-
13th August 2015, 07:27 PM
#11
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
puratchi nadigar mgr
திரு.சைலேஷ் சார், திரு.லோகநாதன் சார், திரு.குமார் சார். தங்களது பின்னூட்டங்களுக்கு நன்றி.
திரு.யுகேஷ்பாபு, மகாதீரா படத்தை விட ‘அடிமைப் பெண்’ படம் வசூலில் சாதனை படைத்தது என்ற தகவலுக்கு நன்றி.
---------------
பாகுபலி திரைப்படம் முந்தைய எல்லா படங்களின் வசூல் சாதனைகளை பின்னுக்கு தள்ளிவிட்டது. இது காலமாற்றத்தின் கட்டாயம். பாகுபலி திரைப்படத்தின் வசூல் உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் வசூலை விட குறைவு, பாகுபலியை விட உலகம் சுற்றும் வாலிபன்தான் அதிக வசூல் செய்தது, என்று நாங்கள் சொல்லவேயில்லையே. அப்படி சொன்னால் எல்லாரும் சிரிக்க மாட்டார்களா? நாம் அப்படி சொல்லவேயில்லை. நேற்றைய பதிவை படித்தால் புரியும்.
பாகுபலியை விடுங்கள். 1978-ம் ஆண்டுக்கு பிறகும் வேறு எந்த படமும் உலகம் சுற்றும் வாலிபனை வசூலில் மிஞ்சவில்லை என்றும் நாம் சொன்னதில்லையே? இரண்டு விஷயங்கள்தான் நாம் சொல்கிறோம்.
ஏற்கனவே நாம் சொன்னது இதுதான்....
1. தலைவர் திரைப்படத்துறையில் இருக்கும் வரை அதாவது அவரது கடைசிப் படமான மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வெளியானது வரை வேறு எந்தப் படமும் உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் வசூலை முறியடித்ததில்லை. இதைத்தான் நாம் சொல்கிறோம். இதற்கான ஆதாரங்களை பலமுறை வெளியிட்டுள்ளோம்.
இப்போது (நேற்று ) நாம் சொல்லியிருப்பது....
2. தலைவரின் படங்கள் 45, 50 ஆண்டுகளைக் கடந்தாலும் இப்போதும் மறுவெளியீடுகளில் மற்ற மறு வெளியீட்டு படங்களைக் காட்டிலும் அதிக வசூல் கொடுக்கின்றன. ஆனால், இன்று வெளியாகி வசூல் சாதனை செய்யும் படங்கள் பாகுபலியாக இருந்தாலும் சரி, அல்லது வேறு எந்த படமாக இருந்தாலும் சரி. இன்னும் 45,50 ஆண்டுகள் கழித்து இப்போது, தலைவரின் படங்கள் நிகழ்த்தும் வசூல் சாதனைகளை செய்யாது.
ஆனால், தலைவரின் படங்கள் 45,50 ஆண்டுகள் கடந்தும் இப்போதும் மற்ற மறுவெளியீட்டு படங்களை விட வசூலில் சாதனை செய்கின்றன. அதற்கு உதாரணம்தான் மதுரையில் தலைவரின் வசூல் சாதனைகள்.
..... இந்த 2 விஷயங்களை, தலைவரின் சாதனையைத்தான் சொல்கிறோம். மற்றவர்கள் தங்களின் சாதனைகளை சொல்லும்போது நாமும் தலைவரின் சாதனைகளை சொல்லக் கூடாதா? அதிலும் பிறரைப் போல நாம் யாரையும் காயப்படுத்துவது இல்லை.
இதில் என்ன தவறு? அல்லது பொய் உள்ளது? என்று தெரியவில்லை. ஆதாரங்களோடுதான் நாம் சொல்கிறோம். இவை இரண்டும் தவறான தகவல்தான் என்றால், ஆதாரங்கள் கொடுத்தால் ஏற்றுக் கொள்ளவும் தயாராக இருக்கிறோம்.
நண்பர் திரு.ஆர்.கே.எஸ். அவர்கள் கூறியிருப்பது போல உலகம் சுற்றும் வாலிபனை 1978-ம் ஆண்டு வரை வெளியான ஏதாவது ஒரு படம் வசூலில் முறியடித்ததாக திரு.பம்மல் சுவாமிநாதன் அவர்கள் ஆதாரத்தோடு கூறியிருந்தால் ஏற்கிறோம்.
நண்பர் திரு.ஆர்.கே.எஸ். அவர்கள் கூறியிருப்பது போல , ‘‘பக்குவம் உள்ளவர்கள் ஒத்துக் கொள்ள வேண்டும்.... அல்லாதவர்....????’’
....என்று வார்த்தைகளை நாம் விடமாட்டோம். பக்குவம் உள்ளவர்களாகவே மற்றவர்களையும் குறிப்பாக திரு.ஆர்.கே.எஸ். அவர்களையும் மதிக்கிறோம். அவர் ஏற்பார் என்று நம்புகிறோம். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Last edited by KALAIVENTHAN; 13th August 2015 at 07:46 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
13th August 2015 07:27 PM
# ADS
Circuit advertisement
Bookmarks