-
12th August 2015, 10:18 PM
#441
Junior Member
Senior Hubber
சற்று முன் நியூஸ் 7 சேனலில் 9 மணிக்கு நடைபெற்ற சிவாஜி சிலை அரசியலாக்கபடுகிறதா என்ற விவாதத்தில் திரு.சந்திரசேகர் அவர்கள் மிக அருமையாக விவாதித்தார். எத்தனையோ தலைவர்கள் சிலை போக்குவரத்துக்கு மிக இடைஞ்சலாக இருக்கும்போது சிவாஜி சிலையை மட்டும் குறி வைப்பது யாரோ ஒருவரின் தூண்டுதலே இதற்கு காரணம் என்பதை சிறப்பாக கூறினார். மேலும் பிரசன்னா என்ற வழககறிஞர் திரையுலகில் போற்றப்படவேண்டிய நடிகர் திலகத்திற்கு பாரத ரத்னா விருது கொடுக்கப்படாதது பற்றியும் இந்த சிலை விவகாரம் தமிழகத்திற்கு ஒரு துரதிருஷ்டவசமானது என்றும் கூறினார். ஒரே ஒரு நபரை தவிர மற்ற அனைவரும் இந்த சிலையினால் எந்த போக்குவரத்துக்கும் இடஞ்சல் இல்லை எனவே கூறினார்.
மீண்டும் மீண்டும் கூறுகிறோம் சிவாஜி சிலையை தொட்டால் அதற்கான பலனை உடனே அனுபவிப்பீர்கள் . இது சத்தியம்

-
Post Thanks / Like - 2 Thanks, 3 Likes
-
12th August 2015 10:18 PM
# ADS
Circuit advertisement
-
12th August 2015, 11:33 PM
#442
Junior Member
Junior Hubber
வணக்கம் !
சில நண்பர்களுக்கு எதர்கெடுத்தாலும் கோபம் வருகிறது !
சாதனைகள் இரண்டு வகைப்படும் . ஒருவர் செய்யும் சாதனை காலபோக்கில் மற்ற ஒருவரால் முறியடிக்கப்படும் ! அப்படி வேறு எவராலும்
இன்று வரை முறியடிக்க முடியாத சாதனைகளும் உண்டு ! திரிசூலம் அதிக இடங்களில் வெள்ளிவிழா ஓடியது என்று செய்தி பதிவிடுவதை விட
அந்த சாதனை இன்று வரை எவராலும் முறியடிக்க முடியாத ஒன்று என்று பதிவிட்டால் தான் சிவாஜிக்கு பெருமை ! அதுவே சிவாஜி ரசிகர்கள்
செய்யும் கடமை ! சிவாஜி உட்பட எவராலும் இன்று வரை முறியடிக்க முடியாத சில சாதனைகளை மற்ற சில நடிகர்களும் செய்திருப்பதும் உண்மை !
உதாரணத்துக்கு தமிழகத்தில் 85 ஆண்டு தமிழ் சினிமா வரலாற்றில் 71 நகரங்களில் 100 நாட்கள் ஓடிய ஒரே படம் superstar திரு ரஜினிகாந்த் நடித்த
படையப்பா மட்டுமே! அவர் நடித்த சந்திரமுகியும் இதை நெருங்கியது ! இது சினிமாவரலாற்று உண்மை!
இப்படி வேறு எவராலும் இன்று வரை வெல்லமுடியாத சாதனைகளை அதிகமாக செய்திருப்பவர் சிவாஜி என்பதே நான் கூற விரும்புவது !
தன் அபிமான நடிகரை விட வேறு நடிகர்கள் சாதனையை ஏற்று கொள்ளாத குறுகிய மனம் எனக்கில்லை !
நன்றி !
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
13th August 2015, 12:04 AM
#443
Junior Member
Junior Hubber
செந்தில்வேல் சார்,
தங்கள் தீர்ப்பு பட பதிவுகள் அருமை !
சிவாஜியின் 225 வது வெற்றிப்படம் தீர்ப்பு . தமிழகத்தில் எட்டு திரைகளில் 100 நாட்கள் ஓடியது ! மதுரையில் 25 வாரங்கள் ஓடி வெள்ளிவிழா கண்டது !
நடிகர் பாலாஜியின் சொந்தபடம். திருச்சி மாரிஸ்ராக் திரைஅரங்கதில் ரிலீஸ் ஆன நாள் 21/05/1982. திருச்சியில் 112 காட்சிகள் தொடர்ந்து அரங்கு
நிறைந்தது . திருச்சி மாரிஸ்complexil 100 நாட்கள் ஓடிய முதல் படம்!
மற்றபடி எவராலும் முறியடிக்க முடியாத சாதனைகளை எதுவும் இப்படம் செய்யவில்லை !
நன்றி !
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
13th August 2015, 07:40 AM
#444
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
13th August 2015, 08:55 AM
#445
Senior Member
Seasoned Hubber
12.08.1983 அன்று வெளியாகி 32 ஆண்டுகளை நிறைவு செய்தும் பசுமையாக நினைவில் நிற்கும் இனிய பாடல். தலைவரின் நளினமான உடல் மொழியோடு கூடிய மென்மையான நடனம், பாடலின் சிறப்பைக் கூட்டுகிறது.
சுமங்கலி படத்திலிருந்து இனிமையான பாடல்..
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
-
13th August 2015, 01:53 PM
#446
Junior Member
Veteran Hubber
ஒட்டப் செட்டப் கெட்டப் கெட்டிக்காரர்களின் மாறுவேட மதுர கீதங்கள் / fancy super songs!
உலகமே ஒரு நாடக மேடை. அதில் நாமெல்லோருமே இறைவனால் இயக்கப்படுகிற நடிகர்களே ! நடிப்புக்குள் நடிப்பாக எத்தனை முக மூடிகளை நாம் போட வேண்டியிருக்கிறது !
இயல்பாகவே இயல்பாகவே மாறுவேடம் தரிக்கும் ஆசை நமது மனதின் ஒரு மூலையில் படுத்து உறங்கிக் கொண்டுதானிருக்கிறது! சந்தர்ப்பங்கள் சரிவர அமைவதில்லை ..அவ்வளவே! சந்தர்ப்பம் கிடைத்தால் யோக்கியனும் ஒரு நூலிழையில் அயோக்கியனாக மாறும் சாத்தியக்கூறுகள் அதிகமே!
ஒரு கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து நடித்துக் கொண்டிருக்கும் போது அக்கதாபாத்திரமே ஒரு மாறு வேடமிட்டு பல்வேறு நோக்கங்களை நிறைவேற்ற
வேண்டிய சூழலில் திரைக்கதை வடிவமைக்கப் படும்போது திறமை வாய்ந்த கலைஞனால் மட்டுமே மாறுவேட குணாதிசயத்தையும் உயிர்ப்பித்து
ரசிகர்களைக் கட்டிப் போட இயலும்!
கெட்டப் கெட்டிக்காரர் 1 : நடிகர்திலகம் சிவாஜி கணேசன் மாறுவேட மதுரம் 1: ஆணும் பெண்ணும் அழகு செய்வது .....ஆடை / தூக்குதூக்கி
தூக்கு தூக்கியில் கொலையும் செய்வாள் பத்தினி கான்செப்டில் துரோகமிழைக்கும் மனைவியைக் கையும் களவுமாகப் பிடித்திட நடிகர் திலகம் போடும் ஆடை ஏல விற்பனையாளர் மீசை தாடி ஒட்டப்பும் ஆடல் பாடலுக்கான உடையலங்கார கெட்டப்பும் காட்சியமைப்பின் விறுவிறு செட்டப்பும் சூப்பரோ சூப்பர் !
கருத்துப் பொதிந்த பாடல் வரிகளுக்கு உயிர் கொடுத்து நடிகர் திலகத்தின் குரலாகவே TMS மாறியது வரலாறே!
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
13th August 2015, 02:21 PM
#447
Junior Member
Veteran Hubber
ஒட்டப் செட்டப் கெட்டப் கெட்டிக்காரர்களின் மாறுவேட மதுர கீதங்கள் / fancy super songs!
கான்செப்ட் நோக்கம் : ஜெகதலபிரதாபனாக கஜகர்ணம் அடித்தாவது காதலியின் உள்ளம் கவர்வதே!
கெட்டப் கெட்டிக்காரர் 1 : நடிகர்திலகம் சிவாஜி கணேசன் மாறுவேட மதுரம் 2 : வா க(சல்)லாப மயிலே ...ஆரியமாலா ஆரியமாலா / / காத்தவராயன்
இளமைக் குறும்பு மிளிரும் ஒரு துடிப்பான வாலிபனால் வயோதிக வேடம் தரித்து தள்ளாமையுடன் கூடிய சல்லாப வேட்கையை வெளிப்படுத்த முடியுமா ?
எப்படிப்பட்ட உருவ மாற்றம் ?! என்னவொரு வெண்தாடி வேந்தர் ஒட்டப்! இசைத்தள்ளாட்ட கெட்டப்! நாயகியை கவிழ்க்கும் செட்டப்!
இதே கான்செப்டை என் டி ராமாரவ்காரும் பலே தம்முடு படத்தில் தெலுங்கில் மாட்லாடி இதே (ஆனால் கறுப்பு மீசைதாடி) ஒட்டப் செட்டப் கெட்டப்பை விஜயாவைக் கவிழ்க்க ரயில் பயணத்தில் சுவை சேர்க்கிறார் !
Last edited by sivajisenthil; 13th August 2015 at 06:48 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
13th August 2015, 02:24 PM
#448
Junior Member
Junior Hubber
21/08/2015 முதல் வீரபாண்டிய கட்டபொம்மன் வெற்றி பவனி ஆரம்பம் !
சிங்கத்தமிழன் சிவாஜியின் சிம்மகர்ஜனை கேட்க தயாராகுங்கள் !
மதுரை ஐயநாக்ஸ் ac, சுகப்ரியாac அண்ணாமலைac, அம்பிகைac, திருநகர் மணிஇம்பாலாac திரைகளில் வெளிவருகிறது !
இது கேள்விப்பட்ட செய்தி , கடைசி நேரத்தில் சில திரைகள் மாற வாய்ப்புள்ளது !
சிவாஜி ரசிக கண்மணிகள் கட்டபொம்மனை சிறப்பாக வரவேற்க தயாராகுங்கள் !
வெற்றிவேல் ! வீரவேல் !
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
13th August 2015, 03:22 PM
#449
Junior Member
Junior Hubber
ராகவேந்திரா சார் ,
சுமங்கலி பாடல் வீடியோ பதிவு கண்டேன். மிக்கநன்றி !
சுமங்கலியில் சிவாஜி மேக்கப் ,விக், சூப்பராக இருக்கும் ! படத்தில் பார்க்க அழகாக தோன்றுவார்!
சந்திப்பு படத்துக்கு அடுத்த படமாக சுமங்கலி வெளியானது ! சந்திப்பு படத்தில் ஸ்ரீதேவி ஜோடியாக வரும் சிவாஜியின் மேக்கப் சுமாராகவே இருக்கும் !
குறிப்பாக சிவாஜி ஸ்ரீதேவி டூயட் பாடலில் மேக்கப் , விக் பார்க்க சகிக்காது ! சுமங்கலி போல் மேக்கப் இதில் இருந்திருந்தால் சூப்பராக அமைந்திருக்கும் !
Kr விஜயா ,சுஜாதா போன்ற நடிகைகளை மட்டுமே அதிகம் கட்டிக்கொண்டு அழாமல் சுமங்கலி கீதா போன்ற திறமை அழகு வாய்ந்த நடிகைகளை 1980 க்கு பிறகு கூடுதலாக படங்களில் பயன்படுத்தியிருக்க வேண்டும் ! 1984 இல் வந்த வாழ்க்கை படத்தில் அம்பிகா ஜோடி பார்க்க வித்தியாசமாகவும்
நன்றாகவும் இருந்தது ! இளமையான திறமையான அழகான நடிகைகள் நிறைய இருக்க இவர் முதுமைஅடைந்த நடிகைகளையே அதிகம் படங்களில் 1975 க்கு பிறகு தனக்கு ஜோடியாக நடிக்க வெய்த்தார்! தனக்கு வயதாகி விட்டதால் மற்றவர்கள் விமர்சனம் செய்வார்களோ என்று தயங்கினார்!
ஆனால் இவர் இளம் நடிகைகளுடன் நடித்த படங்கள் அனைத்தும் அவர் ரசிகர்களால் பெரிதும் விரும்பபட்டது ! மக்களும் ஏற்று கொண்டார்கள் !
சுமங்கலி வர்த்தக வெற்றி படம் ! சந்திப்பு வெள்ளிவிழா படம்! வாழ்க்கை 100 நாட்கள் படம் ! இதிலிருந்தே என் கூற்றின் உண்மை புரியும் !
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
13th August 2015, 04:11 PM
#450
Junior Member
Veteran Hubber

Originally Posted by
Baskar Trichi
வணக்கம் !
சில நண்பர்களுக்கு எதர்கெடுத்தாலும் கோபம் வருகிறது !
சாதனைகள் இரண்டு வகைப்படும் . ஒருவர் செய்யும் சாதனை காலபோக்கில் மற்ற ஒருவரால் முறியடிக்கப்படும் ! அப்படி வேறு எவராலும்
இன்று வரை முறியடிக்க முடியாத சாதனைகளும் உண்டு ! திரிசூலம் அதிக இடங்களில் வெள்ளிவிழா ஓடியது என்று செய்தி பதிவிடுவதை விட
அந்த சாதனை இன்று வரை எவராலும் முறியடிக்க முடியாத ஒன்று என்று பதிவிட்டால் தான் சிவாஜிக்கு பெருமை ! அதுவே சிவாஜி ரசிகர்கள்
செய்யும் கடமை ! சிவாஜி உட்பட எவராலும் இன்று வரை முறியடிக்க முடியாத சில சாதனைகளை மற்ற சில நடிகர்களும் செய்திருப்பதும் உண்மை !
உதாரணத்துக்கு தமிழகத்தில் 85 ஆண்டு தமிழ் சினிமா வரலாற்றில் 71 நகரங்களில் 100 நாட்கள் ஓடிய ஒரே படம் superstar திரு ரஜினிகாந்த் நடித்த
படையப்பா மட்டுமே! அவர் நடித்த சந்திரமுகியும் இதை நெருங்கியது ! இது சினிமாவரலாற்று உண்மை!
இப்படி வேறு எவராலும் இன்று வரை வெல்லமுடியாத சாதனைகளை அதிகமாக செய்திருப்பவர் சிவாஜி என்பதே நான் கூற விரும்புவது !
தன் அபிமான நடிகரை விட வேறு நடிகர்கள் சாதனையை ஏற்று கொள்ளாத குறுகிய மனம் எனக்கில்லை !
நன்றி !
இனிய நண்பர் திரு திருச்சி பாஸ்கர் அவர்களே
சில பதிவுகளை படித்தபிறகு தங்களுடைய பதிவிற்கு பதில் எழுதுகிறேன்.
நடிகர்களில் பல ராகம் உண்டு ! பயமுறுத்தும் வில்லன், கொஞ்சம் அதிரடி மசாலா, இனிய பாடல்கள், ஊறுகாய் போல கவர்ச்சி, சிறிது தத்துவம், இப்படி அனைத்து விஷயங்கள் கொண்டு மட்டுமே தயாரிக்கப்படும் FORMULA படங்கள் மட்டுமே இருக்கும்படி பார்த்துகொள்ளும் நடிகர்கள். இது பொழுதுபோக்கு நோக்குடன் மிகவும் அடித்தட்டில் உள்ள, காலை முதல் மாலை வரை உழைத்து உழைத்து அக்கடா என்று வரும் பெருவாரியான பாடாளியை திருப்திபடுத்தும் வகையில் இருக்கும் படங்கள்.
காலை முதல் மாலை வரை உழைத்து உழைத்து அக்கடா என்று வரும் பெருவாரியான பாடாளி, அவர்களிடம் போய் " ஏன் பிறந்தாய் மகனே ...ஏன் பிறந்தாயோ ...இல்லை ஒரு பிள்ளை என்று ஏங்குவோர் பலர் இருக்க ...இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்ல மகனே..." என்று திரையில் வந்தால்.....அவர்கள் மன நிலை எப்படி இருக்கும் ? சற்று யோசித்து பாருங்கள்...! ஆனால் இதே பாடலை சிறிது LEISURE ஆக இருக்கும் தருணத்தில் அதே ஆள் ..சிறப்பாக ரசிப்பான் !
100% பொழுது போக்கு அம்சம் மட்டுமே கொண்ட படங்களை தேர்வு செய்யும் நடிகர்கூட ஒரு காலத்தில் நல்ல நடிப்பை வழங்கி உள்ளார்கள்...ஆனால் அந்த படங்கள் முழுதுமே அவர்களுடைய AUDIENCE நிராகரித்துவிடுவது நாம் கண்டிருக்கிறோம். காரணம் அந்த நடிகர்களை அந்த ஒரு உருவில் பெருவாரியான அவர் படங்களை பார்ப்பவர் விரும்புவதில்லை.
போனோமா..போழுதுபோகவேண்டும்....நல்ல பாடல்...ஓரளவிற்கு தமாஷ்...நல்ல கதாநாயகி...விறுவிறுப்பான தருணங்கள் கொண்ட காட்சியமைப்பு, சண்டைகாட்சி...இப்படி அவர்கள் தேர்வு செய்கிறார்கள். இதில் ஒன்று குறைந்தாலும் படம் படுத்துவிடும்...! உதாரணம், நல்ல பாட்டு இல்லை என்றால்...தம்முடைய கதாநாயகன் நறுக்கென்று சில வசனமும் அதிரடி சண்டையும் செய்யவில்லை என்றால் அந்த படம் ஓடாது ! இது அனைவரும் அறிந்ததே...!
நமது நடிகர் திலகத்தின் படங்கள் பெரும்பான்மையான படங்கள் அந்த வகையை சார்ந்த ஒரு FORMULA படம் அல்ல ! நடிகர் திலகத்தின் படங்களில் நடிக்கும் உயிர் இலாத ஒரு CIGERATTE கூட ஒரு முக்கியத்துவம் பெறும் ! அப்படி இருக்க மற்ற நடிகர்கள் அனைவரும் நமது நடிகர் திலகத்தின் படங்களில் சம வலிமை பெற்றிருப்பார்கள்...காரணம் கதை களம் அப்படி இருக்கும் ...! திறமையான நடிகர்கள் பலர் திறமையுடன் நடித்துகொண்டிருப்பார்கள்...கதாநாயகி உட்பட ! இது நடிகர் திலகத்தின் படங்களுக்கு உரிய தனி சிறப்பு !
மசாலா யுக்திகள் நடிகர் திலகத்திற்கு இரெண்டாம் பட்சமே...! அவை இல்லையென்றாலும் நடிகர் திலகம் படம் மட்டுமே பெரும்பான்மையான படங்கள் மிக சிறந்த வெற்றியை பெற்றுள்ளது....!
நடிகர் திலகத்தால் ஒரு DRY SUBJECT ஐ கூட தனது நடிப்பால் மக்களிடத்தில் கொண்டுசென்று...வெள்ளிவிழா காண செய்யமுடியும்...! வேறு எந்த நடிகனாலும் இந்த சாதனையை செய்ய முடியவே முடியாது ! இது உலகம் அறிந்த உண்மை !
அதே DRY SUBJECT கொடுத்த நடிகர் திலகத்தால் முழுக்க முழுக்க மசாலா மனம் கமழும் படத்தையும் கொடுத்து வெள்ளிவிழா காண செய்ய முடியும்...! பல தருணங்களில் செய்ததும் உண்டு ..!
இது நடிகர் திலகத்தின் தனி சிறப்பு ! அவர் படங்களுக்கு மட்டுமே உள்ள ஒரு USP !!! வேறு எவரும் இதில் இதுவரை தேறியதில்லை !...நடிகர் திலகம் இருந்தபொழுதும் சரி.....அவர் இல்லாத பொழுதும் சரி..!
இன்னொன்று...கோவை...திருச்சி...மதுரை ..சென்னை...இந்த இடங்களில் எல்லாம்...உள்ள PRINT திரையிடும் திரை அரங்குகள் 98% இல்லை...இருக்கும் திரை அரங்குகள் அனைத்தும் யாருடைய பிடியில் என்று யார் சொல்லி தெரியவேண்டியதும் இல்லை. உங்களுக்கே தெரியும்..!
உதாரணம்....கடந்த 3 ஆண்டுகாலம் சென்ட்ரல் திரை அரங்கில் நடிகர் திலகம் படம் திரையிட முயற்சி செய்தால் உடனே ஒரு பிரிவினர் வந்து...அது போகாது....யாரும் வரமாட்டார்கள்...வாடகை வராது என்று கூறி திரையரங்கு மேலாளரை மற்றும் உரிமையாளர் மனதில் சந்தேகம் எழ செய்வதை ஒரு வேலையாகவே செய்துவந்தனர் !
இதனை தற்போது ....தகர்துடைத்து ...அவர்கள் கூறியது அத்தனையும் பொய்...காழ்புணர்ச்சி கொண்டு ஆண்மையற்ற முறையில் இதுபோல செயல்களில் ஈடுபட்டனர் என்பதை திரையரங்கு உரிமையாளர்களுக்கு புரியவைத்து, உண்மையை உணரவைத்து சென்ட்ரல் திரை அரங்கில் நமது நடிகர் திலகம் அவர்கள் படம் அதுவரை நிருத்திவைக்கப்பட்டதை உடைத்து மீண்டும் திரையிடப்பட்டு படத்திற்கு படம் வசூல் அதிகரிப்பது மட்டும் அல்லாமல் ..பல ஊர்களில் இருந்தும் புதிது புதிதாக குடும்பங்கள் வந்து பார்த்து விட்டு செல்கின்றனர்...!
இதனை மதுரையை சேர்ந்த சிவா மூவீஸ் திரு சுந்தர்ராஜன் விடாபிடியாக இருந்து பல சதிகளை முறியடித்து திரையிட்டு வெற்றிக்கொடி நாட்டி வருகிறார்கள் என்பதை மதுரை சினிமா விரும்பிகள் அறிவார்கள் ! நடிகர் திலகம் திரைப்படங்கள் மீண்டும் வரத்தொடங்கி வந்ததுமுதல் எந்த தொய்வும் இல்லாமல் படத்திற்கு படம் கூடம் அதிகரிப்பதை பார்த்து, நம் படத்தை எப்போதும் குறைத்து பேசும் நடிகர் திலகம் படம் போகாது என்று புளுகுவிடும் விநியோகஸ்தர் ஒருவர் விளையாட்டு பிள்ளையை திரையிட்டு சுமார் 20,000 ருபாய் ஷேர் வாங்கியுள்ளார். விளையாட்டு பிள்ளை எந்த வித பொழுதுபோக்கு அம்சம் இலாத படம் என்று அனைவரும் அறிந்தது ! அப்படிப்பட்ட ஒரு DRY SUBJECT 20,000 ஷேர் கொடுத்துள்ளது. இந்த ஒரு சாதனை எவரும் செய்ய முடியாதது சார் !
திருச்சியை எடுத்துகொள்ளுங்கள் ...நடிகர் திலகம் படம் வசூல் ஆகாது...யாரும் வரமாட்டார்கள் என்ற அதே பல்லவி...ஆனால் நடந்ததென்ன என்பதை பத்திரிகள் செய்திகள் ஒருமித்த கருத்தை ஆதாரத்துடன் எழுதியதை பார்த்திருப்பீர்கள் ! இப்போது மற்ற விநியோகஸ்தர்கள் மெல்ல.....அவர்கள் தரும் சிவாஜி படத்தை போடாதீர்கள்...எங்களிடம் சிவாஜியின் இந்த படம் உள்ளது..இதை போடுங்கள்...என்று வற்புறுத்தும் அளவிற்கு நிலைமை வந்துவிட்டது !
ஆக...இதில் புரிந்து கொள்ளவேண்டியது ....என்னவென்றால் நடிகர் திலகம் படங்கள் திரையிட்டால் நமது படங்கள் போகாது என்பதை உணர்ந்து திட்டமிட்டே இந்த CHARACTER ASSASINATION செய்து வருகின்றனர் ! படம் திரையிட்டு , மக்கள் அதிக அளவில் வரும்போது....திரை அரங்கு உரிமையாளர்கள் உண்மை உணர்ந்து அந்த பொய் பேசுவோருக்கு தக்க பதில் அவர்களே உரைக்க ஆரம்பித்து விட்டார்கள்...சார் !
இது காலத்தின் கட்டாயம்...உண்மையை எவ்வளவு நாள் பொய்களால் மறைக்க முடியும் ?
இதே நிலை தான் கோவை....திருச்சி ...சென்னை.....நடிகர் திலகம் படம் திரையிட பேச்சு நடத்தும்போதே...அது போவாது சார்.....கூட்டம் வராது சார் ....என்று அங்கு வெட்டி பேச்சு பேசிக்கொண்டு எப்போதும் உலாத்தும், திரை அரங்கு ஆட்களுடன் சகவாசம் வைத்துகொண்டிருக்கும் ஒரு சில மற்ற அபிமானிகள் பேசி பிரைன் வாஷ் செய்ய தொடங்குகின்றனர், செய்கின்றனர் !
மதுரை சென்ட்ரல் திரை அரங்கில் உள்ள சைக்கிள் STAND இல் ஒருவர் இதுபோல இருக்கிறார்...அவர் வேலையே...சிவாஜி படம் திரையிட்டால்....அருமையான ப்ரிண்டாக இருந்தாலும் படம் பார்க்க வருபவரிடம்...பிரிண்ட் சரியில்லை...JUMP ஆகிறது...CUT இருக்கிறது ..என்று கூறி வருவதுதான்...இவர் யாருடைய அணியை சேர்ந்தவர் என்று நாம் கூற தேவையே இல்லை. இப்படி ஒரு ஆண்மையற்ற முறையை அவர் கடந்தமுறை கையாண்டபோது நமது ரசிகர் ஒருவரிடமே தனது கை வரிசையை காட்டியுள்ளார். இதை படம் வெளியிட்டவரிடம் தெரிவிக்க...படத்தை வெளியிட்டவர் உடனே திரையரங்கு நிர்வாகியை சந்தித்து இதனை புகார் தெரிவிக்க, அவர்கள் இப்போது நடிகர் திலகம் படம் திரையிடும் பொழுது வேறு ஒருவரை CYCLE STAND இல் நிறுத்தியுள்ளனர் !
ஆக, திரை அரங்கு உரிமையாளர்களே இத நபர் அப்படி சிகண்டி வேலை செய்யக்கூடியவர் என்பதை உணர்ந்து அவரை இப்படி ஒரு மற்றம் கொண்டுவந்துள்ளனர் என்றால்...நிலைமையை யோசியுங்கள்..!
அதுபோல போஸ்டர் - போஸ்டர் ஓட்டுபவர் எல்லா இடங்களிலும் 95% எந்த கட்சியை சேர்ந்தவர்..யார் ஆதரவாளர் என்பது நமக்கு தெரியும்...நம்முடைய படம் வந்தால் மட்டும், நம் போஸ்டர் கிழிக்கபட்டிருக்கும்...அல்லது திரை அரங்கு பற்றிய அந்த துண்டு கிழிக்கபட்டிருக்கும்....அல்லது நடிகர் திலகம் முகம் மீது ஏதாவது சாவு போஸ்டர் ஒட்டிவைப்பார்கள் !
நம் போஸ்டர் பக்கத்தில் மற்ற எல்லா போஸ்டரும் நல்ல நிலையில் எந்த DAMAGE இல்லாமல் இருக்கும் ஆனால் நம் போஸ்டர் மட்டும் கிழிப்பார்கள்..
ஆக...இப்படி ஆண்மையற்ற முறை தான் இவர்கள் கையாள்வது நமது படம் வரும்போது இது காழ்புணர்ச்சி கொண்ட செயல்...! நீங்கள் வேண்டுமானால் பாருங்கள்...கட்டபொம்மனோ அல்லது கோவில் கௌரவமோ திருச்சியில் எங்கள் தங்கராஜாவோ திரையிடும்போது இதுதான் நடக்கும்...!
இவர்களால் ஜீரணிக்க முடியவில்லை...அதுதான் உண்மை...எந்த கட்சி பலமும் ..இல்லாமல் அரசியல் பலமும் இல்லாமல் இந்தாள் படம் மட்டும் வருகிறது....மக்கள் அதிக அளவில் வருகிறார்கள்...எந்த கட்சியும் போஸ்டர் ஒட்டுவதில்லை....டிஜிட்டல் வடிவில் வந்தால் குடும்பங்கள் ஒட்டுமொத்தமாக இவர் படத்திற்கு எவ்வளவு புது படம் வந்தாலும் ஓடி விடுகிறார்கள்.....நமக்கு இப்படி முடியவில்லையே என்ற வயிதெரிச்சல் தான் இவர்கள் செய்கைக்கு காரணம் !
வசூல் ...அதனை விட்டுத்தள்ளுங்கள்....நம்முடைய படங்கள் வசூல் செய்யவில்லை என்றால் விநியோகஸ்தர் சிறந்த லாபம் அடையவிலஎன்றால்...3 ஆண்டில் 25 படங்கள், 6 ஆண்டில் 50 படங்கள், 9 ஆண்டில் 75 படங்கள், 12 ஆண்டில் 100 படங்கள், 15 ஆண்டில் 125 படங்கள், 18 ஆண்டில் 150 படங்கள், 21 ஆண்டில் 175 படங்கள் , 24.2 ஆண்டில் 200 படங்கள் , இப்படி ......தமிழ்நாடு, ஆந்திர, கேரளா, கர்நாடகா என்று பல ஊர் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் விரும்பும் ஒரே நடிகராக நடிகர் திலகம் 1987 வரை உச்சத்தில் தொழிலில் இருந்திருக்க முடியுமா ?
நாம் யாரையும் போட்டியாக கருதியதில்லை....கருதவும் முடியாது..காரணம் நம்முடைய RANGE எவரும் தொட முடியாத கனவு கூட காணவேண்டும் என்று ஆசை பட முடியாத RANGE . உச்ச நட்சத்திரமாக கதாநாயகனாக வலம் வந்தபோதும்...திரும்பிப்பார், துளிவிஷம், அந்தநாள், பெண்ணின் பெருமை, ரங்கூன் ராதா இப்படி பல படங்களில் FULL TIME வில்லன் வேடம் செய்திருப்பார் ! இந்த ஒரு தைரியம் இந்த ஒரு தொழில் மீது இருக்கும் பற்று, தனது திறமை மீது உள்ள நம்பிக்கை எந்த நடிகருக்கும் அப்படி மாற்றி செய்ய அவ்வளவு எளிதில் தைரியம் வராது ! அந்த RISK அவர்கள் எடுக்கவே மாட்டார்கள் ! நடிகர் திலகம் எடுத்து அதில் அவர் மட்டுமே மாபெரும் வெற்றி கண்டார் என்றால் ...அவர் ரேஞ்சு வேறு ! அவர் ஒரு மாமூல் நடிகர் அல்ல சார் !
ஆனால் நம்மை போட்டியாக பலர் நினைத்தனர்....காரணம் ஒன்றே ஒன்றுதான் ...அப்போதுதான் அவர்களும் ஏதோ ஓரளவிற்கு திரை உலகில் வளரமுடியும்...என்பதால் தான் !
INDIAN FILM (Columbia University Press 1963 & Published in 1965) by Prof. Erik Barnouw ( U.S. Historian) - Hiroshima and Nagasaki - News Film Director
இந்தியன் பிலிம் என்ற புத்தகத்தில் இவர் நடிகர் திலகம் அவர்களை பற்றி மட்டும் இரண்டு பக்கங்கள் எழுதியுள்ளார்...நடிகர் திலகம் அவர்களுடைய ஆளுமை, தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் வரப்ரசாதமாக மட்டுமின்றி தமிழக திரை அரங்குகளின் விதிவிலக்காக எப்படி இவர் மட்டுமே உள்ளார் என்பதை பற்றிய விளக்க உரை அது...இந்த புத்தகம் கிடைத்தால் படித்துபாருங்கள்....!
ஒரு விஷயம் உங்களுக்கு அது உணர்த்தும்...அதாவது நம்முடைய பெருமைகளை எப்படி திருடுகின்றனர், திருடிக்கொண்டு எப்படி அவை அனைத்தும் அவர்களை குறிப்பது அன்று புளுகு மூட்டையை அவிழ்கின்றனர் என்பது தெள்ளம் தெளிவாகும் சார் !
தமிழ் திரை உலகின் மூன்றில் சரிபாதி வர்த்தகம் நம்முடையது, நம்மை வைத்துதான் !...அதில் எந்த மாற்றமும் இல்லை..இத்தனைக்கும் நமக்கு கட்சி கிடையாது...தொண்டர்படை கிடையாது...துரோகிபடை நிறைய உண்டு...இதனை தடைகள் இருந்தும்.....என்றும் நாம் தான் NUMERO UNO !
யார் என்ன வேண்டுமானால் கூறிகொள்ளட்டும் ! JUST IGNORE !
தங்கபதக்கத்தின் வசூல் சாதனை அதற்க்கு முந்தைய அனைத்து படங்கள் சாதனையை முறியடித்தது திரு பம்மலார் தெள்ளம் தெளிவாக மையத்தில் ஏதோ ஒரு பகுதியில் எழுதியுள்ளார்....திரு முரளி ஸ்ரீநிவாஸ் அவர்கள் முடிந்தால் அந்த பகுதியை தேடி இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன்...!
எல்லா காலத்திலும் வசூல் சாதனைகள் யாரோ ஒருவரால் படம் மூலம் முரியடிக்கபடுவது உண்மை....இது INEVITABLE !! பக்குவம் உள்ளவர்கள் அதை ஒத்துக்கொள்ளவேண்டும்...அல்லாதவர்.....????
இதற்க்கு நம்முடைய ENERGY வேஸ்ட் செய்யலாமா ?
on the lighter note - அப்படி பார்த்தால் பல இனைய தளம் மற்றும் whatsapp இல் சாராயம் மற்றும் TASMAC கொண்டுவந்தது திரு கருணாநிதி அவர் குடும்பம் தான் என்பதை போல கிண்டல்கள் கேலிகள்....!
ஆனால் அதுவா உண்மை ? TASMAC நிறுவனம் கொண்டுவந்தது 1981இல் ...1986 டிசம்பர் 31 நள்ளிரவு வரை சுமார் 6 ஆண்டுகள் தமிழகம் முழுவதும் TASMAC கடைகள் வேரூன்றி, இன்று அதிக வருமானம் ஈட்டும் ஒரு வர்த்தக ஸ்தாபனமாக TOP 3 இந்தியாவின் நிறுவனங்களில் ஒன்றாக இருகின்றது...!
மக்கள் திலகமோ, நடிகர் திலகமோ, சூப்பர் ஸ்டாரோ, சூப்பர் அக்டரோ, அமெரிக்காவின் அர்நோல்டோ, ஜான் திருவோல்டாவோ, ஜாக்கி சானோ வசூல் சக்ரவர்த்தி அல்ல......
365 நாட்களும் நேர்வழியிலும் கருப்பு சந்தையிலும் கோடிகணக்கான டிக்கெட்டுகள் தமிழகம் எங்கும் காலை 9 மணிக்கு திறந்தவுடன் மக்கள் முண்டியடித்து வாங்குகின்றார்கள்....!
என்ன ! எல்லா TASMAC உம் அந்நாளைய மதுரை தங்கம் திரை அரங்குபோல உள்ளது...வசூல் பிரமாதம் ...அரங்கு நிறையாது .எந்த டிக்கெட்உம் இல்லை என்ற நிலையே வராது ...
ந்ருத்ய வசூல் சக்ரவர்த்தி TASMAC தான் சார் !
RKS
Last edited by RavikiranSurya; 15th August 2015 at 10:22 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
Bookmarks