Page 180 of 402 FirstFirst ... 80130170178179180181182190230280 ... LastLast
Results 1,791 to 1,800 of 4018

Thread: Makkal Thilagam MGR -PART 16

  1. #1791
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

    ‘மலை உயர்ந்தது போல்
    மனம் உயர்ந்ததென்று....’

    தலைவரின் ஆற்றல், சாதுர்யம், நேர்மை, வள்ளன்மை, பெருந்தன்மை ஆகியவை வெளியில் தெரிந்திருப்பது பூமிப்பந்தின் மூன்று பங்கை ஆக்கிரமித்திருக்கும் கடலின் ஒருதுளியைப் போன்றதுதான். வெளியே தெரியாமல் இருப்பது அந்த கடலளவு என்று என்னை எண்ண வைத்தது ஒரு அனுபவம்.

    அன்பே வா திரைப்படத்தில்,.....

    ‘மலை உயர்ந்தது போல்
    மனம் உயர்ந்ததென்று
    இவர் வாழ்வில் விளக்குகிறார்’

    என தான் பாடிய வரிகளுக்கு இலக்கணமாகத் திகழ்பவர் தலைவர் என்பதற்கு மேலும் ஒரு சத்திய சாட்சி.

    தமிழக உளவுப் பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவரை சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தேன். அவர் 75 வயதைக் கடந்தவர். பணியில் நேர்மையான அதிகாரி. அவரிடம் பல்வேறு விஷயங்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தபோது தலைவரைப் பற்றியும் பேச்சு வந்தது. அவர் சொன்ன விஷயங்கள் வியப்பளித்தன.

    1972-ம் ஆண்டு தலைவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட நேரம். நான் குறிப்பிட்ட உளவுப் பிரிவு அதிகாரிக்கு தலைவரை ரகசியமாக கண்காணித்து அறிக்கை அனுப்ப ஆட்சி மேலிடத்தில் இருந்து உத்தரவு. சில மாதங்கள் வரை தலைவரின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்து வந்திருக்கிறார் அந்த அதிகாரி. ஆனால், ‘‘தலைவர் எந்த நேரத்தில் யாரை சந்திக்கிறார்? அரசியலில் அவரது அடுத்த மூவ் என்ன? என்ன திட்டம் வைத்திருக்கிறார்?’’ என்று கொஞ்சம் கூட அந்த அதிகாரியால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதை மேலிடத்துக்கும் அப்படியே அறிக்கையாக அனுப்பியுள்ளார்.

    விஷமிகளின் சதிவலையை முறியடிக்க, தலைவர் வெளியூர்களுக்கு சென்றால் இரண்டு, மூன்று வாகனங்களில் மாறி, மாறி செல்வார். எந்த வாகனத்தில் அவர் செல்கிறார். எந்த பாதையில் செல்கிறார் என்பதை யாரும் கண்டுபிடிக்க முடியாது. அந்த அளவுக்கு அரசியலில் நெருக்கடியான நேரங்களில் மிகச் சாதுர்யமாக செயல்பட்டிருக்கிறார் தலைவர்.

    அந்த அதிகாரி அடுத்து கூறிய விஷயம் என்னை வியப்பின் உச்சிக்கே கொண்டு சென்றது.

    சில ஆண்டுகள் கழித்து தலைவர் தலைமையில் அதிமுக ஆட்சியை கைப்பற்றி தலைவர் முதல்வராகிறார். நான் சந்தித்த அதிகாரியின் பெயர் பதவி உயர்வுக்காக பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. அவர் நேர்மையான அதிகாரி என்பதை அறிந்து அவரது பதவி உயர்வுக்கு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். பின்னர், மரியாதை நிமித்தமாக அந்த அதிகாரி தலைவரை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்.

    அப்போது, அந்த அதிகாரியை பார்த்து ‘1972-73 காலகட்டங்களில் என்னை ரகசியமாக கண்காணித்தவர் நீங்கள்தானே?’ என்று அணுகுண்டை தலைவர் வீசியிருக்கிறார். தலைவரைக் கண்காணிக்க வந்த உளவுத்துறை அதிகாரிக்கு அவரின் நடவடிக்கைகளை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், உளவுத் துறை அதிகாரியையும் அவரது நடவடிக்கைகளையும் தலைவர் தெரிந்து வைத்துள்ளார்.

    அதிகாரி சொல்லி, இதைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கே ஒரு சில விநாடிகள் மூச்சே நின்று விட்டது. தலைவர் இந்தக் கேள்வியை கேட்கும்போது, அவர் முன் நிற்கும்போது, அந்த அதிகாரிக்கு எப்படி இருந்திருக்கும்? ‘நான் ஆடிப்போய் விட்டேன்’ என்று என்னிடம் சொன்னார் அந்த அதிகாரி.

    இது தலைவரின் ஆற்றலுக்கு உதாரணம் என்றால், அவரது நேர்மைக்கும், பெருந்தன்மைக்கும் அடுத்த உதாரணத்தை அதிகாரியே தொடர்ந்தார். அவரது வார்த்தைகளிலேயே சொல்கிறேன்.

    ‘‘முதல்வர் கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் நான் நின்று கொண்டிருந்தபோது, சிரித்தபடி அவரே (முதல்வரே) கூறினார்.
    ‘‘உங்கள் மீது எந்த தவறும் இல்லை. அரசு உங்களுக்கு கொடுத்த பணியை நீங்கள் செய்துள்ளீர்கள். அது உங்கள் கடமை. உங்களைப் பற்றிய ரெக்கார்டுகளில் நீங்கள் நேர்மையானவர் என்று தெரிந்து கொண்டேன். எனவேதான், உங்களுக்கு பதவி உயர்வுக்கு ஒப்புதல் அளித்தேன். தொடர்ந்து நேர்மையாக பணியாற்றுங்கள்’’

    .... அதிகாரியைப் பார்த்து தலைவர் இப்படி கூறியிருக்கிறார்.

    தன்னை கண்காணித்த அதிகாரியாயிற்றே என்று தலைவர் அவரை பழிவாங்கவில்லை. அவரது கடமையை அவர் செய்துள்ளார் என்று கூறியதோடு, அவரது நேர்மையான பணிக்கும் மதிப்பளித்து பதவி உயர்வுக்கும் ஒப்புதல் அளித்துள்ளார்.

    தலைவரின் பெருந்தன்மைக்கும், நேர்மைக்கு மதிப்பளிக்கும் அவரின் உயர்ந்த பண்பையும் என்னவென்று சொல்லி புகழ்வது?

    இதையும் தாண்டி அந்த அதிகாரி சொன்ன தகவல்தான் ஹைலைட்.

    பதவி உயர்வு பெற்ற அதிகாரியின் மகளுக்கு பின்னர் திருமணம் ஏற்பாடாகியிருக்கிறது. தலைவரை சந்தித்து திருமண அழைப்பிதழ் கொடுத்து திருமணத்துக்கு வரவேண்டும் என்று கோரியிருக்கிறார். அந்த தேதியில் வெளியூர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டியிருப்பதால் தன்னால் கலந்து கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டாராம் தலைவர்.

    இதைச் சொல்லிவிட்டு, லேசாக புன்னகைத்தபடி சில விநாடிகள் நிறுத்தினார் அந்த அதிகாரி. அந்த சில விநாடிகளில் என் மனம் இப்படி எண்ணியது......

    ‘பணி வேறு, நட்பும் நெருக்கமும் வேறு. பணியின் நேர்மைக்காக அந்த அதிகாரிக்கு பதவி உயர்வு கொடுத்தாகி விட்டது. ஆனால், அவர் மகள் திருமணத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று தலைவர் நினைத்திருக்கலாம். மேலும், அப்படி செல்ல வேண்டிய அளவுக்கு அந்த அதிகாரி, தலைவரோடு நெருங்கிப் பழகியவரும் இல்லை என்பதால் தலைவர் தவிர்த்திருக்கலாம்’

    என் சிந்தனையை கலைத்து அதிகாரி கூறினார்...

    ‘திருமண தேதியில் முதல்வர் ஏற்கனவே சொன்னபடி, வெளியூர் சென்று விட்டார். திருமணத்துக்கு அவர் வரவில்லை. ஆனால், தனது துணைவியார் ஜானகி அம்மையாரை அனுப்பி வைத்தார். அவர் வந்து விலையுயர்ந்த வெள்ளிப் பாத்திரங்களை என் மகளுக்கு திருமண அன்பளிப்பாக வழங்கினார்’

    இதை சொல்லும்போது அந்த அதிகாரியின் கண்கள் நன்றிப் பெருக்கில் லேசாக கலங்கியிருந்தன. இதைப் படித்துக் கொண்டிருக்கும் உங்களைப் போலவே, கேட்டுக் கொண்டிருந்த எனக்கும்தான்.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  2. Thanks ujeetotei, Russellisf thanked for this post
    Likes ujeetotei, Russellisf liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     
  4. #1792
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Sorry sir, wish you belated happy birthday Yukesh Babu sir !

  5. Thanks Russellisf thanked for this post
    Likes Russellisf liked this post
  6. #1793
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy : The Hindu - Tamil 05/08/2015
    முன்னாள் முதல்வர் எம்ஜிஆருடன் தேவராஜ் அர்ஸ் (வலது).

    கர்நாடகாவில் வழங்கப்படும் உயர்ந்த விருதான* `கர்நாடக ரத்னா' விருது இந்த ஆண்டு, முன்னாள் முதல்வர் தேவராஜ் அர்ஸூக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கன்னட அமைப்பினர் மட்டும*ல்லாமல் தமிழ் அமைப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    கர்நாடக மாநிலம் மைசூருவில் 1915-ம் ஆண்டு பிறந்த டி. தேவராஜ் அர்ஸ், அம்மாநில முதல்வராக 2 முறை பதவி வகித்துள்ளார். காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜர், தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். ஆகியோருக்கு மிக நெருக்கமாக இருந்தார்.

    தேவராஜ் அர்ஸ் கர்நாடக முதல்வராக இருந்த போது தமிழகத்தை சேர்ந்த தலைவர்களுடன் நட்புடன் பேசி, காவிரி பிரச்சினையை சுமூகமாக முடித்து வைப்பார்.

    மேலும் 1970களில் பெங்களூருவில் நடைபெற்ற பல்வேறு பொதுக்கூட்டங்களில் எம்.ஜி.ஆருடன் இணைந்து பங்கேற்று தமிழில் பேசியுள்ளார். தமிழ் மீது வெறுப்புணர்வை காட்டும் கர்நாடக முதல்வர்கள் மத்தியில், தேவராஜ் அர்ஸ் தமிழில் பேசியதால் ஏராளமான தமிழர்கள் அவரது அபிமானியாக மாறினார்கள். கர்நாடகாவில் சமூக நீதிக்காக தொடர்ந்து போராடி வந்த தேவராஜ் அர்ஸ் 1982-ம் ஆண்டு மறைந்தார்.

    இந்நிலையில் தேவராஜ் அர்ஸூக்கு கர்நாடகாவில் சிறந்த குடிமகனுக்கு வழங்கப்படும் மிக* உயர்ந்த விருதான `கர்நாடக ரத்னா' விருதை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதனை காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல், அனைத்து கட்சியினரும், கன்னட அமைப்பினரும் வரவேற்றுள்ளனர். இதே போல கர்நாடகாவை சேர்ந்த பல்வேறு தமிழ் அமைப்புகளும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளன.

    இதற்கிடையே அவரின் நினைவைப் போற்றும் விதமாக அஞ்சல் தலையும் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக கர்நாடக சமூக நலத்துறை அமைச்சர் ஆஞ்சநேயா கூறும்போது, "கர்நாடகாவில் மட்டுமல்லாமல் தேசிய அரசியலிலும் சிறந்து விளங்கிய தேவராஜ் அர்ஸின் சாதனைகளை இளைய தலைமுறைக்கு எடுத்துரைக்கும் விதமாக மத்திய அரசு அவருக்கு அஞ்சல் தலை வெளியிட வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார்

  7. Likes ujeetotei liked this post
  8. #1794
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

    எனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றி

  9. Likes ujeetotei liked this post
  10. #1795
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  11. Likes ujeetotei liked this post
  12. #1796
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by KALAIVENTHAN View Post

    ‘மலை உயர்ந்தது போல்
    மனம் உயர்ந்ததென்று....’

    தலைவரின் ஆற்றல், சாதுர்யம், நேர்மை, வள்ளன்மை, பெருந்தன்மை ஆகியவை வெளியில் தெரிந்திருப்பது பூமிப்பந்தின் மூன்று பங்கை ஆக்கிரமித்திருக்கும் கடலின் ஒருதுளியைப் போன்றதுதான். வெளியே தெரியாமல் இருப்பது அந்த கடலளவு என்று என்னை எண்ண வைத்தது ஒரு அனுபவம்.

    அன்பே வா திரைப்படத்தில்,.....

    ‘மலை உயர்ந்தது போல்
    மனம் உயர்ந்ததென்று
    இவர் வாழ்வில் விளக்குகிறார்’

    என தான் பாடிய வரிகளுக்கு இலக்கணமாகத் திகழ்பவர் தலைவர் என்பதற்கு மேலும் ஒரு சத்திய சாட்சி.

    தமிழக உளவுப் பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவரை சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தேன். அவர் 75 வயதைக் கடந்தவர். பணியில் நேர்மையான அதிகாரி. அவரிடம் பல்வேறு விஷயங்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தபோது தலைவரைப் பற்றியும் பேச்சு வந்தது. அவர் சொன்ன விஷயங்கள் வியப்பளித்தன.

    1972-ம் ஆண்டு தலைவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட நேரம். நான் குறிப்பிட்ட உளவுப் பிரிவு அதிகாரிக்கு தலைவரை ரகசியமாக கண்காணித்து அறிக்கை அனுப்ப ஆட்சி மேலிடத்தில் இருந்து உத்தரவு. சில மாதங்கள் வரை தலைவரின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்து வந்திருக்கிறார் அந்த அதிகாரி. ஆனால், ‘‘தலைவர் எந்த நேரத்தில் யாரை சந்திக்கிறார்? அரசியலில் அவரது அடுத்த மூவ் என்ன? என்ன திட்டம் வைத்திருக்கிறார்?’’ என்று கொஞ்சம் கூட அந்த அதிகாரியால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதை மேலிடத்துக்கும் அப்படியே அறிக்கையாக அனுப்பியுள்ளார்.

    விஷமிகளின் சதிவலையை முறியடிக்க, தலைவர் வெளியூர்களுக்கு சென்றால் இரண்டு, மூன்று வாகனங்களில் மாறி, மாறி செல்வார். எந்த வாகனத்தில் அவர் செல்கிறார். எந்த பாதையில் செல்கிறார் என்பதை யாரும் கண்டுபிடிக்க முடியாது. அந்த அளவுக்கு அரசியலில் நெருக்கடியான நேரங்களில் மிகச் சாதுர்யமாக செயல்பட்டிருக்கிறார் தலைவர்.

    அந்த அதிகாரி அடுத்து கூறிய விஷயம் என்னை வியப்பின் உச்சிக்கே கொண்டு சென்றது.

    சில ஆண்டுகள் கழித்து தலைவர் தலைமையில் அதிமுக ஆட்சியை கைப்பற்றி தலைவர் முதல்வராகிறார். நான் சந்தித்த அதிகாரியின் பெயர் பதவி உயர்வுக்காக பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. அவர் நேர்மையான அதிகாரி என்பதை அறிந்து அவரது பதவி உயர்வுக்கு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். பின்னர், மரியாதை நிமித்தமாக அந்த அதிகாரி தலைவரை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்.

    அப்போது, அந்த அதிகாரியை பார்த்து ‘1972-73 காலகட்டங்களில் என்னை ரகசியமாக கண்காணித்தவர் நீங்கள்தானே?’ என்று அணுகுண்டை தலைவர் வீசியிருக்கிறார். தலைவரைக் கண்காணிக்க வந்த உளவுத்துறை அதிகாரிக்கு அவரின் நடவடிக்கைகளை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், உளவுத் துறை அதிகாரியையும் அவரது நடவடிக்கைகளையும் தலைவர் தெரிந்து வைத்துள்ளார்.

    அதிகாரி சொல்லி, இதைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கே ஒரு சில விநாடிகள் மூச்சே நின்று விட்டது. தலைவர் இந்தக் கேள்வியை கேட்கும்போது, அவர் முன் நிற்கும்போது, அந்த அதிகாரிக்கு எப்படி இருந்திருக்கும்? ‘நான் ஆடிப்போய் விட்டேன்’ என்று என்னிடம் சொன்னார் அந்த அதிகாரி.

    இது தலைவரின் ஆற்றலுக்கு உதாரணம் என்றால், அவரது நேர்மைக்கும், பெருந்தன்மைக்கும் அடுத்த உதாரணத்தை அதிகாரியே தொடர்ந்தார். அவரது வார்த்தைகளிலேயே சொல்கிறேன்.

    ‘‘முதல்வர் கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் நான் நின்று கொண்டிருந்தபோது, சிரித்தபடி அவரே (முதல்வரே) கூறினார்.
    ‘‘உங்கள் மீது எந்த தவறும் இல்லை. அரசு உங்களுக்கு கொடுத்த பணியை நீங்கள் செய்துள்ளீர்கள். அது உங்கள் கடமை. உங்களைப் பற்றிய ரெக்கார்டுகளில் நீங்கள் நேர்மையானவர் என்று தெரிந்து கொண்டேன். எனவேதான், உங்களுக்கு பதவி உயர்வுக்கு ஒப்புதல் அளித்தேன். தொடர்ந்து நேர்மையாக பணியாற்றுங்கள்’’

    .... அதிகாரியைப் பார்த்து தலைவர் இப்படி கூறியிருக்கிறார்.

    தன்னை கண்காணித்த அதிகாரியாயிற்றே என்று தலைவர் அவரை பழிவாங்கவில்லை. அவரது கடமையை அவர் செய்துள்ளார் என்று கூறியதோடு, அவரது நேர்மையான பணிக்கும் மதிப்பளித்து பதவி உயர்வுக்கும் ஒப்புதல் அளித்துள்ளார்.

    தலைவரின் பெருந்தன்மைக்கும், நேர்மைக்கு மதிப்பளிக்கும் அவரின் உயர்ந்த பண்பையும் என்னவென்று சொல்லி புகழ்வது?

    இதையும் தாண்டி அந்த அதிகாரி சொன்ன தகவல்தான் ஹைலைட்.

    பதவி உயர்வு பெற்ற அதிகாரியின் மகளுக்கு பின்னர் திருமணம் ஏற்பாடாகியிருக்கிறது. தலைவரை சந்தித்து திருமண அழைப்பிதழ் கொடுத்து திருமணத்துக்கு வரவேண்டும் என்று கோரியிருக்கிறார். அந்த தேதியில் வெளியூர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டியிருப்பதால் தன்னால் கலந்து கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டாராம் தலைவர்.

    இதைச் சொல்லிவிட்டு, லேசாக புன்னகைத்தபடி சில விநாடிகள் நிறுத்தினார் அந்த அதிகாரி. அந்த சில விநாடிகளில் என் மனம் இப்படி எண்ணியது......

    ‘பணி வேறு, நட்பும் நெருக்கமும் வேறு. பணியின் நேர்மைக்காக அந்த அதிகாரிக்கு பதவி உயர்வு கொடுத்தாகி விட்டது. ஆனால், அவர் மகள் திருமணத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று தலைவர் நினைத்திருக்கலாம். மேலும், அப்படி செல்ல வேண்டிய அளவுக்கு அந்த அதிகாரி, தலைவரோடு நெருங்கிப் பழகியவரும் இல்லை என்பதால் தலைவர் தவிர்த்திருக்கலாம்’

    என் சிந்தனையை கலைத்து அதிகாரி கூறினார்...

    ‘திருமண தேதியில் முதல்வர் ஏற்கனவே சொன்னபடி, வெளியூர் சென்று விட்டார். திருமணத்துக்கு அவர் வரவில்லை. ஆனால், தனது துணைவியார் ஜானகி அம்மையாரை அனுப்பி வைத்தார். அவர் வந்து விலையுயர்ந்த வெள்ளிப் பாத்திரங்களை என் மகளுக்கு திருமண அன்பளிப்பாக வழங்கினார்’

    இதை சொல்லும்போது அந்த அதிகாரியின் கண்கள் நன்றிப் பெருக்கில் லேசாக கலங்கியிருந்தன. இதைப் படித்துக் கொண்டிருக்கும் உங்களைப் போலவே, கேட்டுக் கொண்டிருந்த எனக்கும்தான்.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
    Thanks for the information Sir, (the bolded one) I came to know these from my father acquaintance very early, the same was said by K.P.Ramakrishnan when I met him recently.

  13. #1797
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    எந்த கருத்து படத்தில் சொல்லபடுகிறது என்பதை சிர்த்தூக்கிப் பார்த்து படம் பார்க்க ரசிகர்கள் வர வேண்டும். அப்போதுதான் நல்ல படங்கள் நிறைய உருவாகும். மக்கள் வாழ்கை மேம்பட அவை உதவும்.

    - புரட்சித்தலைவர்
    Last edited by saileshbasu; 10th August 2015 at 09:56 PM.

  14. #1798
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழ் பல்கலைகழகம் தஞ்சாவூரில் அமைக்கப்பட்டபோது அதன் துணை வேந்தனாக திரு. வீ . சுப்ரமணியம் அவர்களை நியமித்தார். இதில் என்ன பெரிய விஷயம்? இவர் தீ.மு.க தலைவர் மற்றும் பேராசிரியர் அவர்களின் நெருங்கிய நண்பர் என்று தலைவருக்கு நன்றாகவே தெரியும்!

    அதுதான் புரட்சிதலைவர்

  15. #1799
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    Last edited by saileshbasu; 10th August 2015 at 09:25 PM.

  16. #1800
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர் தோற்றுவிடுவார்!!!

    எம்.ஜி.ஆரிடம் உள்ள மனிதாபிமானம், தர்ம சிந்தனையைப் பிரித்து விடுங்கள்.அவர் தோற்றுவிடுவார். ஆனால் அப்படி முயல்பவர்கள் தோற்பதுதான் நடந்த உண்மை!

    திரு. ஏ.எல்.நாராயணன்

    Last edited by saileshbasu; 10th August 2015 at 09:32 PM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •