Results 1 to 10 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

Threaded View

  1. #11
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பார்த்ததில் பிடித்தது -51

    சாந்தி

    நடிகர் திலகத்தின் 103 வது படம் , படத்துக்கு படம் வித்தியாசம் காட்டும் நம்மவர் நவராத்திரி படத்தை தொடர்ந்து பழனி என்ற கிராமத்து காவியத்தை தொடர்ந்து , அன்புக்கரங்கள் படத்தில் ஸ்டேஷன் மாஸ்டர் என்று வெவ்வேறு தளங்களுக்கு நம்மை அழைத்து சென்றவர் சாந்தி திரைபடத்தில் ஒரு critical சுப்ஜெக்ட் ல் நடித்து வித்தியாசமான அனுபவத்தை பார்வையாளர்களுக்கு அளித்தார் .

    சந்தானம் (சிவாஜி) ராமு (SSR) இருவரும் நண்பர்கள் . கல்லூரி படிப்பை முடித்த உடன் சந்தனத்தின் தாயார் (சந்தியா) அவருக்கு பெண் பார்க்கிறார் , அந்த பெண்ணின் பெயர் சாந்தி (விஜயகுமாரி). கண் பார்வை இல்லாத அவரை நிராகரிக்க , சாந்தியின் தோழி மல்லிகைவை (தேவிகா) பார்க்கும் சந்தானம் அவளை காதலிக்கிறார்

    மல்லிகா படிக்க வேறு ஊருக்கு சென்றுவிடுகிறார் .

    சந்தானம் சாந்தியின் நிலைமை மற்றும் அவளுக்கு 10 லட்சம் சொத்து இருபதாக கூற ராமுவின் மாமா சொத்துக்கு ஆசைப்பட்டு ராமுவுக்கு சாந்தியை மணமுடித்து வைக்கிறார் ,தாலி கட்டிய பிறகு இதை தெரிந்து ராமு சாந்தியை விட்டு சென்று விடுகிறார்
    இதை அறிந்து சந்தானம் ராமுவை சாந்தியுடன் சேர்த்து வைக்க முயற்சிக்கிறார் .ராமுவை சமாதானம் செய்கிறார் , நண்பர்கள் உடன் வேட்டைக்கு செல்லும் ராமு எதிர்பாராமல் நீர் வீசியில் விழுகிறான் .
    அவன் இறந்து போனதாக சந்தானம் ராமுவின் மாமனார்விடம் (நாகையா ) சொல்ல அவர் அதிர்ச்சியில் இறந்து விடுகிறார் , சாந்திக்கு கண் சிச்சிகை வெற்றிகரமாக அமைய , சாந்தி அதிர்ச்சி அடையாமல் இருக்க ராமுவின் உறவினர் ( MR ராதா ) சந்தனத்தை ராமுவாக நடிக்க சொல்லுகிறார்
    சாந்தி சந்தனத்தை தன் கணவராக நினைத்து பழகுகிறார் , சந்தானம் விலகி போகிறார் , இந்த சமயத்தில் ராமு எதிர்பாராத விதமாக உயிருடன் திரும்பி வர சந்தானம் சந்தோசம் அடைகிறார் .
    ராமு சந்தனம்தான் சாந்திக்கு ஏற்றவர் என்று சொல்லி உண்மையை சொல்ல வேண்டாம் என்று தடுத்து விடுகிறார்

    மல்லிகாவும் ஊருக்கு திரும்பி வர மல்லிகா , ராமு , இருவரும் சிக்கலை தீர்க்க ராமுவுக்கு கல்யாணம் என்று சொல்லி , சந்தானம் , மல்லிகாவின் திருமணம் முடித்து விட்டு , ராமு தான் சாந்தியின் கணவர் என்று சொல்லி விடலாம் என்று எண்ணுகிறார்

    சாந்தி ராமு தான் தன் கணவர் என்று தன் திருமண நாள் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்

    முடிவு என்ன என்பது வெள்ளித்திரையில்



    படத்தில் நடித்து உள்ள அனைவருமே அந்த பாத்திரமாகவே வாழ்ந்து இருக்கிறார்கள் , சிவாஜி , பீம்சிங் கூட்டணி தான் அழகான குடும்ப உறவுகளை , தாயகத்தின் மகத்துவத்தை கதைகளை மூலமாக அழகாக நம் கண் முன்னே கொண்டு வந்து சேர்த்து இருக்கிறார்கள் , இந்த தடவையும் இந்த கூட்டணி அதில் பெற்று இருப்பது முழு வெற்றி

    இது போன்ற கதைகளும் கதாபாத்திரங்களும் பா வரிசை படங்களுக்கு பிறகு , (பீம்சிங் ,சிவாஜி , MSV , கண்ணதாசன் கூட்டணி ) அமையவில்லை எனபது என் கருத்து.

    படத்தில் நடித்து உள்ள நடிகர்களின் நடிப்பை பற்றி தனியாக எழுத தோன்றவில்லை , காரணம் படத்தில் நடித்து உள்ள அனைவரும் இயல்பாக இருக்கிறார்கள்

    ஒரு சாதாரன கதையே நம்மவர் தன் நடிப்பால் பேச வைத்து விடுவார் , இது போன்ற அருமையான கதை கிடைத்தால் கேட்க வேண்டுமா என்ன

    முதல் காட்சியில் கல்லூரி படிப்பை முடிந்த உடன் சந்தோசமாக ஆடி பாடுவதும் , தன் நண்பருக்கு புத்தி சொல்லுவதும் , தன் கணவர் தான் இவர் என்று நண்பனின் மனைவி நெருங்கும் போது தவிப்பதும் , என்று இவர் ராஜாங்கம் தான்

    mono acting காட்சியிலும், யார் அந்த நிலவு காட்சியும் நம்மவர் நடித்து இருக்கும் நடிப்பை , அவர் உடல் மொழி அனைத்தும் வைத்து பாடமே நடத்தலாம்

    சிவாஜிக்கும் பிறகு இந்த படத்தில் அதிகமாக நடிக்க ஸ்கோப் உள்ளவர் விஜயகுமாரி

    சாந்தி என்ற டைட்டில் ரோல் . பெயரை போல சாந்தமான குணம் , கண் தெரியாமல் அவர் தவிக்கும் பொது பார்வையாளர்களின் அனுதாபத்தை சம்பாதிக்கிறார் ,

    SSR - இவர் அவசர பட்ட அந்த ஒரு கணம் தான் சந்தானம் - சாந்தி மற்றும் அனைவரின் வாழ்வும் திசை மாறுகிறது

    திருந்தி மீண்டும் வந்த பிறகும் உண்மையை அவர் மறைக்கும் காரணம் ஏற்று கொள்ள முடியாமல் இருக்கிறது

    MR ராதா - இவரால் தான் கதை , இவரால் தான் கொஞ்சம் காமெடி என்று படம் நகர்கிறது



    படத்தின் முடிவு சுபமாக இருந்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்து இருக்கும்

  2. Likes Subramaniam Ramajayam, KCSHEKAR liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •