Originally Posted by
esvee
உலக வரலாற்றில் இடம் பிடித்த மக்கள் திலகம் எம்ஜிஆர் . 1917- 1987
உலக வரலாற்றில் , அரசியல் , திரைப்படங்கள் வரிசையில் பல தலைவர்கள் , நடிகர்கள் தோன்றி ,பல சாதனைகள் புரிந்து வாழ்ந்து மறைந்தார்கள் .மக்களும் அந்த தலைவர்களை , நடிகர்களை மறந்து விட்டார்கள் .ஆனால் மக்களால்
மறக்க முடியாத ஒரு அரசியல் தலைவராக , நடிகராக இந்திய திருநாட்டில் மாபெரும் சரித்திர சாதனைகளை அரசியலிலும் , திரை உலகிலும் நிகழ்த்தியவர் புரட்சிதலைவர் எம்ஜிஆர் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரை உலக சாதனைகள் .
மிக உயர்ந்த குடும்பத்தில் பிறந்து , காலத்தின் கோலத்தால் வறுமையின் பிடியில் சிக்கி தமிழகத்தில் பால்ய பருவத்தில் குடியேறி ஒரு சாதாரண நாடகநடிகராக வாழ்க்கை துவங்கிய அவர் பின்னர் தன்னுடைய கடுமையான பயிற்சியினாலும் ,வீர தீர சண்டைகளையும் சங்கீத அனுபவங்களையும் பயின்றதன் விளைவாக 1936ல் திரை உலகில் சதிலீலாவதி படம் மூலம் சிறு வேடத்தில் நுழைந்தார் அன்றைய மாபெரும் திரை உலக ஜாம்பவான்கள் மத்தியில் தன்னை ஒரு முழு கதாநாயகனாக நிலை நிறுத்தி கொள்ள 11 ஆண்டுகள் போராடினார் . 1947ல் ராஜகுமாரி படத்தில் கதாநாயகன் அந்தஸ்து கிடைத்து .
1947-1977 வரை தென்னிந்திய திரை உலகில் ஏராளமான சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆனார் எம்ஜிஆர் . ஒன்றா இரண்டா ? 1977 வரை பல வெள்ளிவிழா படங்கள் .100 நாட்கள் படங்கள் . உலகம் முழுவதும் 35,000 ரசிகர் மன்றங்கள் .
கோடிக்கணக்கான ரசிகர்கள் . தென்னிந்திய திரை உலகில் நிரந்தர சக்கரவர்த்தி .முடிசூடா மன்னன் என்ற பட்டபெயர்
மக்கள் திலகத்தின் திரை உலக ஆளுமைகள் .
தனக்கு ஒத்துவராத ,, தான் சேந்து இருந்த இயக்கத்தின் இலட்சியத்திற்காக கொள்கைகளை விட்டு கொடுக்காமல் நடித்தவர் புரட்சி நடிகர் எம்ஜிஆர் ..சங்கீத பயிற்சி , வீர தீர சண்டை பயிற்சி இரண்டும் எம்ஜிஆரின் இரண்டு கண்கள் என்றால் மிகையல்ல . தன்னுடைய படங்களில் மக்கள் ரசனைகளுக்கு ஏற்ப கதை அமைப்பு , உரையாடல்கள் , பாடல்கள் சண்டை காட்சிகள் என்று திறம் பட உருவாக்கி வெற்றி கண்டவர் எம்ஜிஆர் .
இயற்கையாகவே எம்ஜிஆருக்கு ஈகை குணம் இருந்ததால் இளமை முதல் தான் வாழ்ந்த இறுதி நாட்கள் வரை வாரி வாரி வழங்கிய , பாரி வள்ளல் எம்ஜிஆர் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரை உலகை விட்டு 38 ஆண்டுகளும் , நம்மைவிட்டு உடலால் பிரிந்து 28 ஆண்டுகள் ஆனாலும் இன்றும் அவர் நினைவாகவே கோடிக்கணக்கான ரசிகர்கள் இன்னமும் வாழ்ந்து கொண்டு வருவது உலகில் எங்கும் நடை பெறாத நிகழ்வு , கடந்த 38 ஆண்டுகளாக அவருடைய பல படங்கள் மறு வெளியீட்டிலும்
பல ஊடகங்களிலும் இடைவெளி இல்லாமல் ஓடிகொண்டிருப்பது வரலாற்று உண்மை .அவரது படங்கள் , பாடல்கள்
சளைக்காமல் பல டிவிகளில் ஒளி பரப்பாகி இருப்பதை காணலாம் .
எம்ஜிஆருக்கு கிடைத்த புகழ் இனி எந்த காலத்திலும் யாருக்குமே கிடைக்காது .அவரை போல் நடிக்கவும் , அரசியலில் களம் காணவும் கனவிலும் நினைத்து பார்க்க முடியாது .எம்ஜியாரின் இளமை தோற்றம் , சுறுசுறுப்பான சண்டை காட்சிகள் , புதுமையான காட்சிகள் , இனிமையான பாடல்கள் , கொள்கை காட்சிகள் -இது அவர் ஒருவர்க்கே சாத்தியம் .
உண்மையான அன்புடன் எம்ஜிஆர் மக்களை நேசித்தார் . மக்களும் எம்ஜிஆரை நேசித்தார்கள் . மக்கள் திலகமாக ஏற்று கொண்டார்கள் . என்றென்றும் மக்கள் மனங்களில் மக்கள் திலகம் ஒளிவிளக்காக நிலைத்து நிற்பார் .
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் .
1953ல் பேரறிஞர் அண்ணாவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு திமுகவில் இணைந்து விட்ட எம்ஜிஆர் தான் ஏற்று கொண்ட இயக்கத்தை , அண்ணாவின் திராவிட கொள்கைகளை தன்னுடைய படங்களில் இடம் பெற செய்து
அண்ணாவின் இதயக்கனி ஆனார் . 1957, 1962 1967 மூன்று பொது தேர்தல்களில் தீவிர பங்காற்றி முதல் முதலாக திமுகவை எதிர்கட்சியாகவும் , 1967ல் ஆளும் கட்சியாகவும் அமர்த்திய பெருமை எம்ஜிஆரை சேரும் ..1967தேர்தல் நேரத்தில் நடிகர் எம்.ஆர் ராதா துப்பாக்கியால் எம்ஜிஆரை கொல்ல முயற்சித்த நேரத்தில் மறு பிறவி கண்டார் எம்ஜிஆர் .குரல் பாதிக்கப்பட்ட நிலையில் அவருடைய எதிர் காலம் ஒரு கேள்வி குறியாக இருந்த நேரத்தில் ரசிகர்களும் மக்களும் , திமுக கட்சியினரும் அவரை எங்க வீட்டு பிள்ளையாக ஏற்று கொண்டார்கள் . மீண்டும் திரை உலகில் , அரசியல் உலகில் எம்ஜிஆர் விஸ்வரூபம் எடுத்து வெற்றி வெற்றி மேல் குவித்தார் .
பேரறிஞர் அண்ணாவின் மறைவிற்கு பின்னர் திமுகவினரும் மற்றவர்களும் 1972ல் நாங்கள்தான் பலமானவர்கள் என்று இறுமாப்புடன் வலம் வந்த நேரத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் புரட்சிதலைவர் எம்ஜிஆராக அவதாரம் எடுத்த ஆண்டு 1972.
1972-1987
15 ஆணடுகளில் தமிழக அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள் ..........
அண்ணாவின் கொள்கைகளை தொடர்ந்து காப்பாற்ற எம்ஜிஆர் உருவாகிய இயக்கம் அண்ணா திராவிட கழகம் .
1973ல் நடந்த திண்டுக்கல் நாடாளுமன்ற இடைதேர்தலில் அன்றைய பரத பிரதமர் இந்திராகாந்தி , பெருந்தலைவர் காமராஜர் , பலம் பொருந்திய திமுக தலைவர் கருணாநிதி , அன்றைய பிரபல தமிழ் நடிகர்கள் , எழத்தாளர்கள் , பத்திரிகை ஜாம்பவான்கள் எல்லோரையும் எதிர்த்து அரசியல் களத்தில் மாபெரும் வெற்றி கண்ட தனிப்பிறவி எம்ஜிஆர் .1974ல் நடந்த கோவை - புதுவை தேர்தல்களிலும் தேர்தல்களிலும் வெற்றி மேல் வெற்றி .
மக்கள் தலைவர் எம்ஜிஆர் ஒருவரே என்பதை அன்றைய பிரதமர் இந்திரா காந்தி முதல் பின்னாளில் வந்த மொரார்ஜி தேசாய் , சரண் சிங், ராஜீவ் காந்தி போன்றவர்கள் உணர்ந்து எம்ஜிஆரின் கூட்டணியை விரும்பி அவரை சிறந்த இந்திய அரசியல் தலைவராக ஏற்று கொண்டார்கள் .
சீனா யுத்த நிதிக்கு அன்றைய பிரதமர் நேரு அவர்களின் வானொலி யில் வேண்டுகோள் விடுத்த அடுத்த நிமிடமே முதல் மனிதராக நன்கொடை தந்து நேருவின் அன்பை பெற்றார் எம்ஜிஆர் . 1966ல் அன்றைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அந்தாமனில் பணத்தோட்டம் எம்ஜிஆர் மன்றத்தை துவக்கிய பெருமைக்கு ஆளானவர் மக்கள் திலகம் .
பெரியார் , ராஜாஜி , காமராஜர் , அண்ணா போன்ற தலைவர்களிடம் அன்பை பெற்றவர் எம்ஜிஆர்
.
மக்களின் பேராதரவை பெற்று , பலம் பொருந்திய காங்கிரஸ் , திமுக கட்சிகளை எதிர்த்து மாபெரும் வெற்றி பெற்று தமிழக முதல்வராக 1977ல் பதவி ஏற்று சாதனை புரிந்தார் எம்ஜிஆர் .மக்கள் நலனில் அக்கறை கொண்டும் , அண்ணாவின் லட்சியங்களையும் தன்னுடைய ஆளுமைகளையும் நிறைவேற்றி பல துறைகளிலும் தன்னுடைய சாதனைகளை நிகழ்த்தி காட்டினார் .எம்ஜிஆரின் சத்துணவு திட்டம் - உலகமே வியந்து பாராட்டியது . 33 ஆண்டுகளாக தொடரும் புரட்சிகரமான திட்டம் . லட்சக்கணக்கான ஏழை மக்கள் பயன் பெற்று , எம்ஜிஆரின் இலவச கல்வி திட்டத்தில் சேர்ந்து , உயர்ந்து இன்று பல குடும்பங்கள் சமுதாயத்தில் முன்னேறியவர்களாக வாழ்கிறார்கள் . தமிழகத்தின் பொற்கால சிற்பி எம்ஜிஆர் கலை உலகில் பாரத் எம்ஜிஆர் .அரசியலில் புரட்சித்தலைவர் , மனித நேயத்தில் பாரத ரத்னா என்று முப்புகழ் பெற்ற முப்பிறவி கண்ட மக்கள் திலகம் எம்ஜிஆர் .
Bookmarks