-
6th September 2015, 07:59 PM
#11
Junior Member
Seasoned Hubber
விளக்கத்துக்கு நன்றி திரு.ஆர்.கே.எஸ்.
நிலைமைகளை புரிந்து கொள்ள முடிகிறது. புதிய படங்களின் ஆக்கிரமிப்பும் திரையரங்கு உரிமையாளர்கள் அவற்றுக்கு கொடுக்கும் முக்கியத்துவமும் ‘சித்தி’ கொடுமையும் புரிகிறது.
மற்ற திரையரங்குகளை விடுங்கள். சத்தியத்திலாவது சனி, ஞாயிறு மட்டுமாவது காலைக் காட்சி கொடுத்திருக்கிறார்கள். ஆனால், சொந்த திரையரங்கமான சாந்தி திரையரங்கிலேயே படத்தையே எடுத்து விட்டார்களே? என்ன காரணம் என்று தெரியுமா? அதிலும் கட்டபொம்மன் படத்தை எடுத்து விட்டு டிரான்ஸ்போர்ட்டர் என்ற ஆங்கிலப்படத்தை போட வேண்டிய அவசியம் என்ன?
சிவந்த மண், நம்நாடு படங்கள் பற்றிய தங்கள் விளக்கத்துக்கு நன்றி திரு.ஆர்.கே.எஸ். திரு.ஸ்ரீதர் அவர்கள் கல்கி பத்திரிகையில் திரும்பிப் பார்க்கிறேன் என்ற தலைப்பில் தொடர் எழுதி வந்தார். நண்பர்கள் அதைப் படித்திருப்பார்கள். சிவந்த மண் படம் தொடர்பாக தனது கருத்துக்களை தெரிவித்திருந்தார். தேவைப்பட்டால் பின்னர் தருகிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Last edited by KALAIVENTHAN; 6th September 2015 at 08:24 PM.
-
6th September 2015 07:59 PM
# ADS
Circuit advertisement
Bookmarks