-
15th September 2015, 03:16 PM
#3871
Senior Member
Diamond Hubber
'மணிப்பயல்' படத்திலிருந்து ஒரு அருமையான பாடல். மாஸ்டர் சேகர் பாடும் பாடல். இன்று அறிஞர் அண்ணா பிறந்த தினம். அதையொட்டி இந்தப் பாடல். (இதே படத்தில் 'காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தான்' என்று அண்ணா புகழ் பாடும் இன்னொரு பாடலும் உண்டு)
நான் உள்ளே இருந்து வெளியே வந்தேன் உலகம் தெரிஞ்சுதடா
அட நல்லது கெட்டது நாளும் எனக்கு நல்ல்லாப் புரிஞ்சுதடா
அம்மா வயித்துல சும்மாக் கிடந்தேன் ஆபத்து இல்லையடா
அட பத்தாம் மாசம் பெத்துப் போட்டா ஆயிரம் தொல்லையடா
நான் அண்ணா போலே
அறிஞர் அண்ணா போலே பண்புடையோர்க்கு
செருப்பாய் இருப்பேன்டா
இங்கு அடுத்தவர் குடியை கெடுத்திடும் பேர்க்கு
நெருப்பாய் இருப்பேன்டா
சின்னாவுக்கு மட்டும் ஒரு கேள்வி. சேகருக்கு பாடலைப் பாடும் பின்னணிப் பாடகரோ பாடகியோ அது யார்?
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
15th September 2015 03:16 PM
# ADS
Circuit advertisement
-
15th September 2015, 03:19 PM
#3872
Senior Member
Senior Hubber
//சின்னாவுக்கு மட்டும் ஒரு கேள்வி. சேகருக்கு பாடலைப் பாடும் பின்னணிப் பாடகரோ பாடகியோ அது யார்?// அன்பின் வாசு, ஜெ.சு பாட்டும் இந்தப் பாட்டும் ஈவ்னிங்க் தான் பார்த்துச் சொல்வேன்..ஷமிக்கணும்..
ஜெ.சு இரு நிலவுகள்ல நன்னாயிட்டு இருந்ததா நினைவு இல்லியோ..வேறென்ன குட் ஜெ.சு. மூவீஸ்..
-
15th September 2015, 03:20 PM
#3873
Senior Member
Diamond Hubber
எங்கள் தமிழன்னை எத்தனையோ தவமிருந்து
திங்களாய் செங்கதிராய்
திருநாட்டின் ஒளி விளக்காய்
வள்ளுவன் குரல் போல
வடிவமோ சிறிதாக
உள்ளமோ இந்த உலகினும் பெரிதாக
காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தான்
கொண்ட கருணையினால் எங்கள் நெஞ்சில் நிறைந்தான்
காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தான்
கொண்ட கருணையினால் எங்கள் நெஞ்சில் நிறைந்தான்
அண்ணாவென்றேல்லோரும் அழைக்க வந்தார்
ஆயிரம் தலைமுறை தழைக்க வந்தார்
அண்ணாவென்றேல்லோரும் அழைக்க வந்தார்
ஆயிரம் தலைமுறை தழைக்க வந்தார்
அண்ணா அண்ணா அண்ணா
எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா
அண்ணா அண்ணா அண்ணா
எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா
எதையும் தாங்கும் இதயம் கொண்டு
தன்னை எதிர்ப்பவர் மீதும் கனிவு கொண்டு
எதையும் தாங்கும் இதயம் கொண்டு
தன்னை எதிர்ப்பவர் மீதும் கனிவு கொண்டு
வைதவர் யாவரும் வாழட்டும் என்றே
வாழ்த்திய இதயம் அதுவல்லவா
அது வள்ளுவன் காட்டிய வழியல்லவா
மாற்றான் தோட்டது மல்லிகைக்கும்
நல்ல மனம் உண்டு என்றே சொல்லியவர்
மாற்றான் தோட்டது மல்லிகைக்கும்
நல்ல மனம் உண்டு என்றே சொல்லியவர்
கடமை கண்ணியம் கட்டுப்பாடுதான்
தாரக மந்திரம் ஆக்கியவர்
நம் தாழ்வுகள் எல்லாம் போக்கியவர்
அண்ணா அண்ணா அண்ணா
எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா
மானத்தை காத்திடும் நெசவாளர்
அந்த மக்களின் கண்ணீர்தனை பார்த்தார்
நாடெங்கும் துணிகளை தோள்களில் சுமந்து
நலிந்திடும் ஏழைக்கு வாழ்வளித்தார்
மக்கள் நலம் பெறவே ஒரு வழி வகுத்தார்
அண்ணா அண்ணா அண்ணா
எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா
ஏழைகள் சிரித்திட அரசமைத்தார்
அதில் இறைவனை காண்போம் என உரைத்தார்
எரிந்திடும் குடிசையில் வருந்திடுவோர்ற்கு
எரியா வீடுகள் அமைத்தளித்தார்
அங்கு எரியும் விளக்காய் அவர் இருந்தார்
சென்னை என்று ஒரு பெயர் மாற்றி
அதை செந்தமிழ் நாடென பெயர் சூட்டி
சென்னை என்று ஒரு பெயர் மாற்றி
அதை செந்தமிழ் நாடென பெயர் சூட்டி
பாரதி பாடிய பைந்தமிழ் நாட்டை
பாரினில் மீண்டும் காட்டியவர்
நம் பழிகள் அனைத்தையும் மாற்றியவர்
எல்லோர்க்கும் அண்ணன் அவன்
இல்லார்க்கு செல்வ மகன்
நல்லோர்கள் உள்ளம் எல்லாம்
நாள்தோறும் வாழ்பவன்
சொன்னால் மனம் பதைக்கும்
சொல்லவோ வாய் பதைக்கும்
தன்னந் தனிமையிலே
தானுறங்க போனானோ
வாங்க கடல் அலையே
வாய் மூடி தூங்கும் எங்கள்
தங்கத் தமிழ் மகனை
தாலாட்டி பாடினையோ
பாடு நீ பாடு
பைந்தமிழர் நாடென்று
ஓடி உழைத்த மகன்
உறங்கட்டும் அமைதியிலே
ஓடி உழைத்த மகன்
உறங்கட்டும் அமைதியிலே
அமைதியிலே
அண்ணா அண்ணா அண்ணா
எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா
காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தான்
கொண்ட கருணையினால் எங்கள் நெஞ்சில் நிறைந்தான்
அண்ணாவென்றேல்லோரும் அழைக்க வந்தார்
ஆயிரம் தலைமுறை தழைக்க வந்தார்
அண்ணா அண்ணா அண்ணா
எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா
Last edited by vasudevan31355; 15th September 2015 at 03:26 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
15th September 2015, 03:22 PM
#3874
Senior Member
Senior Hubber
//நிழலுருவத்தோடு நிற்கும் இந்தத் 'திருடனி'ன் போஸை எவரால் மறந்து விட முடியும்? எவரால் இப்படியெல்லாம் நினைத்துப் பார்க்க இயலும்? (என்னுடைய சேமிப்பிலிருந்து) // குரு.. இந்த நீலவானம் கடைசி ஷாட் பொம்மையோட போவாகளே ந.தி.அதுல நிழல் வருமா என்ன..
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
15th September 2015, 03:23 PM
#3875
Senior Member
Senior Hubber
//காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தான்
கொண்ட கருணையினால் எங்கள் நெஞ்சில் நிறைந்தான்// இந்த ப்பாட்டு..சின்ன வயதில் வீட்டின் முக்கில் ஒவ்வொரு மீட்டிங்கின் போதும் போடுவார்கள்.. ரொம்ப நாளைக்கு இது கட்சிப் பாடல் என்றே எண்ணியிருந்தேன்.
-
15th September 2015, 03:36 PM
#3876
Senior Member
Diamond Hubber
Originally Posted by
chinnakkannan
//நிழலுருவத்தோடு நிற்கும் இந்தத் 'திருடனி'ன் போஸை எவரால் மறந்து விட முடியும்? எவரால் இப்படியெல்லாம் நினைத்துப் பார்க்க இயலும்? (என்னுடைய சேமிப்பிலிருந்து) // குரு.. இந்த நீலவானம் கடைசி ஷாட் பொம்மையோட போவாகளே ந.தி.அதுல நிழல் வருமா என்ன..
இல்லை சிஷ்யா! வராது. ஏர்போர்ட் ரன்வே போல இருக்கும் ரோட்டில் நடிகர் திலகம் சிறு புள்ளியாய் மறையும் வரை நிழல் இருக்காது. ஆனால் அதற்கு முன் சகஸ்ரநாமத்திடம் பேசி விட்டு செல்லும்போது அந்த இருட்டில் விளக்கின் வெளிச்சம் இவர் மீது மட்டும் கவிழ்ந்து பட, அந்த பொம்மையை ஏந்திக் கொண்டு இவர் செல்லும்போது அப்போது நிழலுருவம் தெரியும். பார்க்கரீயளா?
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
15th September 2015, 03:44 PM
#3877
Senior Member
Senior Hubber
nice vasu..ரசிகர் என்றால் நீரல்லவோ ரசிகர்.. ந.தி. முதல் இயற்கை நதி வரை என்று உங்களை வைத்தே நீங்கள் ரசிப்பதை வைத்தே கட்டுரைத் தொடர் எழுதலாம் போல இருக்கே.. தாங்க்ஸ்..ஃபடக் ஃபடக் நு பக்கெட் கொடுக்கற வேகத்தைப் பார்த்தா பாக்கெட்லயே வச்சுருக்கிறீர் பக்கெட்ஸ்போல இருக்கே
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
sss liked this post
-
15th September 2015, 03:45 PM
#3878
Senior Member
Senior Hubber
ஆனா சுபாஷிணி மேட்டர் இன்னும் சொல்லவில்லை..சொல்லாமல் ஊருக்குப் போய்விட்டு வந்த பிறகும் கூட வாயைத் திறக்கவில்லை என இந்த சிஷ்யனுக்கு வருத்தம் என ஆன்றோர்கள் சொல்வார்கள் பிற்காலத்தில்! (ஹப்ப்ப்பா எவ்ளோ காம்ப்ளிகேட்டட் வாக்கியம்!)
-
15th September 2015, 04:24 PM
#3879
Senior Member
Seasoned Hubber
(ஹப்ப்ப்பா எவ்ளோ காம்ப்ளிகேட்டட் வாக்கியம்!)
இதை விட ஆயிரம் மடங்கு காம்ப்ளிகேடட் வாக்கியங்களெல்லாம் சட்டசபையிலேயே பேசியாச்சாக்கும்... இதற்கு அந்த அண்ணாவே சாட்சியாக்கும்...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
15th September 2015, 04:27 PM
#3880
Senior Member
Seasoned Hubber
இத்தனை சிறிய மனிதனின் தலையில் எத்தனை சுமைகளடா..
இந்த வரிகளின் போது சுற்றிலும் நிழல் கப்பி, ந.தி.யை மட்டும் காமிரா ஃபோகஸ் பண்ணும்.
வாசு சார்.. என்ன அருமையான ஷாட்.. தியேட்டர் ரெண்டாயிடுமே..
ஷேடோ ஃபோகஸில் கை தட்டல் வாங்கியவரும் நம்ம தலைவராச்சே.. எதைத் தான் விட்டு வைத்தார்...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 5 Likes
Bookmarks