Page 334 of 402 FirstFirst ... 234284324332333334335336344384 ... LastLast
Results 3,331 to 3,340 of 4018

Thread: Makkal Thilagam MGR -PART 16

  1. #3331
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சகோதரர் திரு.முத்தையன் அம்மு அவர்களுக்கு,

    மாற்றுத் திரிக்கு பதில் தர வேண்டாம் என்ற தங்கள் ஆலோசனைக்கு நன்றி. எனக்கும் அதில் விருப்பம் இல்லை.

    ஆனால், சிவந்தமண் திரைப்படத்தோடு நம்நாடு படத்தை ஒப்பிடும்போதுதான் நாம் பதில் சொல்ல வேண்டி வருகிறது. சிவந்த மண் திரைப்படம் அதிக இடங்களில் 100 நாட்கள் ஓடியது என்பதை நான் எங்கே மறுத்தேன்?

    கல்கி பத்திரிகையில் இயக்குநர் ஸ்ரீதர் அவர்களின் தொடர் பற்றி நான் கூறியதை நண்பர் நன்றாக படித்து பார்க்கட்டும்.

    //சிவந்த மண், நம்நாடு படங்கள் பற்றிய தங்கள் விளக்கத்துக்கு நன்றி திரு.ஆர்.கே.எஸ். திரு.ஸ்ரீதர் அவர்கள் கல்கி பத்திரிகையில் திரும்பிப் பார்க்கிறேன் என்ற தலைப்பில் தொடர் எழுதி வந்தார். நண்பர்கள் அதைப் படித்திருப்பார்கள். சிவந்த மண் படம் தொடர்பாக தனது கருத்துக்களை தெரிவித்திருந்தார். தேவைப்பட்டால் பின்னர் தருகிறேன்.//

    இதுதான் நான் கூறியிருந்த கருத்து (நமது திரியின் 323-ம் பக்கம் பதிவு எண். 3227)

    நண்பர் கேட்டிருப்பதால் அது என்ன என்பதை இப்போது சொல்கிறேன்.

    சிவந்தமண் திரைப்படம் நம்நாடு திரைப்படத்தை விட அதிக இடங்களில் 100 நாட்கள் ஓடியிருக்கலாம். ஆனால், நம்நாடு திரைப்படம்தான், சிவந்தமண்ணை விட அதிக வசூல் செய்த படம். இதுகுறித்த ஆவணங்களை சகோதரர் திரு.வேலூர் ராமமூர்த்தி அவர்கள் பதிவிட்டுள்ளார்.

    அவர்கள் கணக்குப்படியே பார்ப்போம்.

    சென்னையில் சிவந்த மண் மொத்த வசூல் 12,32,970.21p (அதாவது 4 திரையரங்குகளில் 100 நாட்கள் கடந்த பின்)

    சென்னையில் நம்நாடு 4 திரையரங்குகளில் 4 வார மொத்த வசூல் 4,61,728.72p (4 வாரத்துக்கே ரூ.4 லட்சத்து 61 ஆயிரத்தை தாண்டியுள்ளது என்றால் 100 நாட்கள் கடந்த பின் எவ்வளவு வசூல் ஆகியிருக்கும் என்பதை கணக்கிட்டு கொள்ளலாம்.)

    மேலும், நம்நாடு சென்னை சித்ராவில் 21 நாள் வசூல் 84,916.80

    சிவந்தமண் சென்னை குளோப்பில் 21 நாள் வசூல் 79,630.74 தான்.

    ஏறத்தாழ 5,000 ரூபாய் நம்நாடு வசூல் அதிகம்.

    திருச்சியிலும் நம்நாடு 28 நாள் வசூல், சிவந்த மண் 28 நாள் வசூலை விட ஏறத்தாழ 18,000 ரூபாய் அதிகம் உள்ளது.

    உடனே, இதெல்லாம் ஒரு ஆதாரமா? நீங்களாக நோட்டீஸ் போட்டுக் கொண்டால் அது ஆதாரமாகிவிடுமா? என்று யாராவது கேட்கலாம். இப்போது எப்படி மதுரை சென்ட்ரல் அரங்கில் மேலாளர் திரு.பாலமுருகன் அவர்களிடம் கேட்டு திரு.லோகநாதன் போன்ற நண்பர்கள் மக்கள் திலகத்தின் பட வசூல் விவரங்களை வெளியிடுகிறார்களோ, அதே போலத்தான் அப்போதும் அன்று தீவிரமாக இருந்த ரசிகர்கள் திரையரங்குகளை தொடர்பு கொண்டு வசூல் விவரங்களை வெளியிட்டுள்ளனர். பொய்யான வசூல் விவரம் சொல்லியிருந்தால் அந்த காலகட்டத்திலும் மாற்று முகாமினர் சும்மா விடுவார்களா?

    இல்லை. பொய்தான் என்று சொல்வார்களானால், அவர்கள் இன்று கூட அவர்கள் திரியில் போட்டிருக்கிறார்களே? அந்த வசூல் விவரம் மட்டும் மெய்யா? என்று கேட்க விரும்புகிறோம். அது உண்மை என்றால் இதுவும் உண்மைதான்.

    இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். ஸ்ரீதர் கூறிய விவரங்களை தருகிறேன் என்றேனே.

    சிவந்தமண் திரைப்படம், தான் எதிர்பார்த்த அளவு போகவில்லை (100 நாட்கள் ஓடவில்லை என்று ஸ்ரீதரும் சொல்லவில்லை. வசூலைத்தான் அவர் சொல்கிறார்) என்று அந்த படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் திரு.ஸ்ரீதர் அவர்கள் கூறியுள்ளார். கல்கி பத்திரிகையில் ‘திரும்பிப் பார்க்கிறேன்’ என்ற பெயரில் அவர் எழுதிய தொடரில் இதைக் குறிப்பிட்டிருந்தார். நண்பர்கள் இதைப் படித்திருக்கலாம். அது நினைவிருந்தால் நடுநிலையான நண்பர்கள் ஒப்புக்கொள்வார்கள். அந்த தொடரை சந்திரமெளலி என்பவர் எழுத்தாக்கம் செய்திருந்தார். பின்னர், அந்தத் தொடர் ‘திரும்பிப் பார்க்கிறேன் ’என்ற பெயரிலேயே புத்தகமாகவும் வந்தது.

    அந்த புத்தகம் என்னிடம் உள்ளது. எனக்கு ஸ்கேன் செய்து பதிவிடத் தெரியாது. படங்கள் பதிவிடுவது, வீடியோக்களை தரவேற்றுவது கூட எனக்குத் தெரியாது. ஆனால், அந்த புத்தகத்தின் சில பகுதிகளை எடுத்து இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அதை கீழே தருகிறேன்.

    திரு.சைலேஷ் சார்,

    நீங்களும் என்னை மன்னிக்க வேண்டும். விவாதம் தேவையில்லைதான். ஆனால், ‘பத்திரிகை செய்தியை நண்பர் பதிவிடவும் அனைவரும் உண்மையை தெரிந்து கொள்ளட்டும்’ என்று மாற்று முகாம் நண்பர் கேட்கும்போது பதிவிடாமல் இருக்க முடியாது. அப்படி பதிவிடாமல் இருந்தால் நாம் பொய் சொல்கிறோம் என்று அர்த்தமாகி விடும். அதனால், பதிவிட வேண்டிய நிலைமை.

    எனக்கு ஒரு வருத்தம் என்னவென்றால் உலகம் அறிந்த உண்மைகளைக் கூட அந்த நண்பர் ஏற்றுக் கொள்ள மறுப்பது மிகவும் வருத்தமாக உள்ளது. என் பதிவுகளில் உண்மை தவிர வேறு எதையும் பதிவிட மாட்டேன். ஆனாலும், என்ன ஆதாரம் கொடுத்தால் என்ன? ‘‘திரு. ஸ்ரீதர் அவர்கள் சில லீலைகள் செய்தார். அதை திரு. சண்முகம் அவர்கள் தட்டிக் கேட்டார். அதனால், திரு. ஸ்ரீதர் இப்படி எழுதிவிட்டார்’ என்று அந்த நண்பர் சொல்லி விட்டால் முடிந்தது கதை. (முக்கியமான விஷயம். இந்த தொடர் கல்கியில் வெளியானதும் சரி, அது புத்தகமாக வந்ததும் சரி. 2001-ம் ஆண்டுக்கு முன்புதான்)

    அந்த நண்பரைப் பொறுத்தவரை அவரது விருப்பங்களுக்கும் ஆசைகளுக்கும் அவர் நீதிபதியாக இருக்கலாம். ஆனால், எது உண்மை என்பதை முடிவு செய்வதில் நடுநிலையான பொதுமக்கள்தான் உண்மையான நீதிபதிகள். அவர்களுக்கு நாம் சொல்வதில் உள்ள உண்மைகள் புரியும். அதுபோதும்.

    எனக்கு இன்னொரு சந்தேகம் கூட உண்டு. அந்த நண்பர் மக்கள் திலகத்தின் தீவிர ரசிகரோ? அதனால்தான், அவர் பெருமைகள் வெளிவர வேண்டும் என்று நினைக்கிறாரோ? என்று. அப்படி இருந்தால் நேரடியாக சொல்லிவிடலாம். மகிழ்ச்சியோடு வரவேற்க காத்திருக்கிறோம்.

    திரு.முத்தையன் அம்மு சார்,

    உங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்தவும். எங்களுக்கு நீங்கள்தான் முக்கியம்.

    மாற்று முகாம் நண்பர் உங்களுக்கு வேண்டுகோள் விடுத்திருப்பதைப் போல, மக்கள் திலகம் பதிவுகளைக் குறைத்துக் கொண்டு அவர்கள் திரியிலேயே அதிகம் பதிவிடுங்கள் என்பது எனது அன்பு கோரிக்கை. நாம்தான் பெருந்தன்மையின் பேரரசரின் வழி வந்தவர்களாயிற்றே? மற்றவர்களுக்கு கொடுப்பதுதான் தலைவர் நமக்கு கற்றுக் கொடுத்த பண்பு.

    திரு.ஸ்ரீதர் எழுதிய ‘திரும்பிப் பார்க்கிறேன்’ புத்தகத்தின் விவரங்கள் உள்ள இணையதளத்தின் இணைப்பும் அந்த பகுதியும் அடுத்த பதிவில்.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

    Last edited by KALAIVENTHAN; 8th September 2015 at 05:12 PM.

  2. Thanks orodizli, Russellisf thanked for this post
    Likes orodizli, ainefal, Russellisf liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     
  4. #3332
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    http://www.luckylookonline.com/2013/...post_6511.html

    சிவாஜியை வைத்து ஹிட் படங்களாக கொடுத்துக் கொண்டிருந்தாலும் சிவந்த மண் ஸ்ரீதரின் காலை வாரிவிட்டது. அவர் நினைத்த அளவுக்கு ஓகோவென்று ஓடவில்லை. தமிழில் படமெடுக்கும்போதே அதன் வடிவத்தை இந்தியிலும் அங்கிருக்கும் பெரிய நடிகர்களை வைத்து எடுப்பது ஸ்ரீதரின் ஸ்டைல். சிவந்த மண்ணின் இந்தி வடிவம் மெகா ஃப்ளாப். சிவந்த மண்ணுக்கு வசனம் எழுத ஆரம்பத்தில் கலைஞரைதான் தொடர்பு கொண்டார் ஸ்ரீதர். அப்போது கலைஞர் அமைச்சர் ஆகிவிட்டதால், அது தொடர்பான விதிமுறைகளை பார்த்து ஒப்புக்கொள்கிறேன் என்றாராம். ஸ்ரீதர் அவரை திரும்ப தொடர்புகொள்ளவில்லை. ஒருவேளை கலைஞர் வசனம் எழுதியிருந்தால் சிவந்தமண் சிறப்பாக ஓடியிருக்கும் என்று இப்புத்தகத்தில் எழுதுகிறார்.

    சிவந்த மண்ணுக்கு பிறகு ஸ்ரீதருக்கு கொஞ்சம் இறங்குமுகம்தான். அவரது தயாரிப்பு நிறுவனமான சித்ராலயா பொருட்சிக்கலில் மாட்டிக் கொள்கிறது. வழக்கமான டிராமா வேலைக்கு ஆகாது, ஆக்*ஷன் படங்களைதான் மக்கள் வரவேற்கிறார்கள் என்று சிவாஜியை வைத்து ஆக்*ஷன் படமெடுக்க திட்டமிட்டார் ஸ்ரீதர். அப்படம்தான் ஹீரோ 72. இந்தியில் ஜிதேந்திரா, ஹேமமாலினி காம்பினேஷன். இந்தியில் ஏறத்தாழ படம் முடியும் நிலையில் இருந்தபோதும், தமிழில் பாதிகூட வளரவில்லை. சிவாஜி ஏராளமான படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால் ஸ்ரீதருக்கு கால்ஷீட் வழங்கமுடியவில்லை. வேறு வழியின்றி இந்தி வெர்ஷனை ரிலீஸ் செய்கிறார். ஓரளவுக்கு ஓடினாலும் பெருசாக பிரயோசனமில்லை. இங்கு கால்ஷீட் தருவதாக ஒப்புக்கொண்ட சிவாஜி எதுவும் சொல்லாமல் சிங்கப்பூர் போய்விடுகிறார். நெருக்கடிக்கு மேல் நெருக்கடி சித்ராலயாவுக்கும், ஸ்ரீதருக்கும்.

    அப்போது இந்தி நடிகர் ராஜேந்திரகுமார், எம்.ஜி.ஆரை அணுகுங்கள் என்று ஸ்ரீதருக்கு ஆலோசனை சொல்கிறார். சிவாஜி பட்டறையில் இருந்துகொண்டு எம்.ஜி.ஆரை தொடர்புகொள்வது பற்றி ஸ்ரீதருக்கு தயக்கம். எம்.ஜி.ஆருக்கு மேக்கப்மேனாக இருந்த பீதாம்பரம் (இயக்குனர் பி.வாசுவின் அப்பா) மூலம் எம்.ஜி.ஆரை தொடர்புகொள்கிறார் ஸ்ரீதர். இதன்பிறகு நடந்த சம்பவங்கள் உருக்கமானவை. எம்.ஜி.ஆரும் ஸ்ரீதரும் ஏன் அவரவர் துறையில் உச்சத்தைத் தொட்டார்கள் என்பதற்கு சாட்சியாக திகழ்பவை. உரிமைக்குரல் படப்பிடிப்பில் எம்.ஜி.ஆருக்காக தன்னுடைய தனித்தன்மையை நிறைய இழந்தார் ஸ்ரீதர். இயக்குனரிடம் எதற்கெடுத்தாலும் அடம் பிடிப்பது எம்.ஜி.ஆரின் ஸ்டைல். ஏனெனில் பெரும் நஷ்டத்தில் இருக்கும் ஸ்ரீதருக்கு இப்படம் வணிகரீதியாக பெரிய லாபத்தை தரவேண்டும் என்பது அவரது அக்கறை. ஸ்ரீதருக்கும் இது புரிந்ததால் விட்டுக்கொடுத்தே போனார். அதற்கேற்றாற்போல ரிசல்ட் சூப்பர்ஹிட். நிதிநெருக்கடியில் இருந்து மீண்டார் ஸ்ரீதர். உரிமைக்குரல் வெற்றி கொடுத்த தெம்பில் பாதியில் நின்றுபோயிருந்த ஹீரோ 72ஐ தூசுதட்டி வைரநெஞ்சமாக மாற்றி வெளியிட்டார். நல்லவேளையாக கையைக் கடிக்கவில்லை.

    உரிமைக்குரலுக்கு அடுத்து ‘அண்ணா நீ என் தெய்வம்’ ‘மீனவநண்பன்’ என்று ஒரேநேரத்தில் இரண்டு படங்களில் மீண்டும் ஸ்ரீதர்-எம்.ஜி.ஆர் இணைகிறார்கள். படம் முடிவதற்குள்ளாகவே எம்.ஜி.ஆர் முதல்வர் ஆகிறார். ஆரம்பநிலையிலேயே நின்றுபோன ‘அண்ணா என் தெய்வம்’ படத்தை முடிக்க எம்.ஜி.ஆர் ஆவலாக இருந்தாலும் தயாரிப்பாளர்களால் பணம் புரட்ட முடியவில்லை. மீனவநண்பனை மட்டும் எம்.ஜி.ஆர் முடித்துக் கொடுக்கிறார்.

    படப்பிடிப்பின் கடைசிநாளன்று “முதல்வராக பதவியேற்கும் விழாவுக்கு நீங்க அவசியம் வரணும்” என்று ஸ்ரீதரை அழைக்கிறார் எம்.ஜி.ஆர். விழாவில் ஸ்ரீதர் வி.வி.ஐ.பியாக மரியாதை செய்யப்படுகிறார். மேடையில் இருக்கும் எம்.ஜி.ஆர் ஸ்ரீதரை பார்த்து புன்னகைக்கிறார். அந்த புன்னகையோடு இப்புத்தகம் முடிகிறது.

    ஸ்ரீதரின் வாழ்க்கை வரலாறு எனும் போர்வையில் கிட்டத்தட்ட முப்பதாண்டுகால தமிழ் திரையுலகப் போக்கினை காப்ஸ்யூலாக தருகிறது ‘திரும்பிப் பார்க்கிறேன் : டைரக்டர் ஸ்ரீதர்’ புத்தகம். சினிமா ஆர்வலர்கள் மட்டுமின்றி, சுயமுன்னேற்ற நூல்களை வாசிப்பவர்களுக்கும் ஏதுவான நூல் இது. சினிமாத்துறையில் பணியாற்றுபவர்கள் வாசித்தே ஆகவேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்.

    நூல் : திரும்பிப் பார்க்கிறேன் – டைரக்டர் ஸ்ரீதர்

    எழுதியவர் : எஸ்.சந்திரமவுலி

    பக்கங்கள் : 360, விலை : ரூ.90

    வெளியீடு : அருந்ததி நிலையம்,
    19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  5. Thanks orodizli thanked for this post
  6. #3333
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by jaisankar68 View Post

    பேராசிரியரின் பொக்கிஷத்திலிருந்து
    நன்றி திரு.ஜெய்சங்கர் சார், பேராசிரியருக்கும் நன்றி.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  7. #3334
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like
    அன்பு நண்பர் கலைவேந்தன் அவர்களுக்கு,
    உங்கள் விளக்கம் படித்தேன். நான் தேங்காய் சீனிவாசன் மாதிரி. அவர் இரண்டுபேர் படங்களிலும் நடிப்பார். ஆனால் தலைவர்தான் அவரின் தெய்வம். அதுபோலத்தான் நானும். சிவாஜி திரி மட்டும் அல்ல இந்த ஹப்பிள் உள்ள அனைத்து திரிகளிலும் என்னால் பதிவுகள் மேற்கொள்ள முடியும்.அந்த அளவிற்கு எனக்கு நம் தெய்வம் சக்தியை கொடுத்து என்னை வாழ வைத்து கொண்டுள்ளார்..நம் தலைவருக்கும் நடிகர் திலகத்தின் மேல் தனது இறுதி காலத்தில் மிகுந்த பாசத்தோடு இருந்தார். நான் அறிந்த வகையில் நம் கட்சியை அவரிடம் ஒப்படைபதர்கான முயற்சியில் ஈடுபட்டதாக அறிகிறேன். நடிகர் திலகம் அதை மறுத்துவிட்டதாகவும் அறிகிறேன்..இது உண்மையா பொய்யா என்பது எனக்கு தெரியாது. இதை பற்றிய விவாதங்கள் தயவு செய்து வேண்டாம்..வேறுபாடுகள் இன்றி பழகும் நம் தலைவரின் வழி வந்தவர்கள் நாம். நான் மட்டுமல்ல நம் அனைவரும் நடிகர் திலகத்தின் திரியில் பங்கேற்க வேண்டும். அவர்களும் நம் திரியில் பங்கேற்கவேண்டும் என்பது எனது ஆசை.

    அந்த காலத்தில் ஒரு படம் நூறு நாள் ஓடினால் ஆககூடிய வசூலை இன்று வெளியாகும் படம் மூன்று நாட்களில் வசூல் செய்து விடுகிறது. நல்ல திரைப்படம் தோற்கிறது. மசாலா படம் வெற்றி பெறுகிறது. பழைய புள்ளி விபரங்களை பேசி பயனில்லை என்றுதான் சொல்கிறேன்..வீடியோ மன்னன் சைலேஷ், ஸ்டில் போடுவதில் முத்தையன், தலைவரின் ஆவணங்கள் வெளியிடும் பெங்களூர் குமார், கிராபிக்ஸ் மன்னன் சத்யா, என் குரு வேலூர் ராமமூர்த்தி, தலைவர் நிகழ்சிகள் எங்கு நடந்தாலும் புகைப்படம் எடுத்து பதிவிடும் நண்பர் பெயர் தெரியவில்லை மற்றும் இதில் விடுபட்டு போன அணைத்து நண்பர்களும் ஒவொருவரும் ஒவொரு விசயத்தில் பதிவுகளில் சிறப்பாக இருக்கிறார்கள்..நமக்கு அதுவே போதும்..பழைய குப்பைகள் தேவையில்லை..அதனால் நிறைய விவாதங்கள் வருகிறது. நான் பெரியவனா நீ பெரியவனா என்ற நிலை தேவையா நண்பர்களே..இருவரும் அமரராகி நம்மிடம் தெய்வமாக வாழ்ந்து நம்மை வாழவைத்து கொண்டுள்ளனர். அவர்களை திருப்திபடுதுவோமே..நம் திரியிலோ மாற்று திரியிலோ என்னை பாராட்ட வேண்டும் என்ற நிலை எனக்கு இல்லை. முகநூளில் நான் பதிவிட்ட தலைவரின் படங்களுக்கான லைக் எத்தனை என்று பார்க்க மாட்டேன். என் கடமை தலைவரின் படங்களை பதிவு செய்வது மட்டும்தான்..அதற்குதான் நம் தலைவர் இன்றுவரை என்னை வாழவைத்து கொண்டுள்ளார்..என்கடமை முடிந்ததும் என்னை அவருடன் சேர்த்து கொள்வார். அந்த நாளுக்குள் விரைவாக நான் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். இணைப்பாக நடிகர் திலகம் பதிவுகள் உட்பட..யாருக்கு என்ன பதிவுகளை செய்யவேண்டும் என்று நம் தலைவர் என்னை வழி நடத்துகிறார்..அவரின் வழிகாட்டுதலின்படி நான் நடக்கிறேன். மற்றவர்கள் சொல்வதை நான் கேட்கமாட்டேன்..அப்படியே வாழ்ந்தேன்..வாழ்கிறேன்..வாழ்வேன்..

    * இந்த நம் திரியில் இது வரை நான் இவ்வளவு எழுதியது கிடையாது..ஸ்டில் போடுவதோடு சரி. மனம் விட்டு பேசவேண்டும் என்று நினைத்தேன்..பதிவு செய்தேன். என் கருத்தை அப்படியே ஏற்று கொள்ளவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. நீங்கள் படித்தாலே போதும்.. நன்றி நண்பர்களே..வாழ்க தலைவர்..வளர்க அவரின் பக்தர்கள்..
    Last edited by Muthaiyan Ammu; 8th September 2015 at 07:01 PM.

  8. Thanks Russellzlc thanked for this post
    Likes ainefal, Russellzlc liked this post
  9. #3335
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சகோதரர் திரு.முத்தையன் அவர்களுக்கு,

    தங்களின் அருமையான, தெளிவான விளக்கத்துக்கு நன்றி. நீங்கள் கூறியிருப்பதுதான் என் விருப்பமும். ஆனால், நாமாக எப்போதுமே சர்ச்சைகளை துவங்குவது கிடையாது. இரண்டு திரிகளை பார்த்தாலே இது எல்லாருக்கும் தெரியும். இதை அங்குள்ள நண்பர்களும் உணர வேண்டும்.

    நீங்கள் விரும்புவதுபோல, அங்கே உள்ளவர்களும் இங்கு வந்து பதிவுகள் இட வேண்டும் என்றுதான் நானும் விரும்புகிறேன். அதனால்தான் யார் வந்தாலும் உடனே வரவேற்பு கொடுத்து விடுவேன். தலைவரின் புகழுக்கு மாசு ஏற்படாமல் எவ்வளவு வேண்டுமானாலும் பணிந்து போக நான் மட்டுமல்ல, நாம் எல்லாருமே தயாராக இருக்கிறோம் என்று நம் அனைவரின் சார்பிலும் துணிந்து சொல்கிறேன். நாம் அப்படித்தான் இருப்போம், அவர்கள்தான் பணிந்து போக வேண்டும் என்றெல்லாம் நாம் சொல்லவில்லை. தலைவரின் புகழுக்கு மாசு ஏற்படுத்தும் போக்கை அவர்கள் கைவிட்டால் மகிழ்ச்சி.

    தங்களின் அற்புதமான, மனம் திறந்த பதிலுக்கு மீண்டும் நன்றி.

    தலைவரின் மயக்கும் போஸ்களுடன், தொழிலாளி பட ஸ்டில்கள் சூப்பர். நன்றி.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  10. Thanks orodizli thanked for this post
  11. #3336
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    SUPER KALAIVENTHAN SIR

    Quote Originally Posted by KALAIVENTHAN View Post
    http://www.luckylookonline.com/2013/...post_6511.html

    சிவாஜியை வைத்து ஹிட் படங்களாக கொடுத்துக் கொண்டிருந்தாலும் சிவந்த மண் ஸ்ரீதரின் காலை வாரிவிட்டது. அவர் நினைத்த அளவுக்கு ஓகோவென்று ஓடவில்லை. தமிழில் படமெடுக்கும்போதே அதன் வடிவத்தை இந்தியிலும் அங்கிருக்கும் பெரிய நடிகர்களை வைத்து எடுப்பது ஸ்ரீதரின் ஸ்டைல். சிவந்த மண்ணின் இந்தி வடிவம் மெகா ஃப்ளாப். சிவந்த மண்ணுக்கு வசனம் எழுத ஆரம்பத்தில் கலைஞரைதான் தொடர்பு கொண்டார் ஸ்ரீதர். அப்போது கலைஞர் அமைச்சர் ஆகிவிட்டதால், அது தொடர்பான விதிமுறைகளை பார்த்து ஒப்புக்கொள்கிறேன் என்றாராம். ஸ்ரீதர் அவரை திரும்ப தொடர்புகொள்ளவில்லை. ஒருவேளை கலைஞர் வசனம் எழுதியிருந்தால் சிவந்தமண் சிறப்பாக ஓடியிருக்கும் என்று இப்புத்தகத்தில் எழுதுகிறார்.

    சிவந்த மண்ணுக்கு பிறகு ஸ்ரீதருக்கு கொஞ்சம் இறங்குமுகம்தான். அவரது தயாரிப்பு நிறுவனமான சித்ராலயா பொருட்சிக்கலில் மாட்டிக் கொள்கிறது. வழக்கமான டிராமா வேலைக்கு ஆகாது, ஆக்*ஷன் படங்களைதான் மக்கள் வரவேற்கிறார்கள் என்று சிவாஜியை வைத்து ஆக்*ஷன் படமெடுக்க திட்டமிட்டார் ஸ்ரீதர். அப்படம்தான் ஹீரோ 72. இந்தியில் ஜிதேந்திரா, ஹேமமாலினி காம்பினேஷன். இந்தியில் ஏறத்தாழ படம் முடியும் நிலையில் இருந்தபோதும், தமிழில் பாதிகூட வளரவில்லை. சிவாஜி ஏராளமான படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால் ஸ்ரீதருக்கு கால்ஷீட் வழங்கமுடியவில்லை. வேறு வழியின்றி இந்தி வெர்ஷனை ரிலீஸ் செய்கிறார். ஓரளவுக்கு ஓடினாலும் பெருசாக பிரயோசனமில்லை. இங்கு கால்ஷீட் தருவதாக ஒப்புக்கொண்ட சிவாஜி எதுவும் சொல்லாமல் சிங்கப்பூர் போய்விடுகிறார். நெருக்கடிக்கு மேல் நெருக்கடி சித்ராலயாவுக்கும், ஸ்ரீதருக்கும்.

    அப்போது இந்தி நடிகர் ராஜேந்திரகுமார், எம்.ஜி.ஆரை அணுகுங்கள் என்று ஸ்ரீதருக்கு ஆலோசனை சொல்கிறார். சிவாஜி பட்டறையில் இருந்துகொண்டு எம்.ஜி.ஆரை தொடர்புகொள்வது பற்றி ஸ்ரீதருக்கு தயக்கம். எம்.ஜி.ஆருக்கு மேக்கப்மேனாக இருந்த பீதாம்பரம் (இயக்குனர் பி.வாசுவின் அப்பா) மூலம் எம்.ஜி.ஆரை தொடர்புகொள்கிறார் ஸ்ரீதர். இதன்பிறகு நடந்த சம்பவங்கள் உருக்கமானவை. எம்.ஜி.ஆரும் ஸ்ரீதரும் ஏன் அவரவர் துறையில் உச்சத்தைத் தொட்டார்கள் என்பதற்கு சாட்சியாக திகழ்பவை. உரிமைக்குரல் படப்பிடிப்பில் எம்.ஜி.ஆருக்காக தன்னுடைய தனித்தன்மையை நிறைய இழந்தார் ஸ்ரீதர். இயக்குனரிடம் எதற்கெடுத்தாலும் அடம் பிடிப்பது எம்.ஜி.ஆரின் ஸ்டைல். ஏனெனில் பெரும் நஷ்டத்தில் இருக்கும் ஸ்ரீதருக்கு இப்படம் வணிகரீதியாக பெரிய லாபத்தை தரவேண்டும் என்பது அவரது அக்கறை. ஸ்ரீதருக்கும் இது புரிந்ததால் விட்டுக்கொடுத்தே போனார். அதற்கேற்றாற்போல ரிசல்ட் சூப்பர்ஹிட். நிதிநெருக்கடியில் இருந்து மீண்டார் ஸ்ரீதர். உரிமைக்குரல் வெற்றி கொடுத்த தெம்பில் பாதியில் நின்றுபோயிருந்த ஹீரோ 72ஐ தூசுதட்டி வைரநெஞ்சமாக மாற்றி வெளியிட்டார். நல்லவேளையாக கையைக் கடிக்கவில்லை.

    உரிமைக்குரலுக்கு அடுத்து ‘அண்ணா நீ என் தெய்வம்’ ‘மீனவநண்பன்’ என்று ஒரேநேரத்தில் இரண்டு படங்களில் மீண்டும் ஸ்ரீதர்-எம்.ஜி.ஆர் இணைகிறார்கள். படம் முடிவதற்குள்ளாகவே எம்.ஜி.ஆர் முதல்வர் ஆகிறார். ஆரம்பநிலையிலேயே நின்றுபோன ‘அண்ணா என் தெய்வம்’ படத்தை முடிக்க எம்.ஜி.ஆர் ஆவலாக இருந்தாலும் தயாரிப்பாளர்களால் பணம் புரட்ட முடியவில்லை. மீனவநண்பனை மட்டும் எம்.ஜி.ஆர் முடித்துக் கொடுக்கிறார்.

    படப்பிடிப்பின் கடைசிநாளன்று “முதல்வராக பதவியேற்கும் விழாவுக்கு நீங்க அவசியம் வரணும்” என்று ஸ்ரீதரை அழைக்கிறார் எம்.ஜி.ஆர். விழாவில் ஸ்ரீதர் வி.வி.ஐ.பியாக மரியாதை செய்யப்படுகிறார். மேடையில் இருக்கும் எம்.ஜி.ஆர் ஸ்ரீதரை பார்த்து புன்னகைக்கிறார். அந்த புன்னகையோடு இப்புத்தகம் முடிகிறது.

    ஸ்ரீதரின் வாழ்க்கை வரலாறு எனும் போர்வையில் கிட்டத்தட்ட முப்பதாண்டுகால தமிழ் திரையுலகப் போக்கினை காப்ஸ்யூலாக தருகிறது ‘திரும்பிப் பார்க்கிறேன் : டைரக்டர் ஸ்ரீதர்’ புத்தகம். சினிமா ஆர்வலர்கள் மட்டுமின்றி, சுயமுன்னேற்ற நூல்களை வாசிப்பவர்களுக்கும் ஏதுவான நூல் இது. சினிமாத்துறையில் பணியாற்றுபவர்கள் வாசித்தே ஆகவேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்.

    நூல் : திரும்பிப் பார்க்கிறேன் – டைரக்டர் ஸ்ரீதர்

    எழுதியவர் : எஸ்.சந்திரமவுலி

    பக்கங்கள் : 360, விலை : ரூ.90

    வெளியீடு : அருந்ததி நிலையம்,
    19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  12. Thanks orodizli thanked for this post
  13. #3337
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    SUPER SIR

    Quote Originally Posted by MGRRAAMAMOORTHI View Post

  14. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  15. #3338
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    லோகநாதன் சார் உங்களுடைய பதிவுகள் எல்லாம் சூப்பர்

  16. #3339
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கண்டிப்பாக சார் சூரியன் உதிக்கும் திசை கிழக்கு என்று இந்த உலகமே பார்த்து ஒத்து கொள்ளும்பொழுது ஒரு கூட்டம் மேற்கில் உதயமாகிறது என்று சொல்லும்பொழுது தான் விவாதம் ஆரம்பிகிறது . நாம் தான் புரியவைக்கவேண்டும் .

    நேற்று அல்ல இன்று அல்ல எப்பொழுதும் தலைவர் தான் நிரந்தர வசூல் பேரரசர எல்லோரும் அறிந்த ஒன்று . நமது சாதனைகள் இரும்பு கோட்டை இதை தகர்க்க இன்னுமொரு மக்கள் திலகம் வரவேண்டும்

    Quote Originally Posted by saileshbasu View Post
    மீண்டும் ஒரு புதிய விவாதம் தேவையா : "நம்நாடு" "சிவந்தமண்" வசூல் விவரங்கள், எவளவு நாட்கள், எனஎங்கே ஓடின. ஒரு பழமொழி தான் நினைவுக்கு வருகிறது:

    "அரிசி என்று அள்ளிப் பார்பாருமில்லை உமி என்று உதிப் பார்பாருமில்லை"

    ஆதாரம் இருந்தால் தரவும்.

  17. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  18. #3340
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கலைவேந்தன் சார் உங்களின் பதில்கள் எங்களுடைய எல்லோரின் மன நிலைதனை எடுத்து காட்டுகிறது

  19. Likes orodizli liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •