Page 328 of 400 FirstFirst ... 228278318326327328329330338378 ... LastLast
Results 3,271 to 3,280 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #3271
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பாராட்டுக்களுக்கு உளமார்ந்த நன்றி சி.க., ரவி, மது, வாசு .

    தங்களுடைய ஊக்கமும் ஆதரவும் இருந்தால் இது போன்று மேலும் தொடர்ந்து நிகழ்ச்சிகளை நடத்தலாம்.

    மது பாதுகாப்பு பாடலைத் தேர்வு செய்யும் போது உங்கள் ஞாபகம் வந்தது. நீங்களும் அந்தப்பாடலைக் குறிப்பிட்டு எழுதியிருந்தீர்கள்.

    விவிதபாரதி ஆரம்பித்த புதிதில் படம் வருவதற்கு முன்னரே இப்பாடல் அடிக்கடி ஒலிபரப்பாகி வந்தது. நடுவில் டாப் டென் பாடல்கள் போட்டியில் பத்திற்குள் இடம் பெற்றதும் நினைவில் உள்ளது.

    தாங்கள் குறிப்பிட்ட அந்த வரிகள் அன்னாளில் மிகப் பிரபலம். பல ரசிகர்கள் இந்த வரிகளை முணுமுணுத்ததை நானும் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடல் படத்திற்கு ஓர் எதிர்பார்ப்பை உண்டாக்கியது. ஆனால் துரதிருஷ்டவசமாக சரியாக படம் அமையாத காரணத்தால் பெற வேண்டிய வரவேற்பை இப்பாடல் பெறவில்லை.

    வாசு சார் குறிப்பிட்டது போல கடலூர் துறைமுகம் கடற்கரை படத்தில் மிக அருமையாக சித்தரிக்கப்பட்டிருக்கும்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Likes vasudevan31355 liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     
  4. #3272
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார்
    நினைத்தால் நான் வானம் சென்று ... எனக்கு மிக மிக பிடித்த பாடல். மெல்லிசை மன்னரின் இசையமைப்பில் அவருடைய தனி பாணியில் அமைக்கப் பட்டது. பின்னால் இந்தக் காதலுக்கு இடையூறு ஏற்படக் கூடும் என்பதை உணர்த்தும் விதமாக இப்பாடலை அதிக சந்தோஷ உணர்வினைக் கொண்டு வராமல் வெறும் காதல் உணர்வை மட்டுமே கொண்டு வந்திருப்பார். பல காதல் பாடல்களில் காதலோடு மகிழ்ச்சியும் சேர்ந்திருக்கும். ஆனால் இப்பாடலில் அதை சற்றுக் குறைவாகவே கிட்டத்தட்ட இல்லாத மாதிரி அமைத்திருப்பார். படத்தின் அந்த சூழ்நிலை காரணமாக பாடலில் பாலாவை அடக்கி வாசிக்க வைத்திருப்பார். அதையும் மீறி ஒரு குறிப்பிட்ட இடத்தில் (விண்மீனால் பூகொண்டு நானும் வருவேன்) என்ற இடத்தில் தன்னுடைய வழக்கமான குறும்பை நுழைக்க முயற்சித்திருப்பார். இது இசைத்தட்டில் தெளிவாகத் தெரியும். ஆனால் படத்தில் ஃப்ளாட்டாக இருக்கும்.

    எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் நான் கேட்டுக்கொண்டே இருக்க விரும்பும் அருமையான பாடல்.

    வாணிஸ்ரீக்கு மிகவும் கோரமான ஒப்பனை அமைத்து பாடலைக் குட்டிச்சுவராக்கியிருப்பார்கள். தியேட்டரில் இது மிகவும் பளிச்சென்று தெரியும். படத்தின் தோல்விக்கு இந்த ஓவர் மேக்கப்பும் ஒரு காரணம்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355 liked this post
  6. #3273
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'தாய் பிறந்தாள்'

    மது அண்ணா!

    'பொன்னூஞ்சல் கட்டி வைத்து
    பூவை என்னை ஆட்டி வைத்து
    பார்த்திருக்கும் மன்னவரே! என்னவரே!
    பக்தியே என்னுலகம் பொன்னுலகம்
    உந்தன் பக்தியே என்னுலகம் பொன்னுலகம்'

    பானுமதி, முத்துராமன், சாரதா நடித்த இந்தப் 'தாய் பிறந்தாள்' படத்தில் ஜானகி பாடிய பாடல் இது. பாடலும் நன்றாகவே இருக்கும்.

    இதே படத்தில் குழந்தை பெயர் சூட்டு விழாவில் சி.ஐ.டி.சகுந்தலாவும், சாரதாவும் பாடும் பாடல் ஒன்று. சகுந்தலாவுக்கு வழக்கம் போல ராட்சஸி, சாரதாவுக்கு சுசீலா என்று பின்னணி. சகுந்தலா தழையத் தழைய கட்டிய பட்டுப் புடவையுடன் ஆடி சின்னாவின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்வார் குடும்பப் பெண்ணாக.

    'கண்ணனுக்கு பேர் சூட்டி காண்பவர்கள் பாராட்டி
    கொண்டாடும் இன்பம் அல்லவோ'

    ஈஸ்வரி ஆரம்பத்தில் சந்தோஷமாக பாடி முடித்ததும், சாரதா மனதில் சோகமாக இருப்பதை சுசீலா மைண்ட் வாய்ஸில் பாடுவார். அற்புதமாக இருக்கும்.

    (பேரக் குழந்தைக்கு ஆசைப்படும் பானுமதி (பானுமதியின் அற்புதமான நடிப்பு நிறைந்த படம் இது) தன் மகன் முத்துராமனுக்கு பணக்கார சகுந்தலாவை திருமணம் செய்து வைக்க சகுந்தலாவோ குழந்தை பெற்றுக் கொள்ள பிடிக்காமல் கர்ப்பத்தடை மாத்திரை சாப்பிடுகிறார். இதைக் கண்டுபிடித்து ஆத்திரப்படும் பானுமதி சகுதலவைக் கண்டிக்க, சகுந்தலா புகுந்த வீட்டை விட்டு கோபித்துக் கொண்டு பிறந்த வீட்டிற்குப் போய் விட, தன் தம்பி மகள் சாரதாவை முத்துராமனுக்கு மறு திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கிறார் பானுமதி. சகுந்தலாவை சாரதா சந்தித்து இந்த விஷயத்தை சொல்ல, சகுந்தலா ஒரு நரித்தந்திரம் தீட்டி சாரதா முத்துராமனை திருமணம் செய்து குழந்தை பெற்றவுடன் குழந்தையைத் தன்னிடம் ஒப்படைத்து விட்டு விலகிப் போய் விட வேண்டும் என்று சத்தியம் வாங்கிக் கொள்கிறார். வீட்டுக்கு மறுபடியும் பழைய மருமகளாக மன்னிப்பு கேட்டும் நுழைந்து விடுகிறார். சாரதா கர்ப்பமாகி குழந்தை பெற, அவரிடம் சத்தியத்தை சகுந்தலா ஞாபகப்படுத்த, சாரதா பிள்ளையைக் கூட பெயர் சூட்டும் விழாவில் கொஞ்ச முடியாத சோகத்தில் ஆழ்கிறார். இந்த சிச்சுவேஷனில் அந்தப் பாடல்.)

    'ஊரார்கள் வாழ்த்தி உன்னை
    பாராட்டும் வேளையிலே
    பேர் சூட்ட முடியாமல்
    பெற்ற மனம் ஏங்குதடா'

    அமைதியாகப் பாடிக் கொண்டே வருபவர் 'மகனே! மகனே! நீ வாழ்க! என்று ஒரு வேகம் எடுப்பார் பாருங்கள். அம்சம் போங்கள்.

    Last edited by vasudevan31355; 31st August 2015 at 09:07 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. Likes RAGHAVENDRA, Russellmai liked this post
  8. #3274
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மது அண்ணா! ராகவேந்திரன் சார்!

    'உந்தன் பக்தியே என்னுலகம் பொன்னுலகம்'

    வரிகளை மட்டும் கேட்கும் போது அப்படியே,

    'அது விழிவழியே குலமகளே பண்பாடு' கேட்பது போலவே இல்லை? ('வழி வழியே வந்த தமிழ் பண்பாடு') உங்களுக்கு?

    Last edited by vasudevan31355; 31st August 2015 at 09:01 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. Thanks chinnakkannan thanked for this post
  10. #3275
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    Quote Originally Posted by g94127302 View Post

    . சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் இப்படி சொல்லலாம் -

    Rama has rules over substances – Krishna has substances over rules

    In other words , Rama is rule bound king and Krishna is rule breaker to sustain dharma – cause is same but effect is different .

    ஒரு முறை எல்லா தேவர்களும் பரந்தாமனிடம் சென்று கேட்டனராம் - " பிரபு - நீங்கள் எடுத்த அவதாரங்களில் உங்களுக்கு கடினமான , மிகவும் பிடித்த அவதாரம் எது ? "

    மாதவன் சொன்னான் " எனக்கு சவாலாக அமைந்த அவதாரம் " ராமன் " - மற்ற அவதாரங்களில் என் தெய்வத்தன்மை நிறைந்திருக்கும் - ஆனால் இதில் முழுக்க முழுக்க மனிதனாக வாழ்ந்தேன் - நல்ல பண்புகளுடன் , ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையில் சிறிதும் மாறாமல் வாழ்வது என்பது எவ்வளவு கடினமான அனுபவம் ... மீண்டும் எனக்கு ஒரு வாய்ப்பு அமைந்தால் மீண்டும் மனித அவதாரத்தைத்தான் விரும்புவேன் ..... "

    --
    **

    ரவி..உங்கள் கருத்திலிருந்து நான் மாறுபடுகிறேன்.. முதலில் கிருஷ்ணாவதாரம் பற்றி கொஞ்சம் படித்து, கொஞ்சம் நிறையக்கேட்டு,எழுதிப் பார்த்தது- எனது முயற்சியான பூமாலை தொடுத்த பாமாலையிலிருந்து திருப்பாவை இருபத்து நான்காம் பாடல்..

    மீள்பதிவு..

    **

    நண்பர் கோபால் கிருஷ்ணன் ஒரு குட்டிக் கவிதை எழுதியிருந்தார்.

    கவிதையின்
    வாமன அவதாரம்
    ஹைக்கூ

    இதேபோல கிருஷ்ணாவதாரத்தைப் பற்றியும் குட்டியாய் எழுதி பார்க்கலாமா? எப்படி எழுதலாம்?

    கிருஷ்ணாவதாரம்
    மஹாவிஷ்ணுவின்
    அவதாரங்களில்
    ”ஹைக்கூ”

    என்ன இது? கிருஷ்ணன் செய்த செயல்களெல்லாம் பெரிதாயிற்றே. அவனது விளையாட்டுக்கள், வேடிக்கைகள், உபதேசங்கள் எல்லாம் நிறைய உள்ளனவே. அப்படி இருக்கையில் கிருஷ்ணாவதாரத்தை எப்படி ஹைக்கூ எனச் சொல்லலாம்?

    இப்படி அர்த்தம் கொள்ளக் கூடாது! மஹாவிஷ்ணுவின் மற்ற அவதாரங்களின் தாத்பர்யம் கிருஷ்ணாவதாரத்தில் அடங்கி உள்ளது என அர்த்தம்.

    “ஹை, சும்மா கதை விடக்கூடாது. மற்ற அவதாரங்களை விடுத்து ராமாவதாரத்தை எடுத்துக் கொண்டால் ராமனுக்கு ஏக பத்தினி. கிருஷ்ணனோ ஏகப் பட்ட கோபிகைகளுடன் இருந்ததாக வருகிறது. எப்படி? எனக் கேள்வி வரும்.

    இராமாவதாரம் ஆதர்ச புருஷாவதாரம். இராமர் தன் சக்தியை வெளியிடாமல் சாதாரண மனிதன் போலவே நடந்து கொள்கிறார். உலகிற்கு உதாரண புருஷனாக விளங்குகிறார். தாம் பரம்பொருள் என்ற நினைவு அவருக்கு எப்போதும் இல்லை. ஆனால் கிருஷ்ணாவதாரமோ, பூர்ணாவதாரம். தாம் பரம்பொருள் என்பதை அவ்வப்போது காட்டிக் கொண்டார். தமது சக்தியை உணர்த்தியும் பேசியும் புரிய வைக்கிறார்.

    “தங்கள் கணவன் மார்கள், மக்கள் ஆகியோரை மறந்து கண்ணனிடம் ஈடுபட்டிருந்தனர் கோபியர்” என பாகவதத்தில் வருகிறது. ‘அடடா, கண்ணன் இப்படியா ‘ என நினைக்கக் கூடாது.

    நெருப்பு அழுக்கை எரித்துத் தூய்மைப் படுத்துகிறது. ஆனால் அழுக்கின் சேர்க்கையால் தீ அழுக்குப் படுவதில்லை. பரம்பொருள் என்ற நிலையில் சகல ஜீவராசிகளையும் மயக்கி நின்றான் கண்ணன். தெய்வீக நாதனைப் பழித்து அவன் செய்த காரியங்களைப் பிறர் மனதாலும் கருதக் கூடாது. சகல உயிர்களிடத்தும் ஊடுருவி நிற்கும் சக்தியான பரம்பொருளுக்கு ஆண், பெண், கணவன்,மனைவி என்ற பாகுபாடு ஏது? செயல்களைப் பாதிக்கும் சுகதுக்கங்கள் கடவுளைப் பற்றுமோ?

    ( மனசாட்சி: ரொம்ப ஆழமா ஆன்மிகம் பேசறா மாதிரி இருக்கு?

    நான்: சில விஷயங்களை இப்படித் தாம்ப்பா சொல்ல முடியும்!)

    கண்ணனிடம் ஈடுபாடு கொண்டு கோபியர்கள் இருந்தார்கள் என்றால், கணவர்கள் ஏன் கோபங்கொள்ளவில்லை? கண்ணன் மாயையால் ஒவ்வொருவர் பக்கத்திலும் அவன் மனைவி இருந்தாள், இந்தமாயை அடிக்கடி வற்புறுத்தப் படுகிறது. கண்ணன் விளையாடியது, விந்தை காட்டியது, வாதம் தொடுத்தது, வெண்ணெய் திருடியது, வழி மடக்கியது, கண்கலங்கச் செய்தது, குழல் ஊதி எழுப்பியது, ஜலக்ரீடை புரிந்தது, ஆடைகளைக் கவர்ந்து கொண்டது அனைத்தும் பெண்களிடத்தில் தான், உலகம் மாயை, ஆணும் பெண்ணும் மாயத்தோற்றங்கள். உண்மையில் உள்ளது ஒன்றே- அது அவன் தான்! அனைத்தையும் மறந்து அவனைச் சரணடைந்தால் காக்கும் பொறுப்பு அவனுடையது. அவன் எங்கும் இருப்பவனாகையால் எப்போதும் வந்து காப்பான்! இந்த உண்மையைத் தான் கிருஷ்ண லீலைகள் நிரூபிக்கின்றன.

    இன்றைய பாடலில் ஆயப் பெண்கள் விரும்பின படியே கண்ணன் சிங்காசனத்திலிருந்து நடையிடத் தொடங்கினான். அதைக்கண்ட ஆயப் பெண்கள் அவனது நடையழகில் தங்களை மறந்து அவனது திருவடிகளுக்கும் குணங்களுக்கும் பல்லாண்டு பாடுகிறார்கள்.

    **

    “அன்றிவ் வுலகம் அளந்தா யடி போற்றி
    சென்றவருத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
    பொன்றச் சகட முதைத்தாய் புகழ் போற்றி
    கன்று குணிலா வெறிந்தாய் கழல் போற்றி
    குன்று குடையா எடுத்தாய்குணம் போற்றி
    வென்று பகை கொடுக்கும் நின்கையில் வேல் போற்றி
    என்றென்றும் சேவகமே யேந்திப் பறை கொள்வான்
    இன்று யாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்..

    **

    மென்மையான – தொட்டாலே கன்றிச் சிவந்துவிடும் மெல்லடிகளைக் கொண்டு முன்னொரு காலத்தில் காடும் மேடுமான இந்த உலகத்தை அளந்தாயே. அத்திருவடிகளுக்கு எந்தக் குறையும் வராமல் இருக்கவேண்டும் என்று நாங்கள் பல்லாண்டு பாடுகிறோம்!

    கல்லும் முள்ளும் நிறைந்த காட்டில் பல நூறுகாதங்கள் சென்று குகையில் புலியைப் பார்ப்பது போல, இராவணனை அவனுடைய இருப்பிடமான இலங்கையிலேயே வென்ற உன்னுடைய திறமைக்குப் பல்லாண்டு!

    ஒரு வண்டியில் ஆவேசித்திருந்து உனக்குத் தீமை செய்ய முயன்ற சகடாசுரன் அழியும் படியாகத் திருவடிகள் உதைத்தவனே, தாயும் உதவிக்கு வராத அந்த நேரத்தில் உன்னைக் காத்துக் கொண்ட புகழுக்குப் பல்லாண்டு!

    உன்னைக் கொல்ல இரு அசுரர்கள் கன்றாகவும், விளாங்கனியாகவ்வும் நிற்க, கன்றை விளாங்கனி மீது எறிந்து இருவரையும் அழித்தவனே, அப்படி எறிந்த போது மடங்கி நின்ற உன் திருவடிகளுக்குப் பல்லாண்டு!

    தனக்கு விழா எடுக்காததால் கோபம்கொண்டு இந்திரன் கல்மழை பொழிந்த போது கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து ஆயர்களையும் பசுக்களையும் காத்தவனே, இப்படித் தீங்கு புரிந்த இந்திரனையும் மன்னித்து அருள் புரிந்த உன்னுடைய குணத்துக்குப் பல்லாண்டு!

    பகைவர்களை வென்று அழியச் செய்யும் உன் கையிலுள்ள வேலுக்கும் பல்லாண்டு! இவ்வாறு உன் வீரச் செயல்களையும் புகழ்ந்து பாடுவதையே பயனாகக் கொண்டு நாங்கள் வந்தோம், எங்களுக்கு நீ இறங்கி அருள் புரிய வேண்டும்!

    **

    உட்கருத்து:

    இப்பாடலில் பகவானது விரோதிகளைச் சொல்வது போல மனிதனுடைய விரோதிகளை ஆண்டாள் நமக்குச் சொல்கிறாள்:

    • மஹாபலி – அகங்காரம்
    • இராவணன் – காமம்
    • சகடன் – மோகம்
    • வத்ஸன் – லோபம்;
    • கபித்தன் (விளாமரம்) – ஆச்சர்யம்
    • இந்திரன் – குரோதம்

    இந்த ஆறு விரோதிகள் அழிந்தால் இறைவன் தென்படுகிறான்!

    **

    (அடுத்த போஸ்டிலும் கண்ணன் வருவான் )
    Last edited by chinnakkannan; 31st August 2015 at 09:53 PM.

  11. Likes RAGHAVENDRA liked this post
  12. #3276
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார்
    தங்களின் யூகத்தில் நியாயம் உள்ளது. மெல்லிசை மன்னர் இசையமைத்த பாடல் என்றாலும் ஏற்கெனவே கேட்ட பாடலை நினைவூட்டுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. நீங்கள் குறிப்பிட்ட பாடல் மட்டுமின்றி, பாக்தாத் பேரழகி படத்தில் இடம் பெற்ற நவாபுக்கொரு கேள்வி பாடலையும் நினைவூட்டும்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  13. #3277
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    சஷ்டியில் விரதமிருந்தால் அகப்பையில் கரு வளருமாம்.

    பானுமதி சொல்கிறார்..

    இதைப்பற்றி திரையில் பக்தி நிபுணர்கள் சொல்ல வேண்டும். ஓவர் டூ சி.க. அண்ட் ரவி.

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  14. #3278
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பூமாலை தொடுத்த பாமாலையின் மீள் பதிவு..

    **

    திடீரென்று மனது குதூகலிக்கிறது. உணர்வுகள் பொங்கி எழுகின்றன. எதையாவது எழுதத் தோன்றுகிறது. பேனா எடுக்கிறோம்.. எழுதுகிறோம்..

    நேற்றுப் பார்த்து
    நேற்றுப் பார்த்து
    நேற்றுப் பார்த்ததை
    நினைத்துப் பார்க்கையில்
    நேற்றுப் பார்த்தது
    நிழற்கனவாகி
    நாளை வந்திட..,
    மறுபடி நேற்று!

    என்று எழுதி பத்திரிகைக்கு அனுப்புகிறோம். நவீன கவிதை என அது பிரசுரமாகி விடுகிறது! பத்திரிகையைத் தடவித் தடவிப் பார்க்கிறோம். நாம் எழுதியதை மறுபடி மறுபடி படித்துப் பார்க்கிறோம். நமக்கே அப்போது தான் ஏதோ புரிய ஆரம்பிக்கிறது! நம் மனது மகிழ்கிறது. உடனே மறுபடி

    மனம் மகிழ்ந்திட
    மனம் மகிழ்ந்திட
    கண்ட மகிழ்ச்சியில்
    மனம் மடிந்திட,
    அந்தரத்தில் நிற்பதென்னவோ
    உடல்!

    என்று இன்னொன்று எழுதிவிடுகிறோம்!

    மஹா விஷ்ணுவிற்கும் ஆசை வந்தது. தானே வேறு உருவில் இருப்பதைப் பார்ப்பதற்கு. என்ன செய்தார்?

    துவாரகாபுரியில் ஒரு அந்தணன் இருந்தான். அவனுக்கு எட்டுக் குழந்தைகள் இறந்தே பிறந்தன. ஒவ்வொரு முறையும் அரசவைக்குச் சென்று ‘அரசன் ஒழுங்காக ஆட்சி செய்தால் பிரஜைகளுக்கு இவ்விதம் நேரா” எனச் சொல்லி இறந்த குழந்தைகளை எரித்து வந்தான். ஒன்பதாம் முறையும் குழந்தை இறந்தே பிறக்கவே – அந்தணன் அரண்மனைக்குச் சென்று நிந்தித்தான். “என் குழந்தைகளைக் காப்பதற்கு யாரும் இல்லையா?” எனக் கதறினான்.

    கண்ணன் அப்போது துவாரகையில் இல்லை. அர்ச்சுனன் மட்டும் இருந்தான். அவன் அந்தணனிடம் “ நீர் கவலைப் படாதீர். உமதுஅடுத்த குழந்தைக்கு எதுவும் நேராமல் நான் பார்த்துக் கொள்கிறேன்!” என வாக்குக் கொடுத்தான். பத்தாவது குழந்தையின் பிரசவத்தின் போது வில்லேந்தி, எமன் எப்படி வருகிறான் என்று பார்க்கும் வண்ணம் நின்றான் அர்ச்சுனன்.

    குழந்தை பிறந்தது; இறந்தது; மறைந்தது. அந்தணன் அழுகையுடன் கேலி செய்தான். “ முன்பாவது உடல் இருக்கும், இப்பொது அதுவும் இல்லை. நல்ல காவல்!” அர்ஜூனன் வெட்கப் பட்டு உயிரை விட யத்தனிக்கையில், கண்ணன் வந்தான்.

    ‘வா, நாம் போய் மீட்டு வருவோம்” என இருவரும் வாயு ரதத்தில் ஏறித் தேடினார்கள். சக்கிர வளாகிரி என்ற இடத்தில் ஒரே இருள். தனது திருவாழியால் இருளைக் கிழித்து ரதத்தைச் செலுத்த கடைசியில் கண்டது என்ன?

    ஒளிமயமாக விளங்கும் நகரில் பரப்பிரம்மரான நாராயணன் ஆதி சேடன் மீது பள்ளி கொண்டிருப்பதைப் பார்த்தனர். விஷ்ணு “ உங்கள் இருவரையும் காண வேண்டும் என்று இங்குள்ள முனிவர்களும் முக்தர்களும் விரும்பினர். அதானாலேயே அந்தணனின் குழந்தைகளை மறைத்தேன். அவர்கள் இங்கே உயிருடன் இருக்கின்றனர். அவர்களை அழைத்துச் செல்லலாம்” என்றார். கிருஷ்ணார்ச்சுனர்கள் அந்தணனிடம் குழந்தைகளைத் திருப்பிக் கொடுக்க அந்தணன் மகிழ்ந்தான்.

    தான் எடுத்த அவதாரத்தை, தானே பார்க்க வேண்டுமென விஷ்ணுவையும் ஆசைப்பட வைத்தது கிருஷ்ணாவதாரம்.

    **

    ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
    ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
    தரிக்கிலானாகித் தான் தீங்கு நினைந்த
    கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
    நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
    அருந்தித்து வந்தோம் பறை தருதியாகில்
    திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
    வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்

    **

    *

  15. Likes RAGHAVENDRA liked this post
  16. #3279
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    சஷ்டியில் விரதமிருந்தால் அகப்பையில் கரு வளருமாம்.

    பானுமதி சொல்கிறார்..

    இதைப்பற்றி திரையில் பக்தி நிபுணர்கள் சொல்ல வேண்டும். ஓவர் டூ சி.க. அண்ட் ரவி.
    அப்பாடி!

    நான் பொழச்சேன்.
    நடிகர் திலகமே தெய்வம்

  17. Likes chinnakkannan liked this post
  18. #3280
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    பூமாலை தொடுத்த பாமாலையின் மீள் பதிவு..

    **

    திடீரென்று மனது குதூகலிக்கிறது. உணர்வுகள் பொங்கி எழுகின்றன. எதையாவது எழுதத் தோன்றுகிறது. பேனா எடுக்கிறோம்.. எழுதுகிறோம்..

    நேற்றுப் பார்த்து
    நேற்றுப் பார்த்து
    நேற்றுப் பார்த்ததை
    நினைத்துப் பார்க்கையில்
    நேற்றுப் பார்த்தது
    நிழற்கனவாகி
    நாளை வந்திட..,
    மறுபடி நேற்று!

    என்று எழுதி பத்திரிகைக்கு அனுப்புகிறோம். நவீன கவிதை என அது பிரசுரமாகி விடுகிறது! பத்திரிகையைத் தடவித் தடவிப் பார்க்கிறோம். நாம் எழுதியதை மறுபடி மறுபடி படித்துப் பார்க்கிறோம். நமக்கே அப்போது தான் ஏதோ புரிய ஆரம்பிக்கிறது! நம் மனது மகிழ்கிறது. உடனே மறுபடி

    மனம் மகிழ்ந்திட
    மனம் மகிழ்ந்திட
    கண்ட மகிழ்ச்சியில்
    மனம் மடிந்திட,
    அந்தரத்தில் நிற்பதென்னவோ
    உடல்!

    என்று இன்னொன்று எழுதிவிடுகிறோம்!

    மஹா விஷ்ணுவிற்கும் ஆசை வந்தது. தானே வேறு உருவில் இருப்பதைப் பார்ப்பதற்கு. என்ன செய்தார்?

    துவாரகாபுரியில் ஒரு அந்தணன் இருந்தான். அவனுக்கு எட்டுக் குழந்தைகள் இறந்தே பிறந்தன. ஒவ்வொரு முறையும் அரசவைக்குச் சென்று ‘அரசன் ஒழுங்காக ஆட்சி செய்தால் பிரஜைகளுக்கு இவ்விதம் நேரா” எனச் சொல்லி இறந்த குழந்தைகளை எரித்து வந்தான். ஒன்பதாம் முறையும் குழந்தை இறந்தே பிறக்கவே – அந்தணன் அரண்மனைக்குச் சென்று நிந்தித்தான். “என் குழந்தைகளைக் காப்பதற்கு யாரும் இல்லையா?” எனக் கதறினான்.

    கண்ணன் அப்போது துவாரகையில் இல்லை. அர்ச்சுனன் மட்டும் இருந்தான். அவன் அந்தணனிடம் “ நீர் கவலைப் படாதீர். உமதுஅடுத்த குழந்தைக்கு எதுவும் நேராமல் நான் பார்த்துக் கொள்கிறேன்!” என வாக்குக் கொடுத்தான். பத்தாவது குழந்தையின் பிரசவத்தின் போது வில்லேந்தி, எமன் எப்படி வருகிறான் என்று பார்க்கும் வண்ணம் நின்றான் அர்ச்சுனன்.

    குழந்தை பிறந்தது; இறந்தது; மறைந்தது. அந்தணன் அழுகையுடன் கேலி செய்தான். “ முன்பாவது உடல் இருக்கும், இப்பொது அதுவும் இல்லை. நல்ல காவல்!” அர்ஜூனன் வெட்கப் பட்டு உயிரை விட யத்தனிக்கையில், கண்ணன் வந்தான்.

    ‘வா, நாம் போய் மீட்டு வருவோம்” என இருவரும் வாயு ரதத்தில் ஏறித் தேடினார்கள். சக்கிர வளாகிரி என்ற இடத்தில் ஒரே இருள். தனது திருவாழியால் இருளைக் கிழித்து ரதத்தைச் செலுத்த கடைசியில் கண்டது என்ன?

    ஒளிமயமாக விளங்கும் நகரில் பரப்பிரம்மரான நாராயணன் ஆதி சேடன் மீது பள்ளி கொண்டிருப்பதைப் பார்த்தனர். விஷ்ணு “ உங்கள் இருவரையும் காண வேண்டும் என்று இங்குள்ள முனிவர்களும் முக்தர்களும் விரும்பினர். அதானாலேயே அந்தணனின் குழந்தைகளை மறைத்தேன். அவர்கள் இங்கே உயிருடன் இருக்கின்றனர். அவர்களை அழைத்துச் செல்லலாம்” என்றார். கிருஷ்ணார்ச்சுனர்கள் அந்தணனிடம் குழந்தைகளைத் திருப்பிக் கொடுக்க அந்தணன் மகிழ்ந்தான்.

    தான் எடுத்த அவதாரத்தை, தானே பார்க்க வேண்டுமென விஷ்ணுவையும் ஆசைப்பட வைத்தது கிருஷ்ணாவதாரம்.

    **

    ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
    ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
    தரிக்கிலானாகித் தான் தீங்கு நினைந்த
    கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
    நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
    அருந்தித்து வந்தோம் பறை தருதியாகில்
    திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
    வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்

    **

    *
    ck - அருமை -- இது -- இது -- இதைத்தான் ( இப்படிப்பட்ட பதிவுகளையும் ) எதிர்ப்பார்த்தேன் உங்களிடம் - மிக்க நன்றி

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •