-
6th September 2015, 12:25 PM
#11
Senior Member
Seasoned Hubber
Dear R.K.S.
உங்களுக்கு மட்டுமல்ல, நம் ஒவ்வொருவருக்கும் நான் பணிவாக சொல்ல விரும்புவது, இதுதான்.
ஒவ்வொரு விஷயத்திற்கும் அணுகுமுறை என்பது மாறுபடும். உணர்ச்சி வசப்படுதல் மனித இயல்பு, அதற்கு நானும் விதிவிலக்கல்ல. ஆனால் அதையும் சில சமயங்களில் நாம் கட்டுப்படுத்தியாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். நாம் தற்போது அந்த மாதிரி ஒரு சூழலில் தான் இருக்கிறோம். என்னைப் பொறுத்த வரையில் பெருந்தலைவர் கூட இரண்டாம் பட்சம் தான். நடிகர் திலகத்தை மட்டுமே தலைவனாக ஏற்றுக்கொண்டவன். இது இன்று நேற்றல்ல, கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் நிலைப்பாடு. எப்பேர்ப்பட்ட சூழலிலும் அவரை விட்டு விலகியவன் இல்லை. அவர் செய்யது தவறோ சரியோ என்று நான் ஆராய்ந்ததில்லை. என்னைப் பொறுத்த மட்டில் அவர் செய்வது சொல்வது மட்டுமே வேதவாக்கு. எனக்கு எந்த அரசியல் சாயமும் கிடையாது, நடிகர் திலகத்தின் தொண்டன் என்பதைத் தவிர.
அதுவும் அவருடன் மிகவும் நெருக்கமாகப் பழகியது, அவரே என்னைப் பெயர் சொல்லி அழைத்து ஆலோசித்ததெல்லாம் நான் இன்னும் பல நூறு பிறவிகள் எடுத்தாலும் கிடைக்க முடியாத பாக்கியம். அவர் எந்த அளவிற்கு குடும்பத்தை நேசித்தார் என்பதெல்லாம் நேரிலேயே பார்த்தவன், அவர் சொல்லக் கேட்டவன்.
எனவே அந்த ஒரு அனுபவத்தின் அடிப்ப்டையிலும் அவருடைய மனநிலையை அறிந்தவன் என்கின்ற முறையிலும் எந்த விஷயத்தை எப்படி அணுகவேண்டும் என்ப்தை ஓரளவிற்கு அனுபவ பூர்வமாக அறிந்தவன் என்கின்ற முறையிலும் தான் என் வேண்டுகோளை வைக்கிறேன்.
நடிகர் திலகத்தின் சிலை அகற்றப்படுவதை எவருமே விரும்பமாட்டார்கள். இது விவாதத்திற்கெல்லாம் அப்பாற்பட்ட விஷயம். இதில் அரசியல் சாயம் பூசத்தேவையில்லை. ஆனாலும் என் மேல் ஒரு சில நண்பர்கள் தேவையில்லாமல் விமர்சித்தார்கள்.
நீதிமன்றத்தில் இருக்கும் ஒரு விஷயத்தை ஓரளவிற்கு மேல் நாம் விமர்சிக்க முடியாது. அச்சு ஊடகம் என்பது வேறு, மின்னணு ஊடகம் என்பது வேறு. மின்னணு ஊடகத்தில் எழுதப்படும் எந்த விஷயமும் மிக வேகமாகப் பரவும் என்பதால் அதற்கென தனி சட்டப்பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு சைபர் கிரைம் என்பது இன்று உலகளவில் வரையறுக்கப்பட்டு உடனடியாக வழக்குத்தொடுக்கப்ப்ட்டு தண்டனைக்குள்ளாகும் வலுவைப் பெற்றுள்ளன.
நம் இந்திய நாட்டில் இது மிகவும் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் நாம் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் எழுதிவிட்டோமானால் பாதிப்பு மிகவும் கடுமையாக இருக்கும். வெளிநாட்டில் வாழும் நண்பர்களுக்கு அந்தக்கவலையில்லை. அவர்கள் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் நம் நாட்டில் அப்படி எழுத முடியாது. அப்படிப்பட்ட வழக்குகளில் இருந்து நாம் எளிதில் விடுபட முடியுமா, ஒரு வேளை குற்றமென்று நிரூபிக்கப்பட்டால் அதற்கான தண்டனை என்ன போன்ற பல விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.
உண்மையான யதார்த்த நிலை என்ன வென்று பார்த்தோமானால் அப்படிப்பட்ட சூழலில் நம்மைக் காத்துக்கொள்வது மிகவும் கடினம். அப்போது மற்றவரை நொந்து எந்தப் பயனுமில்லை.
இது தான் இன்று உண்மை நிலை.
நம்முடைய கருத்தை மிகவும் நாகரீகமாகவும் நயமாகவும் தான் சொல்ல வேண்டும்.
இதைத்தான் நான் வலியுறுத்த விரும்புகிறேன்.
Last edited by RAGHAVENDRA; 6th September 2015 at 12:35 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
6th September 2015 12:25 PM
# ADS
Circuit advertisement
Bookmarks