-
13th September 2015, 11:24 PM
#3781
Junior Member
Diamond Hubber
-
13th September 2015 11:24 PM
# ADS
Circuit advertisement
-
14th September 2015, 12:38 AM
#3782
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
14th September 2015, 12:41 AM
#3783
Junior Member
Senior Hubber

Originally Posted by
KALAIVENTHAN
நண்பர்களுக்கு வணக்கம்,
நமது மய்யம் திரிக்கு நான் வந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இந்த ஒன்றரை ஆண்டுகளில் தட்டுத் தடுமாறி இன்றோடு 1,000 பதிவுகளை நிறைவு செய்கிறேன். இப்போது பதிவிடும் இந்த பதிவை போலவே ஒவ்வொரு பதிவையும் இடவே எனக்கு விருப்பம். நமக்கு பிடித்தவரை ரசிக்கும்போதே சமூக பிரச்சினைகளையும் கலந்து சொல்வது என் பாணி. என்றாலும், மற்றவர்களும் இதேபோல, சமூக நிகழ்வுகளை குறிப்பிட்டு பதிவுகள் போட வேண்டும் என்று விரும்புகிறேன்.
உள்ளங்கையில் உலகம் சுருங்கிவிட்ட இன்றைய நிலையில், நாம் சொல்லித்தான் நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்ளும் நிலையில் யாரும் இல்லை. ஆனாலும், ஒரு கருத்தை மீண்டும் மீண்டும் சொல்லும்போது, அதுவும் நமக்கு பிடித்தவருடன் ஒப்பிட்டு சொல்லும்போது தாக்கம் அதிகமாக இருக்கும். இதன் மூலம் சமூக அவலங்களுக்கு எதிராக கருத்துக்கள் பரவலாகும், வலுப்படும் என்பது என் எண்ணம்.
ஒரு நாளைக்கு திரியை சராசரியாக 1,000 பேர் பார்த்தால், பார்ப்பவர்கள் ஒரு நபரிடம் இதைப்பற்றி பேசினால் கூட, அது 2,000 பேரை சென்றடையும். அப்படியே கருத்து பரவலாகும். அதனால் என்னவாகி விடப் போகிறது? என்று கேட்கத் தோன்றும். 6 மாதங்களுக்கு முன்பு வரை தமிழகத்தில் மதுவிலக்கு வரும் என்று யாராவது சொன்னால், அதற்கு வாய்ப்பே இல்லை என்றுதான் பதில் சொல்லியிருப்போம். ஆனால், இன்று.... தேர்தலுக்கு முன் மதுவிலக்கு அறிவிக்கப்பட்டு விடும் என்றெல்லாம் பேச்சுக்கள். மக்கள் கருத்து பரவலாகி வலுப்பெற்றதுதான் இந்த நிலை ஏற்படக் காரணம்.
அந்த வகையில், மக்களை பாதிக்கும் சமூக அநீதிகளுக்கு எதிரான கருத்துக்கள் பரவ, நியாயம் நிலைத்திட, நல்லவை நடந்திட, நீதி வென்றிட நம்மாலான முயற்சியை செய்வோமே என்ற எண்ணம்தான் இதுபோன்ற என் பதிவுகளுக்கு காரணம். அதோடு, நம்மால் தீயவைகளை தடுக்க முடியாமல் போனால் கூட, அதற்கு எதிராக குரல் கொடுத்தோம் என்ற திருப்தியாவது மிஞ்சும். மேலும், 25 ஆண்டுகள் கழித்து நாம் இருப்பது சந்தேகம். 50 ஆண்டுகள் கழித்து நிச்சயம் இருக்க மாட்டோம். ஆனால், நாம் இங்கு எழுதியது இருக்கும்.
மக்களை பாதிக்கும் அக்கிரமங்களை கண்டித்திருக்கிறார்கள் என்று எதிர்காலத் தலைமுறையினர் நம்மை பாராட்ட வேண்டும் என்று கூட அவசியம் இல்லை. நாமே இல்லாதபோது பாராட்டினால் என்ன? திட்டினால் என்ன? நமக்கு தெரியவா போகிறது? இதுபோன்ற திரிகள் மூலம் கூட, சமூக அநியாயங்களுக்கு எதிராக குரலெழுப்பியிருப்பதைப் பார்த்து அவர்கள் ஆக்கமும் ஊக்கமும் பெற்று மக்களை பாதிக்கும் பிரச்சினைகளில் அநீதியை தட்டிக் கேட்க முன்வந்தால் நமது சந்ததிகளுக்கு நல்லதுதானே?
ஆயிரம் பதிவுகளை நான் இடுவதற்கு ஆதரவும் ஊக்கமும் அளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி கூறுவதோடு, சர்ச்சைகளை தவிர்த்தால் பயனுள்ள பதிவுகளை எல்லாரும் இடலாம் என்று கூறி, அதற்கு பாரபட்சமில்லாமல் அனைத்து நண்பர்களின் ஒத்துழைப்பையும் கேட்டுக் கொண்டு, பொறுமையாக படிப்பவர்களுக்கு நன்றி நவின்று, மக்களை பாதிக்கும் பிரச்சினைகளுக்கு எதிராக ஜனநாயக முறையில் உரிமைக்குரல் எழுப்புவோம் என்று சொல்லி .....
இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்
அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்
அந்த ஒளி காணலாம், சொன்ன வழி போகலாம்
நாளை வரலாறு நமக்காக உருவாகலாம்.....
...என்று திரையில் பாடியபடி வரலாற்றை உருவாக்கியதோடு, அதற்கும் மேலே சென்று வரலாறாகவே மாறிவிட்ட சரித்திர நாயகர், பொன்மனச் செம்மலின் பொற்பாத கமலங்களில் எனது இந்த ஆயிரமாவது பதிவை சமர்ப்பிக்கிறேன்.
--------------------------------------------------
‘என் உரிமைக்குரல்...........’
சோழவள நாடு சோறுடைத்து.. என்று ஒரு காலத்தில் போற்றப்பட்ட தஞ்சை தரணி இப்போதே போதுமான அளவு விவசாயம் நடக்காமல் விளைச்சல் இல்லாமல் காய்ந்து வருகிறது. தஞ்சை உள்ளிட்ட டெல்டா பகுதிகளை முற்றிலும் பாலைவனமாக்காமல் போகமாட்டோம் என்று மத்திய அரசு கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுவதாய் தோன்றுகிறது.
ஏற்கனவே, தஞ்சை பகுதியில் மீத்தேன் எரிவாயு திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பா.ஜ. அரசும் தொடர முயற்சித்தது. அதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு எல்லாம் நடத்தினர்.தமிழக அரசும் இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தது. பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறியும் வரை பணிகளை மேற்கொள்வதற்கு தற்காலிக தடை விதித்தும் தமிழக அரசு உத்தரவிட்டது.
பின்னர், மீத்தேன் வாயு திட்டம் ரத்து என்று மத்திய அரசு அறிவித்தது. பரவாயில்லையே, மத்திய அரசுக்கு தொலைநோக்கும் நல்லெண்ணமும் இருக்கிறதே என்று நினைத்தால், அந்த திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்தப்படி நியமிக்கப்பட்ட தனியார் நிறுவனம் அதற்கான ஏற்பாடுகளை செய்யாததால் திட்டம் ரத்து என்று மத்திய அரசு நாடாளுமன்றத்திலேயே அறிவித்தது. ஆக, நிலைமைகளை ஆராய்ந்து திட்டத்தை மத்திய அரசு கைவிடவில்லை என்பது தெளிவு.
சரி போகட்டும், தஞ்சையை வறண்டபூமியாக்கும் திட்டம் போய்த் தொலைந்தால் சரி என்று விட்ட நிம்மதிப் பெருமூச்சு அடங்குவதற்குள் மீத்தேன் திட்டமே பரவாயில்லை என்று தோன்றும் அளவுக்கு ஷேல் எரிவாயு எடுக்கும் திட்டம் என்று அடுத்த அணுகுண்டு வீசப்பட்டிருக்கிறது.
மீத்தேன் எரிவாயு திட்டத்தை விட ஷேல் எரிவாயு திட்டம் மேலும் ஆபத்தானது. முதலில் மீத்தேன் வாயு, ஷேல் எரிவாயு என்றால் என்னவென்று பார்ப்போம்.
பூமியில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் புதைந்த பொருட்கள் வேதியியல் மாற்றங்களால் நிலக்கரியாக மாறும். நிலத்தடி நீரின் அழுத்தத்தால் மேலே வரமுடியாமல் நிலக்கரி படுகையின் மீது படிந்திருப்பதுதான் மீத்தேன் வாயு (Methane Gas)
அதுபோலவே, பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் பூமியில் புதைந்த பொருட்கள் கால மாற்றத்தில் மக்கிப்போய், வேதிமாற்றம் அடைந்து பூமியில் 3 கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள படிம வடிவில் உள்ள அடுக்குப் பாறை இடுக்குகளில் எரிவாயுவாக தங்குகின்றன. இந்த பாறை எரிவாயுதான் ஷேல் வாயு (Shale Gas) என்று வழங்கப்படுகிறது.
பொதுவாக பூமியில் துளைபோட்டு நீரை உள்ளே செலுத்தி அழுத்தத்தை ஏற்படுத்தி இந்த வாயுக்களை வெளியே கொண்டு வரும் முறை பின்பற்றப்படுகிறது. 200 அடி ஆழத்துக்கு துளைகள் ஏற்படுத்தி அதில் வேதிப் பொருட்கள் கலந்த தண்ணீரை அதிக அழுத்தத்தில் செலுத்தி மீத்தேன் வாயு எடுக்கப்படுகிறது.
ஆனால், பூமியில் 15,000 அடி வரை ஆழ்குழாய் துளை ஏற்படுத்தப்பட்டு, பக்கவாட்டில் நான்குபுறமும் குழாய்கள் மூலம் வெடிபொருட்கள் செலுத்தப்பட்டு பாறைகள் பிளக்கப்படும். பின்னர், குழாய் வழியே தண்ணீரும் அபாயகரமான வேதிப்பொருட்களும் செலுத்தப்பட்டு பாறைகள் முழுமையாக உடைக்கப்பட்டு ஷேல் வாயு வெளியே எடுக்கப்படுகிறது.
இந்த முறையில் பாறைகள் பிளக்கப்படுவதை, ஷேல் வாயுவை வெளியே எடுப்பதற்காக தண்ணீர் மூலம் பாறைகள் முழுதாக உடைக்கப்படுவதை தமிழில் நீரியல் முறிவு என்று சொல்கின்றனர். ஆங்கிலத்தில் ஃப்ராக்கிங் (Fracking) என்கிறார்கள். இதுபோன்ற ஃப்ராக்கிங் முறையால் ஏற்படும் ஆபத்துக்களை விளக்கும் இணையதளத்தின் இணைப்பை கீழே கொடுத்திருக்கிறேன்.
http://www.dangersoffracking.com/
அமெரிக்காவிலே ஃப்ராக்கிங் முறையை எதிர்த்து இயக்கமே நடக்கிறது. சுற்றுச்சூழல் பாதிப்பு அடையும் என்று சூற்றுச் சூழல் ஆய்வாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். கிராமப்புற மக்களின் பொருளாதாரம், வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என்று அறிவியலாளர்கள், சுற்றுச் சூழல் நிபுணர்கள் கூறுகின்றனர். அது குறித்த விவரங்களுக்கான இணைப்பு கீழே:
http://www.americansagainstfracking.org/get-the-facts/
வாயுவை எடுப்பதற்காக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதுடன், அபாயகரமான வேதிப்பொருட்களும் பூமிக்குள் செலுத்தப்படுவதால் அந்த நிலமே தரிசாக போய்விடும்.
தமிழகத்தின் காவிரிப்படுகையில் 9 பகுதிகளில் 35 இடங்களில் ஷேல் வாயு பிரித்தெடுக்கும் திட்டத்துக்கு அனுமதி கோரி மத்திய அரசுக்கு ஓ.என்.ஜி.சி. (எண்ணை மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம்) கடிதம் எழுதியுள்ளது.
இந்த அபாயகரமான திட்டம் செயல்படுத்தப்பட்டால் தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் விவசாயமே அழிந்துபோய்விடும். சுற்றுச் சூழல் மாசுபடும். விவசாயம் மட்டுமல்ல, நிலத்தடி நீர் மாசடைந்து குடிநீர் கிடைக்காத அபாயம் ஏற்படும்.
ஏற்கனவே, நிலம் கையகப்படுத்தும் சட்டம் மூலம் விவசாயிகளின் நிலங்களை பறிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. அதற்காக மத்திய அரசால் 3 முறை கொண்டு வரப்பட்ட அவசர சட்டம் கடந்த 31ம் தேதியுடன் காலாவதியாகி விட்ட நிலையில், அவசர சட்டம் மீண்டும் நீட்டிப்பு இல்லை என்றுதான் பிரதமர் சமீபத்தில் வானொலி உரையில் கூறியிருக்கிறார். நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை கைவிடுவதாக அறிவிக்கவில்லை. இதற்கு பீகார், மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் விரைவில் நடக்க உள்ள தேர்தலும் ஒரு காரணம் என்று கூறுகிறார்கள்.
ஏற்கனவே, நஷ்டம், கடன், வறுமை காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். எல்லாருக்கும் நினைவிருக்கலாம். டெல்லியில் கடந்த ஏப்ரல் மாதம் ஆம் ஆத்மி நடத்திய பேரணியில் கஜேந்திர சிங் என்ற விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், விவசாயத்தையே அழிக்கும் வகையில் ஷேல் எரிவாயு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது. இந்த திட்டத்தால் நலன் விளையும் என்றால் உத்தரப் பிரதேசம், குஜராத் போன்ற ‘புண்ணிய பூமி’களில், விவசாய நிலங்களில் முதலில் அதை பரிட்சார்த்த ரீதியில் செயல்படுத்தி பார்க்கட்டுமே. விலங்குகளுக்கு மருந்து கொடுத்து பரிசோதிப்பது போலே, தமிழன் தலையில்தான் கைவைப்பார்கள்.
இது ஏதோ விவசாயிகளை பாதிக்கும் திட்டம் மட்டுமே அல்ல. விவசாயமே அழிந்து விட்டால் நாம் சோற்றுக்கு என்ன செய்வோம்? நம்மையும் பாதிக்கும் திட்டம் இது. கேட்டால், இதுபோன்ற திட்டங்களால் இந்தியாவின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்று அறிவு ஜீவிகள் கூறுகின்றனர்.
ஏன்யா, சோறும் தண்ணியும் இல்லாதபோது கோட்டும் சூட்டும் எதுக்குய்யா?
மண்ணை நேசிக்கும் எந்த ஒரு விவசாயியும் தன் நிலம் அபகரிக்கப்படுவதையோ, தரிசாவதையோ விரும்பமாட்டான்.
தலைவர் நடித்து சுனாமியாய் வசூலை சுருட்டி வெள்ளி விழா கண்ட உரிமைக்குரல் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி நினைவுக்கு வருகிறது. அதில் தலைவரின் குடும்ப சொத்தான நிலத்தை வஞ்சகமாக அபகரிக்க திரு. நம்பியார் முயற்சிப்பார். கடனுக்காக நம்பியார் குடும்பத்திடம் அடமானம் வைத்திருந்த தலைவரின் நிலம் ஏலத்துக்கு வரும். ஏலம் முடிவதற்கு முன்பே தலைவர் கடனை திருப்பிக் கொடுத்தும் நிலம் தனக்குத்தான் சொந்தம் என்று நம்பியார் அடம் பிடிப்பார்.
நெருக்கடிகளுக்கு நடுவே பணத்தை திரட்டி கடைசி விநாடியில் ஏலம் நடக்கும் இடத்துக்கு வந்து, ரேக்ளாவில் இருந்தபடியே நோட்டுக் கட்டை ஏலம் நடத்தும் அதிகாரியின் மேஜை மீது தலைவர் வீசும் ஸ்டைலும் வேகமும் அழகும்...... சொல்ல வார்த்தைகள் இல்லை.
தனக்கு சொந்தமான நிலத்தில் தலைவர் உழும்போது அடியாட்களுடன் வந்து தடுப்பார் நம்பியார். அப்போது, மின்சாரமே மனித உருவெடுத்து வந்ததுபோல சுற்றிச் சுழன்று மோதும் தலைவரின் வேகத்தை என்னென்பது? அந்த சண்டைக்கு முன் உணர்வுபூர்வமாக தலைவர் பேசும் வசனம் பிரபலம்.
தனது உயிரைக் கொடுத்தாவது நிலத்தை காப்பாற்றப் போராடும் விவசாயியின் ஆக்ரோஷம் தலைவரின் நடிப்பிலும் வசனத்திலும் தெரியும். இது ஏதோ, புகழ்ச்சிக்காகவோ உயர்த்தி சொல்ல வேண்டும் என்பதற்காகவோ நான் சொல்லவில்லை என்பதை ஒரே ஒரு உதாரணம் மூலம் விளக்குகிறேன்.
‘ஒரு பிடி மண்ணுக்காக எந்த தியாகத்தையும் செய்யற பரம்பரையில வந்தவன்டா நான்’ என்று சொல்லும்போது, ‘வந்தவன்டா நான்’ என்ற வார்த்தைகளை உச்சரிக்கும்போது நெஞ்சில் வேகமாக தட்டியபடியே சொல்லுவார். முகத்தில் கோபமும் பெருமிதமும் கொப்பளிக்கும். அப்போது வாய்ஸ் பிரேக் ஆகி விட்டு விட்டு வரும். ஆக்ரோஷமாக, வேகமாக நெஞ்சில் தட்டிக் கொண்டால்தான் குரல் இப்படி விட்டு விட்டு வரும். லேசாக தட்டிக் கொண்டால் வராது. அந்த அளவுக்கு உணர்ச்சிபூர்வமாக நடித்துள்ளார் தலைவர்.
‘இந்த மண்ணுல இருந்து என்னை பிரிக்கவே முடியாதுடா. என் ரத்தம் வடிஞ்சா இந்த மண்ணில்தான் கலக்கும். என் உடல் கீழே விழுந்தால் இந்த மண்ணைத்தான் அணைக்கும். என் உயிர் போனாலும் இந்த மண்ணில்தான்டா போகும்’ என்று தலைவர் கூறும்போது கங்கையின் பெருக்கை போன்ற கண்களுடன் கைதட்டலால் அரங்கம் அதிர்ந்துதான் போகும். விவசாயியுடைய ஆக்ரோஷம் மட்டுமல்ல, அந்த காலகட்டத்தில் தன் மீதான கொலை முயற்சிகளுக்கும் தலைவர் பதில் சொல்வது போல இருக்கும்.
டேய், துரைசாமி (நம்பியாரை) என்று அழைத்து வசனத்தை பேசுவார் தலைவர். தனிப்பட்ட வாழ்வில் மட்டுமல்ல, திரைப்படத்திலும் கூட பெரும்பாலும் யாரையும் வாடா, போடா என்று தலைவர் பேசமாட்டார். அடிமைப் பெண்ணில் மனோகரிடம், ஆசைமுகத்தில் நம்பியாரிடம் என்று காட்சிகளை விரல் விட்டு எண்ணி விடலாம். பண்பின் பெட்டகமான தலைவரே ‘டா’ போட்டு பேசுகிறார் என்றால் எதிராளி எவ்வளவு மோசமான குற்றத்தை செய்திருக்க வேண்டும்? அதையும் இந்த ‘டா’ என்ற ஒரு சொல்லிலேயே விளக்கி விடுவார் தலைவர்.
வசனகர்த்தா எழுதிக் கொடுத்ததைத்தானே சொல்கிறார் ? என்று கேட்கலாம். தலைவர் அனுமதியில்லாமல் அவர் படத்தில், அதுவும் அவரே பேசும் வசனத்தை ஒரு வசனகர்த்தா தன்னிச்சையாக எழுத முடியாது. அது சர்வாதிகாரம் அல்ல. படத்தில் எல்லாமே சிறப்பாக வரவேண்டும், தனக்காக படம் பார்க்க வரும் தனது ரசிகர்கள், படத்தை பார்த்து விட்டு முழு திருப்தியும் மகிழ்ச்சியும் அடைய வேண்டும் என்பதில் தலைவருக்கு உள்ள அக்கறையின் வெளிப்பாடு அது.
விவசாயத்தை முடக்கி வாழ்வாதாரத்தையே அழித்துவிடும் திட்டத்துக்கு எதிராக தலைவர் பேசுவது போல இருக்கும் உணர்ச்சிகரமான அந்த வசனத்தை அப்படியே கீழே தருகிறேன்.
--------------------------------------
‘‘எங்க பரம்பரைக்கே சோறு போட்டு வளர்த்த பூமி இது. மானம், மரியாதை உள்ள எவனும் உயிர் போனாலும் தன் நிலத்தை மத்தவங்களுக்கு விட்டுக் கொடுக்க மாட்டான். என் தாய் எனக்கு பாலூட்டி வளர்த்தாங்க. இந்த நிலத்தாய் எனக்கு சோறூட்டி வளர்க்கறாங்கடா. இந்தத் தாயை விட்டுக் கொடுக்கற அளவுக்கு நான் கோழை இல்லடா.
ஒரு பிடி மண்ணுக்காக எந்த தியாகத்தையும் செய்யற பரம்பரையில வந்தவன்டா நான். நூறு என்ன? ஆயிரம் என்ன? லட்சம் பேரை கூட்டி வந்து படை எடுத்தாலும் இந்த மண்ணுலே இருந்து என்னைப் பிரிக்கவே முடியாதுடா. என் ரத்தம் வடிஞ்சா இந்த மண்ணில்தான் கலக்கும். என் உடல் கீழே விழுந்தால் இந்த மண்ணைத்தான் அணைக்கும். என் உயிர் போனாலும் இந்த மண்ணில்தான்டா போகும்.
ஆனா, அந்த நேரத்துல நான் எழுப்பற உரிமைக்குரல் இங்க மட்டுமில்ல, எங்கெங்கே உழைக்கிறவன் இருக்கானோ, எந்தெந்த மண்ணுல அவன் வியர்வைத் துளி விழுதோ, அங்கெல்லாம் என் உரிமைக்குரல் ஒலிச்சுக்கிட்டேதான்டா இருக்கும்.’’
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
well done and congrats
-
14th September 2015, 04:42 AM
#3784
Junior Member
Platinum Hubber
இனிய நண்பர் திரு கலைவேந்தன் சார்
என்னுடைய பதிவின் மூலம் நண்பருக்கு தர்ம சங்கடம் உருவாகுவதை விரும்பவில்லை .உண்மைகள் நமக்கு தெரியும். இத்துடன் திரியில் நடக்கும் விவாதங்களுக்கு முற்று புள்ளி வைத்து ,தொடர்ந்து நம்முடைய திரியின் பயணத்தை தொடர்வோம்
-
14th September 2015, 04:45 AM
#3785
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் அருமையான பதிவுகளை வழங்கி வரும் திரு கோவிந்தராஜ் அவர்களுக்கு பாராட்டுக்கள் . தொடர்ந்து தங்களிடமிருந்து மக்கள் திலகம் ஆவணங்களை எதிர்பார்க்கிறேன்
-
14th September 2015, 04:57 AM
#3786
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகம் எம்ஜிஆர் ''அன்னமிட்ட கை 15.9.1972
இன்று 43 ஆண்டுகள் நிறைவு தினம் .
எம்ஜிஆர், நம்பியார், மனோகர், ஜெயலலிதா, பாரதி, வி.கே. ராமசாமி, நாகேஷ், மனோரமா நடித்திருக்கிறார்கள். கே.வி. மகாதேவன் இசை. வாலி எல்லா பாடல்களையும் எழுதியிருக்கிறார்.
“அன்னமிட்ட கை” எம்ஜிஆரின் தத்துவப் பாட்டுக்களில் ஒன்று. டிஎம்எஸ்ஸின் குரலில் நல்ல உற்சாகம் இருக்கும். பாட்டைக் கேட்டவுடன் வாலி எம்ஜிஆருக்காக எழுதியது என்று சொல்லிவிடலாம்.
“ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா சொல்லு சொல்லு” ஒரு சுமாரான பாட்டு. டிஎம்எஸ் சுசீலா. எம்ஜிஆர் கோட்டு சூட்டு டையுடன் பாடுவார். எம்ஜிஆர் தன் டூயட்டுக்களுக்கு ஒரு ஃபார்முலா வைத்திருந்தார். செட் போட்டு எடுத்தால் ஒன்று கோட்டு சூட்டு டை. இல்லாவிட்டால் ராஜ ராணி உடை. வெளிப்புற படப்பிடிப்பு என்றால் கோட்டு சூட்டு. அப்போதுதான் ரிச்சாக இருக்கும் என்று நினைத்திருக்கிறார்.
“மயங்கிவிட்டேன் உன்னைக் கண்டு” பாரதியும் எம்ஜிஆரும் பாடும் டூயட். டிஎம்எஸ் சுசீலா. எம்ஜிஆர் தன் ரசிகர்களை கவர்வதற்காக ராஜா உடையில் வந்து பாடுவார்.
“அழகுக்கு மறு பெயர் கண்ணா” நல்ல பாட்டு. இந்த ஒரு பாட்டு மட்டும் டிஎம்எஸ் எஸ். ஜானகி குரலில். ஜெ அப்போதெல்லாம் இன்று இருப்பது போல் குண்டாக இல்லை.
“பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளையம்மா” என்றும் ஒரு பாட்டு உண்டு. சுசீலா.
எம்ஜிஆர் நடித்த கடைசி கறுப்பு வெள்ளை படம் என்று ஞாபகம். நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்தது. சில காட்சிகள் எம்ஜிஆர் சுடப்படுவதற்கு முன் எடுக்கப்பட்டவை. அவரது குரல் மாறுபாடு தெரிகிறது. நினைக்கிறேன்.
கதை வழக்கம் போல் முதல் காட்சியிலேயே யூகிக்கக்கூடிய ஒன்றுதான். எம்ஜிஆரும் நம்பியாரும் மாற்றாந்தாய் மக்கள். எம்ஜிஆர் உரிமை உள்ள (இளைய) வாரிசு. அப்பாவின் தவறான பழக்கங்களால் எம்ஜிஆர் அவரை பிரிந்து தாத்தா வீட்டில் வளர்வார். நம்பியார் எங்கோ ஓடிப்போய் வளர்வார். எம்ஜிஆர் எப்படி வளர்ந்திருப்பார், நம்பியார் எப்படி வளர்ந்திருப்பார் என்று உங்களுக்கு தெரியாவிட்டால் நீங்கள் தமிழனே அல்ல. (கலைஞர் terminologyயில் “அவாள்”ஆக கூட இருக்கமுடியாது) வளர்ந்த இருவரும் தற்செயலாக சந்தித்து ஒருவரை ஒருவர் தெரிந்துகொள்வார்கள். தியாகச் சுடரான எம்ஜிஆர் தன் அண்ணனை வாரிசாக நடிக்க சொல்வார். முதலாளியாக எப்போதுமே இருக்க விரும்பும் நம்பியாருக்கு தியாகியான எம்ஜிஆரிடம் கொஞ்சம் பயம் இருக்கும். கைவிடப்பட்ட நம்பியாரின் அம்மா பண்டரிபாய் குருடி. இறந்துபோனதாக கருதப்படும் அப்பா உயிரோடுதான் காடுகளில் சுற்றிக்கொண்டிருப்பார். மனோகரின் சூழ்ச்சி, பாரதியின் ஒரு தலை காதல், நம்பியாரின் பணத்தாசை எல்லாவற்றையும் சமாளித்து ஜெயை காதலித்து எஸ்டேட் தொழிலாளர்களின் தலைவனாகி, பெரியம்மா பண்டரிபாய்க்கு மீண்டும் கண் கொடுத்து, நம்பியாரை திருத்தி அப்பப்பா! புரட்சித் தலைவரால்தான் முடியும்!
பாரதி அழகாக இருக்கிறார். “அவளுக்கென்று ஒரு மனம்” படத்திலும் நன்றாக இருப்பார்.
எம்ஜிஆரின் அப்பாவாக வருபவர் பேர் முத்தையாஅவருடைய குரல் எனக்கு ரொம்ப பிடிக்கும். தமிழில் எல்லாத்துக்கும் பாட்டு இருக்கிறது!
படத்தில் சிம்பாலிக் டயலாக் ஜாஸ்தி. உதாரணத்துக்கு ஒன்று. எம்ஜிஆர் தன்னை காதலிப்பதாக நினைக்கும் பாரதி அடுப்பங்கரையில் கன்னத்தில் கொஞ்சம் கரியோடு இருக்கும் ஜெயிடம் எம்ஜிஆர் தன்னை காதலிப்பதாக சொல்வார். அதை கேட்டவுடன் ஜெ கையில் இருக்கும் பாத்திரத்தை தவறவிட்டுவிடுவார். அப்போது டயலாக்குகள்.
பாரதி: என்னாச்சு?
ஜெ: கை தவறிடுச்சு.
பாரதி: நீ ஜாக்கிரதையா வச்சிருந்திருக்கணும்
ஜெ: ஜாக்கிரதையாகத்தான் இருந்தேன், அப்படியும் தவறிடுச்சு.
பாரதி: பரவாயில்லே, நான் எடுத்துக்கிறேன்.
ஜெ: எனக்கு அடுப்பில் வேலை இருக்கு, அப்புறம் பேசலாம்.
பாரதி: முகத்திலே கரி, துடைச்சுக்கோ!
மொத்தத்தில் எம்ஜிஆர் ரசிகர்களின் படம் .
COURTESY - NET
courtesy - RV - NET.
-
14th September 2015, 06:56 AM
#3787
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
Govindraj Kpr
திரு. கோவிந்தராஜ் அவர்களுக்கு, தங்களின் பதிவுகள் மிகவும் அருமை, தொடர்ந்து பதிவிடுங்கள்.
-
14th September 2015, 07:27 AM
#3788
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
esvee
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் நண்பர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள் .
நமது இதய தெய்வம் மக்கள் திலகம் அவர்களின் திரை உலக சாதனைகள் , அரசியல் சாதனைகள் பற்றி நம் நண்பர்கள் பதிவிட்டு வரும் வேளையில் , கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சில நண்பர்கள் தங்களது அதி மேதாவி தனத்தை எதிர் மறையான வார்த்தகைளை கிண்டலாகவும் , ஆத்திரமான பதிவுகளையும் உடனுக்குடன் பதிவிட்டு சாந்தி அடையும் அவர்களின் உண்மையான நோக்கம்தான் என்ன ? இயக்குனர் ஸ்ரீதரின் கட்டுரைக்கும் , ஆயிரத்தில் ஒருவன் மறு வெளியீடு வெற்றி குறித்த கிண்டலும் , நடிகர் அசோகன் பற்றிய பதிவுகளையும்பதிவிட்டு மகிழும் நண்பர்களுக்கு அவர்கள் அபிமான திரியில் அபிமான நடிகரை பற்றி எழுதவோ அல்லது தங்களது படங்கள் தோல்விகளுக்கான காரணத்தை ஆராய நேரமில்லை என்று எண்ணுகிறேன் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரை உலக சாதனைகள் , அரசியல் வெற்றிகள் உலகமறிந்தது .மக்கள் திலகம் எம்ஜிஆரின் புகழும் பெருமைகளும் இப்புவி உள்ளவரை உலகம் புகழ் .பாடும் . நமது பயணத்தில் சில குறுக்கீடுகள் பற்றி கொள்ளாமல் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் ஆசியோடு நம்முடைய வெற்றி பயணத்தை தொடருவோம் .
நம்நாடு - 1969
1969 தீபாவளி அன்று வந்த படங்களில் முதல் 6 மாதங்களில் அதிக வசூல் பெற்று முதலிடம் வகிப்பது
மக்கள் திலகத்தின் நம்நாடு என்பதை உறுதி செய்யப்பட்டுள்ளது . என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.
விரைவில் மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -16 நிறைவு பெற உள்ளது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம்-17 துவக்கிட நம் இனிய நண்பர் திரு சுஹராம் அவர்களை கேட்டு கொள்கிறேன் .
.
மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம்-17 தொடங்க இருக்கும் திரு. சுஹராம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
-
14th September 2015, 07:32 AM
#3789
Junior Member
Platinum Hubber
-
14th September 2015, 07:33 AM
#3790
Junior Member
Seasoned Hubber
உதய சூரியனின் பார்வையிலே எம்.ஜி.ஆர்!

‘அன்பே வா’ படத் தில் எம்.ஜி.ஆர் பெரிய பணக் காரர். வெவ்வேறு நாடு களுக்குப் பயணித்துக் கொண்டே இருப்பது என்று பிஸியாகவே இருப்பார். தொடர்ந்து வேலை செய்து களைத்துப்போனதால் சிம்லாவில் ஜே.பி. பங்களா என்கிற பெயரில் இருக்கும் தனது பங்களாவுக்கு ஓய்வு எடுக்கச் செல்வார். அந்த பங்களாவில் வேலை பார்க்கும் நாகேஷ், அவரது மனைவி மனோரமா, மாமனார் பி.டி.சம்பந்தத்துடன் சேர்ந்து அந்த பங்களாவை டி.ஆர்.ராமசந்திரன், முத்துலட்சுமி, சரோஜாதேவிக்கு வாடகைக்கு விட்டிருப்பார்கள்.
இந்த விஷயம் எம்.ஜிஆருக்குத் தெரிய வரும். எம்.ஜி.ஆரின் காலில் மனோரமா விழுந்து, ‘‘முதலாளி மன்னிச்சிருங்க’’ என்று மன்னிப்பு கேட்பார். ‘‘சரி, நான்தான் இந்த பங்களாவுக்கு முதலாளி என்று யாரிடமும் சொல்லக் கூடாது’’ என்று மனோரமாவிடம் சத்தியம் வாங்கிக்கொள்வதுடன், நாகேஷிடம் பணத்தைக் கொடுத்து தானும் அங்கே தங்குவதற்கு சம்மதம் வாங்கியிருப்பார் எம்.ஜி.ஆர். சரோஜா தேவி மேல் எம்.ஜி.ஆருக்கு ஒரு கண் விழுந்ததுதான் இதற்குக் காரணம். எம்.ஜி.ஆரும் நாகேஷும் சந்தித்துப் பேசும்போதெல்லாம் மனோரமா பதறு வார். அந்தப் படத்தில் நகைச்சுவை காட்சி அனைத்தும் சிறப்பாக அமைந்திருக்கும்.
படத்தில் எம்.ஜி.ஆருக்கும் சரோஜாதேவிக்கும் இடையில் ‘சண்டையில்தான்’ காதல் பூக்கும். ‘லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ்’ பாடலின்போது மூன்று, நான்கு லவ் பேர்ட்ஸ் களைக் கூண்டில் வைத்து ஷூட் செய்தோம். அந்தப் பாட்டுக்கு சரோஜாதேவி ஆடும்போது எம்.ஜி.ஆர் மறைந்திருந்து கேலி செய்து அபிநயித்து ஆடுவார். அந்த ஷூட்டிங் சமயத்தில் மூர் மார்க்கெட்டுக்குச் சென்று லவ் பேர்ட்ஸ் வாங்கி வருவதற்கு அண்ணாமலை என்ற உதவியாளரை நியமித்திருந்தோம். அவருடைய வேலையே லவ் பேர்ட்ஸ் வாங்கி வருவதுதான். அதனால் அவர் பெயரே ‘லவ் பேர்ட்ஸ்’ அண்ணாமலை என்றாகிவிட்டது.
சரோஜாதேவிக்கு அப்பாவாக நடித்த டி.ஆர்.ராமசந்திரன் நிஜத்தில் சைவக் காரர். ஒரு காட்சியில் சிக்கன் ரோஸ்ட் சாப்பிடுவதுபோல காட்சி எடுக்க வேண் டும். சிக்கனை பார்த்தாலே அவருக்கு வாந்தி வந்தது. இந்த செய்தி ஏவி.எம் செட்டியாருடைய காதுக்குப் போயிற்று. அதற்கு அவர் ‘‘பேக்கரியில் சிக்கன் மாதிரி கேக் செய்யச் சொல்லி, அதை சாப்பிட வைத்து எடுக்கலாமே?’’ என்றார். சிக்கன்ரோஸ்ட் போலவே கேக் செய்து அவரை சாப்பிட வைத்தோம்.
எம்.ஜி.ஆர். அவர்கள் சிம்லாவைப் பார்த்து ரசித்து பாடும் விதமாக உரு வானதுதான் ‘புதிய வானம் புதிய பூமி’ பாடல். இந்தப் பாட்டில் கவிஞர் வாலி, ‘உதய சூரியனின் பார்வையிலே…’ என்று ஒரு இடத்தில் எழுதியிருந்தார். அதை பார்த்த செட்டியார், ‘‘சென்சாரில் வெட்டி விடுவார்களே?’’ என்றார். எம்.ஜி.ஆர் அவர்கள் இப்படி பாடினால்தான் கைதட் டல் விழும்’’ என்று சமாதானம் செய்தார் வாலி. அப்படியே படமாக்கப்பட்டது.
ஆனால். செட்டியார் சொன்னது போலவே சென்சாரில் அந்த வரியை நீக்க வேண்டும் என்று கூறிவிட்டார்கள். அதன் பிறகு ‘உதய சூரியனின் பார்வை யிலே’ என்ற வார்த்தைக்கு பதிலாக ‘புதிய சூரியனின் பார்வையிலே’ என்று வார்த்தையை மாற்றினோம். படத்தில் மட்டும் ‘புதிய சூரியனின் பார்வையிலே’ என்றுதான் இருக்கும். ஆடியோவில்தான் ‘உதய சூரியனின் பார்வையிலே’ என்று இருக்கும். இதெல்லாம் சென்சார் லீலைகள்.
‘‘உதய சூரியன் என்று வரும் இடத்தில் எம்.ஜி.ஆரை குன்றின் உச்சியில் ஏறி நிற்க வைத்து சூரியனையும் எம்.ஜி.ஆரை யும் இணைத்து ஷாட் எடுத்தால் நன்றாக இருக்கும்’’ என்று இயக்குநர் திருலோக சந்தர், பி.என்.சுந்தரத்திடம் சொல்ல, ‘‘எம்.ஜி.ஆரால் ஏற முடியுமா?’’ என்று யோசித்துக் கொண்டிருந்தார்கள்.
கொஞ்ச நேரத்தில் ‘‘டைரக்டர் சார்..!’’ என்று எங்கிருந்தோ ஒரு குரல் கேட்டது. எல்லோரும் குரல் வந்த திசையில் பார்த்தோம். குன்று உச்சியில் எம்.ஜி.ஆர் அவர்கள் நின்றுகொண்டிருந்தார். படக் குழுவே அவரைப் பார்த்து திகைக்க ‘‘மலை மேல என்னால ஏற முடியுமான்னு நீங்க பேசிட்டிருந்தீங்க… நான் ஏறியே வந்துட்டேன்’’ என்றார் எம்.ஜி.ஆர் புன் சிரிப்போடு. அதுதான் எம்.ஜி.ஆர்!
இயக்குநர் நினைத்தது போலவே அந்தக் காட்சியை படமாக்கினோம். துள்ளல் இசையாக அமைந்த அந்தப் பாடல் முழுக்க எம்.ஜி.ஆர் அவர்கள் ஓடிக் கொண்டே இருப்பார். டி.என்.சுந்தரத்தின் ஒளிப்பதிவில் சிம்லாவின் அந்த அழகும், அந்த மனிதர்களும், அந்தக் குழந்தைகளும் அந்த பாட்டில் வலம் வருவார்கள்.
‘புதிய வானம் புதிய பூமி…. எங்கும் பனி மழை பொழிகிறது’என்ற வரிகள் வரும் இடத்தில் பனி மழையோடு காட்சி எடுக்க வேண்டும் என்று விரும்பினோம். அப்படி ஒரு தருணம் வாய்க்க இரண்டு நாட்கள் காத்திருந்தோம். பனி மழை பெய்யவே இல்லை. சிம்லாவில் இருந்து டெல்லி வந்து விமானத்தில் சென்னைக் குப் புறப்பட்டோம்.
விமானம் பறந்தது. எம்.ஜி.ஆர் அவர்கள் அங்கு கொடுக்கப் பட்ட ஆங்கில செய்தித்தாளை படித்து விட்டு, ‘‘மிஸ் பண்ணிட்டோம். ஸ்நோ பால்ஸ் இன் சிம்லானு செய்தி வந் திருக்கு’’ என்று பத்திரிகையைக் காட்டி யவர், ‘‘டெல்லியில் விமானம் ஏறுவதற்கு முன்பு இந்த நாளிதழ் கையில் கிடைத் திருந்தால், சிம்லாவுக்குத் திரும்பிப் போய் பனி மழையில் அந்தப் பாட்டை எடுத்திருக்கலாம்’’ என்றார். எம்.ஜி.ஆரின் ஆர்வமும், ஆதங்கமும் அதில் தெரிந்தது.
படத்தில் எம்.ஜி.ஆர்- சரோஜாதேவி ‘காதல் சண்டை’ உச்ச கட்டத்தை எட்டும். சரோஜாதேவி அங்கு வந்த கல்லூரி மாணவ-மாணவிகளுடன் சேர்ந்துக் கொண்டு எம்.ஜி.ஆரை கேலி செய்து நடனம் ஆடுவார். அதற்கு எம்.ஜி.ஆர் அவர்கள் சரியான பதிலடி கொடுக்க வேண்டும். சரோஜாதேவியின் மாணவக் குழுவுக்குத் தலைமை வகித்தவர் நடன இயக்குநர் சோப்ராவின் உதவியாளர் ரத்தன்குமார். அவர் நடனம் ஆடுவதில் புலி. அந்த ‘புலி’ ஆட்டத்துக்கு சவால்விட்டு எம்.ஜி.ஆரால் எப்படி ஆட முடிந்தது?
Courtesy : The Hindu
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks