-
18th August 2015, 03:49 PM
#11
Junior Member
Junior Hubber
பொதுவான ரசிகர்களுக்கு சில உண்மை விளக்கங்கள் !
1978 வரை 10 வெள்ளிவிழா படங்கள் சிவாஜி அளித்தார்! mgr அவர்கள் 6 படங்கள் மட்டுமே அளிக்க முடிந்தது என்ற எனது பதிவின் நோக்கத்தை
திசை திருப்பும் நோக்கத்தில் சிவாஜி 1978 வரை 9 வெள்ளிவிழா படங்களை மட்டும் அளித்தார் , 1979 இல் வெளியான திரிசூலத்தையும் சேர்த்து தான்
10 படங்கள் என்று தவறாக ஒரு மாற்று முகாம் நண்பர் , தெரிவித்துளார். மேலும் சிவாஜியின் 200 படங்களுக்கு 10 வெள்ளிவிழா mgr அவர்களின் 115 படங்களுக்கு 6 படங்கள் என்றும் தவறாக கூறியுள்ளார். சிவாஜியின் வெள்ளிவிழா படங்கள் பராசக்தி கட்டபொம்மன், பாகபிரிவினை,பாவமன்னிப்பு,பாசமலர்,
திருவிளையாடல் ,பட்டிக்காடா பட்டணமா ,வசந்தமாளிகை தங்கபதக்கம்,தியாகம் ஆகியவை 1978 வரையிலும் வெளிவந்தவை. திரிசூலம் 1979 இல் வந்தது
உங்களுக்கே தெரிந்து இருக்கும் போது எனக்கு தெரியாதா ?
மேலும் சிவாஜி தனது 115 படங்களுக்குல் மட்டுமே mgr அவர்களின் சாதனைகளை முறியடித்து விட்ட விவரங்களை ரவிகிரன் சார் ஏற்கனவே கூறிவிட்டதால்
அது பற்றி மீண்டும் கூறி நம் நேரத்தை வீணடிக்க வேண்டாமென கருதுகிறேன் .
mgr அவர்கள் 1947 முதல் 1978 வரை 31 வருடங்களில் 134 மொத்த படங்களில் நடித்தார். அதில் 115 படங்களில் ஹீரோவாக நடித்தார்.
சிவாஜி 1952 முதல் 1978 வரை 26 வருடங்களில் 199 மொத்த படங்களில் நடித்தார் அதில் தமிழில் 191 படங்களில் ஹீரோவாக நடித்தார்.
சிவாஜி 16 வருடங்களிலேயே 115 தமிழ் படங்களில் ஹீரோவாக நடித்து முடித்து விட்டார்!
நடித்த வருடங்களின் அடிப்படையில் பார்த்தாலும் படங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தாலும் உண்மையான சாதனையாளர் சிவாஜி தான்
என்பது எளிதில் விளங்கும்!
நன்றிகள்
-
18th August 2015 03:49 PM
# ADS
Circuit advertisement
Bookmarks