-
25th August 2015, 10:09 PM
#901
Junior Member
Senior Hubber
பார்த்துக் கொண்டே இருப்போம்.
கண்களில்
பக்தியும், பண்பும் நீந்த,
கந்தக் கடவுளுக்கு முன்
கைகூப்பி நிற்கிற
கம்பீரத்தை..
மக்களின் குறை கேட்க
ஓட்டமும், நடையுமாய்
விரைந்தோடும் எழிலை..
தம்பி மகள்
வாள் சுழற்றும்
அழகை ரசிக்கையில்,
வாளோடு வாளாகச்
சுழலும் அந்தக் கண்களை..
திருடனைப் பிடித்து
விட்டால்
அவன் குடும்பம் என்னாகும்?
என குழந்தை வினவ,
அந்த அக்கறையை வியக்கும்
அய்யாவின் பாவனையை..
சிறு தொகையாவது
வரியாகச் செலுத்தக் கோரும்
ஆங்கில அதிகாரியிடம்,
மறுத்து அவர்
நியாயம் உரைக்கும்
தோரணையை..
வேறு வேடத்தில் வந்த
எட்டப்பனைப் புரிந்து கொண்டு
மடக்கும் வீராவேசத்தை..
அவனைப் புரிந்து
கொண்டாலும், காட்டிக்
கொள்ளாமல்
கிண்டலாகச்சொல்லும்
'அதாவது'களை..
பாம்பிடமிருந்து
காதலர்களைக் காப்பாற்றி,
"நான்கு நாட்கள்
பொறுக்க முடியுமா?"
எனக் கேட்டுச் சிரிக்கும்
தெய்வீகச் சிரிப்பை..
வந்து பேட்டி காணும்படி
கர்வமாய் w.c.ஜாக்ஸன் எழுதிய
கடிதம்
வாசிக்கப்படும் போது,
"பார்த்தீர்களா?"என்பது போல்
அய்யா முகம் கேட்கும்
கேள்வியை..
அளிக்கப்படாத ஆசனத்தை
தனதாக்கிக் கொள்கிற
ஆண்மையை..
அமர்ந்த ஆசனத்தின்
கைப்பிடியில் இடக்கை ஊன்றி
விரல் நுனிகளைத்
தொட்டு உருட்டும் அழகை..
கொள்ளையையும்,
கொலையையும்
தடுக்க வேண்டிய மந்திரியே
கொள்ளைக்கும்,கொலைக்கும்
காரணமானது கண்டு
வெகுண்டு,
ஆத்திரமும், ஆவேசமும்,
அர்த்தமுள்ள
உள்ளப் பொருமலுமாய்
அவரை வாங்கு, வாங்கென்று
வாங்குவதை..
முருகக் கடவுளை
வணங்கி நிற்கையில்,
எட்டப்பர் உளவு சொல்லி,
அன்றிரவே ஆங்கிலேயர்
படையெடுத்து வரப் போகும்
தகவல் வர,
உடல் திருகி, விழி உருட்டி,
கை பிசைந்து
அடி வயிற்றிலிருந்து
சொல்லும்
வெற்றி வேல்..வீரவேலை..
வெள்ளையத் தேவனும்,
ஊமைத்துரையும்
அவரவர் மனைவியரிடம்
பக்கம்,பக்கமாய்ப் பேசும்
வசனத்திலிருக்கும் வீரத்தை,
உருவிய குறுவாளை
மீண்டும் உறைக்குள்ளிடும்
ஒரே விஷயத்தில்
காட்டுகிற திறமையை..
நாடு விட்டு
வந்திருக்கலாகாது
எனக் காட்டும்
குற்ற உணர்வுக்கான
குரல் கரகரப்பை..
பிடிக்க ஆளனுப்பிய
புதுக்கோட்டை மன்னருக்கு
எள்ளலுடன் போடும்
"ராஜ..ராஜ.."-வை..
கொக்கரிக்கும்
இரும்புத் தலையருக்கு,
கோபத் தமிழால் கொடுக்கும்
வசனச் சாட்டையடிகளை..
அணிவகுத்து நின்று
அழுது கதறும்
மனிதப் பெருங்கூட்டத்தின்
நடுவே,
ஒரு சிங்கமென
நடந்து செல்லும்
பேரழகை..
நான் போவது
வருத்தமெனினும்
நாடு காக்க
ஒரு கூட்டம் வருமென்று,
தூக்குக் கயிறை
முத்தமிட்டுத் தரும்
கடைசி நம்பிக்கையை..
விழிகளிளெல்லாம்..
மனங்களிலெல்லாம்..
நீக்கமற நிறைந்திருக்கிற
நம் நடிகர் திலகத்தின்,
"வீரபாண்டிய கட்டபொம்மன்"
எனும்
ஐம்பத்தாறு ஆண்டுகளுக்குப்
பிறகு புதிய தொழில் நுட்பம்
அணிந்து வந்த
புரட்சிக் காவியத்தை..
பார்த்தேன்.
பார்த்தீர்கள்.
பார்ப்போம்..!
பார்ப்போம்..!
பார்ப்போம்..!
-ஆதவன் ரவி-
-
Post Thanks / Like - 2 Thanks, 6 Likes
-
25th August 2015 10:09 PM
# ADS
Circuit advertisement
-
25th August 2015, 10:11 PM
#902
Junior Member
Veteran Hubber

Originally Posted by
sivajidhasan
மீண்டும் சிவாஜி தாசன்!
கடந்த சில மாதங்களாக இந்த திரியில் பங்களிப்பு ஏதும் செய்யாமல் வெறும் பார்வையாளனாக இருந்த என்னிடம் இப்போது ஏன் நீங்கள் எதுவும் எழுதுவதில்லை என்று திரு. ராகவேந்தர் சார், திரு. முரளி சார், திரு. நெய்வேலி வாசுதேவன் சார் மற்றும் இந்த திரியின் 16ம் பாகத்தின் துவக்கத்தில் வாழ்த்து சொல்ல வந்தபோது திரு. சிவாஜி செந்தில் சார் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க நான் மீண்டும் தொடர்ந்து எழுத வேண்டும் என்கிற எண்ணம் தோன்றியிருக்கிறது. மேலும் கடந்த ஞாயிறு அன்று சாந்தி திரையரங்கில் மாலைக் காட்சி திரு. முரளி சார், திரு.நெய்வேலி வாசுதேவன் சார் மற்றும் அவரது மகன் ஆகியோரோடு அமர்ந்து ரசித்தது ஒரு புது உத்வேகத்தை தந்துள்ளது. இனிவரும் காலங்களில் என்னுடைய பங்களிப்பு சிறப்புடையதாக இருக்கும் என நம்புகிறேன்.
நட்புடன்
சிவாஜிதாசன்
அன்பு நண்பர் சிவாஜிதாசன் அவர்களே
நமது அன்னை இல்லத்துக்குள் நாம் நுழைய எந்த பார்மாலிடியும் தேவையில்லை.
வாடி உதிர்கின்ற இலைகளாக இன்றி துளிர்த்து வளர்கின்ற கிளைகளாக உங்கள் பதிவுகள் அமைந்து நடிகர்திலகத்தின் புகழாலமரத்தின் விழுதுகளாக வேரூன்ற வேண்டும்! ! வருக வருக!!
அன்புடன் செந்தில்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
25th August 2015, 10:20 PM
#903
Senior Member
Diamond Hubber
அன்பு சிவாஜி தாசன் சார்,
மிக்க நன்றி!
தாங்கள் மீண்டும் புது உத்வேகத்துடன் திரியில் பங்களிப்பது குறித்து அறிவித்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. தங்களுடன் அமர்ந்து நம் தெய்வத்தை சாந்தியில் தரிசித்தது மறக்க முடியாதது.
இன்னும் அடிக்கடி வர முடியாத நண்பர்கள் அனைவரும் கண்டிப்பாக திரியில் சற்று சிரமம் பாராமல் பங்கு கொண்டார்களானால் நமது திரி இன்னும் எங்கோ சென்று விடும்.
எனவே உறுப்பினராக இருக்கும் அனைத்து நண்பர்களும் தினம் ஒரு மணி நேரமாவது நேரம் ஒதுக்கி திரியில் பங்கு கொள்ள வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
அதுவும் இந்த நேரம் கட்டபொம்மன் வெற்றி மகிழ்ச்சியின் பொன்னான தருணம். இந்த நேரம் அதை எல்லோரும் பகிர்ந்து கொண்டால் அதை விட சந்தோஷம் ஏது?
வருடம் ஒருமுறை அல்லது இருமுறை அதாவது பிறந்த தினம், நினைவு தினம் மட்டும் வந்து ஓரிரு வரிகளில் பதிவுகள் இட்டுச் செல்வது மாற வேண்டும். இதற்காக சிரமப்பட்டு உறுப்பினராக ஆக வேண்டியிருக்கவே வேண்டாமே! பல பேர் இன்னும் உறுப்பினராக நெடுநாள் வெயிட் செய்து கொண்டிருக்கிறார்கள். உறுப்பினர் ஆவதே சிரமம் ஆகும் பட்சத்தில் உறுப்பினரகளாக இருப்பவர்கள் இனி தினம் ஒரு பதிவாவது இட வேண்டும் என்று முடிவெடுக்கலாமே!
எல்லோருக்குமே வேலைகள் உள்ளது. எங்களுக்கும் உள்ளது. ஆனால் எல்லோரும் பங்கு கொண்டால் எப்படி இருக்கும் நமது திரி என்று கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.
எனவே அனைத்து உறுப்பினர்களும் பார்வையாளர்களாய் இருப்பதை கொஞ்சம் தவிர்த்து முனைப்பாக இங்கு பங்களிக்க விழையுங்கள் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
-
Post Thanks / Like - 2 Thanks, 4 Likes
-
25th August 2015, 10:23 PM
#904
Junior Member
Veteran Hubber
ஆதவன் ரவியா ?
அதிரடி கவியா ?!
மாதவம் செய்திட்டோம்
நடிகர்திலகத்தின் புகழ் விழுதுகள்
துளிர்விடத் தொடங்கிவிட்டன
அரிமா செந்தில்
சுந்தராஜன்
சிவாஜி தாசன்
ஆதவன் ரவி .......
கட்டபொம்மரின் வெற்றிப் பவனி
வாசு சாரின் மீள் விசுவரூபம்
துளிர்களின் மூலம் வெற்றிக்கனி
நெஞ்சம் நிறைந்து விட்டது
வாழ்த்துக்கள் வரவேற்புக்கள்
அன்புடன் செந்தில்
Last edited by sivajisenthil; 25th August 2015 at 10:25 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
25th August 2015, 10:46 PM
#905
Junior Member
Senior Hubber
விரட்டும் வேல்.
அலைச்சல்..
அசதி..
பெருமூச்சில் அனல்..
பெருஞ்சோர்வு..
அத்தனையையும்
ஓட ஓட விரட்டிற்று..
உங்கள்
குரல் வழியே பாய்ந்த
"வெற்றிவேல்..வீரவேல்.."
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
25th August 2015, 11:01 PM
#906
Junior Member
Senior Hubber
இடமாறு தோற்றப் பிழை.
திரையரங்கத்திற்குள்ளேதான்
போனோம்.
படம் முடிந்த பின்..
பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து
வெளியே வருகிறோம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
25th August 2015, 11:19 PM
#907
Junior Member
Senior Hubber
தீர்க்கதரிசி.
குழந்தை மீனா
கேட்கிறாள்..
"ஏம்ப்பா..ஒரு மாதிரி
இருக்கே..
சண்டையிலே தோத்துட்டியா?
அவசரமாய் மறுத்து விட்டுச்
சொல்கிறீர்கள் ...
"இல்லையம்மா..
நான் ஜெயிக்கிறேன்..!"
உண்மைதான்..
56 வருடங்களுக்குப் பிறகும்
நீங்கள்தான்
ஜெயிக்கிறீர்கள்.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
25th August 2015, 11:41 PM
#908
Senior Member
Devoted Hubber
BO news: VPKB tomorrow 4.00pm show at PVR: Amba Skywalk, Chennai Normal is already SOLD OUT.
http://in.bookmyshow.com/buytickets/...CH-MT/20150826
சிங்க தமிழன் வசூலில் சாதனை படைக்கிறார். ஆதவன் ரவி அவர்கள் சொல்வது போல் 56 வருடங்கள் கழித்தும் அவரே வசூல் மன்னராக திகழ்கிறார். A gem of accomplishment from one and only NT.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
25th August 2015, 11:41 PM
#909
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
25th August 2015, 11:45 PM
#910
Senior Member
Seasoned Hubber
அன்புமிக்க சிவாஜி தாசன் அவர்களே
தங்கள் மீள்வரவிற்கு நம் அனைவரின் சார்பில் நல்வரவு.
இதன் மூலம் பெருகட்டும் நம் உறவு..
வருக வருக
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks