-
11th August 2015, 06:43 PM
#251
Senior Member
Veteran Hubber
கவிதையின் விஸ்வரூபமா? காட்சிகளின் திருவிழாவா? ராஜமெளலியை பாராட்டி வைரமுத்து கடிதம்!
மாபெரும் சாதனைப் படைத்த பாகுபலி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ராஜமெளலிக்கு பாராட்டு மடல் ஒன்றை வைரமுத்து அனுப்பியுள்ளார். அந்த வாழ்த்து கடிதத்தில் கூறியதாவது,
அன்புள்ள இயக்குநர் ராஜமெளலிக்கு,
பாகுபலி' பார்த்தேன். அந்தத் திகைப்பிலிருந்து இன்னும் நான் விடுபடவில்லை. படத்தின் காட்சிப் படிமங்கள் என் நெற்றிக்குச் சில செண்டிமீட்டர் தூரத்தில் பட்டாம் பூச்சிகளாய்ப் படபடத்துக் கொண்டேயிருக்கின்றன.
இது செல்லுலாய்டில் எழுதப்பட்ட இன்னொரு இதிகாசமா? கவிதையின் விஸ்வரூபமா? காட்சிகளின் திருவிழாவா? என்றே வியக்கத் தோன்றுகிறது.
'பாகுபலி'யின் முதல் பார்வையாளர் நீங்கள் தான். உலகத்தின் கண்கள் பார்ப்பதற்கு முன்பு உங்கள் உள்ளத்தின் கண்களால் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டீர்கள்.ஆனால் அப்படிப் பார்க்கப்பட்டதில் ஒரு மில்லிகிராமும் குறையாமல் அதைக் கலைப்படுத்திய உங்கள் உழைப்பு - தொழில் நுட்பத்திறன் - கலை ஆளுமை - உங்கள் வலி - துடிப்பு - தவம் - எல்லாவற்றையும் என்னால் புரிந்துகொள்ள முடிவதால் வியந்து நிற்கிறேன்.
சினிமா என்பதே நம்பவைக்கப்படும் ஒரு தொழில்நுட்ப பொய்தான். அந்த நம்பகத்தனமையை ஒரு இயக்குநர் தான் உருவாக்குகிறார். அருவியும், பனியும் முகத்தில் வந்து முட்டுகின்றன. உடலும் உயிரும் நனைகின்றன.
பட்டாம்பூச்சிகளால் சூழப்பட்ட கனவுப்பெண் பட்டாம்பூச்சிகள் பறந்து போவது போல் கலைந்து போனாள் என்று முடித்திருப்பதில் ராஜமெளலிக்குள் இருக்கும் ஒரு கவிஞனைப் பார்த்தேன். வழிந்தோடும் தாமரைப்பூ சிற்பத்தின் கைகளுக்குள் சிக்கிக் கொள்ளும் காட்சிப்படிமத்தில் ஒரு ஓவியனின் உத்தியைப் பார்த்தேன்.
'பாகுபலி'யின் வருகை தந்த மகிழ்ச்சியை மக்கள், இசைக்கலைஞர்கள், நடனமணிகள் மூலம் காட்டியதோடு ஒரு யானையின் கண்ணிலும் பிரதிபலிக்கச் செய்ததில் ஒரு படைப்பாளியின் முழுமை பார்த்தேன். கட்டப்பா உறையைத் தொட பாகுபலி வாளை உருவ வெட்டப்பட்ட முண்டம் தொடர்ந்து ஓடும் காட்சியில் கம்பனின் கற்பனை கண்டேன்.
யுத்தகளக் காட்சிகளை இத்தனை போர்த்தந்திரங்களோடும், பிரம்மாண்டத்தோடும் இதற்குமுன் யாரும் படைத்ததில்லை. நவீன தொழில் நுட்பத்தின் அனைத்துக் கூறுகளையும் ஒரு சொட்டு ஒழுகவிடாமல் பயன்படுத்தியிருக்கிறீர்கள்.
இந்திய சினிமாவின் உலக விலாசமாய் உங்கள் பெயர் நாளை பொறிக்கப்படும். உங்களைப் பார்த்துப் பெருமைப்படுகிறேன். உலகத்தோடு போட்டிபோட இதோ எங்களில் ஒருவன் வந்துவிட்டான் என்று என் உதடுகள் முணுமுணுக்கின்றன.
வாழ்த்துக்கள் ராஜமெளலி" என்று குறிப்பிட்டிருந்தார் வைரமுத்து.
தொடர்ந்து, “வைரமுத்துவிடமிருந்து கிடைக்கும் வாழ்த்தை ஆசீர்வாதமாகவே நினைக்கிறேன். மிகச்சிறந்த ஆசானிடமிருந்து இந்த மாணவனுக்கு கிடைத்த ஆசீர்வாதம் இது” என்று வைரமுத்துவின் பாராட்டு என்னை உலுக்கிவிட்டது என்று ட்விட்டரில் ராஜமெளலி தெரிவித்துள்ளார்.
-
11th August 2015 06:43 PM
# ADS
Circuit advertisement
-
11th August 2015, 06:44 PM
#252
Senior Member
Veteran Hubber
பாகுபலியில் நடிக்க கமல் படமே உதவியது- ராணாடகுபதி
பாகுபலி படத்தில் பல்லவதேவாவாக நடித்திருக்கிறார் ராணாடகுபதி. பல்லவதேவாவின் வயது சுமார் ஐம்பது. ராணாவுக்கு முப்பதுவயதுதான் ஆகிறது. அவர் ஐம்பது வயது வேடத்தில் நடித்தது எப்படி? என்று அவரிடம் கேட்கப்பட்டது.
முதன்முறையாக இப்படி ஒரு வயதான வேடத்தில் நடிக்கிறேன். இந்தக்கதையைக் கேட்டதிலிருந்து நான் கமல் நடித்த நாயகன் படத்தைப் பார்த்தேன். அதில் அவருடைய நடிப்பைப் பார்த்துப் பல விசயங்கள் கற்றுக்கொண்டேன்.
எனக்கும் என்னுடைய வயதுக்கு மீறிய வேடத்தில் நடிப்பது மிகவும் எதிர்பார்ப்புக்குரியதாக இருந்தது, நான் மிகவும் ரசித்து அந்த வேடத்தில் நடித்தேன் என்று சொல்லியிருக்கிறார்.
இந்தியாவிலேயே அதிகவசூல் செய்த படம் என்கிற பெருமையைப் பெற்றிருந்தாலும் அந்தப்படம் பழைய தமிழ்ப்படமான அடிமைப்பெண் சாயலில் இருக்கிறதென்று சொல்லப்பட்டது உட்பட பல விசயங்கள் தமிழில் இருந்து அல்லது தமிழ்நாட்டிலிருந்து எடுக்கப்பட்டதாகத்தான் இருக்கிறது. இப்போது ராணாவும் தமிழ்ப்படம் பார்த்துத்தான் அந்த வேடத்தில் நடிக்கத் தயாரானதாகச் சொல்லியிருக்கிறார்.
-
11th August 2015, 11:26 PM
#253
Senior Member
Diamond Hubber
Watched it again today in AGS Navalur with more than half filled hall
...
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
13th August 2015, 03:28 PM
#254
Senior Member
Veteran Hubber
கட்டப்பா தந்த 100 நாள் கால்ஷீட்
ராஜமௌலி வசியம் ஏதாவது வைத்திருக்க வேண்டும். ஐம்பது நாள் கால்ஷீட் கேட்டாலே முடியாது என்பவர்கள், இரண்டு மூன்று வருடங்கள் இவருக்கு கால்ஷீட் தருகிறார்கள்.
பாகுபலியில் சத்யராஜின் கட்டப்பா கதாபாத்திரம் கொஞ்ச நேரம்தான் வருகிறது. அதேநேரம் இரண்டாம் பாகத்துக்கான பெப்பை இந்த கதாபாத்திரம்தான் உருவாக்குகிறது. அந்தவகையில் மற்ற எல்லா கதாபாத்திரங்களையும்விட இதுதான் பவர்ஃபுல் கதாபாத்திரம்.
பாகுபலியின் இரண்டாவது பாகத்துக்கு ராஜமௌலி 100 நாள்கள் கால்ஷீட் கேட்டிருக்கிறார். சத்யராஜ் மறுப்பே கூறாமல் சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த 100 நாள்களில் வேறு எந்தப் படத்துக்கும் அவர் கால்ஷீட் ஒதுக்கவில்லை என்பது முக்கியமானது.
-
14th August 2015, 01:23 PM
#255
Junior Member
Senior Hubber
Went for 4th time... House full..
-
14th August 2015, 03:57 PM
#256
Senior Member
Diamond Hubber
The Success of this film, is a big "Nethi adi" to Big Kollywood stars and a real "wake up" call ...
Last edited by PARAMASHIVAN; 14th August 2015 at 03:59 PM.
Om Namaste astu Bhagavan Vishveshvaraya Mahadevaya Triambakaya Tripurantakaya Trikalagni kalaya kalagnirudraya Neelakanthaya Mrutyunjayaya Sarveshvaraya Sadashivaya Shriman Mahadevaya Namah Om Namah Shivaye Om Om Namah Shivaye Om Om Namah Shivaye
-
14th August 2015, 03:59 PM
#257
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Muthalvan
Went for 4th time... House full..

When and where ? Ilford Cineworld ? I thought they have taken the movie from showing bout 10 da go ?
Om Namaste astu Bhagavan Vishveshvaraya Mahadevaya Triambakaya Tripurantakaya Trikalagni kalaya kalagnirudraya Neelakanthaya Mrutyunjayaya Sarveshvaraya Sadashivaya Shriman Mahadevaya Namah Om Namah Shivaye Om Om Namah Shivaye Om Om Namah Shivaye
-
14th August 2015, 04:00 PM
#258
Junior Member
Senior Hubber

Originally Posted by
PARAMASHIVAN
When and where ? Ilford Cineworld ? I thought they have taken the movie from showing bout 10 da go ?
In Colombo Annachi..!!
-
14th August 2015, 04:06 PM
#259
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Muthalvan
In Colombo Annachi..!!
Oh you are in SL now ?
Om Namaste astu Bhagavan Vishveshvaraya Mahadevaya Triambakaya Tripurantakaya Trikalagni kalaya kalagnirudraya Neelakanthaya Mrutyunjayaya Sarveshvaraya Sadashivaya Shriman Mahadevaya Namah Om Namah Shivaye Om Om Namah Shivaye Om Om Namah Shivaye
-
14th August 2015, 04:10 PM
#260
Junior Member
Senior Hubber
Today Yes..!! Ponnana Vaakku pathivukku vanthen...!!
Bookmarks