Page 310 of 400 FirstFirst ... 210260300308309310311312320360 ... LastLast
Results 3,091 to 3,100 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #3091
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    வாசு ஜி...

    பருவமொட்டி பாடல் நல்லா தெரியும்.

    கன்னிப் பெண்ணே ! கன்னிப் பெண்ணே !


    இந்தப் பாட்டு கேட்டிருக்கிறேன். ஆனால் வேறு எதுவுமே நினைவில்லை. படம், பாடியவர் எல்லாமே நீங்க சொல்லித்தான் கேள்விப்படுகிறேன்.
    கம்ப்ளீட்டா க்ளீன் ஸ்லேட்... ஆனா பாட்டு.... பிரம்ம்மாஅதம்..

  2. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355 liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #3092
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்



    (நெடுந்தொடர்)

    29

    'ஓ மைனா...ஓ மைனா'



    'நான்கு சுவர்கள்'

    பாலா தொடரில் இன்று இதுவரை எழுதிய பாலா பாடல்களையெல்லாம் தூக்கிச்சாப்பிட்டு ஏப்பம் விட்ட பம்பர் பாடல் பற்றி பேசப் போகிறோம். பேய் ஹிட். பிசாசு ஹிட்டடித்த பாடல்.

    பாலச்சந்தர் இயக்கிய 'நான்கு சுவர்கள்' படத்தில் இடம் பெற்று பட்டி தொட்டிகளெல்லாம் ஒலித்த,

    'ஓ மைனா...ஓ மைனா' பாடல்தான் இன்று உங்களை மகிழ்விக்கப் போகிறது.

    ஜெய், ரவி என்ற அப்போதய இரண்டாம் நிலை சூப்பர் ஸ்டார்கள் கை கோர்த்து, அட நிஜமாகவே கைகளை சங்கிலியால் கோர்த்துக் கொள்ள, ரவி தன் காதலி வாணிஸ்ரீயுடன் கோவாவின் பிரம்மாண்ட கடற்கரைகளில் மலைப் பாறைகளுக்கு நடுவே பாடும் பாடல்.

    இந்தப் பாடலைத் தெரியாதவர்களே இருக்க முடியாது இன்று வரையிலும் கூட.


    ரவி, ஜெய் ஊருக்கு நல்லது செய்ய நினைக்கும் முரட்டு இளைஞர்கள். ஜெய் குடிகாரர். இதனால் வருத்தமுரும் ரவிக்கும், ஜெய்க்கும், அடிக்கடி தகராறு நடக்கிறது. இவர்களுக்குத் தாய் போல இருக்கும் சௌகார் 'ஒன்றாக இருந்தாலாவது ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொள்வீர்களா என்று பார்ப்போம்?' என்று இருவர் கைகளையும் சங்கிலியால் பிணைத்து விடுகிறார். இருவரும் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் கடற்கரை பக்கம் வர, அங்கு தன் காதலி வாணிஸ்ரீயின் நினைவாக ரவி வாட, அதைப் புரிந்து கொண்ட ஜெய் வாணியை ரவிக்குக் காட்டுகிறார். சங்கிலியுடன் ஜெயசங்கரை அருகில் வைத்துக் கொண்டே ரவி வாணியிடம் ஓடி ஓடி 'ஒ மைனா' பாடலைப் பாடுகிறார்.

    என்ன ஒரு பாடல்?! பாலாவின் கேரியரில் மறக்க முடியாத மரகதப் பாடல்.


    'ஓ ஓ ஓ ஓஹோ' என்று ஹம்மிங் எடுத்து 'லா லாலா' என்று பாலா தொடங்கும் போது நம் உடல் சில்லிட்டுப் போகும். இந்தப் பாடலை முணுமுணுக்காதவர்களே இருக்க முடியாது. அவ்வளவு பிரபலம். வானொலி, பூங்கா, கல்யாணம் என்று அத்தனை நிகழ்ச்சிகளிலும் எதிரொலித்த பாடல். பாலாவை 'சூப்பர் சிங்கராக' ஆக்கிய பாடல்.

    பாடலின் வெளிப்புறக் காட்சி பிரம்மாண்டங்கள் அதுவரை தமிழ் உலகம் காணாதவை. கற்பாறைகளும், அலையில்லாத கடலும், வளைந்த தென்னை மரங்களும் நம்மை கோவாவுக்கே அழைத்துச் செல்வது போல பரவசமூட்டுகின்றன.

    சங்கிலி கைகளைப் பிணைத்திருக்க, ரவி ஜெயசங்கரை இழுத்தபடியெல்லாம் ஓடி ஓடி வாணியை லவ்ஸ் விடுவது புதுமை. ரசிக்கத்தக்கது. ஜெய் நன்றாகவே பண்ணியிருப்பார் சற்று வழக்கத்திற்கும் மாறாக. ரவி அஸ் யூஷுவல். வாணி பேன்ட், ஷர்ட்டில் தலையில் கேப் அணிந்து கியூட்.

    இந்தப் படத்தைப் பற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. பாலச்சந்தர் போய் இப்படி படம் எடுக்கலாமா என்றெல்லாம். அதில் ஓரளவிற்கு உண்மையும் இருந்தது. ஆனால் பாலு கதை, இயக்கத்தில் கோட்டை விட்டிருந்தாலும் அவருக்கே பிடித்தமான, உரித்தான பாறைகளில் மோதும் கடல் அலைகள், அருமையான லொகேஷன்கள், அப்புறம் விஜயலலிதா, சௌகார் என்று அவர் முத்திரையைப் பதிக்கத் தவறவில்லை.
    இப்படத்தின் நாயகர் ஒளிப்பதிவாளர் பாலகிருஷ்ணன்தான். ஒரே வார்த்தை. எக்ஸலன்ட்.

    'மெல்லிசை மன்னரி' ன் உழைப்பு அபாரம். இந்த ஒரு பாடலால் படத்தின் மற்ற பாடல்கள் பஸ்பமாகிப் போயின.


    இன்னொரு முக்கியமான கவனிக்கப்பட வேண்டிய விஷயம். இதே பாடலை ரவியை வெறுப்பேற்ற ஜெய் விஜயலலிதாவுடன் அதே லொகேஷன்களில் பாடுவார். அது பாலா பாடல் அளவிற்கு பிரபலமாகவில்லை. பாடியது யார் தெரியுமா? நம் 'பாடகர் திலகம்'தான். ஆனால் பிரமாதத்திலும் பிரமாதம்.

    ஆனால் என் கருத்தைச் சொல்லி விடுகிறேன். இப்பாடலில் ரவி ஜெய்க்கு சொல்லும் புத்திமதி வசனங்கள் நடுநடுவே வரும். ('மானல்லடா இது... தேனல்லடா இது') இப்பாடலை சௌந்தர்ராஜன் பாடுவதை என்ன சொல்லிப் பாராட்ட!? சும்மா தெனாவட்டும், திமிருமாக அவர் பாடுவதை இன்று முழுக்கக் கேட்கலாம். பாலா 'ஓ மைனா' என்று குழைவார் என்றால் டி.எம்.எஸ். கம்பீரத்துடன் அழுத்தம் கொடுத்து 'ஒ மைனா' பாடுவார். 'உன் கிளியை நீ அணைத்தால் என் கனியை நான் சுவைப்பேன்' என்ற எகத்தாளம் ஒன்று போதும்.

    இந்தப் பாடலை அதிகம் பேர் கேட்டிருக்க மாட்டார்கள். பாலா பாட்டை மட்டுமே கேட்டிருப்பார்கள். ஆனால் இரண்டு பாடலகளையும் ஒரு தராசில் வைத்து நியாயம் கேட்டால் தராசின் முள் நடுவில் நிற்காமல் அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் மாறி மாறி சாய்ந்து கொண்கொண்டேதான் இருக்கும். தீர்ப்பளிப்பது ரொம்பக் கஷ்டம். வைஜெயந்திமாலா, பத்மினி போட்டி நடனத்திற்கு தீர்ப்பு சொல்வது போல. அதில் ஜெமினி முடிவு எட்டப் படுவதற்கு முன்னரேயே விளக்கை அணைத்து அரங்கை இருட்டாக்கி விடுவார். இங்கு யார் உதவுவது?

    ஆனால் என் தீர்ப்பு என்ன தெரியுமா? பலமுறை கேட்டு கேட்டு எது நன்றாய் இருக்கிறது என்று குழம்பி குழம்பி இறுதியில் இரு இழை வித்தியாசத்தில் என் ஓட்டு போனது யாருக்குத் தெரியுமா? சாட்சாத் டி.எம்.எஸ்.பாடிய 'மைனா'வுக்குத்தான். மன்னிக்க வேண்டும். இது எனது தனிப்பட்ட சொந்த கருத்துதான். இந்தப் பாடலைப் பற்றிப் பிறகு எழுதுகிறேன்.


    பாலாவுக்கு அனைவரும் திருஷ்டி சுற்றி போட வேண்டும் இப்பாடலை அவர் பாடி சிறப்பித்ததற்கு. என்ன குரல்! என்ன குரல்!

    முதல் வரி 'ஓ மைனா... ஓ மைனா' முடிந்ததும் வரும் அந்தக் குழலிசை நெஞ்சை அள்ளிக் கொள்ளும். அதே போல 'டங்க்டடங்க்டடைன்' என்று கணநேரத்தில் ஒலிக்கும் மெல்லிய கிடார் இசையும்.

    பல்லவி முடிந்ததும் இழையும் அந்த சாக்ஸ் சாகசம் அற்பதம். இப்பாடலில் மன்னர் தரும் இசைக்கருவிகளின் ஆதிக்கத்தை எவரும் அவ்வளவு எளிதாக அளந்துவிட முடியாது. குறிப்பாக 'மைனா'வுக்குப் பின்னால் வரும் பாங்கோஸ் உருட்டல்கள். மிரட்டல்கள்.

    'முன்னுரையை நான் எழுத
    முடிவுரையை நீ எழுத'

    எனும் போது 'முடிவுரையை.....யை' உச்சரிக்கும் விதமே அலாதி. இப்படி பாலாவின் பஞ்ச்கள் அளவாக, அழகாக இப்பாடலில் ஏராளம். கண்ணதாசன் வரிகள் கண்பட்டுப் போகும்.

    'தாமரைப்பூ காலெடுத்து வீதி வலம் போவது போல்'

    ஒன்று போதும் உதாரணத்திற்கு. 'வீதி வலம்' கவனிக்க. 'பொன் மீ...னா' என்பதை இவர் கொஞ்சியபடி குழைவில் தருவது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதது.




    லா... லால்லா
    லாலாலா லலால்லா
    லாலாலா லாலா லாலாலா
    லாலாலாலாலா

    ஓ மைனா! ஓ மைனா!
    ஓ மைனா! ஓ மைனா!
    இது உன் கண்ணா
    பொன்மீனா
    ஓடும் புள்ளிமானா
    பூவில் சிந்தும் தேனா
    ஓடும் புள்ளிமானா
    பூவில் சிந்தும் தேனா

    முன்னுரையை நான் எழுத
    முடிவுரையை நீ எழுத
    முன்னுரையை நான் எழுத
    முடிவுரையை நீ எழுத
    நம் உறவை ஊரறிய
    நான் தரவா நீ தரவா
    நம் உறவை ஊரறிய
    நான் தரவா நீ தரவா
    ஆட வந்த தோகை ஒன்று
    தேடி வந்த மேகம் ஒன்று
    ஆட வந்த தோகை ஒன்று
    தேடி வந்த மேகம் ஒன்று
    நாடறிந்த காதல் இன்று
    நாணமென்ன வேண்டும் இங்கு
    இரவென்ன பகலென்ன
    இதிலென்ன தொடரட்டுமே

    ஓ மைனா! ஓ மைனா!
    ஓ மைனா! ஓ மைனா!
    இது உன் கண்ணா
    பொன்மீனா
    ஓடும் புள்ளிமானா
    பூவில் சிந்தும் தேனா

    தாமரைப்பூ காலெடுத்து
    வீதி வலம் போவது போல்
    தாமரைப்பூ காலெடுத்து
    வீதி வலம் போவது போல்
    நீ நடந்த பாவனையை
    நான் எழுத மொழியில்லையே
    மேலிருந்து பார்த்த வண்ணம்
    பாலிருக்கும் வெள்ளிக்கன்னம்
    மேலிருந்து பார்த்த வண்ணம்
    பாலிருக்கும் வெள்ளிக்கன்னம்
    தூது சொல்லக் கேட்ட பின்னும்
    காலம் என்ன நேரம் என்ன
    வரவிடு தரவிடு இனிப்பது இனிக்கட்டுமே

    ஓ மைனா! ஓ மைனா!
    ஓ மைனா! ஓ மைனா!
    இது உன் கண்ணா
    பொன்மீனா
    ஓடும் புள்ளிமானா
    பூவில் சிந்தும் தேனா
    ஓடும் புள்ளிமானா
    பூவில் சிந்தும் தேனா

    லா... லால்லா
    லாலாலா லலால்லா
    லாலாலா லாலா லாலாலா
    ஹோஹோஹோ
    ம்ம்ம் ஹூம்
    Last edited by vasudevan31355; 28th August 2015 at 11:47 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. Likes Russellmai, eehaiupehazij, madhu liked this post
  6. #3093
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    வாசு ஜி... excellent writeup...

    கிக்கிக்கி... வழக்கம் போலவே .... எனக்கும் டி.எம்.எஸ் பாடிய ஓ மைனா ரொம்ம்ம்ம்ம்பப் புடிக்கும்... ஊர் சிரிக்கப் பண்ணாதேடா என்று கெஞ்சினாலும்

    "சாட்சி வைத்து காதல் செய்யும் காட்சியை நான் அன்று கண்டேன்
    சாட்சியைத்தான் மாற்றி விட்டேன். காட்சியைத்தா திருப்புகின்றேன்"

    அம்மாடியோ... என்ன ஒரு வயத்தெரிச்சல் இருந்திருந்தா இப்படி சொல்லத் தோணும் ? உணர்வு பூர்வமாக பாடுவது போலத் தோன்றும். பாலா எப்பவும் போல தேன் வடிய பாடிவிட்டு போயிருப்பார்

  7. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355, eehaiupehazij liked this post
  8. #3094
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by madhu View Post

    அம்மாடியோ... என்ன ஒரு வயத்தெரிச்சல் இருந்திருந்தா இப்படி சொல்லத் தோணும் ? உணர்வு பூர்வமாக பாடுவது போலத் தோன்றும். பாலா எப்பவும் போல தேன் வடிய பாடிவிட்டு போயிருப்பார்
    நன்றி மது அண்ணா!

    உண்மை. அப்படியே என் மனதில் உள்ளதை பிரதி எடுத்து உங்கள் பதிவாக அளித்து விட்டீர்கள். பாலா தேனொழுக பாடினார் என்றால் டி.எம்.எஸ்.தேள் கொடுக்கு வாயில் வைத்துப் பாடுவார். ஒவ்வொரு முறை கேட்கும் போதும் பாடகர் திலகத்தின் இந்த 'வயிற்றெரிச்சல்' பாட்டின் போது உங்களுடைய 'அம்மாடியோவ்' எனக்கும் எழும். மேலும் பாலா பாடல் அளவிற்கு அதைவிட சிறப்பான இந்தப் பாடல் பிரபலமாகவில்லையே என்று தனியாக ஒரு வயிற்றெரிச்சல் இன்னும் என்னுள் இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆத்திரமும் கூட சேரும். என்ன பண்ண! இப்போதான்... உங்கள் பதிலைப் பார்த்ததும்தான் 'ஆஹா நம்மைப் போலவே இன்னொருத்தரும் இருக்கார்' என்று கொஞ்சம் ஆத்திரம் தணிந்துள்ளது.

    டி.எம்.எஸ். 'ஓடும்' என்று அழுத்தம் திருத்தமாக உச்சரிப்பார்.

    'இப்ப புரியுதா?' ரகளையோ ரகளை.

    அந்த 'ஹஹ்ஹஹ ஹஹ்ஹஹ ஹா' கம்பீரக் கொக்கரிப்பு.

    'ஓமைனா' சொல்லிவிட்டு பின் அதையே மறுபடியும் கொஞ்சம் கேப் விட்டு ('ஓ...மைனா') சொல்லும் அற்புதம்.

    'பெண்ணுக்கும் பேய்க்கும் பேதம் தெரியலையா? வேண்டாண்டா!' என்று ரவி சொன்னதும்,

    'ஊரறிய கொஞ்சுவதில் உனக்கிருந்தால் எனக்கில்லையோ'

    என்று

    'நீ மட்டும் அன்னைக்கு கொஞ்சுனியே... நான் மட்டும் என்ன இளிச்சவாயனா?' என்ற அர்த்தத்தில் குரூரம் காட்டும் அந்தக் குரல் பாவம்.

    அப்படியே அந்த வஞ்சம் மாறி காதலின் மேன்மையை, மென்மையை

    'காதலெல்லாம் உண்மைதானே
    காண்பதெல்லாம் பெண்மைதானே'

    வரிகளில் கொண்டு வந்து இனிமை கூட்டுவார். 'தேனா?' அலட்சியமும் அட்டகாசம். பாவம் என்றால் அது இவர் ஒருவர் மட்டும்தான்.

    அப்போதிலிருந்தே இந்தப் பாட்டின் மீது எனக்கு ஒரு தனி கண். இன்னொன்று. ஜெய் நல்ல ஒத்துழைப்பு.

    Last edited by vasudevan31355; 28th August 2015 at 12:24 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. Likes Russellmai, eehaiupehazij liked this post
  10. #3095
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    வாசு வழக்கம் போல பாலா பாட் அமர்க்களமான பாட்..அலசலும் நைஸ்.;.பட் ஒரு விஷயம் என்னன்னாக்க

    இந்த டி.எம்.எஸ் பாட்டும் கேட்டதே கிடையாது.. ரொம்ப நாள் முன்னால் நா.சு சின்ன வயசுல பார்த்தது..அதற்கப்புறம் பார்க்கவில்லை.. எனில் டி.எம்.எஸ் சாங்க் சர்ப்ரைஸ் ஓனம்கிஃப்ட் ஃபார்மி.. சரி.ன்னு அது கேட்டுமுடிச்சா இன்னொரு பாட்டும் நன்னா இருக்கேங்க..



    இதுவும் பாலா குரல் மாதிரி இருக்கே..


    நினைத்தால் நான் வானம் சென்று
    நிலவில் ஓடி ஆடி உன்னை
    நெருங்கி நெருங்கிப் பாடுவேன்

  11. Likes vasudevan31355 liked this post
  12. #3096
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    இன்னொரு பாட் கிடைச்சது.. ஓணம் ஸ்பெஷல்னு வேணும்னா போட்டுக்கலாம்

    பாவம் சுபா ஏன் வெறிச் வெறிச்சுன்னு வெ.ஆ. நியைப் பார்க்கிறார்.. கே.ஜே.ஜேசுதாஸ் பி.எஸ்.. எம்.பி.ஸ்ரீனிவாசன்..அவர்யாராம்..

    பொன்னும்மயங்கும் பூவும் மயங்கும்
    கண்ணில் பார்வை தன்னில் தெய்வம் வணங்கும்

    என் கண்ணில் என் கண்ணில்
    பொன் முத்துப்போல் தோன்றும் அன்பு விளக்கு..



  13. Thanks vasudevan31355 thanked for this post
    Likes Russellmai liked this post
  14. #3097
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சின்னா!

    தேங்க்ஸ்.

    'நினைத்தால் நான் வானம் சென்று
    நிலவில் ஓடி ஆடி உன்னை
    நெருங்கி நெருங்கிப் பாடுவேன்'

    தொடரின் அடுத்த பாட்டு. ஓ.கே வா?

    அப்புறம் 'பொன்னும் மயங்கும்' போட்டாச். நானில்லை...நீங்களேதான். இதே சந்தேகக் கேள்விதான். அதற்கும் நான் பதில் அளித்திருக்கிறேன். இருந்தாலும் ஞாபகமறதி எல்லோருக்கும் பொது என்பதால் மறுபடியும் சொல்கிறேன். தப்பே இல்லை. 'வெறிச் வெறிச்'சுன்னு பார்க்குறது கன்னட மஞ்சுளா. அதாவது 'துளி துளி துளி துளி மழைத்துளி' மஞ்சுளா. அதாவது 'புது வெள்ளம்' மஞ்சுளா. படம் 'எடுப்பார் கைபிள்ளை'. இப்போ நினைவுக்கு வருதா? நீங்க யூ டியூப்' ல 'சுபா' ன்னு போட்டுட்டதனால சுளுவா ஏமாந்துட்டீங்க.

    இதே படத்தில் 'அழகு ராணி கதை இது' பாடலுக்கு வடக்கத்திய நடனம் ஒன்றை மஞ்சுளா ஆடியிருப்பார். ஜெய் டோலக், புல்லாங்குழல் எல்லாம் வாசிச்சு நம்மை சோதனை செய்வார். அதை மட்டும் ஏன் விட்டு வைக்கணும்? பார்த்துடுங்க. அதில் கூட 'ராணி' யை விட்டு விட்டார்கள். சுசீலா அம்மா தெளிவாகப் பாடியிருப்பாங்க. அப்புறம் இன்ஸ்பெக்டர் யாருன்னு கேக்காதீங்க. கேட்டாலும் சொல்றேன்.

    Last edited by vasudevan31355; 28th August 2015 at 01:44 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  15. Thanks chinnakkannan thanked for this post
    Likes Russellmai liked this post
  16. #3098
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    ரவிஜி படைத்திட்ட ஓணம் விருந்து ஐட்டங்கள் கண்ணுக்கும் மனதுக்கும் நிறைவைத்தந்தாலும் கைக்கெட்டியது வாய்க்கு எட்டவில்லையே சி க !
    வாசு சார் உங்கள் பிரசினைகள் ஒரு தீர்வுக்கு வந்து கொண்டிருப்பது ஆறுதலே !

  17. Likes chinnakkannan liked this post
  18. #3099
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சின்னா!



    இசையமைப்பாளர் எம்.பி.ஸ்ரீனிவாசன் பத்திக் கேட்டிருந்தீங்க. ரொம்ப அருமையான அபூர்வமான இசையமைப்பாளர் அவர். உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அகில இந்திய வானொலி நிலையத்தில் நிகழ்ச்சிகளில் பல பாடல்களுக்கு இசை அமைத்தவர் இவர்தான். அப்போது தூர்தர்ஷன் பார்த்து இருந்தீர்களானால் ஒரு நிகழ்ச்சிக்கும், இன்னொரு நிகழ்ச்சிக்கும் இடையே வரும் இடைவெளி நேரங்களில் ஒரு இசையமைப்பாளர் பல பாடகர்களை ஒரே மேடையில் கட்டி ஆண்டு கொண்டிருப்பார். அவர்தான் ஸ்ரீனிவாசன். கோரஸ் குரல்களை ஆழமாக நம் நெஞ்சில் பதிய வைப்பதில் வல்லவர். தேச பக்திப் பாடல்கள், குழந்தைகள் பாடல்கள், மத வழிபாட்டுப் பாடல்கள் என்று அருமையான இசையோடு பாடல்களை ஆழமாக நெஞ்சில் புதைப்பதில் ஸ்ரீனிவாசன் வல்லவர்.

    'பாதை தெரியுது பார்' என்று 'திரிசூலம்' படத்தின் இயக்குனர் கே.விஜயன் ஹீரோவாக நடித்து ஒரு திரைப்படம் வந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம். அந்தப் படத்திற்கு இசை எம்.பி.ஸ்ரீனிவாசன்தான்.

    பி.பி.ஸ்ரீனிவாஸ், ஜானகி வித்தியாசமான குரல்களில் பாடி மிக மிக வித்தியாமான பாடலாய் ஒலித்த,

    'தென்னங்கீற்று ஊஞ்சலிலே
    தென்றலில் நீந்திடும் சோலையிலே
    சிட்டுக் குருவி ஆடுது
    தன் பெட்டைத் துணையைத் தேடுது'

    என்ற அருமையான பாடலை எவரால் மறக்க இயலும்? பாடலை இயற்றியவர் ஜெயகாந்தன்.

    அது தவிர சிவக்குமார் நடித்த, என்.வி.ஆர். பிக்சர்ஸ் தயாரித்த 'மதன மாளிகை' பாடல்களுக்கு இசையும் இவரே. விஜயன் இவருடன் 'பாதை தெரியுது பார்' படத்தில் பணி புரிந்ததால் தான் இயக்கிய 'மதன மாளிகை'க்கு இவரையே இசையமைக்க வைத்தார்.

    'ஒரு சின்னப் பறவை அன்னையைத் தேடி வானில் பறக்கிறது'

    'ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா ஏனடி நீராடுது' (நாயகி அல்கா என்னும் வடக்கத்திய இறக்குமதி)

    உதூப்பின் ஆங்கிலப் பாடல் 'மேங்கோ ட்ரீ' (under a mango tree) ('மல்லிகைப் பூ') (தலைவர் 'ரோஜாவின் ராஜா' படத்தில் வாணிஸ்ரீயுடன் தியேட்டரில் இந்தப் பாடலைப் பார்ப்பார். சுகுமாரிக்கு மாறி சாக்லேட் கொடுத்து....)

    என்று அமர்க்களமான பாடல்கள் தந்தவர்.

    மலையாளப் படங்களிலும் ஆதிக்கம் செலுத்தியவர். அவார்டுகளும் வாங்கிக் குவித்தவர்.

    இதோ அவர் இசையமைத்த 'மதன மாளிகை' படத்தின் ஆங்கிலப் பாடல்.

    Last edited by vasudevan31355; 28th August 2015 at 03:06 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  19. Thanks chinnakkannan thanked for this post
    Likes Russellmai, chinnakkannan liked this post
  20. #3100
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார்
    தங்கள் கட்சியே நானும்..
    ஆமாம்.. நான்கு சுவர்கள் படத்தைப் பொறுத்த மட்டில் ஓ மைனா பாடலை டிஎம்எஸ் பாடியதை நான் மிகவும் விரும்புவேன் ... பாடகர் திலகத்தின் குரல் மட்டுமின்றி ரவியின் குரலும் ஒலிக்கிறதே.. அதற்காக... மெல்லிசை மன்னரின் ரிதம்.. வித விதமாக தூள் கிளப்பியிருப்பார். வசன நடையோடு சேர்ந்த பாடல்.. இதற்கு முன் உயர்ந்த மனிதனிலும் இதே உத்தி... இவையெல்லாம் My Fair Lady ஆங்கிலப்படத்தின் பாடலை நினைவூட்டும் வண்ணம் அமைக்கப்பட்டவை.
    Last edited by RAGHAVENDRA; 28th August 2015 at 05:25 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  21. Likes vasudevan31355 liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •