-
22nd September 2015, 07:43 PM
#171
Junior Member
Diamond Hubber
படத்தின் பெயர் சொல்ல இன்று வரை நிலைத்து ரசிக்க வைக்கும் பாடல்.முதல் இரண்டுவரிகளைமீண்டும் மீண்டும் ரீவைண்ட் செய்து கேட்டுக் கொண்டே இருக்கலாம்.பாலாவின் தேன் மதுரக்குரல் மற்ற மெலடிகளை விட இதில் குழைவு அதிகம்.
பொதுவாக சந்தோசம்சொன்னால்தான் சுகம்.ஆனால் இதில் சோகம் சொல்வதும் இதம் என்பதை பாலு பாடும்போது மயங்க வைக்கிறது.
இளையராஜா +பாலு*பிரபு கூட்டணியில் மற்றும் ஒரு சூப்பர்ஹிட் பாடல்.இன்றைய இரவு நேர தாலாட்டாக வைத்துக் கொள்ளுங்கள்.
நிலவொன்றுகண்டேன் என் ஜன்னலில்
நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்
கனவொன்று கண்டேன் உன் கண்களில்
கரைகின்ற கண் மை
அது சொல்லும் உண்மை
(நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்)
கண்ணீரின் ஈரம் சுடுகின்ற நேரம்
பனித்தோட்டம் யாவும் அனலாக மாறும்
சோகம் சொன்னால் உன் பாரம் தீரும்
பூவுக்கு வாய்ப்பூட்டு
என் சோகம் நீ மாற்று
என் வாழ்விலே தீபம் ஏற்று
(நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்)
நான் பார்ப்பதெல்லாம் உன் பார்வைதானே
நான் சொல்வதெல்லாம் உன் வார்த்தைதானே
உடல்கள் வேறு உயிர் ஒன்று தானே
நான் இங்கு நானல்ல
என் துன்பம் யார் சொல்ல
என் தெய்வமே நீ பெண்ணல்ல
(நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்)
Nilavondru கண்டேன் - எஸ்.பி.பி. - ஜானகி -. Kairaa:
படம்:கைராசிக்காரன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி
-
Post Thanks / Like - 0 Thanks, 6 Likes
-
22nd September 2015 07:43 PM
# ADS
Circuit advertisement
-
22nd September 2015, 08:22 PM
#172
Senior Member
Senior Hubber
ஹச்சோ இந்த ஆட்டைக்கே வரலை ராகவேந்திரா சார்.. இரண்டாம் போட்டோவும் இயற்கையாவே இருக்கு சரியா
அந்த என்.சி.சி மாணவிகளின் விளையாடும் போஸ்.
இயற்கையான நடிப்பு தான்.. நான் சொன்னது முதல் போட்டோ நேச்சர் பற்றித்தான்..
ஒரு நகைச்சுவைக்காகத் தான் சொன்னேன்..
இரண்டாவது பாரா என்னை மிகவும் வேதனைப் படுத்திவிட்டது..ந.திக்கு இயற்கையாக நடிக்கத் தெரியாதா..அப்படிச் சொல்பவர்களை எல்லாம் ஏன் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் ராகவேந்தர் சார்.. அவரைப் பற்றி உங்களுக்கு நிறையத் தெரியும்.. எனக்கு ஒரு தம்மாத்தூண்டு ரசிகன் என்ற முறையில் அவரது மேக்ஸிமம் படங்களைப் பார்த்தவன் என்ற முறையில் நன்றாகவே தெரியும்....எனில் மற்றவர் சொல்வதைக் கேட்டு வருத்தப் பட வேண்டிய அவசியமில்லை..அதற்காக சண்டை போட எனக்குத் தெரியாது..உள்ளுக்குள் வைத்துப் புழுங்கவும் மாட்டேன்.. ஐ வில் இக்னோர் தெம்..
வேறென்ன சொல்வது என எனக்குத் தெரியவில்லை..
Last edited by chinnakkannan; 22nd September 2015 at 08:31 PM.
-
22nd September 2015, 08:54 PM
#173
Senior Member
Seasoned Hubber
சி.க. சார்
நான் அதையெல்லாம் சட்டை செய்பவனே இல்லை. பொதுவான ஒரு பேச்சை சுட்டிக்காட்டினேன்.
மற்றபடி மனம் நோகும் விஷயமெல்லாம் ஏதுமில்லை. ஸோ.. கூல்....
இதோ பாருங்கள் உங்கள் பேர், நம்ம வாசு சார் பேர் எல்லாம் நடிகர் திலகம் சொல்கிறார். கேட்டு ஆனந்தப்படுங்கள்...
பாடகர் திலகத்தின் உன்னதமான குரலில், மெல்லிசை மன்னரின் சூழலுக்கேற்ற மெட்டு மற்றும் பின்னணி இசையில், காலத்தை வென்று நிற்கும் சிறந்த பாடல். என்ன ஸ்டைல்.. தலைவர் நிற்பது, நடப்பது எல்லாமே இந்தப் பாட்டில் நம்மை கட்டிப்போட்டு விடும்.
குறிப்பாக அந்த வரி... குயில் இட்ட முட்டை என்று காக்கைக்குத் தெரியும், அது கூவும் போதும் தாவும் போதும் யாருக்கும் புரியும்..
இந்த வரிகளின் போது கை விரல்களாலேயே அதைப் பற்றிச் சுட்டிக்காட்டும் பாவனை..
ஆஹா... தமிழகம் பெற்ற தவப்புதல்வனல்லவா தலைவா நீ...எனக் கூவத் தோன்றும்.
எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
ஒரு மலரும் நினைவு.. மீள் பதிவாகக் கூட வைத்துக்கொள்ளலாம்.
இந்தப் படம் 1978ல் சென்னை சாந்தியில் வெளியான போது ந.தி.யின் படப்பட்டியலை எழுதி மாடியில் லௌஞ்சில் வைத்திருந்தேன். அதைப் பற்றிய செய்திக்குறிப்பு, செப்டம்பர் 1978ல் வெளிவந்த ஆனந்த விகடன் துணுக்கு ஸ்பெஷலில் மூன்றாம் பக்கத்தில் இடம் பெற்றது, மறக்க முடியாத விஷயம்.
Last edited by RAGHAVENDRA; 22nd September 2015 at 08:58 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
22nd September 2015, 11:10 PM
#174
Senior Member
Diamond Hubber
கிருஷ்ணா சார்!
உங்களுக்காக சின்னா சார்பில் என்னுடைய பதில் இயற்கை போட்டோ. மோகன்லாலைப் பார்த்தால் கொஞ்சம் பத்திகிட்டு எரியுதுதான்.
ஆனால் கூட இருப்பவ்களைப் பார்த்ததும் மனம் சாந்தியடைஞ்சிடுது. விழியோரம் சில நேரம் கனவுகள் வருமோ நாயகியைப் பாருங்கள். என்னமாய் காமெரா ஸ்டேன்டை பிடித்துக் கொண்டு நிற்கிறார்! எங்கள் நெய்வேலியில் தெருவில் கடை போட்டு சேலை விற்ற மாதுரியா இவர்! நம்பவே முடியல. சின்னா வேற நிக்கும் பிகர்களைப் பற்றி விவரம் கேட்பதற்குள் நான் ஓடியே போய் விடுகிறேன்.
Last edited by vasudevan31355; 22nd September 2015 at 11:13 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
22nd September 2015, 11:14 PM
#175
Senior Member
Diamond Hubber
ஹைய்யா ஜாலி! நாளை மறுநாள் நம் செந்தில் சாரை பார்க்கப் போகிறேனே! முடிந்தால் செந்திவேல் சாரையும். அப்புறம் ராகுல்ராம்.
-
22nd September 2015, 11:16 PM
#176
Senior Member
Diamond Hubber
சிவனேன்னு முழிக்கிற இந்தக் குழந்தைங்க யாருங்கோ?

-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
23rd September 2015, 04:11 AM
#177
Senior Member
Diamond Hubber
முதல் போட்டோவில் இருப்பது மார்க்கண்டேயனின் வாரிசுகள்... இரண்டாவதில் பெருசு ஈயடிக்கும் வில்லன் போல தெரிகிறது. சின்னது யாரோ ? கன்னட வாரிசா ?
-
23rd September 2015, 05:30 AM
#178
Senior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
23rd September 2015, 06:22 AM
#179
Senior Member
Veteran Hubber
Swim and sing
From ondru pattaal uNdu vaazhvu
sala sala raagathile........
Lyrics: Pattukkottai KalyaNasundaram
Reminds of my summers wading in Vettar river near my ancestral village !
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
23rd September 2015, 07:44 AM
#180
Junior Member
Diamond Hubber

Originally Posted by
vasudevan31355
ஹைய்யா ஜாலி! நாளை மறுநாள் நம் செந்தில் சாரை பார்க்கப் போகிறேனே! முடிந்தால் செந்திவேல் சாரையும். அப்புறம் ராகுல்ராம்.
welcome
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
Bookmarks