-
11th September 2015, 03:23 PM
#11
Senior Member
Veteran Hubber
திப்பு சுல்தான் படத்தில் ரஜினி நடிக்கக் கூடாது!- இந்து முன்னணி எதிர்ப்பு
திப்பு சுல்தான் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கக் கூடாது என்று இந்தி முன்னணி தலைவர் ராம கோபாலன் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.பிரபல கன்னடத் தயாரிப்பாளரும், தொழிலதிபருமான அசோக் கெனி, திப்பு சுல்தான் வாழ்க்கை வரலாற்றை தனது கனவுப் படமாகத் தயாரிக்கப் போவதாக அறிவித்துள்ளார். இதில் நடிக்க ரஜினிகாந்திடம் பேசப் போவதாகவும் கூறியிருந்தார். இந்த செய்தியை ஏற்கெனவே ஒன்இந்தியாவில் வெளியிட்டிருந்தோம்.advertisementஇன்னும் படம் குறித்து ரஜினியுடன் பேச்சுவார்த்தையே ஆரம்பிக்காத நிலையில், இந்தப் படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.திப்பு சுல்தான் தமிழர்களைக் கொன்றவன் என்றும் அதனால் அவனது வாழ்க்கை வரலாற்றில் தமிழரை மதிக்கும் ரஜினி நடிக்கக் கூடாது என்றும் ராம கோபாலன் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறுகையில், "அமரர் எம்ஜிஆர் தனது வாழ்க்கை வரலாறான நான் ஏன் பிறந்தேன் புத்தகத்தில், பொள்ளாச்சியில் வசித்து வந்த தமிழரான தனது மூதாதையர்கள் கேரளாவுக்கு இடம் பெயரக் காரணமே திப்பு சுல்தானின் படையெடுப்பும், அவன் தமிழர்களைப் படுகொலை செய்ததும்தான். திப்பு சுல்தான் ஒரு இந்தி மத விரோதி. அவனது வாழ்க்கை வரலாற்றை வைத்து எடுக்கப்படும் படத்தைத் திரையிட விடமாட்டோம்," என்றார்.அக்கப்போரை ஆரம்பிச்சாச்சா?
-
11th September 2015 03:23 PM
# ADS
Circuit advertisement
Bookmarks