Page 277 of 402 FirstFirst ... 177227267275276277278279287327377 ... LastLast
Results 2,761 to 2,770 of 4018

Thread: Makkal Thilagam MGR -PART 16

  1. #2761
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    எண்ணங்களின் வண்ணங்களான எண்கள் மதுர கானங்களில் படு(த்து)ம் பாடு !!
    எண் நான்கு

    நான்கு திசைகள் நாலடியார்...நான்குதலை பிரம்மா....பெண்டிரின் நான்கு குணங்களாம் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு....நான்கு கால் விலங்கினங்கள்...நான்கு மறைகள் தரும் தீர்ப்பை நம்பினார் கெடுவதில்லை ....நாலுபேர் நாலுவிதமாப் பேசுவாங்களே என்னும் அச்சப் பக்கத்தின் மிச்சங்கள்......நாலும் தெரிந்தவரே மேதை....நாலு தட்டுத் தட்டுனா சரியாப் போயிடும் ....நாலு காசு சம்பாதிக்கிறவழியைப் பார்க்கணும்.....காருக்கு நாலு சக்கரங்கள்.....ஒரு படம் அந்தக் காலத்தில் குறைந்தது நான்கு வாரம் ஓடினால்தான் ஹிட்!.... இப்படி நாலாபக்கமும் நாலாதிக்கம் நீளுகிறது!


    எண் நான்கினை அதிகம் சிலாகித்துக் கைப்பற்றுகிறார் மக்கள்திலகம் MGR!

    நாலு பக்கம் சுவரு நடுவுலே பார் இவரு .....ஜாலியாகத் தேடி ஓடி பாடி ஆடி வருகிறார் மாப்பிள்ளை!!


    நாலு காலு சார் ....நடுவுலே ஒரு வாலு சார்.....சொர்க்கம்..



    நாலு பேருக்கு நன்றி ......



    .
    Last edited by sivajisenthil; 29th August 2015 at 08:52 AM.

  2. Likes Richardsof, ainefal liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #2762
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    திரு. சிவாஜி செந்தில் சார்,

    தங்களின் எண்கள் அடிப்படையிலான பாடல்களுக்கு மிக்க நன்றி. இரண்டுக்கு சிறப்பு சேர்த்த மக்கள் திலகம் என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பதை பார்த்தபோது, இரட்டை இலை சின்னத்தை தலைவர் தேர்ந்தெடுத்தது நினைவுக்கு வந்தது. நன்றி.
    Kalaivendhan

    Dear Kalaivendhan Sir
    உங்கள் பதில் கண்ணுற்றதும் மக்கள் திலகம் வெற்றியைக் கொண்டாட இருவிரல்களை V போல விரிப்பதும் நினைவுக்கு வருகிறது

  5. #2763
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த 100 படங்களின் நெகடிவ் பத்திரமாக தமிழக அரசின் பெட்டகத்தில உரிய பாதுகாப்புடன் வைக்கப்படும் .
    .
    1957 முதல் 1987 வரை மக்கள் திலகம் பங்கேற்ற அரசியல் கூட்டங்களின் நிழற் படங்கள் , கலந்து கொண்ட விழாக்களின் நிழற் படங்கள் அனைத்தும் பிரமாண்ட ஸைசில் டிஜிட்டல் படங்களாக மாற்றி பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்படும் .

    தமிழக அரசின் செய்தி துறை வசம் உள்ள மக்கள் திலகத்தின் 11 ஆண்டு அரசியல் விழாக்கள் வீடியோ பதிவுகள் புதுப்பிக்கப்பட்டு மக்களுக்கு காணொளியாக காண்பிக்கப்படும் .

    மக்கள் திலகத்தின் படங்கள் தினமும் பொது மக்களுக்கு இலவசமாக காண்பிக்கப்படும் .

    அதி நவீன வசதிகள் கொண்ட ''மக்கள் திலகம் எம்ஜிஆர் ''இலவச மருத்துவ மனை 234 சட்ட மன்ற தொகுதிகளிலும்
    நிறுவப்படும் .

    மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மெகா சிறப்பு மலர் வெளியிடப்படும் , நினைவு தூண் , எம்ஜிஆர் வளைவு அமைக்கபடும்.

    இப்படிப்பட்ட அறிவிப்பு தமிழக அரசிடமிருந்து அறிவிப்பு நாளே மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களின் கனவு நிறைவேறும் நாள் .

    கனவு நிறைவேறுமா ?

  6. Thanks Russellrqe thanked for this post
    Likes ainefal liked this post
  7. #2764
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    வதந்தி எந்த நேரத்திலும் பரப்பகூடாத ஒரு ஆபத்தான பயங்கர விஷவாயு ஆகும்.

    - புரட்சித்தலைவர்

  8. #2765
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    திரு. சுஹர்ரம் அவர்களே

    நாங்கள் ஒன்றும் படம் 2வது வாரம் ஓடுகிறது என்று சொல்லவில்லை தயாரிப்பாளர் கொடுத்த விளம்பரத்தை பத்திரிகை காரர் தியேட்டர் எடுக்காமல் கொடுத்து விட்டார். மேலும் திருச்சி கலை அரங்கில் ஒரு வார ஓடி முடிய வசூல் 3,65,800 ரூபாய் மொத்தம் 28 காட்சிகள் டிக்கட் விலை ரூபாய் 100. இதில் ஞாயிறு மாலை காட்சியில் 650 ஆடியன்ஸ் மற்றும் மேட்னி 313 ஆடியன்ஸ் பார்த்திருக்கிறார்கள். படத்தை 2 வது வாரம் ஓட்டியிருக்கலாம் புது படம் போடவேண்டும் என்பதற்காக எடுத்து விட்டார்கள். இதில் பாதி வசூலை வைத்து 2 வாரம் தாண்டி பல புது படங்கள் ஓடியிருக்கிறது. மேலும் எங்கள் ரசிகர்கள் 28 காட்சிகளிலும் திருச்சி கலை அரங்கில் இருந்து படத்தை கவனித்திருக்கிறார்கள். எனவே தவறான செய்தியை போட்டு குழப்பம் செய்ய வேண்டாமென கேட்டு கொள்கிறேன்


    தங்களுக்காக திருச்சி பழைய பட சாதனை நிலவரம்

    1. கர்ணன் - திருச்சி ரம்பா - 28 நாட்கள் - வசூல் 21 லட்சம்
    2. ஆயிரத்தில் ஒருவன் - காவேரி - 7 நாட்கள் - 2 லட்சத்து 28 ஆயிரம்
    3. வசந்த மாளிகை - சோனா - 7 நாட்கள் - 2 லட்சத்து 52 ஆயிரம்
    3. வீரபாண்டிய கட்டபொம்மன் - கலைஅரங்கம் -7 நாட்கள் - 3 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்
    Last edited by SPCHOWTHRYRAM; 28th August 2015 at 10:43 PM.

  9. #2766
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மிக குறுகிய காலத்தில் 6000 முத்தான பதிவுகள் முடித்த நண்பர் திரு.முத்தையன்
    அம்மு அவர்களுக்கு பாராட்டுக்கள் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.


    ஆர். லோகநாதன்.

  10. #2767
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று முதல் (28/08/2015) சென்னை சரவணாவில் இந்த ஆண்டில் 20 வது இணைந்த
    நடிக பேரரசர் எம்.ஜி.ஆர். வாரம்.

    மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த "குமரிக்கோட்டம் " தினசரி 3 காட்சிகள்.


    இணைந்த 2 வது வாரம். கடந்த வாரம் பாட்சாவில் (மினர்வா ) திரையிடப்பட்டது.

    தகவல் உதவி : ஓட்டேரி திரு. பாண்டியன்.

  11. #2768
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    நண்பர் திரு. ஜெய்சங்கர் அவர்களின் இதயம் நிறைந்த எம்.ஜி.ஆர். அனைவரின்
    இதயங்களை கவரும் என்கிற நம்பிக்கையில் இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்.


    ஆர். லோகநாதன்.

  12. #2769
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    (கல)கலப்புத் தமிழ் தேனிசை மதுரங்கள் ! Honey spilling HYBRID TAMIL harmonies!!

    உலகில் உள்ள எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு அதன் கலப்படமும் இனிமையாக ரசிக்கப் படுவதுதான்! தொலைக்காட்சிகளில் சில பெண் அறிவிப்பாளர்களும் நிகழ்ச்சியாளர்களும் பேசும் லகர ளகர ழகர பேதமற்ற தமிழைக் கேட்கக் கொடுமையாக இருந்தாலும் அதையும் நாம் குழந்தைகளின் மழலைக்கு அப்புறம் கைதட்டி ரசிக்கிறோமே! உல்லம் கொல்லை கொல்லுது போங்க! இதையெல்லாம் கேட்டுக் கேட்டு மரத்(துப் போன)தமிளர்கலாகவே இருக்கிறோமே !!

    சுக்வீந்தர் சிங்கு, உதித் நாராயணர்.... தமிழ்சேவையில் நொந்து நெஸ்லே நூடுல்ஸாகி நிற்கிறோமே! பத்தாதற்கு லூஸ் மோகனாரின் காப்புரிமையானஷோக்கான சிங்காரச் சென்னைத் திமிழ் , தெலுங்கு டப்பிங் டோங்கரே தமிழ், ஆங்கிலோ இந்தியர்களின் அலுவலக டமில், சௌகார்பேட்டை ஹிந்தமில், ...தமிங்கிலம்...தங்கிலீஷ்.........நம்ஸின் மச்சான்ஸ் தமிழ், திருக்கோயில் தெருக்கோயிலாகும் மலைத்தமிழு ஈசன் ஈஷனாகும் பாகவதத் தமிழ், வெற்றிலைக் குதப்பும் அம்பாலே பேஷிய தமிழ்..!

    எப்படிக்.கேட்டாலும் தமிழ் இனிமையே! கலப்புத் திருமணங்களை வரவேற்கும் நாம் கலப்புத் தமிளுக்கும் ஆலவட்டம் குலுக்குவோமே!!
    நம்பர் 1 : நம்பள்கி நிம்பள் மேலே மஜா......சௌகார்பேட்டை செந்(தேள்/ன்) தமிழில் ஒரு தூக்கு தூக்கி கலகலக்கும் பாலையா.....



    நம்பர் 2 : இன்னா மேன் பொம்பிளே நான்....யாரிந்த லெக்கிங்க்ஸ் போட்ட சட்டைக்காரி!? சாட்டைக்கார சேட்டைக்கார வேட்டைக்காரரேதான்!!

    Last edited by sivajisenthil; 29th August 2015 at 12:17 AM.

  13. #2770
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நண்பர்களே! தயவு செய்து என்றும் எப்பொழுதும் திரை உலக சக்கரவர்த்தி யாக விளங்கும் மக்கள்திலகம் அவர்களோடு வேறு யாரையும் ஒப்பிடு தந்து பதிவுகள் இட வேண்டாம் என பலமுறைகள் சொல்லியாகிவிட்டது... இரண்டாவது, திரைப்பட வசூல் கணக்கிடுகளில் - எல்லாம் அந்த நிலைமைகளை என்றோ கடந்து யாவரும் அண்ணாந்து நோக்குகின்ற அந்தஸ்தில் இருக்கிறார்...திருச்சியில் உண்மையான நிலவரம் கூடிய விரைவில் அறியதானே போகிறீர்கள் திரு ராம்...

  14. Likes siqutacelufuw liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •