-
11th September 2015, 12:18 PM
#3721
Junior Member
Veteran Hubber
கட்டிலின் மேலேயே தொட்டிலும் !
அத்தை மடியே மெத்தையாக ......குழந்தையின் பிஞ்சுப் பாதங்களில் பாச முத்திரை பதித்து நெஞ்சையள்ளும் காதல்மன்னர்!
பஞ்சவர்ணகிளியிலும் கண்ணன் வருவான் கதை சொல்லுவான் தாலாட்டுப் பாடலில் விஜயா !!
Last edited by sivajisenthil; 11th September 2015 at 12:28 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
11th September 2015 12:18 PM
# ADS
Circuit advertisement
-
11th September 2015, 12:24 PM
#3722
Senior Member
Diamond Hubber

Originally Posted by
chinnakkannan
இந்தப் பாடலை இனிய நண்பர் பாவலர் நாவலர் நெய்வேலி வைரம- யார் எந்தப் பாட் கேட்டாலும் வாரி தகவல்கள் பக்கெட்கள் வழங்கும் வள்ளல்,இதுவரை விஜயகுமாரி பாடல் கொடுக்கிறேன் கொடுக்கிறேன் என்று ஏமாற்றிய காளை - அண்ணன் வாசு தேவனுக்கு வழங்குகிறேன்.. (பாட் ஸ்பான்ஸர் ட் பை சி.செ,மது, ராகவேந்த்ரா, ராஜ்ராஜ் (பின்ன எனக்கு சப்போர்ட் வேணாமா

)
அடாடாடா! புல்லரிச்சி போச்சுங்காணும். இன்னும் ஏதாவது பாக்கி இருக்கா? விஜயகுமாரி பாட்டு போடலியேன்னு வருத்தப்பட்டு சாபமிட்டவரு நீர் மட்டும்தான் ஓய்.
ஏதோ ஒரு நல்ல பாட்டை கொடுத்ததானால் தப்பிச்சீர். அதைக் கூட கண்ணை மூடிக் கொண்டுதான் கேட்டேன். 'உங்க விஜயகுமாரி'ன்னு சொல்லவும் பயமா இருக்கு. அப்புறம் நானும் பார்த்துகிட்டே இருக்கேன் அப்படின்னு சண்டைக்கு வருவீர்.
எது எதுக்குதான் பயப்படற துன்னு தெரியல என் ராசா.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
11th September 2015, 12:30 PM
#3723
Junior Member
Veteran Hubber

Originally Posted by
chinnakkannan
கோபு 1954 - தங்களது பார்வையிடல் விருப்பங்கள் சரி தமிழிலேயே சொல்கிறேன் லைக்ஸ் எங்களுக்கு மிகப் பெரிய சப்போர்ட்...கொஞ்சம் வந்து நீங்களும் எழுத வேண்டும் என்பது எங்களது எல்லோரின் ஆசையும்
I second it Gopu Sir!
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
11th September 2015, 12:31 PM
#3724
Junior Member
Veteran Hubber
Welcome Gopu Sir!
senthil
Last edited by sivajisenthil; 11th September 2015 at 12:34 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
11th September 2015, 12:37 PM
#3725
Senior Member
Diamond Hubber

Originally Posted by
chinnakkannan
கோபு 1954 - தங்களது பார்வையிடல் விருப்பங்கள் சரி தமிழிலேயே சொல்கிறேன் லைக்ஸ் எங்களுக்கு மிகப் பெரிய சப்போர்ட்...கொஞ்சம் வந்து நீங்களும் எழுத வேண்டும் என்பது எங்களது எல்லோரின் ஆசையும்

Originally Posted by
sivajisenthil
I second it Gopu Sir!
I Third it Gopu Sir !
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
11th September 2015, 12:47 PM
#3726
Senior Member
Diamond Hubber
இதோ குழந்தை உள்ளம் படத்தில் சுசீலா ஜானகி பாடும் தாலாட்டிலும் தூளியும் தொட்டிலும் ஆடுது
சொர்க்கத்தில் கட்டப்பட்ட தொட்டில் என்றும் மாமர ஊஞ்சல் என்றும் சொன்னாலும்... புடவைத் துணியில் கட்டிய தூளிதானே அது..
மன்னவன் வந்தானடியில் ந.தியும், ஜெயசுதாவும்
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
11th September 2015, 12:48 PM
#3727
Senior Member
Diamond Hubber
வாசு ஜி...
இறைவன் இருக்கின்றான் படத்தின் பெயரே இப்போதான் மறுபடி நினைவுக்கு வருது...அட ராஜப்பயலே பாட்டும் மட்டும் நினைவில் இருக்கிறது.. அழகே உன் பெயர்தானோ அமுதே உன் மொழிதானோ கூட அந்தப் படம் என்றுதான் நினைவு... யோசிக்கிறேன்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
11th September 2015, 01:09 PM
#3728
Junior Member
Veteran Hubber
திரை வாழ்வின் மாதா பிதா குரு தெய்வமாக கமலஹாசனை தாலாட்டி சீராட்டிய நடிகர்திலகமும் காதல் மன்னரும் !
கமலஹாசக் குழந்தை கொஞ்சம் வளர்ந்து விட்ட கனமான குழந்தையாதலால் வலிமையான தனது கரங்களையே தொட்டிலாக்கி தாலாட்டி மகிழும் நடிகர்திலகம் !
திரை ஞானத் தந்தையான காதல் மன்னரோ தனது மடியையே தலையணையாய் கமலுக்கு தாரை வார்க்கிறார் !!
நடிப்பிலக்கணத் தந்தையிடம் ஒரு பாடலுக்கு மிகப் பொருத்தமாக எப்படி வாயசைக்க வேண்டும் முக பாவங்களை எப்படியெல்லாம் பாடல் வரிகளுக்கும் அர்த்தங்களுக்கும் ஏற்றபடி மாற்றி மாயாஜாலம் செய்ய வேண்டும் போன்ற அரிச்சுவடிப் பாடங்களை வைத்த கண் வாங்காமல் பிரமித்து வாயடைத்துப் போய் ஊன்றிக் கவனித்துக் கற்றுக் கொள்கிறார் கமலஹாசன் !!
Last edited by sivajisenthil; 11th September 2015 at 01:36 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
11th September 2015, 01:35 PM
#3729
Senior Member
Diamond Hubber
உங்களுக்கெல்லாம் எப்படி எப்படியெல்லாம் தாலாட்டு இருந்தாலும் எனக்கு இதுதான் டாப். சொர்க்கம். எம் மன்னவன் நடித்த 'மன்னனவன் வந்தானடி' படத்தில் அருமையான தாலாட்டுப் பாடல். டி.எம்.எஸ். வாய்ஸ் அப்படியே நெய் மைசூர் பாகாய் உருகும். உருக்கும்.


'சொர்க்கத்தில் கட்டப்பட்ட தொட்டில்
ஏழ்மைத் துன்பத்தில் ஆடுதடா இங்கே'
'கன்னத்தில் காலமிட்ட கண்ணீரின் கோடு
பிள்ளைக்குத் தெய்வம் தந்த வைரத்துத் தோடு
அன்னைக்கு வீடு இந்த சின்னஞ்சிறு கூடு
மாமன் அரண்மனை கட்டி வைப்பான் நாளை அன்போடு'
குரலில் சோகம் இழையும்.
நடிகர் திலகத்தின் அமைதியான ஆக்டிங். கண்களாலேயே நடித்து விடுவார்.
குழந்தையை ஜெயசுதாவிடமிருந்து வாங்கிக் கொண்டு அடுத்த செகண்ட் இந்தப் பாட்டை எடுப்பார் பாருங்கள். இந்த ஒரு செகண்ட் போதும். வேறு எதுவுமே வேண்டாம். அதுவரை படு கேஷுவலாக தங்கை ஜெயசுதாவிடம் உரையாடிக் கொண்டிருந்தவர் குழந்தையை கையில் வாங்கியவுடன் 'சொர்க்கத்தில்' என்று ஆரம்பிப்பதற்கு முன்னால் ஒரு செகண்ட் சாப்பாடு ரெடி செய்யப் போகும் ஜெயசுதாவை ஒரு பார்வை பார்த்து பின் குழந்தையைப் பார்ப்பார். நன்றாக கவனியுங்கள் அந்தப் பார்வையை. ரிவர்ஸ் வராமல் இருக்க மாட்டீர்கள். நிச்சயமாகச் சொல்கிறேன்.
'மாளிகை மன்றம் கண்ட மன்னன்' என்று இரண்டாம் தரம் பாடும் போது அந்தக் குழந்தையை நடிகர் திலகம் அணைத்திருக்கும் விதம் பாருங்கள். இடது பக்க தோள்பட்டையைச் சற்றே உயர்த்தி, குழந்தையை சுமப்பதற்கு ஏற்றார்போல் உடலை கொஞ்சம் குறுக்கி, வலதும் இடதுமாய் அசைந்து.... அதே போல 'மன்னன்' எனும்போது வாய் அசைப்பதை கவனிக்காமல் இருந்து விடாதீர்கள். ரிவர்ஸ் வராமல் இருக்க மாட்டீர்கள்.
எத்தனை முறை எத்தனைப் படங்களில் அவர் பண்ணியிருந்தாலும் அவரையறியாமல் அவர் கண்கள் இரண்டும் மேல் நோக்கி அடிக்கடி உத்திரத்தை பார்க்கும் அழகை காணுங்கள். ரிவர்ஸ் வராமல் இருக்க மாட்டீர்கள்.
உடல் அசைவு எதுவுமின்றி,
'கன்னத்தில் காலமிட்ட கண்ணீரின் கோடு
பிள்ளைக்குத் தெய்வம் தந்த வைரத்துத் தோடு'
என்று முகம் மட்டுமே சிரித்தபடி, ஆனால் அதில் சோகத்தைத் தேக்கி, சைடில் தனை மறந்து நகரும் கேமேராவின் பார்வையை சற்றும் நோக்காமல் 'தோடு' எனும் போது அப்படி இருந்தபடியே ஒரு கண் சிமிட்டல் செய்வார். பாருங்கள். ரிவர்ஸ் வராமல் இருக்க மாட்டீர்கள்.
பாடல் முடியும் போது 'ஏழ்மைத் துன்பத்தில் ஆடுதடா இங்கே' எனும்போது அந்த முகத்தில் தெரியும் ஏழ்மை உணர்வை எண்ணித் தவிக்கும் பரிதாபத்தைக் கவனியுங்கள். ரிவர்ஸ் வராமல் இருக்க மாட்டீர்கள்.
'பாடகர் திலகம்' பாடினாரா அல்லது 'நடிகர் திலகம்' பாடிவிட்டு பாடகர் திலகத்தின் பெயரை போட்டுக் கொள்ளச் சொன்னாரா என்ற அளவிற்கு குழப்பம் நம்ம குழப்பும். அவ்வளவு துல்லிய குரல் ஒற்றுமை. ஒவ்வொரு வார்த்தையும் இந்த உன்னத இரு கலைஞர்களாலும் உயிர் பெறும். பாவம் பெறும். உன்னதம் பெறும்.
அந்த கோமாளி ராஜா வேஷத்தில் கூட கோமான் போல அவ்வளவு அழகாக இருப்பார் நடிகர் திலகம். குறிப்பாக அழகு பொங்க சிரிக்கும் காட்சிகள். (இப்போதைய பேஷன் french beard லாம் அவர் அப்போதே வைத்துக் காட்டி விட்டுப் போய் விட்டார்.) எதற்குத்தான் முன் உதாரணமாய் திகழவில்லை அவர்!?
Last edited by vasudevan31355; 11th September 2015 at 01:44 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
11th September 2015, 01:40 PM
#3730
Senior Member
Diamond Hubber
ஆஹா!
மதுண்ணா! ஒன்றாகவே யோசித்து விட்டோம் வழக்கம் போல. நீங்கள் சுருக். நான் விவர்.
பாதகமில்லை. 'இமை தொட்ட மணி விழி'
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks