-
29th August 2015, 07:47 PM
#2801
Junior Member
Platinum Hubber
எம்.ஜி.ஆர் அவருக்காக யார் பாடிய பாடல் என்றாலும் அந்தப் பாடலில் அனுபவித்து நடித்தார் என்பதால் எந்த பின்னனி பாடகரின் பாடலும் அவருக்கு கனகச்சிதமாக பொருந்தியது.
சிதம்பரம் ஜெயராமன் பாடிய பிரபலமான எம்.ஜி.ஆர் பாடல்
’’உள்ளம் ரெண்டும் ஒன்று நம் உருவம் தானே ரெண்டு
உயிரோவியமே கண்ணே நீயும் நானும் ஒன்று” கல்யாணி ராகம்.
புதுமைப்பித்தன் படத்தில் பைத்தியம் பிடித்தவுடன் எம்.ஜி.ஆர் பாடுவதாக வரும் பாடல் சிதம்பரம் ஜெயராமன் பாடியது தான். “நீயும் கெட்டு நானும் கெட்டு பாதை விட்டு பாதை மாறிப் போவதோ? தந்தானத்தன தன்னானத்தன தன்னானத்தன தானா” அதற்கு ஆர்ப்பாட்டமாக சில ஸ்டெப் போடுவார்.
ஏ.எம் ராஜா மோகன ராகத்தில் பானுமதியுடன் பாடிய “ மாசிலா உண்மைக் காதலே, மாறுமோ செல்வம் வந்தபோதிலே” பாடல்
“மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா,வா”
சீர்காழி கோவிந்தராஜன் பாடல்கள்
சபாஷ் மாப்பிள்ளையில் ’ஜிளு ஜிளு உடையிலே ஜிகுஜிகு நடையிலே ஜெகமே தன்னால் மயங்குதே
சிங்காரச்சிலையே நீ திரும்பிப் பார்த்தால் போதும் எல்லாம் வசமாகுமே’
நல்லவன் வாழ்வான் “ சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள் சிந்திய கண்ணீர் மாறியதாலே சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்”
கொடுத்து வைத்தவள் “ பாலாற்றில் சேளாடுது இடையில் நூலாடுது இரண்டு
வேலாடுது”
பி.பி.ஸ்ரீனிவாஸ் எம்.ஜி.ஆருக்காக பாடிய பாடல்கள்:
திருடாதே படத்தில் “என்னருகே நீயிருந்தால் இயற்கையெல்லாம் சுழலுவதேன்”
பாசம் -” பால்வண்ணம் பருவம் கண்டு வேல் வண்ணம் விழிகள் கண்டு மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்”
காதல் வாகனம் ‘ இங்கே வா இங்கே வா ஒரு ரகசியம்”
பாடல் காட்சிகளில் அவர் எப்போதும் கதாநாயகி பாடும்போது அல்லது ஆடும்போது ரசித்து தலையாட்டுவார்.
கதாநாயகியைப் பார்த்து சிரித்து தன் உதட்டைக் கடித்து தலையை ஆட்டி சைட் அடிப்பார்.
( மதுரையில் ரொம்ப காலம் சல்லிகள் சைட் அடிப்பது என்றால் இந்த எம்.ஜி.ஆர் மேனரிசம் தான். ’ஜாரி’ மிரண்டு ஓடும்!)
கதாநாயகியின் உதட்டை செல்லமாக கிள்ளி ஆட்டி விடுவார்.
கைககளை பின்னால் கட்டிக்கொண்டு தலையை அழகாக ஆட்டுவார்.
solo songs எல்லாமே காண கண் கோடி வேண்டும்.
’உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக’
அன்னை மடியை விரித்தாள் எனக்காக (கடைசியில் மாட்டுவண்டியில் ஏறி கைகளை விரித்துகாட்டுவார். )
‘நெல்லின் மணி போல்’ என்ற (போனாளே,போனாளே ஒரு பூவும் இல்லாமல் பொட்டுமில்லாமல்) வரிக்கு கை கட்டை விரலுடன் நடுவிரலை குவித்துக் காட்டுவார். கைகள் இரண்டும் பாடல் காட்சிகளில் இயங்கிக்கொண்டே தான் இருக்கும்.பாடல் வரிகளை விளக்கும் விதமாக எப்போதும் அவர் உடல் மொழி இருக்கும்.
அன்னை மடியை விரித்தாள் எனக்காக
(என்னைப் பெற்றுக்கொள்வதற்காக என் தகப்பனுக்கு மடியை விரித்தாள்
பிரசவத்தின் போதும் நான் பிறப்பதற்காக தன் மடியை விரித்தாள்.)
உலகம் பிறந்ததும் எனக்காக பாடலில் நதி,மலர்கள், நிலவு, குயில்கள்என்றும் பெற்ற தாய் பற்றியும் கலந்தே எழுதப்பட்டது.கவித்துவமாக அன்னை மடியை விரித்தாள் என்பதில் அன்னையை ’இயற்கை’யின் படிமம் எனவும் கொள்ளலாம்.
”நான் ஒரு கை பார்க்கிறேன் நேரம் வரும் கேட்கிறேன் பூனையல்ல புலி தானென்று போகப் போகக் காட்டுகிறேன் போகப்போக காட்டுகிறேன்” பாடலின் ஒவ்வொருவரிக்கும் அவருடைய எக்ஸ்ப்ரசன்!முடிவில் ரௌத்திரம் தெரியும் முகம்.தலையை ஆக்ரோசமாக ஆட்டி நிறுத்துவார். அப்போது தியேட்டர் அதிரும் என்று சொன்னால் அது குறைவு தான்.
நான் ஏன் பிறந்தேன் பாட்டில் புலியூர் சரோஜா மகனிடம் “ பத்து திங்கள் சுமந்தாளே அவள் பெருமைப்பட வேண்டும்.உன்னை பெற்றதனால் அவள் மற்றவராலே போற்றிப்படவேண்டும்.கற்றவர் சபையில் உனக்காக தனி இடமும் வரவேண்டும், உன் கண்ணில் ஒரு துளி நீர் வழிந்தாலும் உலகம் அழவேண்டும்” வாத்தியார்! அப்போது அவர் முகம் காட்டும் உருக்கம்.
’இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்லவேண்டும்’
உருக்கம் என்ற உணர்வை எப்போதும் நேர்த்தியாக முகத்தில் வெளிப் படுத்துவார்.
”முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும் இது தான் எங்கள் வாழ்க்கை
இது தான் எங்கள் வாழ்க்கை
தரை மேல் பிறக்கவைத்தான் எங்களை தண்ணீரில் பிழைக்கவைத்தான்
கரை மேல் இருக்கவைத்தான் பெண்களை கண்ணீரில் குளிக்க வைத்தான்”
”ஆயிரம் தான் வாழ்வில் வரும் நிம்மதி வருவதில்லை... உள்ளம் என்றொரு கோயிலிலே தெய்வம் வேண்டும் அன்பே வா கண்கள் என்றொரு சோலையிலே தென்றல் வேண்டும் அன்பே வா”
“தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே தொடரும் கனவுகள் தொடரட்டுமே செல்லக்கிளியே மெல்லப்பேசு தென்றல் காற்றே மெல்ல வீசு”
அதே போல உற்சாகத்தையும்.
”எங்கிருந்தோ ஆசைகள் எண்ணத்திலே ஓசைகள்”
“முத்து முகம் முழு நிலவோ! முப்பது நாள் வரும் நிலவோ!சச்சா மம்மா பப்பா”
”எனக்கொரு மகன் பிறப்பான்!அவன் என்னைப்போலவே இருப்பான்” காலை தரையில் சந்தோசமாக உதைத்துக்கொள்வார்.
வாயில்லாப்பூச்சியான பண்டரிபாயிடம் “ இங்கு உண்மைகள் தூங்கவும் ஊமைகள் ஏங்கவும் நானா பார்த்திருப்பேன்.”
குதூகலம்!குஷி! - ”புதிய வானம் புதிய பூமி எங்கும் பனிமலை பொழிகிறது!
நான் வருகையிலே என்னை வரவேற்க வண்ணப்பூமழை பொழிகிறது!”
சண்டை போட்டுக்கொண்டே ஆடிப்பாடி நடிப்பார்.
’மயிலாட வான்கோழி தடை சொல்வதோ
மாங்குயில் பாட கோட்டான்கள் தடை சொல்வதோ
முயல்கூட்டம் சிங்கத்தின் எதிர்நிற்பதோ
அதன் முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ
ஆடப்பிறந்தவளே ஆடி வா!’
‘நான் செத்துப் பிழைச்சவண்டா
எமனை பாத்து சிரிச்சவன்டா’
சண்டைக் காட்சி பற்றி ஒருவிஷயம்
முதலில் வில்லனிடம் ’மிஸ்டெர் தயவு செய்து நான் சொல்றதெ கேளுங்க’என்று ரொம்ப கனிவாக சொல்வார். வில்லன் அலட்சியமாக ஒரு குத்து விடுவான்.’ தயவு செய்து வழிய விடுங்க ‘ என்று புன்னகையுடன் மீண்டும்சொல்லிப்பார்ப்பார். அதன் பின்பும் வில்லன் அதை சட்டையே செய்யாமல் முகத்தில் குத்துவான். எம்.ஜி.ஆர் உதட்டை தடவிப்பார்ப்பார். விரல்களில் ஆ.. ரத்தம்! அப்புறம் வில்லன் ஒருவனாக இருந்தாலும் சரி,கூட்டமாக இருந்தாலும் சரி அடி வெளுத்து விரியக் கட்டிவிடுவார்.
மற்றபடி பல சமயங்களில் சிரித்துக் கொண்டே தான் கத்தி சண்டையும் போடுவார்.
தங்கையுடன் தங்கைக்காக எம்ஜிஆர் பாடல்கள்:
“ஒருகொடியில் இருமலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா
அண்ணன் தங்கை உறவு முறை வளர்ந்ததம்மா வளர்ந்ததம்மா” -காஞ்சித்தலைவன்
ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே”- பணக்காரக்குடும்பம்
”பூமலை தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது”-நினைத்ததை முடிப்பவன்.
தாய் எம்.ஜி.ஆருக்கு தெய்வம்.தாயை வணங்கி பாடுவது
‘எல்லாம் எனக்கும் இருந்தாலும் அன்னை மனமே என் கோயில் \
அவளே என்றும் என் தெய்வம்’
’தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை.
தாயின் வடிவில் தெய்வத்தை கண்டால் வேறொரு தெய்வமில்லை’
’தாயில்லாமல் நான் இல்லை தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள் என்றும் என்னை காக்கின்றாள்’
காதலியிடம் கூட சவால் விட்டு வாளோடு பாடுவார்!
‘உன் விழியும் என் வாளும் சந்தித்தால்
உனை வெல்லும் மனம் துள்ளும் இன்பத்தால்’
ரொமான்ஸ்
‘காதல் ரோமியோ கண்ட நிலா
கன்னி ஜூலியட் சென்ற நிலா
பாவை லைலா பார்த்த நிலா
பாதி தேய்ந்தது வெள்ளை நிலா’
’நான் தண்ணீர் பந்தலில் நின்றிருந்தேன் அவள் தாகம் என்று சொன்னாள்
நான் தன்னந்தனியாய் நின்றிருந்தேன் அவள் மோகம் என்று சொன்னாள்’
‘நீயா இல்லை நானா ஒரு நிலையிலிருந்து வலையில் விழுந்தது நீயா இல்லை நானா
பசித்தவன் முன்னே பழமாய் வந்தது நீயா இல்லை நானா இளம் பருவத்தின் வாசலில் உருவத்தைப் பார்த்தது நானா இல்லை நீயா’
‘கரும்பினில் தேன் வைத்த கன்னம் மின்ன வா
கனி தரும் வாழையின் கால்கள் பின்ன வா
கண்ணே கனியே முத்தே மணியே அருகே வா
ஒரு நாள் இரவு நிலவையெடுத்து உன் முகம் படைத்தானோ
பல நாள் முயன்று வானவில் கொண்டு நல் வண்ணம் செய்தானோ
ஒரு கோடி முல்லைப்பூ விளையாடும் கலையென்ன
வாவென்பேன் வரவேண்டும் தாவென்பேன் தரவேண்டும்’
டி.எம்.எஸ் பாடல்கள் தான் எம்.ஜி.ஆருக்கு என்றிருந்த நிலையில் அதை உடைத்தார். புதுப்பாடகர் எஸ்.பி.பி பாட்டுக்கு தன்னம்பிக்கையோடு சந்தேகமேயில்லாமல் நடித்தார்.
“ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா”
”வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்
அதை வாங்கித்தந்த பெருமையெல்லாம் உன்னைச் சேரும்”
“நீராழி மண்டபத்தில் தென்றல் நீந்தி வரும் வெண்ணிலவில்
தலைவன் வாராது காத்திருந்தாள்”
ஜேசுதாஸ் பாடல்கள்
”விழியே கதையெழுது
கண்ணீரில் எழுதாதே’
”பிள்ளைத்தமிழ் பாடுகிறேன்
ஒரு பிள்ளைக்காக பாடுகிறேன்”
”அந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திபூவினில் தொட்டிலைக் கட்டி வைத்தேன்”
செல்லங்கொஞ்சும் சிறு குழந்தை போல எஸ்.வரலட்சுமி பாடும்போது அவர் மடியில் தலை வைத்துப் படு்த்துக்கொள்வார்.
”அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு
ஒன்றே குலம் என்று பாடுவோம்
ஒருவனே தேவன் என்று போற்றுவோம்”
எம்.ஜி.ஆர் இசை ஞானமிக்கவர். கர்நாடக சங்கீத ரசிகர். வாய் பாட்டு என்றில்லை.தனியாவர்த்தனமாக மிருதங்கம் மட்டுமே ரசிக்கக்கூடிய அளவுக்கு அபார இசை அறிவு. இதனால் சினிமாவுக்கு மெல்லிசைப் பாடல்களை தேர்ந்தெடுப்பதில் அசாத்திய திறமை பெற்றிருந்தார்.இசையமைப்பாளர்களுக்கு ’பென்டு’ கழண்டுவிடும்!
COURTESY - rprajanayahem.blogspot.com
-
Post Thanks / Like - 2 Thanks, 3 Likes
-
29th August 2015 07:47 PM
# ADS
Circuit advertisement
-
29th August 2015, 07:55 PM
#2802
Junior Member
Diamond Hubber
-
29th August 2015, 08:39 PM
#2803
Junior Member
Diamond Hubber
நம்முடைய குழந்தை முக்கு வடித்துக்கொண்டு நின்றால் நாம் துடைக்கிறோம். ஆனால், அடுத்தவர்களின் குழந்தை அவ்வாறு இருந்தால் நாம் துடைப்பதில்லை.
- புரட்சித்தலைவர்
Last edited by saileshbasu; 29th August 2015 at 09:04 PM.
-
29th August 2015, 09:36 PM
#2804
Junior Member
Diamond Hubber
-
29th August 2015, 09:48 PM
#2805
Junior Member
Veteran Hubber
அன்பிற்கினிய மதிப்புக்குரிய மதுரகான திரி நண்பர்கள் வாசு /மது / ராகவேந்தர் / சின்னக்கண்ணன் / ரவி / ராஜ்ராஜ் / ராகதேவன் / கல்நாயக் / ராஜேஷ் மற்றும்
நெல்லை கோபு ,mgr திரியிலிருந்து எஸ்வீ / செல்வகுமார்/கலைவேந்தன் /வரதகுமார்/ சைலேஷ் / ரவிசந்திரன் / யுகேஷ் /முத்தையன் அம்மு./சுகாராம்....
நடிகர்திலகம் திரியின் நண்பர்கள் முரளி / ரவிகிரண்/ கோபால் / ஜோ /சுப்பிரமணியம் ராமஜெயம்/ j ராதாக்ருஷ்ணன்/சிவா / ஆதிராம் / திருச்சி ராம் / s. வாசுதேவன்/sss/ vcs / ஹரீஷ்/ராகுல் /பட்டாக்கத்தியர் / அரிமாசெந்தில்/ சுந்தராஜன்/ பாஸ்கர் /ஆதவன்ரவி/ சார்ஸ்! அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கங்கள்......
திரிப் பதிவுகளுக்குத் தற்காலிக இடைவெளி தரவேண்டிய சூழல்! எனது மொத்த லாபமே வேற்றுமையிலும் ஒற்றுமையாக மலர்ந்திட்ட இனிய நண்பர்களான நீங்கள் அனைவருமே!!
வருகிற செப்டம்பர் 30 எனது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண்மைப் பொறியியல் பேராசிரியப் பணியிலிருந்து 60 வயது முதிர்வில்37 வருடங்கள். கல்விப் பணி...மூவாயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள், முன்னூறுக்கும் அதிகமான ஆராய்ச்சி கட்டுரைகள், இருபத்தைந்து முதுநிலை/ பதினைந்து முனைவர் பட்ட ஆய்வு வழிகாட்டியாக....பசுமையான நினைவுகளுடன் மனநிறைவுடன் ஓய்வு பெறுகிறேன்!!
பென்ஷன் பார்மாலிடிஸ் ...அடுத்த கௌரவ பேராசிரியர் பணியில் சேர்வு....கொஞ்சம் கான்சென்ட்ரேஷன் தேவைப்படுவதால் சிறு இடைவெளி!!
திரைப்படங்கள் மேலும் நம்மை மகிழ்வித்த நடிகர்திலகம் மக்கள் திலகம் காதல் மன்னர் .....அனைவர் மீதும் நன்றிகலந்த மரியாதை நிமித்தம் நண்பர்களான உங்களுடன் இணை ந்து மகிழ்ந்த நினைவுகளுடன்....விடை பெறுகிறேன்!!
மீண்டும் வருவேன் சில கடமைகள் நிறைவு பெற்ற பின்னர் ...நிச்சயமாக அன்பு நெஞ்சங்களே!!
என்றும் உங்கள் நண்பன் செந்தில்
Last edited by sivajisenthil; 29th August 2015 at 09:53 PM.
-
Post Thanks / Like - 2 Thanks, 1 Likes
-
29th August 2015, 09:59 PM
#2806
Junior Member
Veteran Hubber
இன்று ரக்ஷா பந்தன் - அண்ணன் தங்கை உறவுமுறை செழித்து சகல சொவ்க்யங்களுடன் வாழ இறைவனை வேண்டி அண்ணனாக நினைப்பவரை, அண்ணனை தங்கை பாசம் கொண்ட சரடால் வலது கரத்தில் அன்பால் கட்டிபோடுவதுதான் ரக்ஷா பந்தன் .
திரை துறையில் மக்கள் திலகம் மற்றும் நடிகர் திலகம் இருவரது படங்களிலும், தாய்மை, தங்கை பாசம் இரெண்டும் இடைவெளி இல்லாமல் இருந்துகொண்டே இருக்கும்..! இவர்கள் அளவிற்கு மற்றவர்கள் தங்கள் படங்களில் அண்ணன் தங்கை பாசத்தை சித்தரித்ததுண்டா என்றால் இல்லை என்றே கூறலாம் !
என் தங்கை - 1952
1952 இல் வெளிவந்து தமிழ் திரை உலகையே புரட்டி போட்ட நடிகர் திலகத்தின் முதல் திரைப்படமாம் பராசக்தி திரைப்படமும் அண்ணன் தங்கை பாசத்தை சமுதாய சிந்தனையோடு பின்னப்பட்ட கதையை கொண்ட படம் !
மறக்க முடியுமா .....பராசக்தி கோர்ட் காட்சியை ! முதல் படத்தில் இப்படி ஒரு சிம்ம கர்ஜனை, லாவக நடிப்பு, முதன் முறையாக தமிழின் உயிர்நாடி கண்டுபிடித்து அதனை முருக்க வேண்டிய இடத்தில் முறுக்கி, குருக்கவேண்டிய இடத்தில் குறுக்கி...சறுக்கவேண்டிய இடத்தில் சறுக்கி தளுக்க வேண்டிய இடத்தில் தளுக்கி - உலக திரை இதுவரை கேட்டதும் இல்லை கண்டதும் இல்லை !
என்ன ஒரு ஒற்றுமை இருதிலகங்களுக்கும் -
என் தங்கை 1952 & பராசக்தி 1952 வெளியீடு
இதன் தொடர்ச்சியாக
பாசமலர்,
என் அண்ணன்,
நினைத்ததை முடிப்பவன்,
விடிவெள்ளி,
அன்புக்கரங்கள்,
பச்சை விளக்கு,
தங்கை,
லட்சுமி கல்யாணம்,
தங்கைக்காக,
எங்கள் தங்கம்,
இதயவீணை ,
அண்ணன் ஒரு கோவில்,
இப்படி பல காவியங்கள் இரு திலகங்களும் அண்ணன் தங்கை பாசபினைப்பை திரையில் வாழ்ந்து காட்டினார்கள் !
Last edited by RavikiranSurya; 29th August 2015 at 10:09 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
29th August 2015, 10:25 PM
#2807
Junior Member
Diamond Hubber
நிதியின் வித்தே
தங்கமகன் நீ
அன்னை சத்யா
தந்த மகன் நீ
தந்த மகன் நீ
சத்யாவும் கோபாலும்
தந்த மகன் நீ
தந்த புகழ் நீ
என்றும் தாங்கும் புகழ் நீ
பொங்கு புகழ் நீ
இன்பம் பொங்கும் புகழ் நீ
எங்கள் உயிர் நீ
என்றும் உயிர் நீ
முள்ளில்லா ரோசா நீ...உயிர்
மோகனப் புன்னகை ராசா நீ
சிங்க மனம் நீ
சீற்றமதில் நின்றிடிலோ
சிங்கம் என நீ
சிந்தித்துப் பார்த்தால்
தங்கம் என நீ
ஆண் தங்கம் மனம் நீ
வாங்க கடல் நீ ஆம்
வற்றாத உள்ளடக்கும் தன்மையலே
வங்கக்கடல் நீ
வற்றி விட்டால் கோபமது
அற்புதமாய் பாசம் பொங்கும்
தங்க கடல் நீ அம அன்பி
தங்கும் கடல் நீ
யாழ்ப்பாணம் தந்த ஒரு பரிசு தமிழ்
யாழினையே இன்று மீட்டும் பரிசு
வாழ்வங்கு வாழ்ந்த ஒரு வழியில் - உலகில்
வந்தவரை நமது அன்பு முரசு
நீதியின் வித்து நீ - ஆம்
நீதியை வாழ்ந்தே சிறந்த
நிதிபதியம் கோபால் தந்த
நிதியின் வித்து தமிழ்
சாதியின் சொத்து.
Last edited by saileshbasu; 29th August 2015 at 10:59 PM.
-
29th August 2015, 10:29 PM
#2808
Junior Member
Diamond Hubber
சிவாஜி கணேசன் தலைவராக இருக்கும் சங்கத்தின் கட்டுப்பாடுகளுக்கு எம்.ஜி.ஆர் செயல்படுவாரா? என்று சிலர் சந்தேகப்படுகிறார்கலாம். சிவாஜி என்னைவிட இளைஞ்சராக இருந்தாலும், அவர் சங்கத்தின் தலைவராக இருக்கும்போது அவர் என்ன திட்டங்களைக் தருகிறாரோ, அதற்க்கு ஏன் முழு ஒத்துழைப்பும், நிச்சயம் இருக்கும்.
சிவாஜி கணேசன் இந்த நடிகர் சங்கப் பதிவிக்காக காத்துக் கிடக்கவில்லை. அந்த பதவிதான் அவருக்காக காத்திருந்தது. இந்த சங்கத்தின் தலைவராக தொடர்ந்து சிவாஜி கணேசன் இருக்க வேண்டும். அவர் இந்த பதவி வேண்டாம் என்று சொல்லும் வரை அவர்தான் இதற்க்கு தலைவர். அவர் தலைமையில் பனியாட்ட்ற நாங்கள் தயார்.
புரட்சித்தலைவர் 30-7-1972 அன்று ஆற்றிய உரை.
Last edited by saileshbasu; 29th August 2015 at 10:31 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
29th August 2015, 10:39 PM
#2809
Junior Member
Veteran Hubber


இன்றுடன் (29-08-1970), மக்கள் திலகத்தின் "தேடி வந்த மாப்பிள்ளை" வெளியாகி 45 ஆண்டுகள் நிறைவு பெற்று விட்டது.
சனிக்கிழமையன்று இந்த காவியம் வெளியானதில் மிக்க மகிழ்ச்சி கொண்டேன். காரணம், பொதுவாக வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகும் தமிழ் திரைப்படங்களின் வழக்கத்திலிருந்து சற்றே மாறுபட்டு பள்ளி விடுமுறை நாளான சனிக்கிழமை அன்று வெள்ளித்திரையில் மின்னியதுதான்.
இந்த சமயத்தில், முதல் நாள், இந்த காவியத்தை பார்த்த என்னுடைய திரைப்பட அனுபவத்தை நான் திரி அன்பர்களுடன் பகிரிந்து கொள்ள விரும்புகிறேன்.
நான் 9வது வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் பொழுது, பொன்மனசெம்மலின் இந்த பொற்காவியம் வெளியானது. எனது பள்ளித்தோழர்கள் ரங்கராஜன், பார்த்தசாரதி, ரவிக்குமார், ஆகியோருடன், சென்னை பாரகன் அரங்கில் 61 பைசா டிக்கெட்டுக்காக, காலையிலே சென்று, வரிசையில் நின்று கொண்டிருந்தேன். 1970ம் ஆண்டு நம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்களின் மாட்டுக்கார வேலன் வெளியாகி வெள்ளி விழா கண்டது,, தொடர்ந்து "என்.அண்ணன்" வெற்றி, (அன்று தான் 101வது நாள்), அதனை தொடர்ந்து கலைச்சுடர் எம். ஜி. ஆர். பணம் வாங்காமல், கலைஞர் குடும்பத்துக்கு இலவசமாக நடித்து கொடுத்த "எங்கள் தங்கம்" சிறப்பாக தமிழகமெங்கும் ஓடிக்கொண்டிருக்கும் வெற்றிச்செய்தி போன்றவைகளை பேசிக்கொண்டே இருந்ததால் நேரம் போனதே தெரிய வில்லை.
மக்கள் திலகத்தின் ரசிகர்கள் மற்றும் பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்கமால், எல்லா டிக்கெட் கவுண்டர்களிலும், அலை மோதியது. டிக்கெட் கொடுக்கும் நேரம் நெருங்க நெருங்க, ஒரே படபடப்பு. கூட்ட நெரிசலில் மூச்சு திணறியது. இறுதியாக, டிக்கெட் கொடுக்கும் கவுண்டர் திறக்கப்பட்டவுடன், திடீரென்று பெருங்கூட்டம் முண்டியடித்த காரணத்தால், நண்பர்கள் நாங்கள் அனைவரும் மூலைக்கொருவராக பிரிய நேரிட்டது.
நிலை தடுமாறி, நான் கீழே விழுந்து விட்டேன். என்னை பலரும் மிதித்தபடி சென்றதால், சிறுவனான நான் மூச்சு திணறினேன். மயக்கம் வரும் நிலைக்கு ஆளானேன். மக்கள் திலகத்தின் ஒரு அன்பர், கூட்டத்தை மேலும் முன்னேற விட முடியாதபடி தடுத்து, தண்ணீர் கொண்டு வரச் செய்து முகத்தில் தெளித்து, என்னை எழச் செய்து, டிக்கெட் கவுண்டர் வரை பத்திரமாக அழைத்து சென்றார். கவுண்டரில் என் கையை நீட்டி டிக்கெட் வாங்கிய பொழுது நான் ஆகாயத்தில் பறந்தது போன்ற ஒரு மகிழ்ச்சி ! ஆனந்த வெள்ளத்தில் மிதந்தேன். அது வரை நான் பட்ட அவஸ்தை அனைத்தும் காணமல் போனது. என்னை காப்பாற்றிய அந்த அன்பர் எனக்கு அப்பொழுது கடவுள் மாதிரி தெரிந்தார்.
என் பள்ளித் தோழர்கள் ரங்கராஜன், பார்த்த சாரதி ஆகியோர் கூட்ட நெரிசலை சமாளிக்கும் அளவுக்கு உடல் வலிமை பெற்றிருந்த படியால், அவர்களுக்கு டிக்கெட் எடுப்பதில் எந்த சிரமமும் இல்லை. ஆனால், என்னைப்போன்ற மெல்லிய தேகம் கொண்ட ஜி. கே. ரவிக்குமார், கூட்ட நெரிசலை சமாளிக்க முடியாமல், வரிசையிலிருந்து பின்னுக்கு தள்ளப்பட்டு, டிக்கெட் எடுக்க முடியாமல் போனது. எங்கள் மூவருக்கும் டிக்கெட் கிடைத்து, தோழன் ரவிக்குமாருக்கு டிக்கெட் கிடைக்காமல் போனது எங்களுக்கு பெருத்த ஏமாற்றமே !
ஆனாலும்,எங்கள் அனைவரின் கையில் மிச்சமிருந்த பணத்தை கொண்டு பிளாக்கில் அவனுக்கும் டிக்கெட் வாங்கி, அரங்கத்தில் நுழைந்த போது, ஒரு பெரிய சாதனை படைத்து விட்டது போன்று ஓர் உணர்வு !
திரையில் நம் மக்கள் திலகம் வரும் முதல் காட்சியில் வழக்கம் போல் திரையரங்கம் அதிர்ந்தது. " வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் " என்ற பாடல் காட்சியில், நம் தங்கத் தலைவன் அங்கும் இங்கும் ஓடும் சுறுசுறுப்பில், ரசிகர்களின் ஆரவாரம், பலத்த கை தட்டல்.
சொர்க்கத்தை தேடுவோம் சுந்தரி என்ற பாடலில் நம் திரையுலக மன்னன் நடிகை விஜயஸ்ரீயுடன் ஆடும் ஆட்டம் மறக்க முடியாதது.
நாலு பக்கம் சுவரு, நடுவிலே பார் இவரு, நடந்து போச்சு தவறு" என்ற பல்லவியுடன் ஆரம்பிக்கும் "இடமோ சுகமானது, ஜோடியோ பதமானது " என்ற பாடல் காட்சியிலும், அசத்தியது நம் கலைவேந்தன் எம். ஜி. ஆர் . அவர்களே !
தலைவரின் மாறு வேடப் பாடல் "தொட்டுக் காட்டாவா காட்டவா" பாடல் காட்சியில், கர கோஷம் விண்ணைப் பிளந்தது. அப்பொழுது, சார்லி சாப்ளின் என்ற நடிகரை நாங்கள் அறியாத வயதினராக இருந்தோம் . பின்னாளில்தான், சார்லி சாப்ளின் பற்றி நாங்கள் அறிந்து கொண்டோம். நடிகர் கமலஹாசன் "புன்னகை மன்னன்" திரைப்படத்தில், நம் பொன்மனசெம்மலை பின்பற்றி அதே "சார்லி சாப்ளின்" வேடத்தை நினைவு படுத்தி நடித்தது பலரும் அறிந்ததே !
வயதான முதிய தோற்றத்தில், எதிரிகளுடன் சண்டை போடும் வீரத்தை நடிகை ஜெயலலிதா பார்த்து திகைப்பதும், பின்னர் அவர் முதியவர் அல்ல என்ற உண்மை புலப்பட்டு, "அட ஆறுமுகம் இது யாரு முகம்" என்ற பாடல் காட்சியில், தாடியை வைச்சா வேறு முகம், தாடியை எடுத்தா தங்க முகம் என்ற வரிகள் வரும்போது, ரசிகர்களின் கை தட்டல் அடங்க வெகு நேரமாயிற்று.
மாணிக்கத் தேரில் மரகத கலசம் பாடல் காட்சி படமாக்கப்பட்ட விதம் வெகு அருமை. இரவில் எடுக்கப்பட்ட மின்னொளி காட்சிகள் பிரகாசித்தது, இன்றும் மனத்திரையில் ஓடிக் கொண்டே இருக்கிறது.
நல்ல கதையமைப்பு, செவிக்கினிய அருமையான பாடல்கள், மக்கள் திலகத்தின் மகோன்னதமான நடிப்பு, இவையனைத்தும் நிறைந்த அற்புதமான பொழுது போக்கு காவியத்தை பார்த்த திருப்தியில் எனக்கு ஏற்பட்ட அசதியும், உடல் வலியும் பறந்தே போயிற்று !
மறு பிறவி எடுத்த நான் அன்று தனிப்பிறவி எம். ஜி. ஆர். அவர்களை திரையில் தரிசித்த, மறக்க முடியாத நாள் (29-08-1970)
Last edited by makkal thilagam mgr; 30th August 2015 at 09:00 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
29th August 2015, 10:41 PM
#2810
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks