Page 292 of 400 FirstFirst ... 192242282290291292293294302342392 ... LastLast
Results 2,911 to 2,920 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #2911
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Hi aaaalllll...

    அடுத்த சந்தேகம் வந்தாச்சு... இதுக்கு விடை சொல்லுங்க..

    ஒரு பாடல்... அது டூயட்டா சோலோவா என்று நினைவில்லை.. ஆனால் பின்பகுதியில் டி.எம்.எஸ் பாடுவார்..
    இப்படி சில வரிகள்... "மச்சி மச்சி என் மச்சிகளா இந்த மாமன் மேல் ஆசை வச்சிகளா" என்று ஆரம்பித்து "கொருக்குப்பேட்டை, ராயப்பேட்டை, சைதாப்பேட்டை" என்று பேட்டையை ராப் செய்வார்.
    கடேசில " நான் எடுத்த சாட்டை அது நடத்தட்டுமே வேட்டை.. ஓட்டேரின்னா மாட்டே.. அது போகும் கிருஷ்ணாம்பேட்டை" என்று முடிப்பார்.

    நண்பர்களே... இந்தப் பாடல் பற்றிய விவரங்களை தாருங்கள் என கேட்டுக் கொள்கிறேன்

  2. Thanks vasudevan31355 thanked for this post
    Likes kalnayak, vasudevan31355 liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #2912
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Shower Stars / Swimming Beauties/ Water Masters!

    நட்சத்திரக் கு(வி)ளியல் பாடல்களும் 'பாத்ரூம் சிங்கர்'களுக்கான மதுர கானங்களே!

    ஷவர் ஸ்டார் 3 நடிகர்திலகத்தின் குளியல் நவரசக் குவியல்!

    சறுக்கி விழுந்துதான் சைக்கிள் கற்றுக்கொள்ள முடியும். ஜான் ஏறி முழம் சறுக்கினால்தான் வழுக்கு மரமேறி புதையல் எடுக்க முடியும்! அப்படியே தண்ணீரில் முங்கிமுங்கி மூச்சடக்கி கைகால்களை உதறினால்தான் நீச்சல் கற்றுக்கொள்ள முடியும் ....


    எதிர்நீச்சல் போட்டால்தான் வாழ்க்கையின் வெற்றிக்கனிகளை பலே பாண்டியனாகி ருசிக்க முடியும் என்பதை தேவிகா சொல்லித்தான் நடிகர்திலகம் புரிந்து கொண்டாரோ ?!


    வீரபாண்டிய கட்டபொம்மனாக இன்றும் கர்ஜித்துக் கொண்டிருப்பவரா இந்த சேற்றில் மலர்ந்த செந்தாமரையைப் பார்த்து இப்படி ஒரு இடிச்சிரிப்பு சிரிக்கிறார் ?!அதோடு எவ்வளவு லாவகமாக சேற்றில் புதைந்த பாரதியின் ராசி தங்கசுரங்கமாம் மச்சம் கண்டிட ஷவரடிக்கிறார் ?! புதுமையான சேற்று முங்கல் ஷவர் குளியல்!!பாரதியோடு கிணற்றுக்குள் இறங்குவதும் குளிக்கத்தான் என்று நம்பி ஏமாந்து விட்டோம் !




    நீச்சல் குளம்தான் காதலியரின் நினைவுப் பகிர்தலில் புத்துணர்ச்சி தூண்டும் கிரியா ஊக்கி தத்தம் மனங்கவர் மங்கையரை தண்ணீரில் முங்கி நீந்திக்கொண்டே சிலாகித்து நினைவசைகளை சுண்டுவது வித்தியாசமே

    [url]https://www.youtube.com/watch?v=rUmL6PFD1OE

    இன்னும் தங்க பதுமை வசந்த மாளிகை தீபம் படங்களிலும் இத்தகைய காட்சிகளைக் கண்ணுற்று மகிழலாம் !
    Last edited by sivajisenthil; 25th August 2015 at 01:14 PM.

  5. Likes kalnayak, chinnakkannan liked this post
  6. #2913
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    திரையில் பக்தி தொடர்ச்சி:

    இந்த பாடலுக்கு இணையான பாடல் இதுவரை வரவில்லை

    ஆம் லவ குசா திரையில் இசையரசி மற்றும் பி.லீலாவின் குரலில் ஒலித்த ஜகம் புகழும் புண்ணிய கதை

    தெலுங்கில் கண்டசாலா இசை, தமிழில் மகாதேவனின் இசை. வரிகள் மருதகாசி ஐயா



    என்ன அருமையான பாடல். பேபி உமா மற்றும் இன்னொரு சிறுவனின் நடிப்பு பாடல் வரிகள், பாடியவர்களின் குரல் வளம் என எல்லாமே பக்தி ரசம் சொட்டும்

  7. Thanks kalnayak, vasudevan31355 thanked for this post
  8. #2914
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    வாங்க ராஜேஷ்.. நலமா.. என்னாச்சு.. ராமாயணம் லாம்கேக்க பாக்க ஆரம்பிச்சுட்டீங்க..

  9. Likes vasudevan31355, rajeshkrv liked this post
  10. #2915
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    ராஜேஷ்.... ஜகம் புகழும் புண்ய கதை என்னைக்குமே ராமன் கதைதான்..

    உங்க பதிவு அயோத்தியா காண்டத்தில் இருந்துதான் ஆரம்பிக்குது.. பால காண்டம் மிஸ்ஸிங்.

    இந்தாங்க பாலகாண்டம்.. ( எங்களுக்கெல்லாம் கடவுளரைக் குழந்தைகளாக மாற்றி ரசிக்கவே இஷ்டம். சிக்கா பேரிலேயே சின்னக் கண்ணனாக இருக்கிறார். நான் அவதாரில்)



    எனக்கு ஒரு சந்தேகம்.. லவகுசா படத்தில் வால்மீகி முனிவர் இந்த ராமாயணத்தைச் சொல்லிக் கொடுக்க லவனும் குசனும் பாடுறாங்க. ஆனால் அதிலே பரதன் தேடி வருவதோ.. பாதுகை வாங்கிச் செல்லும் காட்சியோ காணவே காணோமே !
    முக்கியமான கட்டத்தை ஒரு வரியிலாவது சேர்த்திருக்கலாமே !

    கங்கைக் கரை அதிபன் பண்பில் உயர்ந்த குகன் அன்பால் ராமபிரான் நண்பனாகினான்
    பஞ்சவடி செல்லும் பாதையைக் காட்டினான்

    என்று வருகிறது. ராமாயணக் கதையின் படி குகன் சித்திரகூட மலைக்குத்தான் வழி காட்டுகிறான். பிறகு பரதன் வந்து பாதுகை பெற்று சென்றபின் ராமர் குடும்ப சகிதம் விராதனைக் வதம் செய்தபடி தண்டகாரண்யம் செல்வதாகப் படித்திருக்கிறேன்.

    எதனால் இந்த மாற்றம் ? யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்களேன் !!

  11. Thanks eehaiupehazij, vasudevan31355 thanked for this post
    Likes kalnayak, vasudevan31355, rajeshkrv liked this post
  12. #2916
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்' தெலுங்கில் பார்த்து ரசிக்க. 'நேருக்கு நேர் நின்று பாருங்கள் போதும்' பாடல் இப்படத்தில் கைவிடப்பட்டு அதற்கு பதிலாக இரு வல்லவர்கள்' பாடல் டியூன் எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டது.

    'மனசாரகா நீவு'

    'எதிரிகள் ஜாக்கிரதை' படம்தாங்க அது.

    ராஜஸ்ரீயும், ராம் மோகனும் நடித்திருப்பார்கள்.

    சுசீலாவும், பி.பி ஸ்ரீனிவாசும் பாடுவார்கள். மாடர்ன் தியேட்டர்ஸ் 'எவரு மொனகாடு' படத்தில்.

    Last edited by vasudevan31355; 25th August 2015 at 09:21 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  13. Thanks raagadevan thanked for this post
    Likes kalnayak, rajeshkrv liked this post
  14. #2917
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மனோகரும், மணிமாலாவும், மாஸ்டர் பிரபாகரும் நடித்த 'அப்பா பக்கம் வந்தா' பாடலை தெலுங்கில் காந்தாராவ், மாஸ்டர் ராஜு சௌகார் நடிக்க பாருங்கள்.

    Last edited by vasudevan31355; 25th August 2015 at 09:28 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  15. Likes kalnayak, rajeshkrv liked this post
  16. #2918
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'எனக்கொரு ஆசை இப்போது' (தெலுங்கில்)

    நடிகர் திலகமே தெய்வம்

  17. Likes kalnayak, rajeshkrv liked this post
  18. #2919
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'நீயாக எனைத் தேடி வருகின்ற நேரம்' (தெலுங்கில்)

    Last edited by vasudevan31355; 25th August 2015 at 09:32 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  19. Likes kalnayak, madhu liked this post
  20. #2920
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'அனுபவி ஜோரா அனுபவி' (தெலுங்கில்) இதுவும் 'இரு வல்லவர்கள்' பாடல். தமிழில் ஜெய், விஜயலஷ்மி பாடுவார்கள். ஆனால் தெலுங்கில் ஹீரோ பாட மாட்டார். படம் மாறுது அல்லவா? ஒன்லி லேடீஸ்.

    Last edited by vasudevan31355; 25th August 2015 at 09:38 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  21. Likes kalnayak liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •