Page 250 of 400 FirstFirst ... 150200240248249250251252260300350 ... LastLast
Results 2,491 to 2,500 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #2491
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்

    (நெடுந்தொடர்)

    24

    ''திருமகள் தேடி வந்தாள்''

    ''இருளும் ஒளியும்''

    அடுத்து பாலாவின் இன்னொரு அட்டகாசம்.

    'திருமகள் தேடி வந்தாள்'

    புரடியூசர்ஸ் கம்பைன் 'இருளும் ஒளியும்' (1971) திரைப்படத்தில் மெகா ஹிட்டான பாடல்.

    ஏ.வி.எம்.ராஜன், முத்துராமன், நாகேஷ், வாணிஸ்ரீ (இரு வேடங்களில்), ரமாபிரபா, சுந்தரிபாய், ருக்மணி, ரங்காராவ், சுப்பையா, நாகேஷ் என்று நிறைய நட்சத்திரங்கள்.

    வசனம் 'வியட்நாம் வீடு' சுந்தரம். பாடல்கள் கண்ணதாசன். இசை 'திரை இசைத் திலகம்'. திரைக்கதை, இயக்கம் எஸ்.ஆர். புட்டண்ணா.

    சந்திரா என்ற அடக்க ஒடுக்கமான பெண்ணாகவும், பானு என்ற ஆர்ப்பாட்ட அலட்டல் நங்கையாகவும் வாணிஸ்ரீ ரெட்டை வேடம் கட்டுவார். முதாலவது பரவாயில்லை. பானு வேடத்தின் அலட்டல் சகிக்காது. வாயில் பபிள்கம் மென்று 'யூ நோ... யூ நோ' என்று போட்டுத் தாக்கி விடுவார். நமக்கு எரிச்சலும், கோபமுமாகவே வரும். பின்னாடி வந்த 'வாணி ராணி'க்கு ஒத்திகை.

    பணக்காரத் திமிர் பிடித்த வாணிஸ்ரீ பானு பிரம்மச்சாரியான கல்லூரித் தோழன் முத்துராமனை விளையாட்டாகக் காதலித்து ஏமாற்றிவிடுகிறார். முத்துராமன் இதைத் தாங்கமாட்டாமல் தற்கொலை செய்து கொள்கிறார். அதைக் கேள்விப்பட்டும் கூட வாணிஸ்ரீ திருந்தவில்லை.

    ஏழை வாணிஸ்ரீ (சந்திரா) சித்தியால் கொடுமைப்படுத்தப் படுகிறார். பானுவின் அப்பா ரங்காராவ் இரு வாணிஸ்ரீகளுக்கும் திருமணம் செய்ய முடிவெடுக்கிறார். நண்பனின் மகன் ஏ.வி.எம்.ராஜனை பானுவுக்கு பிக்ஸ் செய்கிறார். ராஜன் கிராமத்தில் இருப்பதால் அவரைப் பற்றித் தெரியாமல் வாணிஸ்ரீ மறுக்க, தந்தை ரங்காராவ் கண்டிப்புடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறி விடுகிறார். எனவே பானு தன் இடத்தில் சந்திராவை நடிக்க வைத்து பல நாடகமாடுகிறாள். சந்திராவை பானு என்று எண்ணி ராஜன் காதலித்து பின் அவள் நடவடிக்கைகள் மேல் சந்தேகப்பட்டு அது பானு இல்லை சந்திரா என்று கண்டுபிடிக்கிறார். இறுதியில் பானுவின் அத்தனை அம்பலங்களும் வெளிச்சத்திற்கு வருகின்றன. முடிவில் மனம் திருந்தி பானு முத்துராமனின் தற்கொலைக்கு தானே காரணம் என்று சொல்லி தானும் தற்கொலை செய்து கொண்டு நம்மையும் கொலை செய்கிறாள்.

    ராஜனும், சந்திராவும் இணைகிறார்கள்.

    அருமையான சில பாடல்கள் படத்தைக் காப்பாற்றுகின்றன.

    'வானிலே... மண்ணிலே' என்று இயற்கை பிரதேசங்களில் குதூகலித்து கனவு கண்டு ஆடும் சந்திரா வாணிஸ்ரீ. (சுசீலாவின் அருமையான குரலில்)

    முத்துராமனை கிண்டல் அடித்து சுசீலா குரலில் வாணிஸ்ரீ பாடும் 'ஹோ... ஹோ... மிஸ்டர் பிரம்மச்சாரி' (பேஸ் கிடார் அமர்க்களம்)

    சுசீலாவின் குரலில் 'திருமகள் தேடி வந்தாள்'

    அதே பாடல் திரும்ப பாலா குரலில்.

    'மேஜிக்' ராதிகாவின் கவர்ச்சி நடனம் ஒன்றும் உண்டு.

    இந்தப் படத்தில் இன்னொரு முக்கியமான விஷயம் 'படாபட்' ஜெயலஷ்மி தாவணி போட்ட குட்டிப் பெண்ணாக அப்போதே ராஜனுக்குத் தங்கையாக நடித்திருப்பார்.

    படத்தை வண்ணமும் காப்பாற்றுகிறது. அருமையான வண்ண ஒளிப்பதிவு.

    'நாகரஹாவு' போன்ற (தமிழில் 'ராஜநாகம்') கன்னடத்தில் பெயர் சொல்லும்படி எடுத்த புட்டண்ணா இந்த மாதிரி படங்களை இயக்கியிருக்க வேண்டாம். 'நாகரஹாவு' கன்னடத்தின் மிகச் சிறந்த பத்து படங்களில் ஒன்றாக இன்றும் போற்றப்படுகிறது. இவர் தமிழில் இயக்கிய 'சுடரும் சூறாவளியும்' கூட அவுட். 'டீச்சரம்மா' கொஞ்சம் பிழைத்தது பாடல்களால். புட்டண்ணாவின் தோற்றம் நம்ம ஊர் மணிவண்ணன் போல இருக்கும்.

    இந்தப் பாடல் பாலாவை எங்கோ கொண்டு போய்த் தூக்கி நிறுத்தியது என்றால் அது மிகையில்லை. இன்று வரை இந்தப் பாடலுக்கு கொஞ்சமும் மவுசு குறையவில்லை.

    இந்தப் பாடலில் பாலாவின் அழுத்தம் திருத்தமான தமிழ் உச்சரிப்பு அவர் எந்த அளவிற்கு தமிழில் ஈடுபாடுடன் பாடுகிறார் என்பதை உணர்த்திற்று. அவ்வளவு அற்புதமாக ஒவ்வொரு எழுத்தையும் அவர் உச்சரித்து அசத்தியிருப்பார். வல்லினம், மெல்லினம் உச்சரிப்புகள் மிகச் சரியாகவே இருக்கும்.

    பாடலிலே,

    'திருமலை திருப்பதிப் பால் பழங்கள் - உயர்
    தென் திருப்பழனியின் தேன் குடங்கள்'

    என்று தென்னகத்தின் புனிதத் தலங்களை உதாரணம் காட்டி காதலியின் மகத்துவத்தை காதலன் புகழ்வது என்பது அபாரம். காதல் பாடலில் கூட பக்தி மணம் கமழும் அருமை அந்தக் காலத்தில் நிகழ்த்தப்பட்டது.

    ஆனால் மேற்சொன்ன வரிகள் இப்படத்தின் நாயகிக்குப் பொருந்துமோ என்னமோ தெரியாது... ஆனால் பாலாவுக்கு நிச்சயம் பொருந்தும். தேன் குடங்களிலிருந்து தேனையும், பால் குடங்களிலிருந்து பாலையும் ஒரு சேர நம் மீது பொழிந்தாற்போல அத்தனை இன்பங்களையும் பாலா இப்பாடல் மூலம் நமக்கு விருந்தாக அளித்து விட்டார்.

    'கனிவாய் மொழிதரும் வாசகங்கள்' எனும்போது 'கனிவாய்' என்று சொல்லி, சிறிது கேப் விட்டு பிறகு 'மொழிதரும் வாசகங்கள்' என்று பாடும் போது நெஞ்சில் வஜ்ரமாய் ஓட்டிவிடுவார்.

    எள் உருண்டையோடு சேர்ந்த வெல்லமாக பாலாவுடன் மிகப் பொருத்தமாக ஹம்மிங் செய்து பாடலை மேலும் பளபளப்பாக்கி அமர்க்களப்படுத்தி விடுவார் 'ஹம்மிங்' பி.வசந்தா. என்ன மாதிரி பாடகி! இவருக்கெல்லாம் ஏன் நிறைய வாய்ப்புகள் கிட்டவில்லை? ('இரு வீடுகள்' படத்தில் இவர் பாடிய 'பொன்னான உள்ளம் உன்னோடு இருக்க... கண்ணான கண்ணே பயம் வேண்டாம்'... பாடலைக் கேட்கும் போதெல்லாம் நெஞ்சாங்குழிக்குள் ஏதோ வந்து அடைப்பது போன்ற உணர்வு எப்போதுமே என்னுள் எழும். கண்களில் ஓரமும் நீர்த்துளிக்கத் தவறாது.)

    திருமகள் தேடி வந்தாள்
    எந்தன் இதயத்தில் குடி புகுந்தாள்
    குலமகள் கோலத்திலே
    தேவி மருமகளாக வந்தாள்

    ஆஆஆஆ ஹா ஹா ஹா

    திருமகள் தேடி வந்தாள்

    திருமகள் தேடி வந்தாள்

    ஆஆ..... ஆஆஆ

    மஞ்சள் தந்தவள் விசாலாட்சி
    நல்ல மலர்களைத் தந்தவள் மீனாட்சி
    மஞ்சள் தந்தவள் விசாலாட்சி
    நல்ல மலர்களைத் தந்தவள் மீனாட்சி
    குங்குமம் தந்தவள் காமாட்சி
    குங்குமம் தந்தவள் காமாட்சி
    எங்கள் குடும்பத்தில் தேவி உன் அரசாட்சி

    திருமகள் தேடி வந்தாள்
    எந்தன் இதயத்தில் குடி புகுந்தாள்
    குலமகள் கோலத்திலே
    தேவி மருமகளாக வந்தாள்

    ஆஆஆஆ ஹா ஹா ஹா

    திருமகள் தேடி வந்தாள்

    ஆஹாஹா அ ஆஹாஹா ஆஹஹஹா ஹ ஹாஆஆஆ

    திருமலை திருப்பதிப் பால் பழங்கள் - உயர்
    தென்திருப் பழனியின் தேன் குடங்கள்
    திருமலை திருப்பதிப் பால் பழங்கள் - உயர்
    தென்திருப் பழனியின் தேன் குடங்கள்
    கனிவாய் மொழிதரும் வாசகங்கள் - என்
    கனிவாய் மொழிதரும் வாசகங்கள்
    காதல் தெய்வத்தின் உயர் குணங்கள்
    காதல் தெய்வத்தின் உயர் குணங்கள்

    திருமகள் தேடி வந்தாள்
    எந்தன் இதயத்தில் குடி புகுந்தாள்
    குலமகள் கோலத்திலே
    தேவி மருமகளாக வந்தாள்

    ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    திருமகள் தேடி வந்தாள்

    ராகவேந்திரன் சார், மது அண்ணா!

    இந்தப் பாடலில் மூன்றாவது சரணம் ஒன்று உண்டு என்று நினைவு. 'மங்கல மங்கை' என்று சரணம் தொடங்கும் என்று நினைக்கிறேன். அந்த சரணத்தின் வரிகள் கிடைக்குமா? ப்ளீஸ்!

    Last edited by vasudevan31355; 10th August 2015 at 09:23 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     
  3. #2492
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார்
    நலமா. தங்கள் போராட்டங்கள் நிறைவுற்று நல்லபடியாக தீர்வாகி தாங்களெல்லாரும் மகிழும் வண்ணம் பலன் பெற வேண்டுமென்று இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.
    தங்கள் வாழ்வில் தற்காலிகமாக ஏற்பட்ட இருளகன்று ஒளி வீசும் நாள் தொலைவில் இல்லை.

    பாலாவின் மிக மிக அருமையான பாடல். சூப்பர் ஹிட் பாடல். இன்னும் பல ஆண்டுகளுக்கு அவர் புகழ் பாடும் பாடல், திருமகள் தேடி வந்தாள்.

    1971ம் ஆண்டின் சிறந்த பாடல்களைக் கொண்ட தொகுப்பு வரிசையில் கிராமஃபோன் ரிக்கார்டு நிறுவனம் எல்.பி.இசைத்தட்டினை வெளியிட்டது. அதில் இப்பாடல் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    வானிலே மண்ணிலே பாடல் காட்சியின் படமாக்கத்தில் பெரும்பங்கு நமது இயக்குநர் பாரதிராஜா அவர்களுக்கு உண்டு. இப்படத்திலும் அவர் புட்டண்ணா அவர்களின் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.

    முதன் முதலில் வெளியிடப்பட்ட இசைத்தட்டில் தாங்கள் குறிப்பிட்ட மூன்றாம் சரணம் இடம் பெற்றது. அதன் வரிகளுக்கு முயற்சி செய்கிறேன்.
    Last edited by RAGHAVENDRA; 10th August 2015 at 09:58 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. Thanks vasudevan31355 thanked for this post
  5. #2493
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy: Tamil Hindu

    இக்கட்டான தருணத்தில் திருச்சி மாணவிக்கு கிடைத்த அரிய உதவி: வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்

    ஏழை மாணவிக்கு மனிதநேய அடிப்படையில் கலந்தாய்வின் போது உதவி வழங்கி, கல்வி என்பது கற்போருக்கு வழங்கும் மிகப் பெரிய சேவை என்பதை நிரூபித்துள்ளது தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்.

    திருச்சி மாவட்டம், முசிறியைச் சேர்ந்த ராஜேந்திரன் - தங்கப்பொண்ணு தம்பதியினரின் மகள் ஆர்.சுவாதி. அரசுப் பள்ளியில் பயின்று பிளஸ் 2 தேர்வில் 1,017 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். பி.எஸ்சி. வேளாண் படிப்பு படிக்க வேண்டும் என்ற விருப்பத்தில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகக் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்திருந்தார்.

    ஏனைய போட்டி மாணவர் களைக் காட்டிலும் கட்-ஆப் மதிப் பெண் குறைவாக இருந்ததால், உடனடியாக அவருக்கு இடம் கிடைக்கவில்லை. காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். கலந்தாய்வின்போது இடம் கிடைத்து வேளாண் படிப்பைத் தேர்வு செய்த மாணவர்கள் சிலர், வேறு படிப்புக்குச் சென்றுவிட் டதைத் தொடர்ந்து, காத்திருப்போர் பட்டியலில் இருந்த சுவாதிக்கு இறுதிக்கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு பல்கலைக் கழகம் சார்பில் அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டது.

    தவறுதலாக சென்னைக்கு..

    அழைப்புக் கடிதத்தில், கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக அண்ணா அரங் கில் 8-ம் தேதி காலை 8.30 மணிக்கு நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட் டிருந்தது. ஆனால், கோவை யில் உள்ள வேளாண் பல்கலைக் கழகத்துக்கு வருவதற்கு பதிலாக, மாணவியும், அவரது தாயாரும் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்துக்கு 8-ம் தேதி காலை 6.30 மணி அளவில் சென்றபோதுதான் தவறுதலாக மாறி வந்தது, அவர்களுக்கு தெரிய வந்துள்ளது.

    கலக்கத்துடன் அங்கு நின்ற அவர்களை சந்தித்த மனிதநேய மிக்க ஒரு நபர், விவரங்களைக் கேட்டறிந்தார். வேளாண் பல்கலைக் கழகத்தின் மக்கள் தொடர்பு அலுவலகத்துக்கு அழைத்து பதிவாளர் சி.ஆர்.அனந்தகுமார் தொலைபேசி எண்ணைப் பெற்று விவரத்தைக் கூறியுள்ளார். அந்த மாணவியை விமானத்தில் அனுப்பி வைப்பதாகவும், ஒரு மணிக்கு பல்கலைக்கழகம் வந்துவிடுவார்கள் என்பதால் கலந்தாய்வுக்கு அனுமதிக்கு மாறும் கோரியுள்ளார்.

    விமான டிக்கெட்

    இதனை ஏற்றுக்கொண்ட பதிவாளர், மாணவியின் விவரங்களைப் பெற்று கல்லூரி முதல்வருக்கு தகவல் தெரிவித் துள்ளார். இதையடுத்து, சென்னை யில் இருந்து விமானம் மூலமாக கோவைக்கு நேற்று முன்தினம் பகல் 11.30 மணிக்கு வந்தடைந்த மாணவியையும், அவரது தாயா ரையும் பல்கலைக்கழகத்தின் காரை அனுப்பிவைத்து அழைத்துவரச் செய்துள்ளார் துணைவேந்தர். பின்னர், பிற்பகலில் நடைபெற்ற கலந்தாய் வுக்கு நேரம் ஒதுக்கித் தரப் பட்டது.

    மாணவி ஆசைப்பட்ட பி.எஸ்சி. வேளாண் படிப்புக்கு இடம் கிடைக்கவில்லை. இருப்பினும், வேளாண் பல்கலைக்கழகத்தில் பி.டெக். உணவுத் தொழில்நுட் பவியல் படிப்பில் இடம் கிடைத்துள்ளது. மனிதாபிமானம் உள்ள ஒரு நபர், தனது சொந்த செலவில் விமான டிக்கெட் எடுத்துக் கொடுத்து அனுப்பி வைத்ததன் மூலமாகவும், பல்கலைக்கழகம் தகுந்த நேரத்தில் வழங்கிய உதவி காரணமாகவும் மாணவியின் வேளாண் படிப்பு ஆசை நிறைவேறியுள்ளது.

    இதுகுறித்து வேளாண் பல்கலைக்கழக பதிவாளர் சி.ஆர்.அனந்தகுமார் கூறும்போது, "அன்றைய தினம் காலையில் ஓர் அழைப்பு வந்தது. அந்த மாணவியின் நிலை குறித்து கூறினர். அந்த மாணவிக்கான கலந்தாய்வு பதிவு எண், விவரங்களை குறுந்தகவலாக பெற்று, கல்லூரி முதல்வருக்கு அனுப்பி வைத்தேன்.

    அவர்கள் கூறியபடி உரிய நேரத்தில் வந்து கலந்தாய்வில் கலந்து கொண்டு படிப்பைத் தேர்வு செய்தனர். நான், எனது பணியைத்தான் செய்தேன். எனக்கு அழைத்த அந்த நபரின் எண்ணை பதிவு செய்யாமல் விட்டுவிட்டேன்" என்றார்.

    முகம் தெரியாத நபரின் மனிதாபிமானம்

    பல்கலைக்கழக துணைவேந்தர் கே.ராமசாமி கூறும்போது, "மனிதநேயம் இல்லாத வாழ்க்கை நல்ல வாழ்க்கை கிடையாது. மாணவியின் நிலையை அறிந்து சமயோசிதமாக செயல்பட்டு அனுப்பி வைத்த முகம் தெரியாத அந்த நபருக்குத்தான் எல்லா பெருமையும் சேரும். இருப்பினும், பிளஸ் 2 படித்த மாணவி, தனக்கு வந்த கடிதத்தை சரியாகப் படிக்காமல் இருந்ததை நினைத்து வருத்தம் கொள்கிறேன். அந்த மாணவிக்கு உரிய நேரத்தில் அந்த நபருடைய உதவி கிடைத்ததால் தான் வர முடிந்தது. இல்லையென்றால் நாங்கள் நினைத்தாலும் இடம் வழங்க முடியாது. சமூகத்தில் வாய்ப்புகள் நிறைய உள்ளன. அதை நாம்தான் சரியாக பயன்படுத்த வேண்டும். அனுமானத்தில் ஒருபோதும் செயல்படக்கூடாது" என்றார்.

  6. #2494
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராகவேந்திரன் சார், மது அண்ணா!

    'திருமகள் தேடி வந்தாள்' சுசீலாம்மா பாடலில் மூன்றாவது சரணமாக,

    'மங்கள மங்கையின் குங்குமமும்
    அவர் மஞ்சளும் தாலியும் மனையறமும்
    பொங்கி நலம் பெற அருள் புரிவாள்
    எங்கள் புதுமனை வாழ்வில் வளம் தருவாள்'

    என்று வரும். பாலா மட்டும் பாடும் பாடலில் இந்த சரணம் வருமா இல்லையா என்று தெரியவில்லை அல்லது வேறு சரணமா? டிவிடியிலும் பாலா பாடலில் இரு சரணங்களே வருகின்றன. படத்திலும் அப்படியே. எல்லா ஆடியோவிலும் இரு சரணங்களே உள்ளன. ஒருவேளை மூன்றாவது சரணம் பாலாவின் பாடலில் இல்லையா? சுசீலா பாடலில் மட்டும்தானா? ஒரே குழப்பமாக இருக்கிறது. தெளிவுபடுத்தவும்.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. Likes madhu liked this post
  8. #2495
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    ராகவேந்திரன் சார், மது அண்ணா!

    'திருமகள் தேடி வந்தாள்' சுசீலாம்மா பாடலில் மூன்றாவது சரணமாக,

    'மங்கள மங்கையின் குங்குமமும்
    அவர் மஞ்சளும் தாலியும் மனையறமும்
    பொங்கி நலம் பெற அருள் புரிவாள்
    எங்கள் புதுமனை வாழ்வில் வளம் தருவாள்'

    என்று வரும். பாலா மட்டும் பாடும் பாடலில் இந்த சரணம் வருமா இல்லையா என்று தெரியவில்லை அல்லது வேறு சரணமா? டிவிடியிலும் பாலா பாடலில் இரு சரணங்களே வருகின்றன. படத்திலும் அப்படியே. எல்லா ஆடியோவிலும் இரு சரணங்களே உள்ளன. ஒருவேளை மூன்றாவது சரணம் பாலாவின் பாடலில் இல்லையா? சுசீலா பாடலில் மட்டும்தானா? ஒரே குழப்பமாக இருக்கிறது. தெளிவுபடுத்தவும்.
    ஆமாம். சுசீலா பாடும் பாடலில் மட்டும் தான் மூன்று சரணங்கள். பாலா பாடியுள்ள பாடலில் இரண்டு மட்டுமே. இசைத் தட்டிலும் அப்படித்தான்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. Thanks vasudevan31355 thanked for this post
  10. #2496
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivajisenthil View Post
    Madhu Sir
    It is in the reverse order Red, Orange, Yellow....as per the color layers of Rainbow
    senthil
    நான் அதைச் சொல்லவில்லை சிவாஜிசெந்தில் சார்..

    நான் பார்த்தபோது என் பதிவில் இருந்த சில வரிகள் மட்டுமே உங்கள் பதிவில் ஏறி இருந்தது. சில நிமிடங்கள் கழித்து மீண்டும் பார்த்தபோதும் அப்படியே இருந்ததால் ஏதேனும் சர்வர் ( சுந்தரம் இல்லை ) பிராப்ளமா என்று கேட்டேன். இப்போ உங்க பதிவு சரியாயிடுச்சு.. நல்ல ஜாண்டிஸ் வந்த மாதிரி மஞ்சள் மின்னுது.

  11. #2497
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    வாசு ஜி..

    திருமகள் தேடி வந்தாள் பாடலில் சுசீலா பாட்டில் மட்டும்தான் மங்கல மங்கையர் சரணம் உண்டு. பாலுவின் பாட்டுக்கு ரெண்டுதான். நான் படம் ரிலீசானபோதே பார்த்திருக்கிறேன். படத்தில் நிச்சயம் இடம் பெறவில்லை. அந்தக் கால இசைத்தட்டிலும் கிடையாது. ( என் கிட்டே இருந்தது ) ... ஒரு வேளை முதலில் சேர்த்திருந்து அப்புறம் படம் ரிலீசாகும் முன்பே வெட்டி விட்டிருந்தால் தெரியவில்லை.

    ராகவ் ஜி... பொன்னூஞ்சலின் வருவான் மோகன ரூபன் பாட்டின் வீடியோ எங்கேயாவது கிடைக்க வாய்ப்பு உண்டா ? ( உஷா நந்தினி வெள்ளைப் புடவை காற்றில் பறக்க நடிகர் திலகத்தை மயக்க சிரித்துக் கொண்டே வருவார் )

  12. Thanks vasudevan31355 thanked for this post
  13. #2498
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    367
    Post Thanks / Like
    Quote Originally Posted by s.vasudevan View Post
    Courtesy: Tamil Hindu

    இக்கட்டான தருணத்தில் திருச்சி மாணவிக்கு கிடைத்த அரிய உதவி: வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்

    ஏழை மாணவிக்கு மனிதநேய அடிப்படையில் கலந்தாய்வின் போது உதவி வழங்கி, கல்வி என்பது கற்போருக்கு வழங்கும் மிகப் பெரிய சேவை என்பதை நிரூபித்துள்ளது தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்.

    திருச்சி மாவட்டம், முசிறியைச் சேர்ந்த ராஜேந்திரன் - தங்கப்பொண்ணு தம்பதியினரின் மகள் ஆர்.சுவாதி. அரசுப் பள்ளியில் பயின்று பிளஸ் 2 தேர்வில் 1,017 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். பி.எஸ்சி. வேளாண் படிப்பு படிக்க வேண்டும் என்ற விருப்பத்தில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகக் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்திருந்தார்.

    ஏனைய போட்டி மாணவர் களைக் காட்டிலும் கட்-ஆப் மதிப் பெண் குறைவாக இருந்ததால், உடனடியாக அவருக்கு இடம் கிடைக்கவில்லை. காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். கலந்தாய்வின்போது இடம் கிடைத்து வேளாண் படிப்பைத் தேர்வு செய்த மாணவர்கள் சிலர், வேறு படிப்புக்குச் சென்றுவிட் டதைத் தொடர்ந்து, காத்திருப்போர் பட்டியலில் இருந்த சுவாதிக்கு இறுதிக்கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு பல்கலைக் கழகம் சார்பில் அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டது.

    தவறுதலாக சென்னைக்கு..

    அழைப்புக் கடிதத்தில், கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக அண்ணா அரங் கில் 8-ம் தேதி காலை 8.30 மணிக்கு நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட் டிருந்தது. ஆனால், கோவை யில் உள்ள வேளாண் பல்கலைக் கழகத்துக்கு வருவதற்கு பதிலாக, மாணவியும், அவரது தாயாரும் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்துக்கு 8-ம் தேதி காலை 6.30 மணி அளவில் சென்றபோதுதான் தவறுதலாக மாறி வந்தது, அவர்களுக்கு தெரிய வந்துள்ளது.

    கலக்கத்துடன் அங்கு நின்ற அவர்களை சந்தித்த மனிதநேய மிக்க ஒரு நபர், விவரங்களைக் கேட்டறிந்தார். வேளாண் பல்கலைக் கழகத்தின் மக்கள் தொடர்பு அலுவலகத்துக்கு அழைத்து பதிவாளர் சி.ஆர்.அனந்தகுமார் தொலைபேசி எண்ணைப் பெற்று விவரத்தைக் கூறியுள்ளார். அந்த மாணவியை விமானத்தில் அனுப்பி வைப்பதாகவும், ஒரு மணிக்கு பல்கலைக்கழகம் வந்துவிடுவார்கள் என்பதால் கலந்தாய்வுக்கு அனுமதிக்கு மாறும் கோரியுள்ளார்.

    விமான டிக்கெட்

    இதனை ஏற்றுக்கொண்ட பதிவாளர், மாணவியின் விவரங்களைப் பெற்று கல்லூரி முதல்வருக்கு தகவல் தெரிவித் துள்ளார். இதையடுத்து, சென்னை யில் இருந்து விமானம் மூலமாக கோவைக்கு நேற்று முன்தினம் பகல் 11.30 மணிக்கு வந்தடைந்த மாணவியையும், அவரது தாயா ரையும் பல்கலைக்கழகத்தின் காரை அனுப்பிவைத்து அழைத்துவரச் செய்துள்ளார் துணைவேந்தர். பின்னர், பிற்பகலில் நடைபெற்ற கலந்தாய் வுக்கு நேரம் ஒதுக்கித் தரப் பட்டது.

    மாணவி ஆசைப்பட்ட பி.எஸ்சி. வேளாண் படிப்புக்கு இடம் கிடைக்கவில்லை. இருப்பினும், வேளாண் பல்கலைக்கழகத்தில் பி.டெக். உணவுத் தொழில்நுட் பவியல் படிப்பில் இடம் கிடைத்துள்ளது. மனிதாபிமானம் உள்ள ஒரு நபர், தனது சொந்த செலவில் விமான டிக்கெட் எடுத்துக் கொடுத்து அனுப்பி வைத்ததன் மூலமாகவும், பல்கலைக்கழகம் தகுந்த நேரத்தில் வழங்கிய உதவி காரணமாகவும் மாணவியின் வேளாண் படிப்பு ஆசை நிறைவேறியுள்ளது.

    இதுகுறித்து வேளாண் பல்கலைக்கழக பதிவாளர் சி.ஆர்.அனந்தகுமார் கூறும்போது, "அன்றைய தினம் காலையில் ஓர் அழைப்பு வந்தது. அந்த மாணவியின் நிலை குறித்து கூறினர். அந்த மாணவிக்கான கலந்தாய்வு பதிவு எண், விவரங்களை குறுந்தகவலாக பெற்று, கல்லூரி முதல்வருக்கு அனுப்பி வைத்தேன்.

    அவர்கள் கூறியபடி உரிய நேரத்தில் வந்து கலந்தாய்வில் கலந்து கொண்டு படிப்பைத் தேர்வு செய்தனர். நான், எனது பணியைத்தான் செய்தேன். எனக்கு அழைத்த அந்த நபரின் எண்ணை பதிவு செய்யாமல் விட்டுவிட்டேன்" என்றார்.

    முகம் தெரியாத நபரின் மனிதாபிமானம்

    பல்கலைக்கழக துணைவேந்தர் கே.ராமசாமி கூறும்போது, "மனிதநேயம் இல்லாத வாழ்க்கை நல்ல வாழ்க்கை கிடையாது. மாணவியின் நிலையை அறிந்து சமயோசிதமாக செயல்பட்டு அனுப்பி வைத்த முகம் தெரியாத அந்த நபருக்குத்தான் எல்லா பெருமையும் சேரும். இருப்பினும், பிளஸ் 2 படித்த மாணவி, தனக்கு வந்த கடிதத்தை சரியாகப் படிக்காமல் இருந்ததை நினைத்து வருத்தம் கொள்கிறேன். அந்த மாணவிக்கு உரிய நேரத்தில் அந்த நபருடைய உதவி கிடைத்ததால் தான் வர முடிந்தது. இல்லையென்றால் நாங்கள் நினைத்தாலும் இடம் வழங்க முடியாது. சமூகத்தில் வாய்ப்புகள் நிறைய உள்ளன. அதை நாம்தான் சரியாக பயன்படுத்த வேண்டும். அனுமானத்தில் ஒருபோதும் செயல்படக்கூடாது" என்றார்.
    திக்குத் தெரியாமல் தவித்த ஸ்வாதி...திடீரென்று கிடைத்த உதவி... நடைபயிற்சி நண்பர்களுக்கு நன்றி!
    ஞாயிற்றுக்கிழமை (9/8/15) காலையிலிருந்து ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், இணையதள பக்கங்கள் என்று பரபரக்க ஆரம்பித்த அந்த செய்தி, இன்று நாளிதழ்களிலும் படபடத்துக் கொண்டிருக்கிறது!

    'கோயம்புத்தூர் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்பில் சேர வேண்டிய ஏழைக் குடும்பத்து பெண் ஸ்வாதி, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு திசைமாறி வந்துவிட்டார். சில மணி நேரங்களே இருக்கும் நிலையில், கோவைக்கு விமானம் மூலம் சில நல்ல உள்ளங்களால் அனுப்பி வைக்கப்பட்டு, ஒரு வழியாக வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சேர்க்கப்பட்டார்' என்பதுதான் அந்தச் செய்தி.

    இதைப் படித்த எல்லோருமே... அந்த நல்ல உள்ளங்களைப் பாராட்டித் தள்ளிக் கொண்டே இருக்கிறார்கள்... அவர்கள் யாராக இருக்கும் என்கிற கேள்வியை எழுப்பியபடியே! நாமும் மனதில் பாராட்டிக் கொண்டே தேடுதலில் இறங்கினோம்... கிடைத்தார் அந்த நல்ல உள்ளங்களில் ஒருவரான சரவணன்!

    திருச்சி மாவட்டம், முசிறி பகுதியை சேர்ந்த விவசாயி ராஜேந்திரனின் ஒரே மகள் சுவாதி. படித்து வேளாண் விஞ்ஞானி ஆகவேண்டும் என்பது எதிர்கால ஆசை. கணவன் இல்லாத நிலையிலும் கஷ்டப்பட்டு மகளைப் படிக்க வைத்தார் தங்கப்பொண்ணு. ப்ளஸ்-டூவில் 1,076 மதிப்பெண்கள் எடுத்திருந்த இவரின் விண்ணப்பம் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டது. ஏற்கெனவே தேர்வுபெற்ற மாணவர்கள் சிலர், வேளாண்மைக் கல்வியை விட்டு வேறு படிப்புகளுக்குச் சென்று விட்டதால், ஸ்வாதிக்கு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சேரும் வாய்ப்பு கிடைத்தது.

    ஆகஸ்ட் 8-ம் தேதி காலை 8.30 மணிக்கு கோயம்புத்தூர் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள அண்ணா கலையரங்கில் நடக்கும் இறுதிகட்ட கலந்தாய்வில் கலந்துகொள்ள வருமாறு மின்னஞ்சல் (இமெயில்) அழைப்புக் கடிதம் ஒன்றை ஸ்வாதிக்கு அனுப்பியது வேளாண்மை பல்கலைக்கழகம். அண்ணா கலையரங்கம் என்று இடம் பெற்றிருந்த வாசகத்தை அண்ணா பல்கலைக்கழகம் என்று தவறாக புரிந்துகொண்ட மாணவி ஸ்வாதி, அம்மாவுடன் சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அதேநேரம் வந்தடைந்தார். ஆனால் அவர் செல்லவேண்டியது கோவை அண்ணா கலையரங்கிற்கு; சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அல்ல என தெரியவந்தபோது அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றது மாணவியின் குடும்பம்.

    அப்போதுதான் அவர்களுக்கு கைகொடுத்து பேருதவி செய்திருக்கிறார் எம்.சரவணன். டெக் மஹேந்திரா தகவல்தொழில்நுட்ப நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணிபுரியும் அவரை பாராட்டிவிட்டு, பேசினோம்.

    "என்னோட சொந்த ஊரு சேலம் மாவட்டம், சங்ககிரி பக்கத்தில் உள்ள வைகுந்தம். பரம்பரை விவசாய குடும்பம். இதே அண்ணா பல்கலைக்கழகத்தில் படிச்சு முடிச்சு, சென்னையில பல வருஷமா வேலை பார்க்கிறேன். ஒவ்வொரு நாளும் அதிகாலை 6 மணிக்கே எழுந்து நடைபயிற்சி போகும் வழக்கம் உண்டு. நான் படிச்ச அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில்தான் நடைபயிற்சி. அங்கு நடைபயிற்சி போறவங்க எல்லாம் சேர்ந்து குழு அமைச்சிருக்கோம். அதன் மூலமா ஹெல்த் உள்ளிட்ட பல விஷயங்களை பரிமாறிக்குவோம்.
    ஆகஸ்ட் 8-ம் தேதி நடைபயிற்சி செல்லும் வழியில் சூட்கேஸ் வெச்சிட்டு ஒரு பொண்ணும், கூடவே ஒரு அம்மாவும் குழப்பத்துடனும் தவிப்புமாக நின்னிட்டிருந்ததை பார்த்தோம். மூணாவது சுற்று நடைபயிற்சி வரும்வரை வெள்ளந்தியா அவங்க ரெண்டு பேரும் நின்னுட்டிருந்ததைப் பார்த்தேன். கிராமத்து ஆளுங்க மாதிரி தெரியவே... என்ன ஏதோனு கிட்டபோய் விசாரிச்சோம்.

    வேளாண்மை கல்லூரி கலந்தாய்வுக்கு வந்ததாக சொன்னாங்க. அது கோயம்புத்தூர்லதானே நடக்கும். ஒருவேளை சென்னையில் ஏதாவது உறுப்புக் கல்லூரி இருக்கோனு சந்தேகத்தில் வேளாண்மைப் பல்கலைகழக முன்னாள் துணைவேந்தரும் எங்க குடும்ப நண்பருமான முருகேசபூபதியை தொடர்பு கொண்டு கேட்டேன்.

    கோவையில்தான் நடக்கிறது' னு சந்தேகத்தை நிவர்த்தி செய்தார். பிறகு, அந்தப் பெண்ணுக்கு வந்த மின்னஞ்சல் அழைப்புக் கடிதத்தை திறந்து பார்த்தப்பதான்... விஷயம் புரிஞ்சுது.

    தவறா புரிஞ்சுகிட்டு, பெரிய தப்பை பண்ணீட்டீங்களேம்மா... ஒரு வருஷ படிப்பே போயிடுமே. இன்னும் கொஞ்ச நேரத்துல கோயம்புத்தூர்ல கலந்தாய்வு நடக்கப்போகுது... நீங்க இங்க நின்னுட்டிருக்கீங்களே' னு கண்டிச்சாலும், அந்த விஷயத்தை அப்படியே விட எங்களுக்கு மனசு வரலை. எப்படியாவது அவங்க ரெண்டு பேரையும் கோவைக்கு அனுப்பனும்னு நண்பர்கள் கலந்து பேசினோம்.

    பல்கலைக்கழக தொலைபேசிக்கு போன் போட்டப்ப, யாரும் எடுக்கல. அது அலுவலக நேரத்தில் மட்டுமே செயல்படும் தொலைபேசி. அடுத்த முயற்சியாக முன்னாள் துணைவேந்தர்கிட்ட பேசி, அந்தப் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரோட எண்ணை வாங்கி பேசினோம். அவர், சம்பந்தப்பட்ட துறை நிர்வாகத்துகிட்ட நிலைமையை சொல்லிப் பேசியதில் நாள் தள்ளிவைக்க முடியாது என்றும், நேரத்தை வேண்டுமானால் 8.30 என்று இருந்த கலந்தாய்வை இந்த மாணவிக்கு மட்டும் இரண்டு மணி நேரம் நீட்டிக்கலாம்னு பதில் கிடைச்சுது.

    உடனே நடைபயிற்சி நண்பர்கள் நாங்கள்லாம் கலந்துபேசி கார் மூலம் விமான நிலையம் அனுப்பி, விமான டிக்கெட்டை எடுத்துக் கொடுத்து, முதல் தடவையா விமானம் ஏறுறதால அதுக்கான ஆலோசனைகளையும் கூறி அனுப்பினோம். சரியாக 11.30 மணிக்கு கோவை விமான நிலையத்தில், எங்க ஏற்பாட்டின்படி தயாரா இருந்த பல்கலைக்கழக வாகனத்தில் ஏறிப்போய், பி.டெக் உணவு தொழில்நுட்பவியல் படிப்பில் இடம் வாங்கிடுச்சு அந்தப் பொண்ணு ஸ்வாதி" என்று நடந்ததை தனக்கே அப்படி ஒரு உதவி கிடைத்த மகிழ்வோடு பேசினார் சரவணன்.

    உதவி கேட்கக்கூட தயங்கி நின்ற சூழலில் வலியச்சென்று அவர்களுக்கு பேருதவி செய்த சரவணன் மற்றும் அவருடைய நடைபயிற்சி நண்பர்கள் குழுவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து கொண்டே இருக்கிறது இப்போது.
    இதுகுறித்து வேளாண்மை பட்டதாரிகள் சங்கத்தின் அமைப்பாளர் வேலாயுதம், "பல்கலைக்கழகம் அனுப்பிய மின்னஞ்சலைக்கூட முழுமையாக படிக்க முடியாததால் ஒரு வருட படிப்போ பறிபோக இருந்த நிலையில், அதைக் கைவசப்படுத்திக் கொடுத்த... சரவணன் உள்ளிட்டோருக்கு மக்கள் அனைவருமே நன்றி சொல்லலாம். கிராமத்து மாணவி ஒருவரின் அறியாமையை புரிந்து, கலந்தாய்வை காலநீட்டிப்பு செய்த பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும் நன்றிகள்.

    அதேசமயம், பல்கலைக்கழகம் இதுபோன்ற அழைப்புக் கடிதங்களை ஆங்கிலத்தில் மட்டுமல்லாது, தமிழிலும் சேர்த்தே அனுப்பினால், இதுபோன்ற குழப்பங்களைத் தவிர்க்கலாம்" என்று வேண்டுகோளும் வைத்தார்.

    அதுவும் சரிதானே!

    -ஜி.பழனிச்சாமி
    Vikatan EMagazine
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  14. #2499
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    வாசுஜி...

    ஆனால் தெலுங்கில் எஸ்.பி.பி. பாட்டிலும் 3 சரணம் இருக்கு.

    சுசீலா பாட்டிலும் 3 சரணம் இருக்கு

  15. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355 liked this post
  16. #2500
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajraj View Post
    madhu: You should visit us to see rainbows !
    அது ஏன் வாத்தியாரையா ? இங்கே கூட வானவில் தெரியுமே ?

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •