-
6th September 2015, 06:00 PM
#3221
Junior Member
Seasoned Hubber
தவறாக சொல்லவில்லை திரு.ஆர்.கே.எஸ்.
ஏற்கனவே இருந்ததை விட, கூடுதல் இருக்கைகளுடன் கட்டணமும் அதிகம் உள்ள திரையரங்குக்கு மாற்றப்பட்டு அரங்கம் நிறைகிறது என்றால், அதற்குத்தான் வாழ்த்துக்கள் என்று தெரிவித்தேன். படத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளதையே இது காட்டுகிறது.
அப்படி இருக்கும்போது, ஏன் சனி, ஞாயிறு மட்டும் காலை காட்சிகள் ஆக்கினார்கள் என்று தெரியவில்லை.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
6th September 2015 06:00 PM
# ADS
Circuit advertisement
-
6th September 2015, 06:55 PM
#3222
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
esvee
அசைக்க முடியாத கோட்டைகளை அசைத்து காட்டியவர் .
கொக்கரித்தோர் கோட்டைகளை தகர்த்தெறிந்தவர்
மக்கள் மனக் கோட்டையில் புகுந்தவர்
1967ல் கோட்டையில் திமுகவை அமர்த்தியவர் .
1977ல் மக்கள் திலகமே கோட்டைக்குள் முதல்வராக அமர்ந்தவர்
சினிமா என்ற கோட்டையில் பொற்கால முதல்வராக திகழ்ந்தவர் .
கனவு தொழிற்சாலையில் பல வெற்றி கோட்டைகளை கடந்தவர் .
எம்ஜிஆர் சினிமாவில் நடித்த வரை அவரே முடி சூடா மன்னன் .
அரசியலில் கடைசி வரை தமிழத்தை ஆண்ட மன்னாதி மன்னன்
எம்ஜிஆரின் வெற்றிகளை வரலாறு ஏற்று கொண்டது .
மக்கள் ஏற்று கொண்டார்கள்
தொண்டர்களும் ரசிகர்களும் இரவு பகலாக உழைத்தார்கள்
இன்றும் உழைக்கிறார்கள் ..
நாளையும் உழைப்பார்கள்
இந்த அட்சய பாத்திரத்தில் இருக்கும் மக்கள் திலகமும் அவர் உருவாக்கிய இயக்கமும் , சின்னமும்
அள்ள அள்ள குறையாது .அமுத சுரபியான மக்கள் திலகத்தின்செல்வாக்கும் , திருமுகமும் உலகம்
உள்ளவரை அழியாது .
சரித்திரம் வெற்றிகளை என்றுமே மறக்காது .
Courtesy - facebook
super kavidhai.
-
6th September 2015, 06:58 PM
#3223
Junior Member
Seasoned Hubber
' சதிலீலாவதி 'யில் (1936ல் வெளியானது) நடிக்கும் போது mgrஎம்.ஜி.ஆருக்கு வயது 19 தான். முதன்முதலாக கதாநாயகனாக 'ராஜகுமாரி' (1947) படத்தில் நடிக்கும் போது அவருக்கு வயது 30. இளவயது தான். ஆனாலும், உன்னிப்பாகப் பார்த்தால் நீள் சதுர வடிவிலான அவரது முகத்தில் அந்த வயதை மீறிய முதிர்ச்சி மெலிதாகப் படர்ந்திருப்பதை அவரது மிக ஆரம்ப கால படங்களில் காணலாம். இதற்கு, அனுபவித்த வறுமை காரணமா அல்லது பிறப்பிலேயே அப்படியா என்று தெரியவில்லை.
ஆனால் அதே முகம், அதற்கு பிறகு முதிர்ந்ததாக காணப்படவில்லை. ஆரம்பத்தில் வயதிடம் தோற்ற அந்த முகம் பின்னாளில் வயதையே தோற்கடித்தது தான் ஆச்சரியம். அதாவது தனது 45, 50 வயதிலும் எம்.ஜி.ஆரின் முகம், 30, 35 வயதைத் தான் காட்டியது. அதற்கேற்ப அவர் பராமரித்து வந்த தொந்தி தள்ளாத 'சிக்' உடற்கட்டும், துள்ளல் நடிப்பும், இளமையை வெளிப்படுத்தும் 'பாடி லேங்குவேஜ்'ம் உறுதுணையாக இருந்தன. (உதாரணத்துக்கு: 'தாழம்பூ, அன்பேவா, சந்திரோதயம், நம்நாடு ...' என்று படங்கள் பட்டியலை அடுக்கிக் கொண்டேப் போகலாம்)
தனக்கு தோதான கதாபாத்திரங்களையேத் தேர்ந்தெடுத்தார். தனக்கு பலமாக இருக்கும் சண்டைக்கலையை முழுமையாக பிரயோகித்தார். படத்தின்
திரைக்கதை, வசனம், பாடல் காட்சிகள், பட டைட்டில் போன்றவற்றிலும் கூடுதல் கவனம் செலுத்தினார். ' எம்.ஜி.ஆர். ·பார்முலா ' என தனி பாணியையே உருவாக்கினார். மாபெரும் வெற்றியும் கண்டார்.
தமிழ் சினிமாவில் ' மெலோடிராமா ' நிறைந்திருந்த காலகட்டத்தில் - அதுவும் அந்த நடிப்பில் திலகமாக போட்டி நடிகர் விளங்கிய நிலையில் இவ்வாறு வெற்றி பெறுவது சுலபமான விஷயமல்ல. ' நடிக்கவே தெரியாத நடிகன்', '' அட்டைக் கத்தி வீரன்'.... இப்படியான கிண்டல்கள் கேலிகளுக்கு மத்தியில் சாதிக்க முடிந்ததற்கு காரணம், மைனஸ் பாயிண்ட்டுகளை ப்ளஸ் பாயிண்ட்டுகளாக மாற்ற எம்.ஜி.ஆர் காட்டிய உழைப்பும், நம்பிக்கையும், மனோ உறுதியும் தான்.
அரசியலிலும் அவர் சுலபமாக நீந்தி விடவில்லை. அரசியலில் தான் எதிர்த்து நிற்க வேண்டிய நபரின் கெட்டிக்காரத்தனத்தையும் சாணக்கியத்தனத்தையும் நன்கு அறிந்துமே துணிந்து களம் இறங்கினார் எம்ஜிஆர். மக்களின் நாடித் துடிப்பை மட்டுமின்றி தனது பலவீனத்தை அறிந்திருந்த அளவுக்கு எதிரியின் பலவீனத்தையும் நன்கு புரிந்து வைத்திருக்கும் புத்திசாலித்தனத்தால் அரசியலிலும் ஜெயித்தார் எம்ஜிஆர். உலகிலேயே, ஒரு சினிமா நடிகர் தனியாக ஒரு அரசியல் கட்சியை ஆரம்பித்து ஜெயித்து ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகவும் ஆகி சாதித்த முதலாமவர் என்ற பெருமையை பெற்றார்.
'அரசியல் விதூஷகன்' என்று கேலி பேசியவர்களும், 'அரிதாரம் பூசிவனெல்லாம் அரசாள முடியுமா? ' என்று கிண்டலாக கேட்டவர்களையும் கூட பின்னாளில் அவரை 'புரட்சித்தலைவர்' என்று புகழ வைத்தது அவரது வெற்றி.
அவருக்கு பிள்ளைச் செல்வம் இல்லாத குறையும் கூட அவருக்கும் அவர் மீதான 'இமேஜ்'க்கும் ஒரு வகையில் இயற்கையாகவே சாதகமாக அமைந்தது எனலாம். முதலமைச்சராக இருந்த போது அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எதிர்தரப்பால் அடுக்கப்பட்ட போது, "அவருக்கென்ன. பிள்ளையா குட்டியா? பிறகெதுக்கு. ஊழல் செய்து சொத்து சேர்க்க வேண்டிய அவசியமே அவருக்கில்லை. ஏழைகளுக்கு அள்ளிக் அள்ளி கொடுக்கிறவராச்சே. சும்மா சொல்றாங்க" என்று மக்கள் மன்றத்தில் புகார்கள் எடுபடாமல் போகச் செய்தது.
1967ல் சக நடிகர் ஒருவரால் எம்.ஜி.ஆர். நேருக்கு நேர் துப்பாக்கியால் சுடப்பட்டார். 1984ல் உடல் நலம் குன்றி சாவின் விளிம்பை தொட்டு வந்தார். இந்த இரண்டு நிகழ்வுகளிலுமே உயிருடன் மீண்டு , ஒரு மனிதன் ஒரே பிறவியில் மூன்று முறை பிறவி கண்ட அதிசயமாக பாமரர்கள் மத்தியில் தானொரு அபூர்வப் பிறவியாக பிரமிக்க வைத்தார் எம்.ஜி.ஆர். சாவையே தோற்கடித்த சாகச வீரனாகவும், ' தர்மம் தலைகாக்கும் ' என்கிற உபதேசத்தின் உதாரண புருஷனாகவும் அவர் சாமானிய மக்கள் மத்தியில் உலா வர, அந்த 1967, 1984 அசம்பாவிதங்களும் கூட அவருக்கு சாதகமாக அமைந்த அதிசயத்தை என்னவென்று சொல்வது !
அதே 1967ல் துப்பாக்கி குண்டு காயத்துடன் சென்னை ஆஸ்பத்திரியிலும் இருந்த போதும், 1984ல் சிறுநீரக கோளாறு அறுவை சிகிச்சைக்காக அமெரிக்க ஆஸ்பத்திரியிலும் படுத்திருந்த நிலையிலும் பிரச்சாரத்துக்கு தொகுதிக்கே போகாமல் சட்டசபைத் தேர்தலில் நின்று ஜெயித்து அரசியல் எதிரிகளை அதிர வைத்த செல்வாக்கு!
அதுமட்டுமா, மேற்குறிப்பிட்ட அவ்விரு சம்பவங்களிலும் எம்.ஜி.ஆரின் பேச்சுத் திறன் பாதிக்கப்பட்ட போதும் அவரை அவராகவே அப்படியே ஏற்று அள்ளி அரவணைத்துக் கொண்ட மக்களின் அபிமானம் !!
இப்படி ஆச்சரியம் அல்லது அதிசய நிகழ்வுகளை உள்ளடக்கிய எம்.ஜி.ஆரின் வாழ்க்கைக் காலம் மொத்தம் 70 ஆண்டுகள். அதில் சுமார் 40 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் (1936- 1977) அவர் நடித்தது மொத்தமே 136 படங்கள் தான். இதன் ஊடே 1953ம் ஆண்டு எம்.ஜி.ஆர். திமுகவில் சேர்ந்தது தொடங்கி அரசியலில் முழுவீச்சில் ஈடுபட்டது (1987ல் தமிழக முதலமைச்சராக மரணமடையும் வரை) 34 ஆண்டுகள் தான்.
Mgrஆரம்பத்தில் அவர் ஆட்சியை பிடித்த போது 'சினிமா கவர்ச்சி' என்றார்கள். இந்த மாயை சீக்கிரமே விலகி விடுமென்றார்கள். ஆனால், இன்றளவுக்கும் கணக்குப் பார்த்தால் எம்.ஜி.ஆர். சினிமாவை விட்டு விலகி சரியாக 38 ஆண்டுகள் ஆகிறது. அவ்வளவேன், அவர் மண்ணை விட்டு மறைந்தே சுமார் 27 ஆண்டுகள் ஆகி விட்டது. ஆனால் இன்றளவும் அவர் முகமும் பெயரும் தான் தமிழக அரசியலில் அசைக்க முடியாத ஓட்டு வங்கி. அவரது காலத்தில் அவருக்கு அரசியல் எதிரிகளாக இருந்தவர்களானாலும் சரி... நேற்றைக்கு புதியதாக கட்சி ஆரம்பித்தவர்களானாலும் சரி.. எம்.ஜி.ஆர். பெயரைச் சொல்லி தான் ஓட்டுகள் வாங்க முடியுமே தவிர திட்டி வாங்கிட முடியாது என்பது தான் நிகழ்கால நிதர்சனம்.
reproduced.
-
6th September 2015, 07:05 PM
#3224
Junior Member
Seasoned Hubber
-
6th September 2015, 07:11 PM
#3225
Junior Member
Seasoned Hubber
-
6th September 2015, 07:36 PM
#3226
Junior Member
Veteran Hubber

Originally Posted by
kalaiventhan
தவறாக சொல்லவில்லை திரு.ஆர்.கே.எஸ்.
ஏற்கனவே இருந்ததை விட, கூடுதல் இருக்கைகளுடன் கட்டணமும் அதிகம் உள்ள திரையரங்குக்கு மாற்றப்பட்டு அரங்கம் நிறைகிறது என்றால், அதற்குத்தான் வாழ்த்துக்கள் என்று தெரிவித்தேன். படத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளதையே இது காட்டுகிறது.
அப்படி இருக்கும்போது, ஏன் சனி, ஞாயிறு மட்டும் காலை காட்சிகள் ஆக்கினார்கள் என்று தெரியவில்லை.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
கலைவேந்தன் சார்,
நீங்கள் தவறாக கூறமாடீர்கள் அது எனக்கு புரிகிறது.
புதிய படங்களுக்கு திரை அரங்குகள் ஒதுக்கப்படும்போது digital வெளியீடுகளுக்கு என்றுமே "சித்தி" கொடுமைதான் நடக்கிறது.
இல்லையென்றால் யாராவது அதிகாலை காட்சி..இளம்காலை காட்சி கொடுப்பார்களா ?
மதிய காட்சி கூட கொடுக்காமல்...atleast காலை காட்சியாவது கொடுக்கலாம்...இப்படி ஒரு out of syllabus arrangement எதற்குதான் செய்கிறார்களோ தெரியவில்லை.
இளம் காலை காட்சி...அதிகாலை காட்சி அரங்கு நிறைகிறது என்பது digital படமாக இருந்தாலும் பார்பதற்கு ஆவல் கொண்டு மக்கள் இருக்கிறார்கள் என்பது தெள்ளம் தெளிவாக ஒரு எடுத்துக்காட்டு...
மற்ற படங்கள் அதே வளாகத்தில் இன்று இளம் காலை காட்சியோ அல்லது அதிகாலை காட்சியோ ஒன்று கூட அரங்கு நிறைவை காணவில்லை...புதிய படங்களான தனி ஒருவன், பாயும் புலி உட்பட !!
அப்படி இருக்கும்பட்சத்தில் நமக்கு மட்டும் இப்படி.
திரை அரங்கு ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் புதிய படங்கள் அனைத்தும் ஆக்கிரமித்துக்கொண்டுள்ளன...இது வரும் வாரம் மற்றும் விநாயகச்சதுர்த்தி வரை தொடர்தான் செய்யும்..!
கிடைத்ததை வைத்து சந்தோஷப்படும் நிலையில் நாம் உள்ளோம் !
Rks
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
6th September 2015, 07:59 PM
#3227
Junior Member
Seasoned Hubber
விளக்கத்துக்கு நன்றி திரு.ஆர்.கே.எஸ்.
நிலைமைகளை புரிந்து கொள்ள முடிகிறது. புதிய படங்களின் ஆக்கிரமிப்பும் திரையரங்கு உரிமையாளர்கள் அவற்றுக்கு கொடுக்கும் முக்கியத்துவமும் ‘சித்தி’ கொடுமையும் புரிகிறது.
மற்ற திரையரங்குகளை விடுங்கள். சத்தியத்திலாவது சனி, ஞாயிறு மட்டுமாவது காலைக் காட்சி கொடுத்திருக்கிறார்கள். ஆனால், சொந்த திரையரங்கமான சாந்தி திரையரங்கிலேயே படத்தையே எடுத்து விட்டார்களே? என்ன காரணம் என்று தெரியுமா? அதிலும் கட்டபொம்மன் படத்தை எடுத்து விட்டு டிரான்ஸ்போர்ட்டர் என்ற ஆங்கிலப்படத்தை போட வேண்டிய அவசியம் என்ன?
சிவந்த மண், நம்நாடு படங்கள் பற்றிய தங்கள் விளக்கத்துக்கு நன்றி திரு.ஆர்.கே.எஸ். திரு.ஸ்ரீதர் அவர்கள் கல்கி பத்திரிகையில் திரும்பிப் பார்க்கிறேன் என்ற தலைப்பில் தொடர் எழுதி வந்தார். நண்பர்கள் அதைப் படித்திருப்பார்கள். சிவந்த மண் படம் தொடர்பாக தனது கருத்துக்களை தெரிவித்திருந்தார். தேவைப்பட்டால் பின்னர் தருகிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Last edited by KALAIVENTHAN; 6th September 2015 at 08:24 PM.
-
6th September 2015, 08:25 PM
#3228
Junior Member
Diamond Hubber
சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்
அண்ணா அவர்கள் சொல்லி டி.வீ.நாராயணசாமி அவர்கள் தொலைபேசியில்
கேட்கிறார்கள் என்ன செய்வது என்று. அங்கே சிவாஜி கணேசன் என்ற பெயரில் - அப்பொழுது "கணேசன்", என்று ஒருவர் நாடகத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார், அவரை தேர்ந்தேடுங்கள் அவர்தான் இந்த பாத்திரத்துக்குப் பொருத்தமானவர்என்று நான் சொன்னேன் என்று ஏன் டைரியும் கூறும். நடிகர் டி.வீ.நாராயனசமிக்குத் தெரியும்; ஏ.எஸ்.ஏ.சாமி டைரக்டர் அவர்களுக்கு தெரியும்; இது சிவாஜிக்கும் தெரியும்.
-புரட்சிதலைவர் கௌரவ டாக்டர் பட்டம் விழாவில்.
Last edited by saileshbasu; 6th September 2015 at 08:27 PM.
-
6th September 2015, 08:33 PM
#3229
Junior Member
Diamond Hubber
உள்ளத்தில் லட்சியத்தை வைத்துக் கொண்டால் இறுதி வரை அந்த லட்சியம் நிறைவேறும் வர அதற்காகப் பாடுபட வேண்டும்.
- புரட்சித்தலைவர்
-
6th September 2015, 08:36 PM
#3230
Junior Member
Veteran Hubber

Originally Posted by
kalaiventhan
விளக்கத்துக்கு நன்றி திரு.ஆர்.கே.எஸ்.
நிலைமைகளை புரிந்து கொள்ள முடிகிறது. புதிய படங்களின் ஆக்கிரமிப்பும் திரையரங்கு உரிமையாளர்கள் அவற்றுக்கு கொடுக்கும் முக்கியத்துவமும் ‘சித்தி’ கொடுமையும் புரிகிறது.
மற்ற திரையரங்குகளை விடுங்கள். சத்தியத்திலாவது சனி, ஞாயிறு மட்டுமாவது காலைக் காட்சி கொடுத்திருக்கிறார்கள். ஆனால், சொந்த திரையரங்கமான சாந்தி திரையரங்கிலேயே படத்தையே எடுத்து விட்டார்களே? என்ன காரணம் என்று தெரியுமா? அதிலும் கட்டபொம்மன் படத்தை எடுத்து விட்டு டிரான்ஸ்போர்ட்டர் என்ற ஆங்கிலப்படத்தை போட வேண்டிய அவசியம் என்ன?
சிவந்த மண், நம்நாடு படங்கள் பற்றிய தங்கள் விளக்கத்துக்கு நன்றி திரு.ஆர்.கே.எஸ். திரு.ஸ்ரீதர் அவர்கள் கல்கி பத்திரிகையில் திரும்பிப் பார்க்கிறேன் என்ற தலைப்பில் தொடர் எழுதி வந்தார். நண்பர்கள் அதைப் படித்திருப்பார்கள். சிவந்த மண் படம் தொடர்பாக தனது கருத்துக்களை தெரிவித்திருந்தார். தேவைப்பட்டால் பின்னர் தருகிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
கலைவேந்தன் சார்
உங்களுடைய சாதுர்யமான கேள்வியை என்னால் புரிந்துகொள்ளமுடியாமல் இல்லை.
இருந்தாலும் நீங்கள் அறிந்துகொள்ளவேண்டியது பல உள்ளன..உங்களை போலவே பலருக்கும் ஒரு தவறான எண்ணம் உள்ளது ...அவரது திரை அரங்கில் அவருடைய படம் நூறு நாள், வெள்ளிவிழா சர்வ சாதாரணமாக ஓடும் என்பது...!
உண்மையில் நிலைமை vice versa சாந்தியை பொறுத்தவரையில் ! அவருடைய படங்கள்..அந்த காலத்திலும் சரி...எந்த காலத்திலும் சரி...மற்ற திரை அரங்கு போலதான் நிர்வாகம் என்று வரும்போது நடந்துகொள்ளும்..!
உதாரணம்...அவருடைய பல படங்கள்...150 - 170 நாட்களில் எல்லாம் சாந்தி அரங்கில் இருந்து மற்ற படங்களுக்காக எடுத்த வரலாறு நிறைய உண்டு..!
இன்றும் நிலைமையில் எந்த மாற்றமும் இல்லை. அவர்கள் நினைத்தால் நடிகர் திலகத்தின் பழைய படங்களை மாதம் ஒன்றாவது திரை இடலாம் ..வசூலும் சிறந்த மகசூலாக இருக்கும்.
சாந்தி எங்கள் திரை அரங்குதான் ...! ஆனால் நான் கூறுவது நடைபெறுகிறதா என்று நீங்களே விசாரித்து பாருங்கள் !
உண்மை விளங்கும் !
ஷாந்தியிலும் மற்ற திரை அரங்குகள் எப்படி நடக்கின்றனவோ அப்படிதான் !
உங்களுக்கு சொந்த திரை அரங்கு இல்லாததும் ஒன்றுதான் எங்களுக்கு சொந்த திரை அரங்கு இருந்தும் உங்கள் நிலை தான் !
கட்டபொம்மனை பொறுத்தவரையில் சாந்தி வளாகத்தில் வியாழகிழமை மாலை 7 மணி வரை திரு வேணுகோபால் அவர்கள் விநியோகஸ்தர் வருகைக்காக காத்திருந்தார்.
QUBE extension வரும் வாரத்திற்கும் தொடர கொடுத்துள்ளார்களா இல்லையா என்ற தகவல் அவர்களிடமிருந்து வரும் என்று எதிர்பார்த்து. ஆனால் எந்த தகவலும் SAI GANESH நிறுவனத்திடம் இருந்து வராததால் வெள்ளி முதல் புதிய படங்களுக்கு காட்சிகள் கொடுக்கப்பட்டன !
இதுதான் நடந்தது SAI SHANTHI விவகாரத்தை பொருத்தவரை..! தவறு விநியோகச்தருடயது !
Rks
Last edited by RavikiranSurya; 6th September 2015 at 08:41 PM.
Bookmarks