Results 1 to 10 of 4018

Thread: Makkal Thilagam MGR -PART 16

Threaded View

  1. #11
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by kalaiventhan View Post
    விளக்கத்துக்கு நன்றி திரு.ஆர்.கே.எஸ்.

    நிலைமைகளை புரிந்து கொள்ள முடிகிறது. புதிய படங்களின் ஆக்கிரமிப்பும் திரையரங்கு உரிமையாளர்கள் அவற்றுக்கு கொடுக்கும் முக்கியத்துவமும் ‘சித்தி’ கொடுமையும் புரிகிறது.

    மற்ற திரையரங்குகளை விடுங்கள். சத்தியத்திலாவது சனி, ஞாயிறு மட்டுமாவது காலைக் காட்சி கொடுத்திருக்கிறார்கள். ஆனால், சொந்த திரையரங்கமான சாந்தி திரையரங்கிலேயே படத்தையே எடுத்து விட்டார்களே? என்ன காரணம் என்று தெரியுமா? அதிலும் கட்டபொம்மன் படத்தை எடுத்து விட்டு டிரான்ஸ்போர்ட்டர் என்ற ஆங்கிலப்படத்தை போட வேண்டிய அவசியம் என்ன?

    சிவந்த மண், நம்நாடு படங்கள் பற்றிய தங்கள் விளக்கத்துக்கு நன்றி திரு.ஆர்.கே.எஸ். திரு.ஸ்ரீதர் அவர்கள் கல்கி பத்திரிகையில் திரும்பிப் பார்க்கிறேன் என்ற தலைப்பில் தொடர் எழுதி வந்தார். நண்பர்கள் அதைப் படித்திருப்பார்கள். சிவந்த மண் படம் தொடர்பாக தனது கருத்துக்களை தெரிவித்திருந்தார். தேவைப்பட்டால் பின்னர் தருகிறேன்.



    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
    கலைவேந்தன் சார்

    உங்களுடைய சாதுர்யமான கேள்வியை என்னால் புரிந்துகொள்ளமுடியாமல் இல்லை.

    இருந்தாலும் நீங்கள் அறிந்துகொள்ளவேண்டியது பல உள்ளன..உங்களை போலவே பலருக்கும் ஒரு தவறான எண்ணம் உள்ளது ...அவரது திரை அரங்கில் அவருடைய படம் நூறு நாள், வெள்ளிவிழா சர்வ சாதாரணமாக ஓடும் என்பது...!

    உண்மையில் நிலைமை vice versa சாந்தியை பொறுத்தவரையில் ! அவருடைய படங்கள்..அந்த காலத்திலும் சரி...எந்த காலத்திலும் சரி...மற்ற திரை அரங்கு போலதான் நிர்வாகம் என்று வரும்போது நடந்துகொள்ளும்..!

    உதாரணம்...அவருடைய பல படங்கள்...150 - 170 நாட்களில் எல்லாம் சாந்தி அரங்கில் இருந்து மற்ற படங்களுக்காக எடுத்த வரலாறு நிறைய உண்டு..!

    இன்றும் நிலைமையில் எந்த மாற்றமும் இல்லை. அவர்கள் நினைத்தால் நடிகர் திலகத்தின் பழைய படங்களை மாதம் ஒன்றாவது திரை இடலாம் ..வசூலும் சிறந்த மகசூலாக இருக்கும்.

    சாந்தி எங்கள் திரை அரங்குதான் ...! ஆனால் நான் கூறுவது நடைபெறுகிறதா என்று நீங்களே விசாரித்து பாருங்கள் !

    உண்மை விளங்கும் !

    ஷாந்தியிலும் மற்ற திரை அரங்குகள் எப்படி நடக்கின்றனவோ அப்படிதான் !

    உங்களுக்கு சொந்த திரை அரங்கு இல்லாததும் ஒன்றுதான் எங்களுக்கு சொந்த திரை அரங்கு இருந்தும் உங்கள் நிலை தான் !

    கட்டபொம்மனை பொறுத்தவரையில் சாந்தி வளாகத்தில் வியாழகிழமை மாலை 7 மணி வரை திரு வேணுகோபால் அவர்கள் விநியோகஸ்தர் வருகைக்காக காத்திருந்தார்.

    QUBE extension வரும் வாரத்திற்கும் தொடர கொடுத்துள்ளார்களா இல்லையா என்ற தகவல் அவர்களிடமிருந்து வரும் என்று எதிர்பார்த்து. ஆனால் எந்த தகவலும் SAI GANESH நிறுவனத்திடம் இருந்து வராததால் வெள்ளி முதல் புதிய படங்களுக்கு காட்சிகள் கொடுக்கப்பட்டன !

    இதுதான் நடந்தது SAI SHANTHI விவகாரத்தை பொருத்தவரை..! தவறு விநியோகச்தருடயது !

    Rks
    Last edited by RavikiranSurya; 6th September 2015 at 08:41 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •