-
13th September 2015, 08:43 PM
#1671
Junior Member
Veteran Hubber
திரு பாஸ்கர் அவர்களே
கலைவேந்தன் அவர்கள் பதிவை மறந்துவிடுங்கள். அவர் அப்படிதான் !
நாம் என்ன எழுதுகிறோமோ அதை அப்படியே அவர் நமக்கு எழுதுவார். இது நம் பதிவையும் அவர் பதிவையும் பார்த்தாலே புரியும்...!
அவரை பொருத்தவரை திரு ஸ்ரீதர் அவர்கள் தெளிவாக திரும்பி பார்கிறேன் பதிவில் சிவந்த மண் ஓஹோ என்று ஓடியது என்று குறிப்பிட்டு எழுதி, அதன் ஹிந்தி வடிவம் எதிர்பார்த்தபடி போகவில்லை என்று கூறியதன் அர்த்தம் சிவந்த மண் என்ற தமிழ்படம் வசூல் ஆகவில்லை என்பது' என்று கூறும்பொழுதே...அவருடைய பதிவின் நோக்கம் மற்றும் தன்மை நன்கு விளங்கும்.
ஒரு சிம்பிள் ஆன கணக்கின் அடிப்படையில் இருக்கையும் அரங்கு நிறைவு காட்சியையும் கொண்டு நாம் பதிவு செய்தால் அதுவும் தவறு என்பார் அல்லது விளக்கமே அள்ளிக்கமாட்டார்.
ஆனால் அவரை பொருத்தவரை அவருடைய MATHEMATICS படி 1257 இருக்கைகள் கொண்ட GLOBE திரை அரங்கில் 125 காட்சிகள் அதாவது 41 நாட்கள் தொடர் நிறைவு கண்ட சிவந்த மண் வசூல் 900 இருக்கைகள் கொண்ட சித்ரா திரை அரங்கில் நம் நாடு 125 நாட்கள் தொடர் நிறைவு கண்டால் வசூல் ஆகும் தொகை 1257 இருக்கைகள் தொடர்ந்து அரங்குநிறைவு வசூலை விட அதிகம் என்பார். இது எந்த கணக்கு தியரி என்பது அந்த ராமானுஜருக்கே வெள்ளிச்சம்.
வேண்டுமென்றே தவறான தகவல் கொண்ட இணைப்புக்கு வக்காலத்து வாங்கி சிவந்த மண் நஷ்டம் என்று கூறுவதில் அவருக்கு அலாதி ஆனந்தம் ! சிவந்த மண் மட்டும் அல்ல...விட்டால் நடிகர் திலகத்தின் அனைத்து தயாரிப்பாளர்களும் நஷ்டம் அடைந்தார்கள் என்று கூட ARTICULATE செய்வார். !
இன்னொன்று, சற்று முன் திரு எஸ்வி அவர்களே ஒரு தகவல் பதிவு செய்துள்ளார். அதாவது நம் நாடு வசூல் பற்றி தகவல் வந்ததாக. உடனே கலைவேந்தன் அவர்கள் பம்மலாரிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் நம் நாடு வசூல் அதிகம் என்ற பதிவு வர...
அதனை நான் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்தபொழுது நமது பம்மலார் அவர்கள் கோவிலில் கற்பூரம் அடித்து சத்தியம் செய்யாத குறையாக நமது நண்பரிடம் கூறியுள்ளார்...அதாவது தாம் சிவந்த மண் திரைப்படத்தின் வசூல் எல்லாவிதத்திலும் நம் நாடு திரைப்பட வசூலை விட அதிகமே என்று ஒவ்வொரு ஏரியா வசூல் தொகையையும் திரு ஈஸ்வீயிடம்
முக்கால் மணி நேரத்திற்கும் மேலாக பேசியுள்ளேன், பிறகு அவர் ஏன் இப்படி தவறான பதிவு செய்துள்ளார் என்று தெரியவில்லை என்றும் சிவந்தமண் திரைப்படத்தை விட அடிமை பெண் திரைப்படம் வேண்டுமானால் வசூலில் முந்தி இருக்கும் வாய்ப்பு அதிகம் ..ஆனால் நிச்சயமாக நம் நாடு திரைப்படம் சிவந்தமண் திரைப்படத்தை விட வசூல் குறைவே என்று அடித்து கூறியுள்ளார் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
இருந்தாலும் எனக்கு வசூல் தகவல் மீது பத்திரிகை விளம்பரம் பார்க்காத வரையில் எந்த படமாக இருந்தாலும் எனக்கு அது ஒவ்வாத ஒன்றுதான் ! அது நான் கடைபிடிக்கும் ஒரு பாலிசி. மற்றவர்கள் அதை வழிமொழியவேண்டும் என்று எதிர்பார்க்கவும் மாட்டேன் !
நீங்கள் வேண்டுமானால் பாருங்கள் நாளையோ அல்லது இன்று திரு எஸ்வி அவர்களிடம் இருந்து நாம் நிச்சயம் இதுபோல இந்த தொனியில் ஒரு பதிவை எதிர்பார்க்கலாம் .
"மக்கள் திலகம் அவர்கள் திரை உலக சாதனை, அரசியல் சகாப்தம் படைத்தது, பொற்கால ஆட்சி இவை அனைத்தும் உலக மக்கள் அறிந்தது. அதனை ஒத்துகொள்ளும் மனம் இல்லாதவர்கள் தங்கள் பதிவின் மூலம் என்ன எதிர்பார்கிறார்கள் என்று தெரியவில்லை. தங்களுடைய தோல்விகளை இப்படி பட்ட பதிவு செய்வதன்மூலம் ஆறுதல் அடைகிறார்கள் என்றால் அதில் வியப்பேதும் இல்லை. " - இதுபோல ஒரு பதிவு அவரிடம் இருந்து நிச்சயம் எதிர்பார்க்கலாம்....
ஒருவேளை அவர் பதிவை நாம் இப்போதே கணித்ததால் இதுபோல பதிவு பதிவு செய்யாமலும் இருக்கலாம்...
அப்போதுதானே மற்றொரு பதிவில் யாராவது ஒருவர் நம்மை குறிப்பாக என்னை - " RKS அன்று கூட நீங்கள் இப்படி ஒரு பதிவு நாங்கள் பதிவு செய்வோம் என்று பொய் பதிவு செய்தீர்கள்...ஆனால் நாங்கள் அப்படி பதிவே செய்யவில்லை " என்று கூறுவதற்கு வசதியாக இருக்கும் !
என்னவோ...!
யோசிச்சா...எனக்கு தலை கிறு...கிறு...கிறு...கிறு..ன்னு சுத்திட்டுதான் வருது...!
எப்போதான் இதுக்கு ஒரு விமோசனமோ..இறைவா !
தம்முடைய தவறை / தாம் ஆராயாமல் பதிவு செய்த ஒரு பொய் தகவலை மறைக்க, எந்த நிலைக்கு வேண்டுமானாலும் ஒரு சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு பதிவு செய்கிறார்கள் என்பதே இதன் பொருள்.
Regards
RKS
Last edited by RavikiranSurya; 13th September 2015 at 10:47 PM.
-
Post Thanks / Like - 2 Thanks, 1 Likes
-
13th September 2015 08:43 PM
# ADS
Circuit advertisement
-
13th September 2015, 09:24 PM
#1672
Junior Member
Veteran Hubber
தமிழில் ஓஹோ என்று ஓடியது ! - (அதாவது சிவந்தமண்) இதுவும் திரு ஸ்ரீதர் குறிப்பிட்டுள்ளார்...
கணக்கு பார்த்தபோது ஒட்டுமொத்தத்தில் என்று குறிப்பிட்டுள்ளது ஹிந்தி வடிவத்தை பற்றி அவர் குறிப்பிட்டுளதேயாகும் காரணம்
1) ஹிந்தியில் நாங்கள் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை என்று தெளிவாக கூறியுள்ளார் ஹிந்தி என்பது உங்களை பொருத்தவரை தமிழ் என்று நீங்கள் அர்த்தம்கொண்டு அதன் அடிப்படையில் வாதிட முயன்றால் அது எந்தளவுக்கு உங்களது காழ்புணர்ச்சி உள்ளது என்பதை தெள்ளம் தெளிவாக காட்டிவிடும் ....
2) திரு ஸ்ரீதர் அவர்கள் தமிழில் சிவந்த மண் ஓஹோ என்று ஓடியது என்று கூறியுள்ளார்.
இதனை எல்லாம் நீங்கள் உங்கள் சொவ்கர்யத்துக்கு மறைக்க முடியாது காரணம் பக்கங்களில் தெளிவாக உள்ள சமாசாரம் !
இப்போதும் நாங்கள் கூறியதில் மாற்றம் இல்லை. அந்த லிங்கில் கொடுக்கப்பட்டது போல இந்த திரும்பி பார்கிறேன் புத்தகத்தில் கிடையவே கிடையாது. லிங்கில் புளுகி தள்ளியுள்ளார் காழ்புணர்ச்சியால் !
பேராசிரியர் செல்வகுமார் அவர்களும் இதைதான் கூறியதாக கூறியுள்ளீர்கள்..ஆனால் அந்த புத்தகமே இங்கு பதிவு செய்தாகிவிட்டது..அதில் நீங்கள் ஒருவர் கூறியபடி கூட இதில் எழுதப்படவில்லையே..அதாவது சிவந்தமண் வகைக்கு திரு ஸ்ரீதர் நஷ்டம் அடைந்தார் என்றோ...அல்லது மீண்டும் வைர நெஞ்சம் தமிழ் ஹிந்தி எடுத்து நஷ்டம் அடைந்தார் என்றோ..? இன்னும் சொல்லப்போனால் அவருடைய அடுத்தபடம் ஹாஸ்ய சித்திரம் உத்தரவின்றி உள்ளே வா...என்பதையும் ஸ்ரீதர் அவர்கள் தெளிவாக எழுதியுள்ளார்.
உண்மைகள் இப்படி இருக்க நீங்களோ மற்ற அனைவரோ எதற்கு இன்னும் லிங்கில் உள்ள பொய் தகவலை கேடயமாக பிடித்துகொண்டு வீணாக பிடி வாதம் செய்கிறீர்கள் என்பது நினைக்கும்போது அதற்க்கு காரணம் உங்களுக்கு மக்கள் திலகத்தின் கொடியை உயர்த்தி பிடிக்க வேண்டுமென்றே நடிகர் திலகம் கொடி கீழே இறக்கவேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி உள்ளதுபோல தெரிகிறது !
Rks
-
Post Thanks / Like - 2 Thanks, 2 Likes
-
13th September 2015, 10:11 PM
#1673
Senior Member
Devoted Hubber
"அதேபோல, சாதனை சிகரங்களில் நீங்கள் கூறியுள்ளபடி, சென்னையில் ராஜா திரைப்படம் 3 தியேட்டர்களில் ஓடவில்லை. 2 தியேட்டர்களில்தான் ஓடியது. நீங்கள் அகஸ்தியாவையும் சேர்த்திருக்கிறீர்கள்."
திரு.கலைவேந்தன் எதை நிறுவ முயற்சிக்கிறார்?
நடிகர்திலகத்தின் அனைத்து படங்களும் தோல்வி, அவரை வைத்து படம் தயாரித்த தயாரிப்பாளர்கள் அனைவரும் நஷ்டபட்டார்கள் என்கிற ரீதியில் எழுதுகிறார்.
சிவந்தமண் தமிழில் "ஓஹோ" என்று ஓடியது. இந்தியில் நன்றாக போகவில்லை
என்று தானே ஸ்ரீதர் கூறியுள்ளார். அதை வசதியாக மறைத்து மொத்தத்தில் நஷ்டம்
என்று நம் தலைவரை மட்டம் தட்டும் வேலை பார்க்கிறார்.
ஆனால் திரு.முரளி அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் புதிதாக ஒரு கேள்வி கேட்பதன் முலம் சாதூர்யமாக எழுதுகிறார். அந்த வகையில் இவரை மிஞ்ச ஆள் இல்லை.
Last edited by J.Radhakrishnan; 13th September 2015 at 11:11 PM.
அன்றும் இன்றும் என்றும் நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
-
Post Thanks / Like - 2 Thanks, 3 Likes
-
13th September 2015, 10:41 PM
#1674
Junior Member
Veteran Hubber
-
Post Thanks / Like - 3 Thanks, 5 Likes
-
13th September 2015, 11:26 PM
#1675
Senior Member
Seasoned Hubber
Image sent by NTFAN Sriram through Whatsapp. Posting on request.

Page from Chitralaya Gopu's book "Gnyabakam Varuthe".
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
-
13th September 2015, 11:41 PM
#1676
Senior Member
Seasoned Hubber
Unlike popular perception, Darthi - Hindi version of Sivandha Mann was also a hit film. I do not know how this is rated as a flop, since this film saw more than 25 weeks in Delhi, I remember saw the Silver Jubilee Ad in "The Screen" (full page). This film is enlisted as 12th in the Top 25 BO Rankings of the films released in the year 1970, based on the revenue collected. Below is the quote from the website IMDB :
Highest Grossing Hindi Movies of 1970
by shrikant-narayanan created 20 Feb 2011 | last updated - 01 Sep 2013
This list is as per the film's performance money wise at the box office in the particular year. The order is as per revenue collected. There are some years in which films which are regarded as classics post their release or have developed cult following among public over the years, have become box office flop at the time of their release.
All the films in the below list are regarded as good classic films.
The first 29 were hits and rest flops. last 7 films including Mera Naam Joker and Prem Pujari were flops at the box office on their release but later on were regarded as classics.The rest in the below list are superhit films and are classics too
1. Johny Mera Naam (1970)
2. Sachaa Jhutha (1970)
3. Kati Patang (1970)
....
....
12. Dharti (1970)
This vindicates my logic and conclusion that Sridhar suffered losses only at the mediocre and miserable flops of Avalukkendru Or Manam and Alaigal. Neither Sivandha Mann nor Darthi put him into financial trouble.
Link for IMDB page: http://www.imdb.com/list/ls000041304/
I hope this debate is stopped asap, so that we continue our goal of glorification of the one and only NT.
Last edited by RAGHAVENDRA; 13th September 2015 at 11:44 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th September 2015, 12:28 AM
#1677

Originally Posted by
RavikiranSurya
திரு பம்மளார் அவர்களிடம் உண்டு ராகவேந்திர சார்
அவரிடம் நமது ரசிகர் ஒருவர் கேட்டபோது ஒரு xerox copy கேட்டும் அதை தரமுடியாது என்று கூறிவிட்டதாக தகவல் !
Rks
ஆர்கேஎஸ்.
திரு சந்திரமௌலி அவர்கள் எழுதிய புத்தகத்தில் சிவந்த மண் பற்றிய விவரங்கள் அடங்கிய xerox copy-ஐ நண்பர் திரு.ராமஜெயம் அவர்களுக்கு தந்ததே சுவாமிதான். சென்ற வாரம் வியாழன் அன்று சுவாமியால் இது ராமஜெயம் அவர்களிடம் கொடுக்கப்பட்டது. அவரிடமிருந்துதான் பாஸ்கர் அவர்களுக்கு சென்றது.
அப்படியிருக்க அது தெரியாமல் நீங்கள் சுவாமி கொடுக்க மறுத்து விட்டார் என்று எழுதியது வருத்தத்துக்குரியது. ஒரு தவறான தகவலை நீங்கள் சரி பார்க்காமல் அப்படி எழுதியிருக்க வேண்டாம்.
நண்பர் கலை,
சிவந்த மண் நம் நாடு பற்றிய வசூல் சர்ச்சையில் அதே போல் நீங்களும் தகவல் சரிதானா என்று தெரியாமல் சுவாமி இதை வினோத்திடம் பிஎம் மூலமாக தெரிவித்தார் என்று சொல்லியிருப்பது வருத்தத்துக்குரியது மட்டுமல்ல கண்டனக்குரியதும் கூட. நீங்கள் இதுவரை நேரில் சந்திக்காத அலைபேசியில் கூட உரையாடாத ஒருவரைப் பற்றி ஒரு தவறான தகவலை பரப்புவது எந்த விதத்தில் சரி? இதன் மூலம் ஒரு சிவாஜி ரசிகர் எங்கள் படம்தான் அதிக வசூல் என்று ஒப்புக் கொண்டு விட்டார் என்று ஒரு விளம்பர தேடல் என்பதை தவிர வேறு என்ன இருக்க முடியும்? இல்லை சிவாஜி ரசிகர்கள் மத்தியில் அவர் பெயரை களங்கப்படுத்த வேண்டும் என்ற எண்ணமா? நண்பர் சுவாமி நீங்கள் பயன்படுத்திய வார்த்தைகளினால் மிகுந்த வருத்தம் அடைந்திருக்கிறார்.
வினோத் சார்,
உங்களிடமிருந்து இப்படி ஒரு செய்கையை எதிர்பார்க்கவில்லை.
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
14th September 2015, 12:29 AM
#1678
Junior Member
Senior Hubber
நெஞ்சத் திரையில் நடிகர் திலகம்- 9
"கை கொடுத்த தெய்வம்".
தங்கை-அண்ணன் என்கிற
புனித பந்தத்தைக் கொச்சைப்படுத்தி,உடன் வேலை செய்யும் சிலர் இரண்டாம் முறையாகப் பேசி விட..
அவர்களை அடித்து துவம்சம்
செய்த வேகத்திலேயே வீட்டுக்கு வந்து, பெட்டி,படுக்கையெல்லாம் எடுத்துக்
கொண்டு கிளம்பத் தயாராக,
நண்பனும்,தங்கையெனத் தான்
கொண்டாடும் நண்பனின்
மனைவியுமாய் சமாதானப்படுத்தும், ஒரே
டேக்கில் நடிகர் திலகம் நடித்துக் கொடுத்த அந்த நீளமான காட்சியை மீண்டுமொருமுறை கண்டு
வியக்கத்தான் வீட்டில் போட்டுப் பார்த்தேன்.
ஆனால்...
அவ்வளவு நேரமெல்லாம் நீ
காத்திருக்க வேண்டாம் தம்பி..
ஆரம்பத்திலேயே அசத்தி விடுகிறேன்..பார்! "என்றார்
நடிகர் திலகம்.
வடக்கத்தி பூமியில்,சாப்பிட்டுச் சாப்பிட்டு சப்பாத்தி
என்கிற சொல்லையே வெறுக்கிற நண்பன் நடிகர் திலகத்திற்கு,சோறு சமைக்கத் தெரிந்த ஒரு தமிழ்ப் பெண்ணை மணமுடிக்க நண்பன் எஸ்.எஸ்.ஆர், கேஆர்விஜயா மூலமாக முயற்சிக்க, அவர்கள்
பார்த்த தமிழ்ப் பெண் மணமாகி
குடும்பமும்,குட்டியுமாய் இருப்பது கண்டு விழிக்கையில்,
கே.ஆர்.விஜயா, எஸ்.எஸ்.ஆரை மணக்க சம்மதிக்க..
அவர்களின் திருமணத்தை தான்
நடத்தி வைப்பதாக நடிகர் திலகம்,எஸ்.எஸ்.ஆருக்கு
உறுதி கொடுக்கும் காட்சி.
இப்போது திரையில் எதிரும்,புதிருமாய் நடிகர் திலகமும்,
எஸ்.எஸ்.ஆரும்.
இடப்புறம் நிற்கிற நடிகர் திலகம், வலப்புறம் நிற்கிற
எஸ்.எஸ்.ஆரிடம் கேட்பார்..
"இந்தக் கல்யாணத்துல உன்னோட அம்மா,அப்பா,குடும்பம் எல்லாம்.. "என்று
நண்பனின் திருமணத்தில்
அவர்கள் இருக்க வேண்டும்
என்கிற நல்லெணத்தில்
வினவ..
நண்பனின் தோள் பற்றிக்
கொண்டு உணர்ச்சிவசமாகும்
எஸ்.எஸ்.ஆர், "எல்லாரும்
இருக்காங்க..உன் வடிவில்"
என்று உருக..
சொல்ல ஒரு வார்த்தையில்லாமல், வள வள
என்று வாய் பேசாமல், ஒரு
பெருமிதப் புன்னகையுடன்..
கர்வமிகு கண் மலர்ச்சியுடன்,
நண்பனின் தோளில் இரண்டு
முறை தட்டி விட்டுப்
போவாரே..?-அந்தக் காட்சி.
படத்தின் தலைப்பு மட்டுமல்ல.
நம் நடிகர் திலகமும் தான்..
நடிப்பு வாழ "கை கொடுத்த
தெய்வம்."
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
14th September 2015, 12:43 AM
#1679
நண்பர் கலை,
என் பதிலை நீங்களே எழுதி விட்டதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.
ஒரே ஒரு விஷயம் மட்டும். எப்போதும் போல் ஒவ்வொரு பதிவிலும் உண்மைக்கு புறம்பான ஒரு தகவலையாவது சொல்ல வேண்டும் என்ற உங்கள் நியதிக்கேற்ப இம்முறையும் நான் தவறை பகிரங்கமாக ஒப்புக் கொள்ளவில்லை என்று ஒரு செய்தியை சொல்லியிருக்கிறீர்கள்.
நான் அன்றே தவறு என்று ஒப்புக் கொண்டதற்கு ஆதாரம் இதோ.[நான் முன்பே சொன்னது போல் அது தேவைப்படாவிட்டாலும் கூட]
http://www.mayyam.com/talk/showthrea...art-14/page274
அன்றே திருத்தியதற்கு ஆதாரம்
http://www.mayyam.com/talk/showthrea...art-14/page260
எப்போதும் இந்த பாகத்தில் இந்த பக்கத்தில் இந்த பதிவு என்று போடுவீர்களே! இந்த மாதிரி நேரங்களில் மட்டும் அது வராது போல. ஆமாம், அதை போட்டு விட்டால் எப்படி குறை சொல்ல முடியும்?
நடத்துங்கள்! நடத்துங்கள்!
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th September 2015, 01:46 AM
#1680
Senior Member
Devoted Hubber
நெருங்கிவரும் கூட்டத்தை சமாளிக்க எத்தனையோ முறைகள் உண்டு.
அவற்றில் ஒன்றை அண்மையில் சிவாஜி கணேசன் கடைப்பிடித்தார்.
காரைக்காலில் நடைபெற்ற கல்யாணம் ஒன்றில் கணேசனின் வருகை
பரபரப்பு உண்டாக்கியது. சீர்காழியின் கச்சேரி இதனால் பாதிப்படைவதைக்கண்டு
மேடைக்கு தாவினார் கணேசன்."அண்ணே நீங்க பாடுங்க நானும் இங்கேயே
உட்காந்துகிறேன் அவுங்க எல்லாம் உங்க பாட்டையும் கேட்கட்டும்
என்னையும் பார்த்துக்கட்டும்" என்று சொல்லி "எஃபெக்ட்" முருகேசனிடமிருந்து
கடத்தை கடன் வாங்கி கடகடவென்று வாசிக்கத் தொடங்கிவிட்டர்
நேரில் ரசித்தவர் "அமிர்தம்"
முகநூலில் இருந்து
தன்னால் மற்றவர்களுக்கு எந்தவிதமான சங்கடங்களும் ஏற்படக்கூடாது
என்ற பொன்னான மனம்
அத்துடன் சமயோசிதமான செயல்பாடு
அண்ணா உங்களைபோல யார் உளர்?
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
Bookmarks