-
26th August 2015, 01:51 PM
#951
Junior Member
Veteran Hubber
இதில் ஒரு விஷயம் நாம் கவனிக்கவேண்டியது !

நடிகர் திலகம் அவர்களது தாயாரின் சிலையை பரந்தமனதுடன் நடிகர் திலகத்தின் வேண்டுகோளுக்கிணங்க திறந்துவைக்க சம்மதித்து, அதனை திறந்து வைத்து சிறப்பித்தவர் அன்றைய முதல்வர் மக்கள் திலகம் M G R அவர்கள்.
இன்று நடிகர் திலகம் அவர்களது மணிமண்டபத்தை, நடிகர் சங்கம் எந்த காலத்திலும் அவர்களது காழ்புணர்ச்சியால் திறக்கமாட்டார்கள் என்பதை ஊர்ஜிதபடுத்திகொண்டு, அந்த மணிமண்டபத்தை தாமே தமது அரசால் கட்டப்படும் என்று அறிவித்தவர் மக்கள் திலகம் வழிவந்த அதிமுக வின் இன்றைய முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் !
தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி நடிகர் திலகம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது அந்நாளில் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு செய்தி !
நடிகர் திலகம் அவர்கள் கலையை பொருத்தவரை கலைவாணி அருள் பெற்றவர் !
அவர் ஆசியால்தான் திரை உலகில் மிகபெரிய ROUND கலைச்செல்வி அவர்கள் வந்தார் என்றால் அது சத்தியமான, தத்துவமான விஷயம் !
RKS
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
-
26th August 2015 01:51 PM
# ADS
Circuit advertisement
-
26th August 2015, 02:05 PM
#952
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
26th August 2015, 03:23 PM
#953
Junior Member
Seasoned Hubber
கட்டபொம்மன் படம் உருவான பொது நடந்த சம்பவங்கள் , படத்தை பற்றிய சில விஷயங்கள் ,படத்தின் வெற்றியின் வீச்சு , என்று என்னால் முடிந்த அளவு எழுதி உள்ளேன்
கட்டபொம்மன் நாடகத்தின் ரிஷிமூலம் :
நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் சின்ன வயசில் அவர் வசித்த ஊரில் கம்பளத்தார் கூத்து என்று நடத்துவார்கள் , அதில் கட்டபொம்மன் நாடகம் தான் நடத்துவார்கள் , கம்பலத்தாரில் 47 வது தலைமுறையில் வந்தவர் தான் கட்டபொம்மன் . நடிகர் திலகத்தின் தந்தை நாட்டு பற்று அதிகம் உள்ளவர் அதனால் கட்டபொம்மன் நாடகம் அடிகடி பார்க்க தன் மகனை அழைத்து சென்று விடுவாராம் சிவாஜியின் தந்தை . அந்த கூத்தில் முக்கிய வேஷங்கள் போடுபவரை தவிர பிற வேஷங்களுக்கு குழந்தைகளை மேடையில் நடிக்க விடுவார்கள்
முதல் நாடக அனுபவம் :
சிறுவனாக இருந்த கணேசன் இப்படி தான் முதல் முதலில் மேடை ஏறினார் . சரி கட்டபொம்மனாக நம் மனதில் வாழந்த , வாழ்ந்து கொண்டு இருக்கும் சிவாஜி சாருக்கு அந்த நாடகத்தில் கொடுக்க பட்ட வேஷம் என்ன ?
வெள்ளைகார பட்டாளத்தில் ஒருவனாக நடித்தார் நம் நடிகர் திலகம்
அடி கிடைத்தது நடிப்பு ஆசை வந்தது , ஒரு நடிகர் பிறந்தார் :
நாடகம் முடிந்து வீட்டுக்கு வந்த சிறுவன் கணேசன்க்கு தந்தையிடம் இருந்து அடி கிடைத்து . காரணம் தான் யாரை எதிர்த்து சிறை சென்றாரோ அந்த வெள்ளைகாரன் படையில் ஒருவனாக தன் மகன் நடித்ததின் விளைவு. சிவாஜியின் தந்தை அடிக்க சிவாஜிக்கு மேடையில் கிடைத்த கைதட்டல் காதில் ஒலிக்க நடிகராக தீர்மானித்து நாடக குழுவில் இணைந்தார் .
சிவாஜி நாடகம் மன்றத்தின் கட்டபொம்மன் நாடகம் உருவான விதம் :
ஒரு நாடகம் நடத்தி விட்டு திருநெல்வேலி வழியாக வந்து கொண்டு இருந்த பொது சிவாஜி சாருக்கு நினைவுகள் பின் நோக்கி சென்றது , கட்டபொம்மன் நாடகத்தை முதலில் பார்த்து அதில் ஈர்க்க பட்ட சம்பவங்களை அசை போட்டு கொண்டு வந்தார் . அந்த நினைவுகளில் இருந்து உதயமானது தான் கட்டபொம்மன் நாடகம் . சக்தி கிருஷ்ணசாமியிடம் தன் ஆசையை வெளி படுத்த கட்டபொம்மன் வாழ்கை வரலாற்றை அடிபடையாக கொண்டு நாடகத்துக்கு தகுந்த சம்பவங்களை தொகுத்து நாடகத்துக்கான கதையை எழுதி முடித்தார் சக்தி கிருஷ்ணசாமி .
எனது சுயநலத்தில் பொது நலமும் கலந்து இருக்கிறது :
கட்டபொம்மனாக நடிக்க வேண்டும் என்பது சிவாஜி சாரின் பல நாள் ஆசை , ஆனால் அதை நாடகமாக எடுக்க வேறு ஒரு காரணமும் இருந்தது . சிவாஜி நாடக மன்றத்தில் சுமார் 60 நபர்கள் இருந்தார்கள் , இவர்களில் பல பேர் நாடகத்தின் வருமானத்தை மட்டுமே நம்பி இருந்தார்கள் , எனவே அடிகடி நாடகம் நடத்துவது அவசியம் , சரித்திர நாடகத்தை நடத்தும் பொது huge ஸ்டார் cast இருக்கும் , அதனால் அனைவருக்கும் வேலை , ஊதியம் இரண்டும் கிடைக்கும் , இது கட்டபொம்மன் நாடகத்தை நடத்த இரண்டாவது காரணம்
கட்டபொம்மன் நாடகத்தின் கதை முடிவான உடன் 1 வருடம் pre production வேலைகள் நடந்தது . இதற்க்கு செலவு 50,000 ரூபாய்கள்
நாடகம் வந்த காலத்தில் இந்த cost மிகவும் அதிகம்
வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தின் அரங்கேற்றமும் , அதை தொடர்ந்து நடந்த சுவையான சம்பவங்களும்
இந்த நாடகம் நடக்க சிவாஜி சார் மற்றும் கிருஷ்ணசாமி சார் இருவரையும் தவிர நாம் இந்த நேரத்தில் நினைக்க வேண்டிய இரு நபர்கள் நாடக குழுவின் இயக்குனர் SA கண்ணன் மற்றும் சண்முகம் என்ற efficient , meticulous organiser
1957 ல் கட்டபொம்மன் நாடகம் சேலத்தில் அரங்கேற்றம் . தலைமை
மு.வ. 9 நாட்கள் நடந்த இந்த நாடகம் சொல்லும் ஒரே செய்தி அரங்கேற்றம் செய்த புது நாடகம் மக்கள் ஆதரவினால் bumper ஹிட் என்பது தான் அது
ஒரு முறை ராஜாஜி அவர்கள் நாடகத்தின் இடைவேளையில் மயங்கி விழந்து விட்டார் , சிவாஜி சார் பதறி போய் வந்த உடன் அவரிடம் strong ஆக காபி வாங்கி குடித்து விட்டு மேற்கொண்டு நாடகத்தை நடத்த சொன்னவர் சிவாஜி சாருக்கு ஒரு சால்வை அணிவித்து சிறிது நேரம் நாடகத்தை பற்றி பேசினார் .
பிறகு மேடையில் இருந்து கிழே இறங்கியவர் மீண்டும் மக்களை பார்த்து சிவாஜி கட்டபொம்மன் ஆக நன்றாக நடிக்கிறான் , நாட்டுக்கு தேவையான நல்ல விஷயங்களை கூறி இருக்கிறார் , இதை ஜீரணிக்க உங்களுக்கு திராணி இருக்கா என்று கூறி சென்று விட்டார்
ராஜாஜியின் பாராட்டு கோடி ருபாய்க்கு சமம்
கட்டபொம்மன் கிட்ட தட்ட 100 தடவைகள் நடந்தது , அந்த நாடகம் நடந்த சமயத்தில் நடிகர் திலகம் ஒரு பிஸியான நடிகர் இருந்தாலும் நாடகம் தாமதம் இன்றி நடந்தது . நாடகம் 6 மணி என்றால் நாடகம் சரியான நேரத்துக்கு தொடங்கி விடும்
நாடகத்தில் நடித்துகொண்டு இருக்கும் பொது ரத்தம் குபுக் என்று வந்து கொண்டு இருக்கும் , எதற்கும் கவலைபடாமல் இவர் நடித்து கொண்டே இருப்பார் , நாடகத்தில் வசனம் பேசும் பொது நாடகத்தின் வசனம் அடிவயிற்றில் இருந்து வருகிறதா இல்லை இதயத்தில் இருந்து வருகிறதா என்றே அறியமுடியாமல் நடித்து கொண்டே இருப்பார் நடிகர் திலகம்
வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் படமானது :
நாடகத்தின் வெற்றி திரு பந்தலு அவர்களை கட்டபொம்மன் கதையை படமாக எடுக்க தூண்டியது , அதன்படி உருவானது தான் வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற படம் 1959 ல் வெளிவந்தது
இந்த படத்துக்கு research work தலைவராக ம .பொ . சிவஞானம்
அங்கத்தினாராக
சக்தி கிருஷ்ணசாமி , பந்துலு , கணேசன் , P. A. குமார் , K. சிங்கமுத்து and S. கிருஷ்ணசுவாமி என்று பலரும் பங்கேற்று படத்தின் கதைகருவுக்கு வலு சேர்த்தார்கள்
வெள்ளையதேவனாக திரு SSR நடிப்தாக இருந்தது , சிவகங்கை சீமை படத்தில் நடித்து கொண்டு இருந்ததால் அவரால் அந்த commitment ல் இருந்து வரமுடியாமல் போகவே ஜெமினி கணேசன் அந்த பாத்திரத்தில் நடித்தார் . அப்போது திரு சாவித்ரி கர்பமாக இருந்ததால் ஜெமினி வர தயங்க நடிகர் திலகத்தின் வேண்டுகோளுக்கு இணங்கி சாவித்ரி ஜெமினி கணேசனை நடிக்க ஜெய்பூர் அனுப்பி வைத்தார் . தினமும் ஜெய்பூர் ல் இருந்து சென்னைக்கு trunk call செய்து சாவித்ரியின் உடல் நலம் குறித்து விசாரிபாரம் ஜெமினி கணேசன்
படம் வெளி வந்தது பெரும் வெற்றி பெற்றது , இது அனைவருக்கும் தெரிந்தது .
கட்டபொம்மன் பெற்ற விருது , கெளரவம் :
ஆப்ரிக்க ஆசிய திரைப்பட விழா :
1960 ல் ஆப்ரிக்க ஆசிய திரைப்பட விழாவுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் படம் தேர்வு செய்ய பட்டது ,அங்கும் அரசியல் செய்ய பார்த்து வேறு ஒரு படத்தை ணைபின்னர்கள் , ஆனால் வீரபாண்டிய கட்டபொம்மன் படம் தான் தேர்வு செய்யப்பட்டது . இந்த விழாவில் பங்கேற்க பந்தலு , பத்மினி , சிவாஜி எகிப்து சென்றார்கள் . விழாவில் வீரபாண்டிய கட்டபொம்மன் படம் திரைட பட்டது , இங்கே நம் ஊரில் கை தட்டி ரசித்ததை போலே , அங்கேயும் ரசிக்க பட்டது
பெஸ்ட் ஹீரோ விருது நம்மவருக்கு , விருது அறிவித்ததும் ஒரு வித பரபரப்பில் மயங்கி விழுந்து விட்டார் நடிகர் திலகம் , பிறகு மேடைக்கு சென்ற உடன் 5 நிமிடம் standing ovation மரியாதை கிடைத்தது நம்மவருக்கு
மேலும் சிறந்த இசை , டான்ஸ் , கதை இந்த category ல் கட்டபொம்மன் விருது கிடைத்தது
அதிபர் நாசர் சென்னை வருகை :
எகிப்து விழாவில் அதிபர் நாசர் பங்கேற்கவில்லை , காரணம் அவர் சிரியா சென்று இருந்தார் , அதிபர் வீட்டுக்கு சென்ற பட குழு அதிபரின் மனைவி உடன் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசும் பொது அதிபர் வரமுடியாமல் போன காரணத்தை சொல்லி மன்னிப்பு கேட்டார் அதிபர் மனைவி .
நாசர் இந்திய வருவது அறிந்த நடிகர் திலகம் பிரதம மந்திரி நேருவிடம் அதிபர் சென்னை வரும் பொது சிறிது நேரம் தன்னுடைய விருந்தாளியாக இருக்க வேண்டும் என்று கேட்டு கொள்ள 2 மணி நேரம் அதிபர் நாசர் சிவாஜியின் விருந்தாளியாக இருந்து சிறப்பித்தார்
அதிபரை வரவேற்க சில்ரன் தியேட்டர் முழுவதும் தேச தந்தை காந்திஜியின் படங்கள் மற்றும் இந்திய நாட்டின் பெருமையை எடுத்து கூறும் படங்களால் அலங்கரித்தார்கள் , மேலும் RED CARPET வரவேற்பு அளிக்க பட்டது . வெள்ளியில் ஷீல்ட் , ல் நடராஜர் சிலைக்கு இருபக்கமும் பிரமிட், மற்றும் தஞ்சாவூர் கோபுரம் , மேலும் யானை , ஒட்டகம் வடிவமும் செய்து அதிபருக்கு வழங்க பட்டது . இதற்க்கு சிகரம் வைத்தது போல் ஆங்கிலத்தில் திருக்குறள் பொரிக்க பட்ட தங்க தகடும் கொடுக்க பட்டது , அதற்க்கு ஒரு மொள்வியை வரவழைத்து அரபு மொழி வாசகங்களை பொரித்து அதையும் பரிசாக வழங்கி நாசர் அவர்களை கௌரவித்தார்கள்
SSR சிவகங்கை சீமையில் நடித்தால் தான் கட்டபொம்மன் படத்தில் நடிக்க வில்லை என்பது அனைவரும் அறிந்தது ,
வீர பாண்டிய கட்டபொம்மன் படத்தின் துவக்க விழாவுக்கு கவிஞர் கண்ணதாசன் சென்று இருந்தார் அப்படி இருக்கும் பொது
சிவகங்கை சீமை கட்டபொம்மன் படத்துக்கு போட்டியாக எடுக்க பட்ட படமா ?
சிவகங்கை சீமை மருதுபாண்டியர் கதை , கட்டபொம்மன் படமும் , சிவகங்கை சீமை படமும் ஒரே கதை என்று கதை கட்டி விட்டார்கள் . ஆனால் உண்மையில் அப்படி இல்லை
கட்டபொம்மன் இறந்த பிறகு , ஊமைத்துரை சிறையில் அடைக்க படுகிறார் , அத்துடன் முடிவது வீர பாண்டிய கட்டபொம்மன்
ஆனால் ஊமை துறை தப்பித்து வருவதில் இருந்து தொண்டங்குவது தான் சிவகங்கை சீமை கதை . sequel (கட்டபொம்மன் படத்தை பார்த்து விட்டு இந்த படத்தை பார்த்தல் ஒரு பெரிய novel படித்தது போல். இருக்கும் .
படத்தின் preview பார்த்த AVM கட்டபொம்மன் வெளிவந்து 2-3 மாதம் கழித்து சிவகங்கை சீமை படத்தை ரிலீஸ் செய்தால் பணம் பார்க்கலாம் என்று சொல்ல அதை செய்யாமல் படத்தை கட்டபொம்மன் வெளிவந்து 2 வாரத்தில் அவசரமாக படத்தை ரிலீஸ் செய்ததால் படம் தோல்வியை தழுவியது
காரணம் கட்டபொம்மன் படத்தின் grandeur , சிவாஜியின் வசனம், நடிப்பு சகலமும் படத்தின் + points
வீரபாண்டிய கட்டபொம்மன் படம் முதல் டெக்னி கலர் படம் மேலும் ஜெய்பூர் அரண்மனையில் படம் பிடிக்க பட்டது . நடிகர் திலகம் கட்டபொம்மன் அவர்களுக்கு சிலை , நினைவு சின்னம் எழுபின்னர் , இந்த நாடகத்தின் வசூல் பல பொது காரியங்களுக்கு தானமாக கொடுக்க பட்டது .
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
26th August 2015, 03:27 PM
#954
Senior Member
Diamond Hubber
நண்பர் சந்திரசேகர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் .
அதே நன்னாளில் அவர் அரும்பாடு பட்டு வலியுறுத்தி வந்த நடிகர் திலகம் மணிமண்டப அறிவிப்பு வந்தது இரட்டிப்பு மகிழ்ச்சி.
முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி!
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

-
26th August 2015, 03:58 PM
#955
Junior Member
Diamond Hubber
சிவாஜிக்கு மணி மண்டபம்... ஜெயலலிதாவுக்கு பிரபு நன்றி! Posted by: Shankar Published: Wednesday, August 26, 2015, 14:21 [IST] Share this on your social network: Facebook Twitter Google+ Comments (0) Mail மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் இன்று அறிவித்ததற்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார் சிவாஜி மகன் பிரபு. ADVERTISEMENT ஜெயலலிதாவின் அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரபு கூறுகையில்: Manimandapam for Sivaji: Prabhu Thanked Jayalalithaa எங்கள் தந்தை சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று முதல்வர் அம்மா அறிவித்து இருப்பது எங்கள் குடும்பத்தினருக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் திலகத்தின் லட்சக்கணக்கான ரசிகர்களும் மகிழ்ச்சியில் திளைத்துப் போய் இருக்கிறார்கள். எங்களின் உச்சியை குளிர வைத்த அம்மாவுக்கு எனது சார்பிலும், அண்ணன் ராம்குமார் சார்பிலும், மகன் விக்ரம்புரபு சார்பிலும் மற்றும் குடும்பத்தினரின் அனைவரது சார்பிலும், ரசிகர்கள் சார்பிலும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.
Read more at: http://tamil.oneindia.com/news/tamil...aa-234295.html
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
26th August 2015, 05:25 PM
#956
Junior Member
Seasoned Hubber
Courtesy: Tamil Hindu
சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்ததற்காக தமிழக அரசுக்கு நடிகர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''நடிகர் திலகத்தை மரியாதையுடன் நினைவுகூரியதில் அரசு, நடிகர் இனத்திற்கும் தனக்கும் பெருமை சேர்த்துக்கொண்டது. கண்ணும் மனதும் நிறைய, நன்றி.
அன்னாரது வாரிசு எனத் தம்மை அடையாளம் காட்டிக்கொள்ள முற்படும் பல்லாயிரம் பேரில் நானும் ஒருவன்'' என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
26th August 2015, 05:38 PM
#957
Junior Member
Devoted Hubber
Wish you Happy Birthday to Mr. Chandra sekhar and congrats for Mani mandapam news also.
-
26th August 2015, 05:41 PM
#958
Senior Member
Diamond Hubber
இந்த நேரத்தில் அரசியல் பேசி குறை சொல்லக் கூடாது என்றாலும் .. தேர்தல் நெருங்கும் நேரத்தில் நடிகர் திலகம் சிவாஜியின் கடற்கரை சிலையை அகற்றுவது குறித்து அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில் , சிலையை அகற்றலாம் என சொன்னால் அதிருப்தியை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால் ..மணிமண்டபம் என அறிவிப்பு வரும் முன்னே , சிலை அகற்றப்பட்டு மணிமண்டபத்தில் வைக்கப்படும் என அறிவிப்பு வரும் பின்னே .
ஒரே கல்லில் பல மாங்காய் அடித்த புரட்சித் தலைவிக்கு வாழ்த்துகள்
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
26th August 2015, 06:07 PM
#959
Junior Member
Devoted Hubber
இந்த நேரத்தில் அரசியல் பேசி குறை சொல்லக் கூடாது என்றாலும் .. தேர்தல் நெருங்கும் நேரத்தில் நடிகர் திலகம் சிவாஜியின் கடற்கரை சிலையை அகற்றுவது குறித்து அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில் , சிலையை அகற்றலாம் என சொன்னால் அதிருப்தியை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால் ..மணிமண்டபம் என அறிவிப்பு வரும் முன்னே , சிலை அகற்றப்பட்டு மணிமண்டபத்தில் வைக்கப்படும் என அறிவிப்பு வரும் பின்னே .
எனக்கும் அந்த சந்தேகம் வந்துள்ளது. ஜோ உங்கள் பதிவை பார்த்த பின்.
-
26th August 2015, 06:20 PM
#960
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
Bookmarks