-
29th July 2015, 03:11 PM
#11
Junior Member
Senior Hubber
தமிழ் திரை உலகை பொறுத்தவரை , ஒரு நடிகர் உச்சத்தை தொட்டு விட்டார் என்றால் அவர் படங்கள் சாதனை படைக்க வேண்டும்(அவரது படங்கள் தோல்வியே அடையக் கூடாது என்று அர்த்தம் இல்லை).அந்த நடிகரின் வெற்றி படங்களின் சாதனையை முறியடிக்க மற்றவர்கள் ரொம்ப கஷ்டபட வேண்டும்.
இதை விரிவாக விளக்க தேவை இல்லை.
அதே போல் அந்த நடிகருக்கு அரசியல் ரீதியாக ஏதாவது பிரச்சனை வந்தால்,படம் நன்றாக இல்லாமல் இருந்தாலும் படம் பெரிய வெற்றி பெற வேண்டும்.
1973-ல் mgற்க்கும் கருணாநிதிக்கும் பிரச்சனை வெடித்த போது வெளி வந்த படம் தான் உலகம் சுற்றும் வாலிபன். இந்த படத்தை பற்றி எதுவும் சொல்ல தேவை இல்லை.
1992-ல் ரஜினிக்கும் ஜெயலலிதாவுக்கும் பிரச்சனை வெடித்த போது வெளி வந்த படம் தான் அண்ணாமலை.
முதல் பாதி நன்றாக இருக்கிறது.இரண்டாம் பாதியில் தியேட்டரில் படுத்து தூங்கி விடலாம் என விகடன் விமர்சனம் எழுதியது. இருந்தாலும் அவரது ரசிகர்களும்,பொது மக்களும் படத்தை வெற்றி பெறச் செய்தனர்.
2013-ல் விஸ்வரூபமும் பிரச்சனையை சந்தித்தது. ஒரு சராசரி ரசிகன் பார்த்து ரசிக்க கூடிய படம் கிடையாது. இருந்தும் படம் பெரிய வெற்றி பெற்றது.
என்னுடைய கேள்விகள்
1.விஜய்யின் எந்த படம் மற்ற நடிகர்களின் படங்களை காட்டிலும் சாதனை படைத்து இருக்கிறது?
2.ஏன் விஜய்யின் தலைவா படம் தோல்வி அடைந்தது?
-
29th July 2015 03:11 PM
# ADS
Circuit advertisement
Bookmarks