-
21st August 2015, 06:24 AM
#2791
Senior Member
Seasoned Hubber
vaNakkam and nanri Raj for "karuNa cheyvaan enthu thaamasam krishNaa..."; a composition by
Irayimman Thampi, sung by Chithra for a devotional album. The original was composed in Shree raagam,
but Chembai Vaidyanadha Bhagavathar later made it very popular in his several renditions in
Yadukula Kamboji raagam. I am going to make a "daring" statement here, knowing fully well that you
are going to correct me if I am wrong!
The version that you posted (sung by Chithra) is in
Yadukula Kamboji.
If you don't mind, I would like to add two more versions of the song from Malayalam movies; both
sung in Shree raagam (again, please correct me if I'm wrong)
The first one is from the movie GAANAM...
...and the second one from AANANDHA BHAIRAVIi:
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
21st August 2015 06:24 AM
# ADS
Circuit advertisement
-
21st August 2015, 06:34 AM
#2792
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
vasudevan31355
//தமிழில் பிரபலமான கேரளப் பாடல்கள் என்னவாக்கும் ?//

-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
21st August 2015, 09:02 AM
#2793
Senior Member
Diamond Hubber
அடி பொலியாயி...
மூக்கணாங்கயிறு படம் என்று நினைக்கிறேன்.. ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம் பாடியிருப்பாங்க
மெய் சிலிர்க்குது மனம் துடிக்குது நெய் விளக்கென கண் சிவக்குது கண்மணி நீ தொடும் நேரம்
ஒரு செந்தாழம்பூவை அவன் படைத்தான் முன்னம் சொல்லாமலே இங்கு எனக்காக
என்று ஜெய் ஆரம்பித்து
பூ விரிஞ்ஞது தேன் நிறச்சது கையணைச்சது மெய் துடிச்சது
துள்ளும் எண்டே யவ்வனத்தின் மேளம்
என்று வாணி தொடருவார்...
அந்த 7 நாட்களில் கூட படத்தில் இடம் பெறாத "சுவர ராக சுத" என்று ஒரு பாட்டு உண்டு இல்லையோ ?
சிக்காவுக்காக.. ஓணம் ஸ்பெஷல் பாட்டு
ஏ.. ஜிங்கா ஜினுக்குதா இந்தா உனக்குத்தான் சிட்டுக்குருவி...
ஞான் கேரளத்து குஞ்ஞல்லோ .. நின்னே கொஞ்ச வந்த பிஞ்ஞல்லோ
இது சக்கப் பழ சாறல்லோ பொன்னம்பலத்து தேரல்லோ
திருச்சூரின் பிரேமா... ஞானே... சேட்டா...
Last edited by madhu; 21st August 2015 at 09:07 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
21st August 2015, 09:28 AM
#2794
Senior Member
Senior Hubber
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..
தமிழில் ப்ரபலமான மலையாளம் என்றால் நினைவுக்கு வருவது - லேட்டஸ்டா (?!) உயிரே யில் நெஞ்சினிலே நெஞ்சினிலெ ஊஞ்சலே..எவ்ளோ மலையாள பில்டப் கொடுத்து யானை சேட்டன்கள் எல்லாம் உடன் ஆடினாலும்.. ஷாரூக் கான் வட இந்திய முகத்தோடு ஒல்லியாய் ஆடுவது கொஞ்சம் தமாஷ் தான்..
வறுமையின் நிறம் சிவப்பு இல் ஸ்ரீதேவி - தூமே ராஜா மேது ராணீ என இருவரி பாடுவார் (ஓ..அதுஇந்தியோ
)
மலையாளக் கரையோரம்கவி பாடும் குருவி...
நான் கேரளத்துப் பெண்ணல்லோ..வளர தாங்க்ஸ் மதுண்ணா
சேரன் கோபிகா பாட்டு ஒண்ணு மறந்து போச்சு..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
21st August 2015, 09:36 AM
#2795
Senior Member
Senior Hubber
மனசுல நீகோகம் மனுமள நீ கோகம்... சிந்து நதியின் மிசை..
சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் சேர்ந்திடும் நாள் திரு வோணம்..
குலுவாலிலே முத்து வந்தல்லோ..
ஓளங்கள் நு ஒரு ம்லையாளப்படம் அதுல பூர்ணி அமோல் பலேகர் நு நினைக்கேன்.. ஒரு நல்ல மலையாளப்பாட் வரும்..அது தமிழ்ல்லயும் ஃபேமஸ்..ஆனா நினைவுக்கு வரமாட்டேங்குது.. (பூர்ணி நன்னாயிட்டு ஆக்டிங்க் கொடுத்திருக்கும்)
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
21st August 2015, 09:40 AM
#2796
Junior Member
Seasoned Hubber
Courtesy: Tamil Hindu
தெய்வத்தின் குரல்: மனதைப் பண்படுத்தும் மகாபாரதம்
காஞ்சீபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயில் தரிசனம், 1957.
தற்போதுள்ள அத்தனை இந்திய மொழி லிபிகளுக்கும் ஆதாரமாக இருக்கப்பட்ட பிராம்மி என்ற லிபியில்தான், ரொம்பவும் பழைய சாசனங்கள் இருக்கின்றன. இந்த மிகப் பழமையான சாசனங்களின் எழுத்தும் அழகாக, பாஷையும் காவிய அழகோடு (flowery- ஆக) இருக்கின்றன. அப்புறம் பல்லவர் காலக் கல்வெட்டுக்களிலும் எழுத்து அச்சடித்தாற்போல் இருக்கிறது. வாசகமும் இலக்கிய நயத்தோடு இருக்கிறது.
அதன் பின் சோழர் காலத்துச் செப்பேடுகளில், எழுத்தும் வாசகமும் பெருமளவு நன்றாக இருக்கிறது. ஆனால் இரண்டுமே ஆதியில் இருந்ததைவிடக் கொஞ்சம் மட்டம்தான். ரொம்பப் பழையது. அச்சடித்த மாதிரி, கண்ணில் ஒத்திக்கொள்ளலாம்போல் இருக்கிறது. சமீபத்தில் இருநூறு முந்நூறு வருஷங்களுக்கு முந்திய செப்பேடுகளைப் பார்த்தாலோ, ஒரு சீரும் இல்லை, முறையும் இல்லை, தப்பும் அதிகமாக இருக்கிறது. மண்டை மண்டையான எழுத்து. ஏகப்பட்ட இலக்கணப் பிழை.
இப்படியே ஆதிகாலத்திலிருந்து சமீபகாலம் வரையிலான விக்கிரகங்களைப் பார்த்தேன். இவற்றிலும், காலம் சொல்லத் தெரியாதவை ரொம்ப ரொம்ப லட்சணமாயிருக்கின்றன. பல்லவ விக்கிரகங்கள் நிரம்ப நன்றாக இருக்கின்றன. சோழ விக்கிரகங்கள் ஒரு மாதிரி நியதியிலே நன்றாக இருக்கின்றன. அதன் பின் வரவர மேலும் தரக்குறைவுதான். இப்போது யாரிடமாவது புதிதாக ஒரு விக்கிரகம் அடிக்கக் கொடுத்தால் எப்படி இருக்கிறது? அழகோ, சாந்நித்தியமோ, தெய்வக் களையோ பழையவற்றில் இருப்பதுபோல் புதிதில் இருப்பதில்லை.
பழைய காலத்து ஜனங்களுடைய குணம் எப்படி? அதுவும் அதேமாதிரி உயர்ந்துதான் இருந்ததாகத் தெரிகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்நாட்டுக்கு வந்த மெகஸ்தனிஸ், 'இந்தியாவில் யாராவது, ஏதாவது கொடுத்தாலும்கூடக் கைநீட்டி வாங்கிக்கொள்பவர் இல்லை. எந்தப் பண்டம் எங்கு கிடைத்தாலும் அந்த நாட்டவருக்குத் திருடவே தெரியாது. பொய் சொல்லவே தெரியாது' என்றெல்லாம் சொல்கிறான்.
சாந்தமும், நல்ல குணமும், தப்பு வழியே இல்லாமல் சரியானபடி போகும் போக்கும் அந்தக் காலத்தில் இருந்தன. இப்போது அந்த நிலை மாறிவிட்டது. அந்தக் காலத்தில் ஜனங்கள் எப்படி இருந்தார்கள்? அவர்களுடைய மனசு எப்படி இருந்தது? அந்த மாதிரியே இப்போதும் இருக்கக் கூடாதா என்று தோன்றுகிறது.
பொதுவாக வாழ்க்கையில் ஒழுக்கம் ஏற்பட்டுவிட்டால் அப்புறம் அதன் ஒவ்வொரு துறையிலுமே ஒழுக்கத்தினால் உண்டாகிற அழகும் ஏற்பட்டு விடுகிறது. இதனால்தான் பழங்கால சிற்ப சித்திரங்கள், எழுத்து (calligraphy) உட்பட எல்லாம் ஒழுங்காக, அழகாக இருக்கின்றன.
அந்தக் காலத்தில் நல்ல நிலைமையில் இருந்து, இப்போது அதே வம்சத்தில் தோன்றிய ஜனங்களின் நிலை இப்படி எல்லாவற்றிலும் மிகவும் தாழ்வாகப் போனதற்கு ஏதாவது காரணம் இருக்க வேண்டும் என்று யோசித்தேன்.
அந்தக் காலத்தில் கோயில்களிலெல்லாம் பாரதம் வாசிக்க வேண்டுமென்று கட்டளை இருந்திருக்கிறது. பாரதம் வாசிப்பதற்கென்றே மானியம் தருகிற சாசனங்கள் இருக்கின்றன. இப்போது, பெரிய கோயில்களில் எதிலுமே பாரதம் வாசிக்கிறதைக் காணோம்.
கிராமாந்தரங்களில் கிராம தேவதைகளின் கோயில்களில் மட்டும் எங்கோ பாரதம் வாசிக்கிறதைப் பார்க்கிறோம். கிராம ரக்ஷைக்காக உள்ள, அந்த ஒரு சில கோயில்களுக்கு இன்றும் கிராம மக்கள் போகிறார்கள். சினிமா வந்து இவ்வளவு ஜனங்களை ஆகர்ஷிக்கிறபோதுகூட பாரதம் கேட்க ஜனங்கள் இருக்கிறார்கள் என்றால், பழைய காலத்தில் எப்படி இருந்திருக்கும்? அப்போது மக்களுக்கு வேறே பொழுதுபோக்கே இல்லையே.
அந்த பாரதத்தில் என்ன இருக்கிறது? பொறுமை என்பதற்கு வடிவமாக தர்மபுத்திரர் இருக்கிறார். சத்தியமான பிரதிக்ஞை என்பதற்கு பீஷ்மர் இருக்கிறார். தானத்துக்குக் கர்ணன். கண்ணியத்துக்கு அர்ஜுனன். இப்படியே ராமாயணத்தை எடுத்துக்கொண்டால், சகல தர்மங்களின் மூர்த்தியாக ஸ்ரீராமன் இருக்கிறார். பெண்களுடைய உத்தமமான தர்மத்துக்கு சீதை இருக்கிறாள். ஸ்ரீ ராமனுக்கு நேர் விரோதியாக ராவணனுக்கு மனைவியாக இருக்கும் மண்டோதரியும் சீதைக்குக் குறைவில்லாத மகாபதிவிரதையாக இருக்கிறாள்.
ராமாயண, பாரதக் கதைகளைக் கேட்கும்போது இப்படிப்பட்ட உத்தமமான ஆத்மாக்களின் ஞாபகம் வருகிறது. படித்தவர், படிக்காதவர் எல்லோருக்கும் அடிக்கடி அந்தக் கதைகள் காதில் விழுந்துகொண்டிருந்தால், நம்மால் அந்த உத்தம பாத்திரங்களைப் போலவே நடக்க முடியாமல் போனாலும், இதுதான் நாம் இருக்க வேண்டிய உண்மையான முறை என்ற நினைவு அடிக்கடி வரும். இதற்கே பலனுண்டு. இதனால்தான் இந்தக் கதைகளைக் கேட்டு வந்த அந்தக் காலங்களில், உயர்ந்த தர்மமும், நீதியும் நாட்டில் இருந்தன.
தர்மம், நீதி இரண்டும் சேர்ந்துதான் பண்பு உண்டாகிறது. அந்தப் பண்பாட்டை மாற்றுவதற்கும், குலைப்பதற்கும் இப்போது எத்தனையோ ஏற்பாடுகள் வந்திருக்கின்றன. முன்பு இருந்த பழக்கத்தை மறுபடியும் உண்டாக்குவது கஷ்டம்தான். ஆனாலும் சிறிதாவது செய்யத்தான் வேண்டும். நாம் நல்லது பண்ணிக்கொண்டு போனால் ஈசுவரன் நமக்குக் கை கொடுப்பார். அவர்தான் நமக்குக் கை கொடுத்திருக்கிறார். கால் கொடுத்திருக்கிறார். கண் கொடுத்திருக்கிறார். கொஞ்சம் ஆலோசிப்பதற்கு புத்தியும் கொடுத்திருக்கிறார். இந்தச் சக்தியும் புத்தியும் இருப்பதற்குள்ளே திருந்துவதற்கான சத்காரியம் செய்ய வேண்டும்.
இப்போது என்ன என்னவோ விதமான ஆபத்துக்கள் நமக்கு வந்துகொண்டிருக்கின்றன. ஜனங்கள் இன்ன வழியில் போவது என்று தெரியாமல் சிரமப்பட்டுக்கொண்டிருக்கும்போது, அநேக கட்சிகள் வந்து அவர்களுடைய புத்தியைப் பல விதமாகக் குழப்பி மாற்றிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் நம்முடைய சத்தியமும் நீதியும் தர்மமும் ஜனங்களுடைய மனசில் கலையாமல் நின்று காப்பாற்ற வேண்டும்.
அப்படிக் காப்பாற்றுவதற்கு மகாபாரதமே உபகாரமாக இருக்கும் என்று அன்றிலிருந்து இன்றுவரை ஜனங்களுடைய அனுபவத்தினாலே தெரிகிறது.
தெய்வத்தின் குரல் (முதல் பாகம்)
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
21st August 2015, 09:45 AM
#2797
Senior Member
Diamond Hubber
அமோல் பாலேகர் பூர்ணிமாவின் ஓளங்கள் படம் இந்தியில் அவதார் என்ற பெயரில் அவதரித்து தமிழில் பூப்பூவா பூத்திருக்கு என்ற பெயரில் பிரபு, சரிதா, அமலா நடித்து வெளியானது..
தும்பி வா தும்பக்குடத்தினி பாடல் தமிழில் ஆட்டோ ராஜா படத்தில் சங்கத்தில் பாடாத கவிதையாகவும் கண்ணே கலைமானே படத்தில் நீர்வீழ்ச்சி தீ மூட்டுதே என்றும் ஹிந்தி சீனி கம் படத்தில் கும்சும் கும் என்றும் மீண்டும் மீண்டும் மீண்டும்...
வீடியோ யூ டியூபில் சுலபமாக கிடைப்பதால் இங்கே ஒட்டவில்லை.
-
21st August 2015, 09:54 AM
#2798
Senior Member
Senior Hubber
வெள்ளி முத்துக்கள் நடனமாடும்.. பாடல் கேட்டதனாலோ என்னவோ கூகுளில் நேற்று மீண்டும் வாழ்வேன் சர்ச் செய்ததில் படமே கிடைத்தது..என்னடா வாசு சார் கதையெல்லாம் போடாமல் இருக்கிறாரே எனச் சற்றே நான் யோசித்திருக்கலாம்..ம்ம் விதி வலியது
கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் இன்னும் சுவாரஸ்யமாக வந்திருக்க வேண்டிய படம்... பாரதிக்கு பொம்மை டான்ஸ் உண்டு..பார்க்கும் நமக்கு அது பொம்மையில்லை எனத் தெரிய எப்படி மனோகர் மட்டும் ஏமாறுகிறார் எனத் தெரியவில்லை..
ஸ்ட்ரெய்ட்டா மனோகர் வீட்டுக்கு வரத்தெரிந்த டாக்ஸி ட்ரைவரான ரவியால் முடிந்தது, ஆரம்பக் காட்சியில் கெடுபிடியுடன் ஒல்லியான உடற்வாகுடன் பேசும் அதிகாரி இளைஞர்... கொஞ்சம் போ.அ.வேடத்திற்குப் பொருத்தமாய் இருந்தார்... - அவருக்குத் தெரியாதது கஷ்டமே.. ரொம்ப சுலபமாய் பாரதியைக் கடத்தி தோளில் தூக்கி வில்லன்கள் டாக்ஸியில் போவதும் அது பற்றி ரவி கொஞ்சம் கூட சந்தேகப் படாததும் மறு நாள் தான் பேப்பர் பார்த்து சந்தேகப் படுவதும்..ம்ம்...
அந்த ஆறு மற்றும் நீர் வீழ்ச்சி லொகேஷன் எங்கே..திடீர் என ஒரு காட்சியில் மொட்டைத் தலை தேங்காய் சீனிவாசன் பாரதியை மானபங்கப் படுத்துவது மாதிரி வந்து நம்மைப் படுத்துகிறார்..விஜயலலிதா, ஜெய்குமாரி என்றெல்லாம் உண்டு..ஏதோ ஒரு ஹோட்டல் அங்கு எப்போதும் ஆடிக்கொண்டிருக்கும் நங்கைகள் அங்கே போய் சித்த வைத்திய சாலை போல ரவிச்சந்திரன் போர்ட் போடுவாராம்..வில்லன்கள் டுப்பாக்கியால் டுபுக் டுப்க்கென டுடுவார்களாம்.. பின் ரவிச்சந்திரன் வந்து சண்டை போட்டு அவர்களை அடிப்பாராம்..ம்ம் மழலை கூட நம்பாது... ம்ம் எனிவே.. நல்ல படத்தின் கதை கொடுக்காததற்காக வாசுவிற்கு ஒரு தாங்க்ஸ்...( நற நற) 
அப்புறம் அவளுக்கு நிகர் அவளே, அவளும் பெண் தானே எல்லாம் யூ ட்யூபில் இருக்கிறது .. நான் பார்க்காத படங்கள்..பார்க்கலாமா...
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
21st August 2015, 10:05 AM
#2799
Senior Member
Diamond Hubber
சிக்கா...
வாசு உங்களைப் படம் பார்க்கச் சொன்னாரா ? குற்றம் சுமத்தலாமா ?
பெண்களை மானத்தோடு இந்த சமுதாயம் வாழ விடுவதில்லை என்பதை உணர்த்தும் வெ.ஆ.நிர்மலாவின் அவளுக்கு நிகர் அவளே ( சேலை விற்கும் கடையைக் கண்டேன் தெருத்தெருவாக.. ஆளை விற்கும் கடையைக் கண்டேன் முதல் முதலாக ) மற்றும் பண்டரிபாய் தயாரிப்பில் சுமித்ராவின் முதல் தமிழ்ப் படமான அவளும் பெண்தானே ( உறவைத் துறந்து ஊரைப் பிரிந்து பறவை ஒன்று வந்தது.. அதன் உடலைத் தின்று பசியைத் தீர்க்க உலகம் சுற்றி நின்றது ) ஆகிய படங்களைப் பார்த்து நற நற என்று பல்லைக் கடித்து உடைந்து போனால் கம்பெனி ஜவாப்தாரி அல்ல..
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
21st August 2015, 10:12 AM
#2800
Senior Member
Senior Hubber
தாங்க்ஸ் மதுண்ணா..தட் பாட் சங்கத்தில் காணா கவிதை..மலையாளத்தில் வெகு அழகாயிட்டு இருக்கும்.. பூப்பூவா பூத்திருக்கு பார்த்ததில்லை.. எஸ் எல்லாப் பாட்டுக்களையும் நீரே தான் முன்பு கொடுத்திருக்கிறீர் நினைவுக்கு வருது..
*
கல்லூரி சமயங்களில் அவ்வப்போது சில டுபாக்கூர் படங்களுக்குச் சென்று மாட்டிக் கொண்டு முழித்ததும் உண்டு..இவ்ளோ வருடங்கள் கழித்தும் மறக்க முடியாத ஒரு நண்பன் நடராஜன் என்பவன்.. அந்தக்காலத்தில் நாங்களெல்லாம் பெரியார் பஸ்ஸ்டாண்டின் பேரலல் ரோட்டில் பஸ்ஸீக்காகக் காத்து வேகமாய் ஓடி ஏறி விமான நிலையத்துக்கு அருகில் இருக்கும் கல்லூரி ( 7 அல்லது 10 கிமி) செல்லும் போது லேம்ப்ரட்டாவில் பெட்ரோல் போட்டு (அப்போது ஏழு அறுபது என நினைவு) ட்ட்ரு ட்ட்ரு என வருபவன்.. வந்தவன்.. ஆனால் எளிமையாய்த் தான் பேசுவான்..
படிச்சு முடிச்சுட்டு வேலைல்லாம் பாக்கலாம்னு அவசியமில்லேல.. என்ன எனக்குப் படிக்க இஷ்டமில்லை (அப்பா ஒரு பிரபல மருந்துக் கம்பெனி ஹோல்சேல் கடை சாந்தி தியேட்டருக்கு பக்கத்து த் தெருவில் வைத்திருந்தார்) அப்புச்சி தான் காலேஸூ படிச்சா தொவ (தொகை- கையில் வாங்கும்வரதட்சணை) கூட வரும்னு சொன்னாக.. சரின்னு வண்ட்ட்டேன்.. முதல் செமஸ்டர் கொஞ்ச நாள் தான் வரமுடிஞ்சது..அப்புறம் இப்போ.. எனச் சொல்லி கல்லூரியின் மூன்றாவது வருடத்தில் ஒட்டுக்க பதினெட்டு அர்ரியர்ஸையும் ஒரே சிட்டிங்கில் உட்கார்ந்து க்ளியர் செய்து எக்ஸாம் எழுதி முடித்த கையோடு அப்பா மற்றும் உறவினர்கள் பார்த்து வைத்த பெண்ணை ராங்கியத்தில் கல்யாணமும் செய்து கொண்டான்..( சில வருடங்களுக்கு முன்னால் அவன் மகனுக்கும் திருமணம் முடிந்தது எனக் கேள்விப்பட்டேன்..தொவ எவ்வளவு வாங்கினான் எனத்தெரியவில்லை (யெஸ்.. செட்டி நாட்டவர் தான் அவன்)
அப்படிப்பட்ட நடராஜனுக்கு என்னை ப் பிடித்துப் போனது விதி செய்த சதி என்று தான்கூற வேண்டும்..ஆ.ஊ என்றால்சனி அல்லது ஞாயிறு ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு வந்துவிடுவான் வீட்டுக்கு..வா. போலாம் கண்ணா
யோவ் படிக்கணுமேய்யா..
ஸ்ஸூ..அத அப்புறம் பார்த்துக்கலாம் வாங்க..
மரியாதை கலந்து கலந்து பேசுவது அவ்ன வழக்கம்..
அதுவும் அவனுக்கு- அவன் அப்புச்சியின் பார்ட்னரின் பார்ட்னரோ இல்லை தெரிந்தவரோ கல்பனா தியேட்டரின் முதலாளிக்கு உற்வோ என்னவோ.. அங்கு தான் கூட்டிக் கூட்டிச் சென்று சில பல படங்கள் பார்க்க வைத்திருக்கிறான்.. உதாரணமான படங்கலின் பெயர்கள் நடமாடும் சிலைகள், வடிவங்கள் கெளதமிக்கு ஆவி பிடிக்கும் ராமராசன் படம் என..
(டுபாக்கூர் படலிஸ்ட்டில் நினைவுக்கு வருவது ஸ்ரீ தேவியில் வந்த ஆடுகள் நனைகின்றன, நீரோட்டம் ( விஜயகாந்த்தின் முதல் படம்) இன்ன பிற.. அதுவும் அவனுடன் தான் பார்த்தேன்..
ம்ம்..வடிவங்கள் என்னும் ஒரு படம்.. அதில் ஒரு பாடல் - இதயவானில் உல்வுகின்ற புதிய மேகமே - ஜெயச்சந்திரன் கொஞ்சம் பரவால்லம இருந்தது.. இன்னொரு பாட் கூட உண்டென நினைவு..தண்ணீரில் மீனழுதால் கண்ணீரை யார் அறிவார்...
சம்பந்தமில்லாமல் ஏன் இந்த ரைட்டப்பா..இல்லை..இருக்கு
மலையாளம்னு வர்ற்ச்சே ஜெயச்சந்திரன் நினைவு..தொடர்ந்து நடராஜன் அப்புறம் இந்தப் பாட்டு..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks