்து மிக அழகாக அருமையாக இருப்பார். இயக்கத்தில் கவனம் செலுத்தியதால் நடிக்க அவாய்ட் செய்து விட்ட மாதிரி தெரிகிறது. தவிரவும் இந்த மாதிரி ரோல்களை சாவித்திரி நிறைய செய்தும் விட்டார். தன் கணவருடன் இணைந்தே. 'பார்த்தால் பசி தீரும்' ஒன்று போதாதா?
புகழ் பெற்ற நடிகைகளாய் இருந்தாலும் நடிகைகள் படமெடுக்கக் கூடாது....இயக்கமும் செய்யக் கூடாது (சில விதிவிலக்காக இருக்கலாம்) என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் இந்தப்படம். 'நினைத்தது ஒன்று... நடந்தது ஒன்று' தான் நினைவுக்கு வருகிறது. வெற்றி பெற்ற கதைகளை திரும்பத் திரும்ப எடுத்தால் அது தோல்வியில்தான் முடியும் என்று சாவித்திரிக்கு ஏன் தெரியாமல் போனது? வேறு புதுக் கதை ஒன்றைக் கையில் எடுத்திருக்கலாம்.
கொஞ்சம் அபூர்வமான இந்தப் படத்தைப் பற்றித் தங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.
நன்றி!
Last edited by vasudevan31355; 25th July 2015 at 07:43 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
26th July 2015, 09:34 AM
#850
Junior Member
Veteran Hubber
வாசு சார்
உங்கள் இடைவெளியற்ற தேடுதல் குணமே உங்களை விண்ணளாவிய பதிவர் திலகமாக உயர்த்தியிருக்கிறது !
நடிகர்திலகம் என்ற புயலின் மையத்தில் இருந்து கொண்டே பல்வேறு கரைகளைக் கடந்து பதிவு மழை பொழியும் உங்கள் நிகரற்ற ஆற்றல் விடாமுயற்சி எதையும் முறைப்படுத்தி செய்வன திருந்தச் செய்தல் சுவை மதிப்பூட்டல் ...எங்களுக்கு எட்டாக் கனியே!
இளைய தலைமுறையினரின் இதயக் கனியே !!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks