-
15th September 2015, 03:00 PM
#1
Senior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 2 Thanks, 5 Likes
-
15th September 2015 03:00 PM
# ADS
Circuit advertisement
-
15th September 2015, 03:16 PM
#2
Senior Member
Diamond Hubber
'மணிப்பயல்' படத்திலிருந்து ஒரு அருமையான பாடல். மாஸ்டர் சேகர் பாடும் பாடல். இன்று அறிஞர் அண்ணா பிறந்த தினம். அதையொட்டி இந்தப் பாடல். (இதே படத்தில் 'காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தான்' என்று அண்ணா புகழ் பாடும் இன்னொரு பாடலும் உண்டு)
நான் உள்ளே இருந்து வெளியே வந்தேன் உலகம் தெரிஞ்சுதடா
அட நல்லது கெட்டது நாளும் எனக்கு நல்ல்லாப் புரிஞ்சுதடா
அம்மா வயித்துல சும்மாக் கிடந்தேன் ஆபத்து இல்லையடா
அட பத்தாம் மாசம் பெத்துப் போட்டா ஆயிரம் தொல்லையடா
நான் அண்ணா போலே
அறிஞர் அண்ணா போலே பண்புடையோர்க்கு
செருப்பாய் இருப்பேன்டா
இங்கு அடுத்தவர் குடியை கெடுத்திடும் பேர்க்கு
நெருப்பாய் இருப்பேன்டா
சின்னாவுக்கு மட்டும் ஒரு கேள்வி. சேகருக்கு பாடலைப் பாடும் பின்னணிப் பாடகரோ பாடகியோ அது யார்?
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
15th September 2015, 03:20 PM
#3
Senior Member
Diamond Hubber
எங்கள் தமிழன்னை எத்தனையோ தவமிருந்து
திங்களாய் செங்கதிராய்
திருநாட்டின் ஒளி விளக்காய்
வள்ளுவன் குரல் போல
வடிவமோ சிறிதாக
உள்ளமோ இந்த உலகினும் பெரிதாக
காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தான்
கொண்ட கருணையினால் எங்கள் நெஞ்சில் நிறைந்தான்
காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தான்
கொண்ட கருணையினால் எங்கள் நெஞ்சில் நிறைந்தான்
அண்ணாவென்றேல்லோரும் அழைக்க வந்தார்
ஆயிரம் தலைமுறை தழைக்க வந்தார்
அண்ணாவென்றேல்லோரும் அழைக்க வந்தார்
ஆயிரம் தலைமுறை தழைக்க வந்தார்
அண்ணா அண்ணா அண்ணா
எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா
அண்ணா அண்ணா அண்ணா
எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா
எதையும் தாங்கும் இதயம் கொண்டு
தன்னை எதிர்ப்பவர் மீதும் கனிவு கொண்டு
எதையும் தாங்கும் இதயம் கொண்டு
தன்னை எதிர்ப்பவர் மீதும் கனிவு கொண்டு
வைதவர் யாவரும் வாழட்டும் என்றே
வாழ்த்திய இதயம் அதுவல்லவா
அது வள்ளுவன் காட்டிய வழியல்லவா
மாற்றான் தோட்டது மல்லிகைக்கும்
நல்ல மனம் உண்டு என்றே சொல்லியவர்
மாற்றான் தோட்டது மல்லிகைக்கும்
நல்ல மனம் உண்டு என்றே சொல்லியவர்
கடமை கண்ணியம் கட்டுப்பாடுதான்
தாரக மந்திரம் ஆக்கியவர்
நம் தாழ்வுகள் எல்லாம் போக்கியவர்
அண்ணா அண்ணா அண்ணா
எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா
மானத்தை காத்திடும் நெசவாளர்
அந்த மக்களின் கண்ணீர்தனை பார்த்தார்
நாடெங்கும் துணிகளை தோள்களில் சுமந்து
நலிந்திடும் ஏழைக்கு வாழ்வளித்தார்
மக்கள் நலம் பெறவே ஒரு வழி வகுத்தார்
அண்ணா அண்ணா அண்ணா
எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா
ஏழைகள் சிரித்திட அரசமைத்தார்
அதில் இறைவனை காண்போம் என உரைத்தார்
எரிந்திடும் குடிசையில் வருந்திடுவோர்ற்கு
எரியா வீடுகள் அமைத்தளித்தார்
அங்கு எரியும் விளக்காய் அவர் இருந்தார்
சென்னை என்று ஒரு பெயர் மாற்றி
அதை செந்தமிழ் நாடென பெயர் சூட்டி
சென்னை என்று ஒரு பெயர் மாற்றி
அதை செந்தமிழ் நாடென பெயர் சூட்டி
பாரதி பாடிய பைந்தமிழ் நாட்டை
பாரினில் மீண்டும் காட்டியவர்
நம் பழிகள் அனைத்தையும் மாற்றியவர்
எல்லோர்க்கும் அண்ணன் அவன்
இல்லார்க்கு செல்வ மகன்
நல்லோர்கள் உள்ளம் எல்லாம்
நாள்தோறும் வாழ்பவன்
சொன்னால் மனம் பதைக்கும்
சொல்லவோ வாய் பதைக்கும்
தன்னந் தனிமையிலே
தானுறங்க போனானோ
வாங்க கடல் அலையே
வாய் மூடி தூங்கும் எங்கள்
தங்கத் தமிழ் மகனை
தாலாட்டி பாடினையோ
பாடு நீ பாடு
பைந்தமிழர் நாடென்று
ஓடி உழைத்த மகன்
உறங்கட்டும் அமைதியிலே
ஓடி உழைத்த மகன்
உறங்கட்டும் அமைதியிலே
அமைதியிலே
அண்ணா அண்ணா அண்ணா
எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா
காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தான்
கொண்ட கருணையினால் எங்கள் நெஞ்சில் நிறைந்தான்
அண்ணாவென்றேல்லோரும் அழைக்க வந்தார்
ஆயிரம் தலைமுறை தழைக்க வந்தார்
அண்ணா அண்ணா அண்ணா
எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா
Last edited by vasudevan31355; 15th September 2015 at 03:26 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
Bookmarks