-
29th August 2015, 12:20 PM
#2781
Junior Member
Seasoned Hubber
சிந்திக்க வேண்டிய நேரம் .
[ஏராளமான செலவுகள் செய்து பழைய படங்களை புதுப்பிக்கும் தயாரிப்பாளர்கள் சிந்திக்க வேண்டிய நேரம் வந்து விட்டது .இன்றைய தொழில் நுட்பத்தில் அசூர வளர்ச்சி கண்டுள்ள நேரத்தில் பழைய படங்களின் டிவிடி விற்பனை , ஊடகங்களின் தொடர் ஒளிபரப்பு என்ற எல்லைகளை மீறி இன்றையபுதுப்படங்களுடன் போட்டி போட்டு கொண்டு திரை அரங்கில் வெளியாகும் நேரத்தில் படம் பார்க்கரசிகர்கள் செய்ய வேண்டிய செலவுகள் குறைந்த பட்சம் ஒரு டிக்கெட் விலை ,மற்றும் இதர செலவுகள் உட்பட ரூ 300 மேல் ஆகிறது . பழைய படங்கள் எல்லா தகுதிகள் பெற்று இருந்தாலும் இன்றைய கால கட்டத்தில் மக்கள் விரும்பி திரை அரங்கில் காண விரும்புவதில்லை .இனி வர இருக்கும் பழைய படங்களின் நிலைமை ஒரு கேள்வி குறியாக உள்ளது .பொறுத்திருந்து பார்ப்போம் ]
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
29th August 2015 12:20 PM
# ADS
Circuit advertisement
-
29th August 2015, 12:28 PM
#2782
Junior Member
Seasoned Hubber
நாளை உலகை ஆளவேண்டும்
கோவை செழியன் அவர்கள் தயாரிப்பில் கே.சி.பிலிம்ஸாரின் உழைக்கும் கரங்கள் திரைப்படம் .
எம்.ஜி.ஆர். கதாநாயகனாக.. மெல்லிசை மன்னரின் இன்னிசையில் புலவர் புலமைப்பித்தன் வரைந்த பூபாளமிது!
உழைக்கும் மக்களுக்காக வரையப்பட்ட உன்னத சாசனமிது!! கே.ஜே.யேசுதாஸ் என்னும் கானப்பறவை தன் கந்தர்வக்குரலில்..
நாளை உலகை ஆளவேண்டும்..உழைக்கும் கரங்களே!
நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே – இந்த
நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே
புரட்சி மலர்களே உழைக்கும் கரங்களே
நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே – இந்த
நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே
கடமை செய்வோம் கலங்காமலே உரிமை கேட்போம் தயங்காமலே
கடமை செய்வோம் கலங்காமலே உரிமை கேட்போம் தயங்காமலே
வாருங்கள் தோழர்களே ஒன்றாய் வாருங்கள் தோழர்களே
நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே
உழைக்கும் கரங்களே
தன்னானே தானேனானான நானானானா
தானேனானே னனானே
ஏர் பூட்டித் தோளில் வைத்து இல்லாமை வீட்டில் வைத்து
ஏர் பூட்டித் தோளில் வைத்து இல்லாமை வீட்டில் வைத்து
போராடும் காலம் எல்லாம் போனதம்மா
எல்லோர்க்கும் யாவும் உண்டு என்றாகும் காலம் இன்று
நேராகக் கண்ணில் வந்து தோன்றுதம்மா
விடியும் வேளை வரப்போகுது தருமம் தீர்ப்பைத் தரப்போகுது
ஞாயங்கள் சாவதில்லை என்றும் ஞாயங்கள் சாவதில்லை
நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே
உழைக்கும் கரங்களே
ஆஹா ஆஹா ஆஹா நானானானனே ஆஹாஹா
கல்விக்குச் சாலை உண்டு நூலுக்கு ஆலை உண்டு
நாட்டுக்குத் தேவையெல்லாம் நாம் தேடலாம்
தோளுக்கு வீரம் உண்டு தோற்காத ஞானம் உண்டு
நீதிக்கு நெஞ்சம் உண்டு நாம் வாழலாம்
சிரிக்கும் ஏழை முகம் பார்க்கலாம்
சிந்தும் கண்ணீர் தனை மாற்றலாம்
வாருங்கள் தோழர்களே ஒன்றாய் சேருங்கள் தோழர்களே
நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே இந்த
நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே
புரட்சி மலர்களே உழைக்கும் கரங்களே
ஏருழவன் சேற்றில் கை வைக்கவில்லையென்றால் நாம் சோற்றில் கை வைக்க முடியாது என்பார்கள்!
அவர்தம் ஏழ்மைநிலை நீங்கி.. உருவாக வேண்டிய சமத்துவ சமுதாயம் புலவரின் பொதுவுடைமை நோக்கம் எல்லாம் பாடலின் வரிகளாய்!!
புரட்சிக்கு வித்திடும் போராட்டங்கள்! அப் போராட்டங்கள் உருவாகக் காரணம் ஏற்றத்தாழ்வுகள்!!
கூடிவாழ்ந்தால் கோடி நன்மை என்பதை நாட்டுக்கு உணர்த்தும் கூட்டுறவு சங்கங்கள்!!
நாளைய விடியல் நம்பிக்கையின் வெளிச்சத்தோடு வெளிவரட்டும்!!
courtesy-கவிஞர் காவிரிமைந்தன்
-
29th August 2015, 01:43 PM
#2783
Junior Member
Diamond Hubber
-
29th August 2015, 02:29 PM
#2784
Junior Member
Veteran Hubber

Originally Posted by
Varadakumar Sundaraman
சிந்திக்க வேண்டிய நேரம் .
[ஏராளமான செலவுகள் செய்து பழைய படங்களை புதுப்பிக்கும் தயாரிப்பாளர்கள் சிந்திக்க வேண்டிய நேரம் வந்து விட்டது .இன்றைய தொழில் நுட்பத்தில் அசூர வளர்ச்சி கண்டுள்ள நேரத்தில் பழைய படங்களின் டிவிடி விற்பனை , ஊடகங்களின் தொடர் ஒளிபரப்பு என்ற எல்லைகளை மீறி இன்றையபுதுப்படங்களுடன் போட்டி போட்டு கொண்டு திரை அரங்கில் வெளியாகும் நேரத்தில் படம் பார்க்கரசிகர்கள் செய்ய வேண்டிய செலவுகள் குறைந்த பட்சம் ஒரு டிக்கெட் விலை ,மற்றும் இதர செலவுகள் உட்பட ரூ 300 மேல் ஆகிறது . பழைய படங்கள் எல்லா தகுதிகள் பெற்று இருந்தாலும் இன்றைய கால கட்டத்தில் மக்கள் விரும்பி திரை அரங்கில் காண விரும்புவதில்லை .இனி வர இருக்கும் பழைய படங்களின் நிலைமை ஒரு கேள்வி குறியாக உள்ளது .பொறுத்திருந்து பார்ப்போம் ]
சிந்திக்க வேண்டிய நேரம் - சிந்திக்க வேண்டிய விஷயம் பற்றி சிந்திக்கவேண்டிய நேரம்
மக்கள் எந்த திரைப்படத்தையும் பார்க்க தயாராக உள்ளார்கள். காரணம், பழைய படங்களின் நிலை புதிய படங்களை விட பாதுகாப்பாகவே உள்ளது என்பது எனது கருத்து.
புதிய படங்கள் வெளியிட்ட அடுத்தநாளே TORENT இல் பதிவிறக்கம் செய்ய தயார் நிலையில் உள்ளது. அதனை மக்கள் பதிவிறக்கம் செய்து பார்க்கவும் செய்கிறார்கள்...DVD யும் போலியானதாக இருந்தாலும் MARKET இல் விற்பனைக்கு இரெண்டாம் நாளே உள்ளது...ரயிலில், பஸ் பிரயாணத்தில் நாம் அதனை கண்கூடாக பார்க்கிறோம்.
சில உண்மைகளை நாம் உணரவேண்டியது அவசியமாகிறது
ஒரு பழையபடம் புதுப்பித்து புதிய வடிவு பெற்று வெளிவரும் முன்னர், நமக்கு கிடைக்கும் தகவல் யாதெனில் ...இதற்க்கு 40 லட்சம் செலவு செய்துள்ளோம், 30 லட்சம் செய்துள்ளோம், நெகடிவ் பழுதடைந்துள்ளது, AUDIO TRACK சரியில்லை , காட்சிகள் தரம் சரியாக இருக்கவில்லை..மற்றும் பல...! ஆகவே இதனை நல்ல முறையில் மக்களிடம் கொண்டுசேர்க்க 30 லட்சம் செலவு என்று கூறுகின்றனர்.
உதாரணமாக ஒரு திரைப்படத்தை DIGITAL வடிவில் வெளியிட கீழ்கண்டவை தேவை...
1) திரைப்படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமம் அல்லது எந்த ஏரியா விநியோகம் செய்ய விரும்புகிறார்களோ...அந்த ஏரியா விநியோக உரிமை.
திரைப்படத்தின் NEGATIVE உரிமம் வைத்திருப்பவரிடம் இருந்து ஒரு சான்று தேவை படுகிறது..அதாவது இந்த திரைப்படத்தினை DIGITAL முறையில் திரையிட தனக்கு பூரண சம்மதம் என்ற எழுத்து வடிவ மடல். இது இருந்தால் மட்டுமே DIGITAL வெளியீடு செய்ய இயலும்.
2) உரிமம் மற்றும் கடிதம் வாங்கிய பிறகு...திரைப்படத்தின் NEGATIVE இருக்கவேண்டும்...அல்லது மிக சிறந்த தரமுள்ள POSITIVE அதாவது திரையரங்கில் திரையிடும் பிரிண்ட். இது இரெண்டும் இல்லாத பட்சத்தில் DIGITAL பீட்டா இருக்கவேண்டும் . 95% படங்களுக்கு BETA வும் 80% திரைப்படங்களுக்கு DIGITAL பீட்ட வும் உள்ளது.
இந்த டிஜிட்டல் பீட்டா வில் இருந்து, DIGITAL INTERMEDIATE அதாவது பெரிய திரையில் திரையிடுவதற்கு தயார் படுத்த படுகிறது. இதில் அகன்ற திரையாக மாற்றவும் வசதி உள்ளது. ( CINEMASCOPE )
ஒரு சாதாரண மசாலா படம் டிஜிட்டல் வடிவில் வெளியிட ( DIGI பீட்டா என்ன தரத்தில் உள்ளதோ அதே தரத்தில் அப்படியே பெரிய திரைக்கு மாற்ற ) கிட்டத்தட்ட 2 லட்சம் செலவாகிறது. 2 லட்சம் மட்டுமே செலவாகிறது..!!!!
இதன் பிறகு DTS 5.1 அல்லது 7.0 முறையில் திரைப்படத்தின் ஒலியை மாற்றியமைக்க சுமார் 2 லட்சம் முதல் கையில் காசு இருப்பு இருக்கும் வரை செலவு செய்யலாம். இதை செய்தால் தான் திரையில் நன்றாக இருக்கும் என்பது எல்லாம் வியாபார யுக்தியே அன்றி COMPULSORY கிடையாது !
அதே போல COLOR CORRECTION ! இதுவும் COMPULSORY கிடையாது DIGITAL BETA வில் இருந்து மாற்றியமைத்தால். ஆனால் PRINT அல்லது NEGATIVE முறையில் செய்தால் இது அவசியம் தேவைப்படும் ஒரு சில இடங்களில். அப்படி செய்ய தனி காசு !
பிறகு பெரிய திரையில் திரையிடுவதற்கு DI செய்த படத்தின் HARD DISK QUBE SYSTEM வைத்துள்ள ரியல் இமேஜஸ் நிறுவன திடம் கொடுத்துவிட அவர்கள் அவர்களுடைய QUBE இல் மாற்றி கொடுத்துவிடுவார்கள். 50,000 ருபாய் அட்வான்ஸ் கொடுத்தால் ஒரு இலவச QUBE LICENSE கொடுத்துவிடுவார்கள். இது LIFE RIGHTS எவ்வளவு வருடம் உள்ளதோ அவ்வளவு வருடம் நாம் திரைப்படத்தை திரையிட்டு கொள்ளலாம் ஒவ்வொரு திரை அரங்கிலும் வரிசையாக, ஒன்றன் பின் ஒன்றாக.
இனி விஷயத்துக்கு வருவோம் - எனக்கு தெரிந்த வரையில் கர்ணன், பாசமலர், ஆயிரத்தில் ஒருவன், மற்றும் இப்போது வந்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படங்கள் 30, 40, 50 என்று லட்சங்கள் செலவு செய்துள்ளதாக கூரிகொள்கின்றனர். இப்படி ஒரு தொகையை கூறினால்தான் அவர்களால் அதில் பாதிவிலைக்காவது விற்க முடியும் என்பதை நான் சொல்லிதான் நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்பதில்லை.
மேற்கூறிய படங்கள் அனைத்தும் 8 -12 லட்சம் வரைதான் அதிகபட்சமாக 17 லட்சம் தான் இதன் BUDGET !!!
இதுதவிர போஸ்டர் செலவு, முன்னோட்ட வெளியீட்டு விழா, பேப்பர் விளம்பரம் என்று அவர் அவர்கள் வசதிகேற்ப இதர செலவுகள் உண்டு.
ஆக, ஒரு LIFE RIGHTS வைத்துள்ளவர் 20 லட்சத்திற்குள் எல்லாவற்றையும் GRAND ஆக முடித்துகொள்ளலாம்.
மேற்கூறியவை அனைத்தும் தயாரிப்பு மற்றும் வெளியீட்டு செலவுகள் அடங்கியவை.
எந்த திரைப்படமும் இவர்கள் AREA OUTRIGHT விற்றுவிட்டால் நஷ்டம் வரவைப்பே இருக்காது ....யாருக்கும்...! காரணம், திரையிட்ட பிறகு, வாரத்திற்கு வசூல் ஆகும் பணத்தில் TERMS முறையில் தான் 99% திரையரங்கங்கள் திரையிடுகின்றனர். அதாவது ஆகும் வசூலில் 40 - 50% டெர்ம்ஸ் என்ற முறையில் SHARE கொடுக்கப்படுகிறது.
Contd........
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
29th August 2015, 02:51 PM
#2785
Junior Member
Veteran Hubber
Continuation.......
TRICHY & THANJAVUR DISTRICT
கட்டபொம்மன் திரைப்படத்தை பொருத்தவரை வெளியிட்டவர்க்கு 40% ஷேர் !
அதாவது திருச்சி கலையரங்கத்தில் கட்டபொம்மன் ஒருவார வசூல் ருபாய் 3,65,000 அதில் 40 சதவிகிதம் விநியோகஸ்தர் பங்கு கொடுக்க சம்மதம் செய்து அக்ரீமெண்ட் போடப்பட்டுள்ளது. கலையரங்கம் திரை அரங்கிலிருந்து படத்தை வெளியிட்டவர்க்கு ருபாய் 1,46,000 பங்காக காசோலை கொடுக்கப்படும்.
இதே போல தான் மற்ற ஏரியாக்களும் !
முதல் மூன்று நாள் கட்டபொம்மன் திரைப்படம் சராசரி 120 ( சிறிய திரை அரங்குகள் ) முதல் 275 ( 500 இருக்கைகள் மேல் கொண்டது )பேர் ஒரு காட்சியினை கண்டுகளித்துள்ளனர் . மாலை காட்சி மதிய காட்சிகள் 120 முதல் 375 - 642 வரை கண்டு கழித்துள்ளனர். மாலை காட்சி 250 முதல் 784 வரை கண்டுகளித்துள்ளனர் !
மதுரை ஏரியா எடுத்துகொண்டால் ஒரு வார வசூல் 8 லட்சத்திற்கும் கூடுதல் என்கிறது தகவல் ! தனி ஒருவன், அதிபர், தாக்க தாக்க மற்றும் ஒரு சில படங்கள் திரையிட ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளதால், கலைமதி பிலிம்ஸ் கட்டபொம்மனை இரெண்டாவது வாரம் திரையிட மறுத்துவிட்டனர். இவர்கள்தான் கமிஷன் அடிப்படையில் மேற்கூறிய படங்களுக்கு திரை அரங்கு CONFIRMATION செய்கிறார்கள் !
திரை அரங்கின் வசூல் CHART காண்பித்தும் கூட அவர்கள் இரெண்டாம் வாரம் தொடர சம்மதிக்கவில்லை. எங்களிடம் 5 வருட உரிமம் உள்ளது, நாங்கள் டிசம்பர் வாக்கில் மீண்டும் வெளியிடுவோம்...இது வியாபார விஷயம் நீங்கள் தலையிடாதீர்கள் என்று கூறிவிட்டனர் !
-
29th August 2015, 03:00 PM
#2786
Junior Member
Veteran Hubber
இன்றைய காலகட்டத்தில் நடிகர் திலகம் அவர்கள் படங்களைத்தான் மக்களும் சரி இளைய தலைமுறையினரும் சரி காண விரும்புகின்றனர் என்பது நேற்று, இன்று, நாளை அரங்கு நிறைவு நேற்றே கண்டுள்ளதிளிருந்து நீங்கள் புரிந்துகொள்ளலாம் !
ஒரு சிலர் அது சிறிய திரை அரங்கு தானே என்று உடனே கேட்கலாம்...சிறிய திரை அரங்காக இருந்தாலும் எத்தனை படங்கள் அரங்கு நிறைவு கண்டன அல்லது காண்கின்றன ?
பெரிய திரை அரங்காக இருந்தாலும் குறைந்தது 200 - 350 AUDIENCE நடிகர் திலகத்தின் டிஜிட்டல் வடிவில் திரையிடப்படும் திரைப்படங்களை ஒரு காட்சிக்கு காண வருகை புரிகின்றனர்..! இது அவருக்கு மட்டுமே நடக்கும் ஒரு விஷயம் !
விநியோகஸ்தர்களும் சரி, தயாரிப்பாளரும் சரி....இரெண்டாம் வாரம் QUBE license வாங்க போதிய நிதி இல்லாதபோது யார் என்ன செய்வது...? அதற்க்கு திரைப்படத்தை குற்றம் கூற முடியாது அல்லவா ?
இன்னும் சொல்லப்போனால் இவர்கள் தான் நல்ல திரைப்படங்களை மக்களுக்கு பார்க்க கிடைக்காமல் பிரச்சனை செய்பவர்கள் ! குறைந்தது 25 நாட்களுக்கு QUBE LICENSE வாங்க பணம் தனியாக ஒதுக்கி வைத்து அதன்படி பாருங்கள்....எல்லா நல்ல படமும் மிக சிறந்த முறையில் ஓடும் !
RULE OF THE GAME : கையில் காசில்லாமல் இதுபோல PROJECT கையில் எடுக்க கூடாது !
-
29th August 2015, 03:50 PM
#2787
Junior Member
Diamond Hubber
பெரிய திரை அரங்காக இருந்தாலும் குறைந்தது 200 - 350 AUDIENCE நடிகர் திலகத்தின் டிஜிட்டல் வடிவில் திரையிடப்படும் திரைப்படங்களை ஒரு காட்சிக்கு காண வருகை புரிகின்றனர்..! இது அவருக்கு மட்டுமே நடக்கும் ஒரு விஷயம் !
it is 100% correct oh MAKKALTHILAGAM ONLY POLITICIAN HE IS NOT CINEMA ARTIST OK OK
ROMBA THANKS SIR
-
29th August 2015, 03:55 PM
#2788
Junior Member
Diamond Hubber
CONGRATULATIONS MUTHAIYAN SIR FOR COMPLETING 6000 POST IN OUR GOD AND OTHER ACTOR THREAD
-
29th August 2015, 03:58 PM
#2789
Junior Member
Diamond Hubber
CONGRATULATIONS KALAIVENTHA SIR CROSSING 1000 POSTS
-
29th August 2015, 04:20 PM
#2790
Junior Member
Veteran Hubber

Originally Posted by
Yukesh Babu
பெரிய திரை அரங்காக இருந்தாலும் குறைந்தது 200 - 350 AUDIENCE நடிகர் திலகத்தின் டிஜிட்டல் வடிவில் திரையிடப்படும் திரைப்படங்களை ஒரு காட்சிக்கு காண வருகை புரிகின்றனர்..! இது அவருக்கு மட்டுமே நடக்கும் ஒரு விஷயம் !
it is 100% correct oh MAKKALTHILAGAM ONLY POLITICIAN HE IS NOT CINEMA ARTIST OK OK
ROMBA THANKS SIR
Dear Sir,
We do not see Makkal Thilagam as Politician. He is Chief Minister. Politician has got different meaning..!
Regards
RKS
Bookmarks