-
16th August 2015, 10:31 PM
#561
Senior Member
Devoted Hubber

Originally Posted by
SUNDARAJAN
அனிமல்சுக்கும் அன்பைக் கற்றுக்கொடுத்த அதிசிய நடிகர் மக்கள்தலைவர் சிவாஜி.
www.sivajiganesan.in
சுந்தரராஜன் சார்
தாங்கள் பதிவிட்ட மலரில் இருந்து பிரதி எடுக்கமுடியவில்லை
சில பிரதிகள் தேவை எப்படி முடியும்?
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
16th August 2015 10:31 PM
# ADS
Circuit advertisement
-
16th August 2015, 10:34 PM
#562
Junior Member
Veteran Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
16th August 2015, 10:56 PM
#563
Junior Member
Senior Hubber
இன்று மாலை சரியாக 6.30 மணி அளவில் மாரிஸ் குருப் சிவாஜி பக்தர்கள் முன்னிலையில் திருச்சி கலைஅரங்கம் (தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய ஏ சி அரங்கம் ) கட்டபொம்மன் படம் திரையிடுவது என முடிவாகி விட்டது. தியேட்டர் நிர்வாகத்தினர் மிகவும் பிரியப்பட்டு படத்தை போடுகின்றனர். தியேட்டர் நிர்வாகியும் முன்னாள் அமைச்சர் திரு.மரியம் பிச்சை அவர்களின் துணைவியருமான திருமதி கஸ்துரி அவர்கள் படத்தை பற்றி மிக உயர்வாக கூறியதோடு இந்த தலைமுறை அவசியம் குடும்பத்துடன் பார்க்க வேண்டுமெனவும் கூறினார். தியேட்டர் உள்ளேயும் வெளியேயும் என்ன அலங்காரம் வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்று கூறினார்.

-
Post Thanks / Like - 1 Thanks, 5 Likes
-
16th August 2015, 11:02 PM
#564
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
joe
திரு ஜோ அவர்களுக்கு வணக்கம் - சிவாஜியும் ஒரு சினிமாப் பைத்தியமும் என்ற ஈர்ப்பான தலைப்பில் திரு வேணுகோபாலன் ரெங்கன் அவர்களின் இப்படைப்பு மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுக்கிறது . சில உண்மைகள் , திரிக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளன - உதாரணத்திற்கு " சாந்தி " படம் படு தோல்வி என்று ஒருவர் எழுதி இருக்கிறார் . இந்த படம் பல பிரச்சனைகளைத் தாண்டி ஒரு புதிய சிந்தனையை எழுப்பிய படம் - வசூலிலும் , ஒடிய நாட்களும் ( 100க்கு மேல் ) இவை இரண்டிலும் இந்த படம் ஒரு சரித்திரம் படைத்தது - நம் திரியிலும் இதற்க்கான ஆவணங்கள் தரப்பட்டுள்ளன . நன்றாக ஓடி சரித்திரம் படைத்தப்படங்களைக்கூட நாம் தோல்வி என்று சொல்லி ஒரு உண்மையை பொய்யாக்கிக்கொண்டிருக்கிறோம் . ஆனால் சிலரோ ஓடாத படங்களை சரித்திரமாக்கி கொண்டிருக்கின்றார்கள் - நாம் அந்த வகையை சார்ந்தவர்கள் இல்லை என்றாலும் ஒரு உண்மையை , உண்மையாக எழுதுவோமே ! கர்ணனையும் தோல்வி படம் என்றே ஒரு கால கட்டத்தில் சிலர் விமர்சித்தனர் - ஆனால் காலம் அவர்களுக்கு கருணை காட்டவில்லை . "கப்போலோட்டிய தமிழன் " தோல்வி என்றனர் சிலர் - சரித்திரம் படைத்தது பின் வந்த வெளியீட்டுகளில் - இனி இப்படி யாருமே நடிக்க முடியாது என்ற பெயரை வாங்கித்தந்தது இந்த படம் .
உங்களை பற்றிய பதிவு இது இல்லை - உண்மை தெரியாமல் , புரிந்துகொள்ளாமல் , விவரங்களை சரியாக அலசாமல் அப்படி எழுதினவர் மீது எனக்கு வந்த கோபத்தினால் என் கருத்துக்களை உங்களிடம் உரிமையுடன் பகிர்ந்து கொள்கிறேன் .
அன்புடன்
ரவி
Last edited by g94127302; 17th August 2015 at 07:59 AM.
-
16th August 2015, 11:32 PM
#565
Senior Member
Seasoned Hubber
அன்பு நண்பர் நெய்வேலி வாசு சாரின் இரு அற்புதமான பதிவுகளும் திரு ரவி அவர்களின் செஞ்சோற்றுக் கடன் தொடரின் முதல் பகுதியும் மிகவும் அருமையாக உள்ளன. இதைப் பற்றிய கருத்துரைகளை விவாதிக்க இடைவெளியின்றி வேறு பல பதிவுகள் இடம் பெற்றுள்ளன. கடமையைச் செய்வோர் செய்யட்டும். அதற்காக மற்றவர்களை இடித்துரைக்கும் போக்கு கண்டனத்திற்குரியது. இதில் கடமையைத் தட்டிக் கழிக்கும் கேள்வி எங்கிருந்து வந்தது. அவரவர்க்கு இருக்கும் அணுகுமுறையில் தலைவரைப் பற்றிய கருத்துரைகளை இடுகிறார்கள். மாற்று முகாமுடன் எல்லோரும் விவாதிக்க வேண்டிய அவசியமில்லையே. விவாதிக்க விருப்பமுள்ளோர் விவாதிக்கட்டும். அதற்காக மற்றவர்களை இடித்துரைப்பதும் இழித்துரைப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாது. நடிகர் திலகம் புகழ் பரப்பும் பணியில் என்னுடைய கடமையாக எனக்கென்று சில வழிமுறைகளை வகுத்துக்கொண்டு அதன் பணியாற்றிக்கொண்டிருக்கிறேன். இதே போல மற்றவர்களும் அவரவர்க்கென்று சில வழிமுறைகளை வைத்துக்கொண்டு ஆற்றி வருகிறார்கள். சாதனைகளைப் பற்றிய விவாதங்களை கருத்துப் பரிமாற்றங்களை வழிமுறைகளை மேற்கொள்ள தங்களைப் போன்ற மற்ற நண்பர்கள் இருக்கிறார்கள். கடமையைச் செய்பவர்களிடம் ஆவணங்கள் இருக்கக் கூடும். அவ்வாறு இல்லாதவர்கள் அவரவர்க்கென உள்ள வழிமுறையில் நடிகர் திலகத்தின் புகழ் பாடுகிறார்கள். எனவே கடமை எனக் கூறி மற்றவர்களையும் வம்புக்கிழுப்பது முறையன்று.
Last edited by RAGHAVENDRA; 16th August 2015 at 11:40 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
16th August 2015, 11:40 PM
#566
Senior Member
Seasoned Hubber
வாசு சார்
விடுதலை நாள் என்றாலே வழக்கமான பாடல்களாக கப்பலோட்டிய தமிழன், பாரதவிலாஸ் எனப் பாடல்களை எல்லோரும் மேற்கோள் காட்டி எழுதும் போது, அதிகம் அறியப்படாத சந்தனத்தேவன் என்ற விடுதலைப் போர் வீரனின் கதையை மையமாக வைத்து எடுக்கப் பட்ட நாம் பிறந்த மண் பாடலை எடுத்து எழுதியதற்கு என் உளமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெருந்தலைவரைப் போற்றி எழுதப்பட்டு நடிகர் திலகம் நடித்த இப்பாடலை, நடிகர் திலகத்தின் ரசிகர்களாகிய நாம் என்றும் மறப்பதில்லை. பெருந்தலைவர் பெயரைச் சொல்பவர்கள் தான் மறந்து விடுகிறார்கள். ஒரு வேளை இப்படம் 1975க்கு முன் வந்திருந்தால் அவர்களெல்லாம் இதை நினைவு படுத்திக்கொள்வார்களோ என்னவோ.
தறுதலை கூட்டமும் தர்பார் நடத்த உதவியவன்
தறுதலை கூட்டமும் தர்பார் நடத்த உதவியவன்
என்றும் தனக்கென ஏதும் தேவையில்லையென உதறியவன்
ஏதும் தேவையில்லையென உதறியவன்
இந்த வரிகள் இன்றைய காலகட்டத்தில் திரையரங்கில் விண்ணதிரும் கரகோஷத்தைப் பெறும் என்பதில் ஐயமில்லை.
அதுவும் பெருந்தலைவர் காமராஜர் திருவுருவப்படத்தின் முன் நின்று நடிகர் திலகம் நெஞ்சு நெகிழும் வண்ணம் பாடி நடிக்கும் போது கால வித்தியாசம் பார்ப்பவர்கள் மனம் உருகாமலா போய் விடும்...
தங்களின் நினைவூட்டலுக்கு மிக்க நன்றி வாசு சார்.
தொடர்ந்து தங்களின் பங்களிப்பில் நடிகர் திலகத்தின் அபூர்வமான பாடல்கள், காட்சிகள் தங்கள் எழுத்தோவியத்தில் மிளிர வேண்டுகிறேன்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
16th August 2015, 11:48 PM
#567
Senior Member
Seasoned Hubber
ரவி
செய்நன்றிக் கடன் மிகவும் அருமையான தலைப்பு. நடிகர் திலகம் தன்னுடைய நன்றிக்கடனை செலுத்தாமல் இருந்ததில்லை. அதே போல் அவருக்கு மற்றவர்கள் நன்றிக்கடன் செலுத்தியதை அனுபவித்தவருமில்லை. ஆனால் அவருடைய கதாபாத்திரங்கள் மூலம் நன்றியினை மிகவும் அருமையாக சொல்லியிருக்கிறார்.
ஒரு மனிதன் அடிப்படையில் தன் பெற்றோருக்கும் அதற்கடுத்தபடியாக தன் மனைவிக்கும் தன் வாழ்நாள் முழுதும் நன்றிக்கடன் பட்டவனாகிறான்.
அயலாரிடம் அவன் தன் நன்றிக்கடனைத் திருப்பி செலுத்தி அதை நேர் செய்ய வாய்ப்புண்டு.
ஆனால் தன் பெற்றோருக்கும் அதன் பின் தன் மனைவிக்கும் அவன் எவ்வாறு செலுத்துவான்.
மெல்லிசை மன்னரின் இசையில் பியானோ இசைக்கருவியின் இனிமையான ஒலி துணை வர, பாடகர் திலகத்தின் இனிமையான குரலில் உணர்வு மேலிட, வாலியின் வைர வரிகளுக்கு நடிகர் திலகம் தன் நடிப்பால் அளித்திருக்கும் இந்த முக பாவம், ஈரேழு உலகங்களிலும் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு இவரைப் போல் ஒருவன் வரமுடியாது எனக் கட்டியம் கூறுவதை இந்தப் பாடலை ஓர் உதாரணமாகக் கொண்டு நாம் அறியலாம். அதுவும் இந்த வரிகள்
எந்தக் கடலினும் மிகப் பெரிது
நல்ல மனைவியின் சேவை
அதை அடைத்திட எண்ணும் போது
பல பிறவிகள் தேவை...
என்ன அருமையான வரிகள்...
Last edited by RAGHAVENDRA; 16th August 2015 at 11:53 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
17th August 2015, 12:03 AM
#568
Junior Member
Veteran Hubber
Dear sir
I had replied in general about those who comfortably slip when any debate that happens. I implied you too in that list. I Dont ask anybody to fight with anyone. Seniors like you who know the truth can clarify any wrong news that gets spread. Similarly, Mr. Pammalar. He claims rather claimed so many things during many discussions but now, he keeps mum. He may be bothered about his business, that's a different story. But those who know the true and correct information keep quiet quoting philosophical proverb just like what you did, then what sanctity or loyalty that we are talking off, when we are not even bothered about lies being spread by few people?..
Regards,
rKS
-
17th August 2015, 12:11 AM
#569
Senior Member
Seasoned Hubber
I insist and strongly believe what I said. It is not a philosophy but a fact. I repeat.
மனசாட்சி உள்ளவருக்கு விளக்கத் தேவையில்லை.
மனசாட்சி அற்றவருக்கு விளக்கிப் பயனில்லை.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
17th August 2015, 04:12 AM
#570
Junior Member
Platinum Hubber
TODAY 11.00AM WATCH SUNLIFE TV
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
Bookmarks