-
14th August 2015, 11:25 AM
#471
Junior Member
Seasoned Hubber
Congrats Mr Senthil Sir for achieving yet another milestone. Do continue the good work
in propagating the glory of the one & only NT.
Regards
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
14th August 2015 11:25 AM
# ADS
Circuit advertisement
-
14th August 2015, 01:15 PM
#472
Senior Member
Devoted Hubber
Dear sivajisenthil sir,
congratulations for completing 2000 precious posts in our glorious thread of nadigarthilagam
TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
14th August 2015, 01:16 PM
#473
Senior Member
Devoted Hubber
Dear yukeshbabu sir,
my heartiest birthday wishes to you
TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th August 2015, 01:17 PM
#474
Junior Member
Junior Hubber
அன்பான இனிய நண்பர் , ரவிகிரன் சார் !
சிவாஜி சாதனை தொடர்பான என் பதிவுகளுக்கு தங்களின் நீண்ட விளக்கத்துக்கு என் நன்றிகள் !
எனக்கு வயது 56 .எனக்கு எல்லா நடிகர்களின் ரசிகர்களுடனும் இன்று வரை நல்ல நட்பு உண்டு ! மேலும் நான் சிவாஜிரசிகர் என்றாலும் இன்று வரையிலும்
எல்லா தமிழ்படங்களையும் பார்த்து வரும் பொதுவான சினிமா ரசிகரும் ஆவேன்!
என் சிவாஜி சாதனை பதிவுகளில் நான் வளியுறுத்தும் உண்மை என்னவென்றால் , வேறு எவரையும் விட அதிகசாதனைகளை அதிலும் குறிப்பாக இன்று
வரையிலும் முறியடிக்க முடியாத சாதனைகளை அதிகம் செய்தது தமிழில் சிவாஜி மட்டுமே என்பது தான் ! அதை இப்போது ஏன் பதிவு செய்கிறேன்
என்பதற்கான காரணம் பற்றி , ஏற்கனவே நான் கூறிவிட்டேன்!
சிவாஜி hero வாக நடித்த 94 தமிழ் படங்கள் 100 நாட்கள் ஓடியது வரலாற்று உண்மை ! சிவாஜி hero வாக 260 படங்கள் தமிழில் நடித்ததும் சினிமா
வரலாற்று உண்மை ! 85 ஆண்டுகள் ஆன தமிழ் சினிமா வரலாற்றில் இன்றைய தினம் வரை இந்த மாபெரும் சாதனையில் பாதியளவு கூட எந்த ஒரு
நடிகரும் நெருங்கவில்லை என்பதும் உண்மை !
இந்த உண்மையை ஏற்று கொள்வதற்கு என்ன தயக்கம்? மாற்று நண்பர்கள் ஏற்றுகொள்ள வேண்டும் என்பது என் நோக்கம் இல்லை! அவர்களுக்கு சிவாஜியின் cinema power நம்மை விட நன்றாக தெரியும்! என் பதிவுகளை படிக்கும் பொதுவான ரசிகர்களை இந்த செய்திகள் சென்றடைந்தால் அதுவே
போதும் ! மேலும் என் பதிவுகளில் படங்களின் மறுவெளியீடு, தரம், காலத்தால் அழியாத தன்மை, போன்ற விஷயங்களை நான் பேசவே இல்லை!
அது பற்றி நான் கூறும் சமயத்தில் நண்பர்கள் விவாதம் செய்யலாம் ! இப்போதைய என் பதிவின் நோக்கம் முதல் வெளியீட்டில் அதிகம் சாதித்தவர்
நடிகர் திலகமே என்பது தான் ! மாற்று நண்பர்கள் அடிக்கடி சொல்லும் மற்ற வார்த்தை உலகம்சுற்றும்வாலிபன் வசூல் சாதனை mgr அவர்கள் நடித்த வரை
முறியடிக்க வில்லை என்பது ! அது உண்மை என்றாலும் மக்கள் திலகம் திலகம் கடைசியாக நடித்த படம் மதுரையை மீட்டசுந்தரபாண்டியன் வெளியானது
ஜனவரி 1978 அடுத்த ஆண்டே அதேஜனவரியில் 1979 வெளியான திரிசூலம் abc அனைத்து சென்டர்களிலும் வாலிபன் வசூலை துடைத்து எறிந்து விட்டது!
ஒரு பேச்சுக்கு ஒப்பு கொண்டாலும் உங்கள் சாதனை நீங்கள் நடித்த வரை முறியடிக்கபடா விட்டாலும் அடுத்த ஆண்டே முறியடிக்கபட்டு முடிந்த
கதையாகி விட்டது ! ஆனால் மக்கள்திலகம் மொத்த பட எண்ணிக்கை, 100 நாட்கள், வெள்ளிவிழா, போன்ற முக்கிய சாதனைகளில் கடைசி வரையிலும்
நடிகர் திலகத்தை வெல்ல முடியவில்லை! இதுவே நான் சொல்லும் உண்மை !
ரவிகிரன் சார், தங்கபதக்கம் நான் அறிந்தவரை சென்னை, திருச்சி இரண்டிலும் வாலிபன் வசூலை முறியடித்தது!
தமிழக மொத்த வசூல் திரிசூலத்தால் முறியடிக்கபட்டது !
நன்றிகள்
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
14th August 2015, 02:22 PM
#475
சிவாஜி செந்தில் சார்,
எண்ணிக்கைக்காக ஒருவரை பாராட்டுவது எனக்கு ஏற்புடைய செயலன்று. அதே நேரத்தில் உங்கள் கடுமையான உழைப்பிற்கு புதுமையான கான்செப்ட்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்! தொடரட்டும் உங்கள் சேவை!
அன்புடன்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
14th August 2015, 02:25 PM
#476
சுந்தர்,
இன்று ஆகஸ்ட் 14. 36 வருடங்களுக்கு முன்பு இதே நாளில்தான் [ஆகஸ்ட் 14, 1979] திரிசூலம் நமது மதுரை சிந்தாமணியில் 200-வது நாளை கொண்டாட்டமாக நிறைவு செய்தது. அன்றைய தினம் மாலைக்காட்சிக்கு நாங்கள் போயிருந்தோம். மிகப் பெரிய அலப்பரையோடு படம் பார்த்தோம். அந்த நாளில் நீங்கள் திரிசூலம் விழா மலரை e document -ஆக பதிவேற்றுவது சாலப் பொருத்தமே.
ஆனால் ஒரு திருத்தம். திரிசூலம் மூலம் தமிழக அரசுக்கு கிடைத்த கேளிக்கை வரி சத்துணவு திட்டத்திற்கு பயன்பட்டது என்று சொல்லியிருக்கிறீர்கள். அப்படி இல்லை. காரணம் பள்ளிக்கூடங்களில் செயல்பட்டு வந்த மதிய உணவு திட்டம் சத்துணவு திட்டமாக மாறியது 1982 ஜூலை 1 முதல்தான். ஆகவே 1979-ல் திரிசூலம் மூலமாக கிடைத்த கேளிக்கை வரி அதற்கு பயன்பட்டது என்று சொல்லுவது சரியாக இருக்காது. வேண்டுமென்றால் அப்போதைய காலகட்டத்தில் நிகழ்ந்த இயற்கை இடர்பாடுகள் புயல், வெள்ளம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மக்களுக்கு நிவாரணம் அளிக்க உதவியாக இருந்திருக்கும். அது கூட எப்படி பார்க்க வேண்டும் என்றால் இந்த கேளிக்கை வரி எனபது அந்தந்த பஞ்சாயத்து, ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி போன்றவைகளுக்கு செல்லும். எனவே மொத்த தமிழகமும் பலன் பெற்றது என்று சொல்லலாம்.
மற்றொரு விஷயத்தையும் குறிப்பிட விரும்புகிறேன். இந்த படம் ஒரு கோடி ரூபாய் கேளிக்கை வரியாக அரசாங்கத்திற்கு வசூலித்துக் கொடுத்தது என்று கூறுவதில் தவறோ அல்லது ஒருவரை உயர்த்தி மற்றொருவரை தாழ்த்துதலோ இல்லை. இதற்கு முன்னரே 1973-ம் வருடத்தில் உலகம் சுற்றும் வாலிபனின் வெள்ளி விழா விளம்பரம் பத்திரிக்கைகளில் வந்தபோது கடந்த 6 மாதங்களில் 60 லட்ச ருபாய் தமிழக அரசிற்கு வரி வசூலித்துக் கொடுத்திருக்கிறது இந்த படம் என்ற வரிகளைத்தான் கொடுத்திருந்தார்கள். காரணம் அப்போது அப்போது திமுக ஆட்சி. முக முதல்வர்.
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
14th August 2015, 02:32 PM
#477

Originally Posted by
SUNDARAJAN
ஆகஸ்டு 15 நமது சிவாஜிகணேசன்.இன்ல் வசூல் சாதனை புரிந்த திரிசூலம் படத்திற்கு வந்த கேளிக்கை வரி மூலம் அரசுக்கு கிடைத்த தொகை சத்துணவு திட்டத்திற்கு பெரிதும் பயன்பட்டது என்று அன்றைய முதல்வர் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர் அவர்களால் பாராட்டப்பட்ட திரிசூலம் படத்தின் வசூல் சாதனை மலரின் தொகுப்பு ஈ.புத்தகம் வடிவில். அனைவரும் பார்க்கத் தவறாதீர்கள்.
அன்புள்ள திரு சுந்தர்ராஜன் சார்,
ஈ.புத்தக லிங்க் எனக்கு கிடைக்கவில்லையே... தயவுசெய்து தாருங்கள்...
நன்றி
சுந்தர பாண்டியன்
-
14th August 2015, 05:04 PM
#478
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 2 Thanks, 5 Likes
-
14th August 2015, 05:33 PM
#479
Senior Member
Seasoned Hubber
இரண்டு கையையும் சேர்த்தாற்போல் பாடிக்கொண்டே திரும்பி செல்லும் போது அவர் சென்றதும் சூரியன் ஒளிர்வதை காணலாம்.இதை அவரே ஒருநடிப்புச் சூரியன். அந்தச் சூரியனை விட சூரியனனான நான் என்ன அற்புதத்தைகாட்டிவிடமுடியும்? அவர் இருக்கும்போது நான் ஒன்றும் செய்துவிட முடியாது.எனவே அவர் அகன்றதும் நான் என்னை வெளிப்படுத்துகிறேன் என்பதைக் காட்டுவது போல் அந்தக்காட்சி அமைந்திருக்கும்.
சூப்பர் செந்தில்வேல். என்ன அருமையான விவரிப்பு. உண்மையாகவும் தோன்றுகிறதே. தங்களின் பதிவுகள் ஒவ்வொன்றும் சிறப்பாக உள்ளன. தொடர்ந்து பல அபூர்வமான பாடல்களையும் காட்சிகளையும் இது போல் வெளிக்கொணர்கிறீர்கள். தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.
இதோ செந்தில்வேல் பதிவினைப் படித்து விட்டு இப்போது இப்பாடலைப் பாருங்கள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
14th August 2015, 05:43 PM
#480
Junior Member
Junior Hubber
வணக்கம். மக்கள்திலகத்தின் அன்பு ரசிக நண்பர்கள் இன்று 14/08/2015 அவர்கள் திரியில் 1975 இல் வெளியான படங்களில் இதயக்கனி மட்டுமே
சென்னை தவிர பிற நகரங்களில் 100 நாட்கள் ஓடியது என்று திரு முக்தாசீனிவாசன் இதயக்கனி வெற்றி விழாவில் பேசியதாக செய்தி பதிவிட்டு
உள்ளார்கள். இந்த செய்தி ஏற்கனவே பதிவிடப்பட்டு அதற்கு ரவிகிரன் சார் 1975 இல் வெளிவந்து 100 நாட்கள் ஓடிய சிவாஜி நடித்த அவன்தான்மனிதன்
100 நாட்கள் ஓடிய விளம்பர பதிவை போட்டு உண்மையை உலகுக்கு சொல்லி விட்டார் !
அவன்தான் மனிதன் 100 நாட்கள் ஓடிய திரைகள்
சென்னை - சாந்தி கிரௌன் புவனேஸ்வரி
திருச்சி - ராஜா
மதுரை - சென்ட்ரல்
சேலம் - ஜெயா
எனக்கு தெரிந்து திருச்சி, மதுரை,சேலம் மூன்றும் சென்னைக்கு வெளியில் தான் உள்ளது என நினைக்கிறேன் !
மக்கள் திலகத்தை வானளாவ புகழ்ந்து பேசிய முக்தா அவர்கள் ஏன் அவரை வைத்து ஒரு படம் கூட தயாரிக்காமல் சிவாஜியை வைத்து பல படங்கள்
தொடர்ந்து தயாரித்தார் என்றும் சொல்லியிருக்கலாம் !
நன்றி !
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
Bookmarks