-
23rd September 2015, 04:29 PM
#1991
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
RAGHAVENDRA
திரு.வாசு சார்,
எல்லோரையும் அசர வைக்கும் அசராத உழைப்புக்கு சொந்தக்காரரான தாங்கள் 8,000 பதிவுகள் கண்டதற்கு வாழ்த்துக்கள். 22-ம் தேதி வரை பதிவிட மாட்டேன் என்று நான் கூறியிருந்ததால் தாமதமான வாழ்த்துக்களுக்கு மன்னிக்கவும். தங்களின் ஒவ்வொரு பதிவிலும் என்ன ஒரு உழைப்பு, தான் ரசித்ததை அப்படியே சிந்தாமல், சிதறாமல் மற்றவர்களுக்கு கடத்தும் ஆற்றல். பாராட்டுக்கள் சார்.
தங்கள் 8,000 பதிவு சாதனைக்கும் தொடர்ந்து பல சாதனைகளை படைக்கவும் வாழ்த்துக்கள். அயரா உழைப்புக்கு வணக்கங்கள். நன்றி.
பேரறிஞர் அண்ணாவும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களும் உள்ள மேலே இருக்கும் அரிய படத்தை பதிவிட்டிருக்கும் அன்பு நிறை பண்பாளர் திரு.ராகவேந்திரா சார் அவர்களுக்கு நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
23rd September 2015 04:29 PM
# ADS
Circuit advertisement
-
23rd September 2015, 04:34 PM
#1992
Junior Member
Seasoned Hubber
அன்பு நண்பர் திரு.ஆதிராம் அவர்களுக்கு,
‘உங்கள் பதிவால் திரிகள் களை கட்டுகின்றன. இத்தனாம் தேதி வரை பதிவிட மாட்டேன் என்பது போன்ற விரதத்தை கைவிடுங்கள்’ என்று நீங்கள் எனக்கு விடுத்த அன்பான அழைப்புக்கும் பாராட்டுக்கும் நன்றி.
கடந்த வாரம் எங்கள் திரிக்கு வந்து உலகம் சுற்றும் வாலிபனை சென்னையில் துர்கா பிலிம்ஸ் மூலமாக மக்கள் திலகம் வெளியிட்டார் என்று கூறினீர்களே. உங்களுக்கு பழைய விஷயங்கள் நிறைய தெரிந்திருக்கிறது. திரு.கார்த்திக் சாரைப் போல. அவரது பதிவுகளில் நிறைய பழைய விஷயங்கள் விரவி இருக்கும். இதை ஏதோ ஒப்புக்காக சொல்லவில்லை. இந்த தலைமுறையினர் எத்தனை பேருக்கு மகாதேவன் பிள்ளையைத் தெரியும். ஆனால், அவரைப் பற்றி ஒரு பதிவில் திரு.கார்த்திக் சார் சொல்லியிருப்பார். அவன் ஒரு சரித்திரம் பதிவில் என்று நினைவு.
கத்தி சரியாக இலக்கை நோக்கி வீசப்பட்டிருக்கும் விதத்தையும் அது இறங்கியிருக்கும் ஆழத்தையும் வைத்தே கத்தியை வீசியவரின் திறமையை கண்டுபிடித்து விட முடியும். அப்போதே, நினைத்தேன். இவர் விஷயம் தெரிந்தவர் என்று. அவர் திரிக்கு வராமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது. அந்த குறையை நீங்கள் போக்கலாமே. தங்கள் பழைய நினைவுகளையும் அனுபவங்களையும் எழுதி எல்லாரையும் மகிழ்விக்கலாமே.
திரு.வாசு சாருக்கு 8,000 பதிவுக்கு வாழ்த்து கூறும்போது, ‘உங்கள் ஆதி’ என்று கூறியிருக்கிறீர்கள். உங்கள் மீது எனக்கு சாஃப்ட் கார்னர் உண்டு. பேரறிஞர் அண்ணாவின் தம்பிமார்களில் ஒருவர். அது மட்டுமல்ல, எல்லாரையும் அரவணைத்து செல்வது மக்கள் திலகத்திடம் நாங்கள் கற்றுக் கொண்ட பாடம். அதோடு மட்டுமல்ல, ஆரம்ப காலத்தில் எங்கள் திரியின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்காற்றியுளளீர்கள். மக்கள் திலகத்தை ‘தலைவர்’ என்றெல்லாம் போற்றி புகழ்ந்துள்ளீர்கள். அந்த வகையில் நீங்கள் ‘எங்கள் ஆதி’யும்தான்.
உங்களிடம் இருந்து ஆக்கபூர்வமான பதிவுகளை எதிர்பார்க்கிறேன். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
23rd September 2015, 07:32 PM
#1993
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
-
23rd September 2015, 07:33 PM
#1994
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
23rd September 2015, 07:44 PM
#1995
வாசு,
தாமதத்திற்கு மன்னிக்கவும். வாழ்த்து சொல்ல வந்தது பொட்டு வைத்தோ முகமோ பாடலின் சிறப்புக் கட்டுரைக்கு இல்லை. அதற்கும் முன்பு நீங்கள் எழுதிய எங்கள் வீட்டில் எந்த நாளும் கண்ணன் பாட்டுதான் பதிவிற்காக. இந்த மாதத்தில் மட்டும் இரண்டு முறை வெளியூர் பயணங்கள் செல்ல நேர்ந்ததாலும் சில தேவையற்ற விவாதங்கள் திரியை கையடக்கியிருந்ததாலும் இந்த பாடல் பற்றி பேச முடியவில்லை. [மதுர கானங்கள் திரியிலும் நீதிதேவன் மயக்கம் மற்றும் புதிய வாழ்க்கை படங்கள் பற்றி சொல்ல நினைத்தேன்]
அற்புதமான பாடல். அருமையான படம். ரா கண்ணா ரா என்ற தெலுங்கு படத்தின் [சோமயாஜலு, கேஆர்விஜயா] ரீமேக். 1980-களில் நடிகர் திலகம் பற்றி அவர் ஏற்கும் பாத்திரங்கள் பற்றி சிலர் விமர்சனங்களை முன் வைத்த காலம். அந்த நேரத்தில் தயாரிக்கப்பட்ட படம். நமது ஹப்பிலேயே 6,7 வருடங்களுக்கு முன்பு ஒரு சிலர் [ஈஸி சேர் விமர்சகர்கள்] அப்படி நடித்திருக்கலாம். இப்படி செய்திருக்கலாம் .சொந்த படமாக கூட தயாரித்திருக்கலாம் என்றெல்லாம் எழுதுவார்கள். 1982-லேயே இப்படி பேரனின் பாசத்திற்காக ஏங்கும் தாத்தா வேடத்தில் நடித்திருக்கிறார் அதுவும் சொந்தப் படம் என்று நாம் எடுத்துச் சொல்லும்போது அதைப் பற்றிய விவரங்களே அவர்கள் அறிந்திருக்கவில்லை.
குற்றம் சொல்லுவதற்கு ஓடி வருபவர்கள் நல்ல படங்கள் வரும்போது அதற்கு ஆதரவளிப்பதில்லை. வா கண்ணா வா போன்ற படங்கள் வெளியான காலத்தில் சென்னை தவிர மற்ற இடங்களில் அது பெற வேண்டிய வெற்றியை பெறவில்லை என்ற வருத்தம் எனக்கு நிறையவே உண்டு. அதே நேரத்தில் சென்னையில் மூன்று அரங்குகளிலும் 100 நாட்கள் ஓடி 20 லட்சத்திற்கும் அதிகமான வசூலைப் பெற்று சாதனை புரிந்தது.
வெளியான நேரத்தில் இன்னும் சொல்லப் போனால் ஒரு மாதத்திற்குள்ளாக நடிகர் திலகத்தின் 4 படங்கள் ரிலீஸ் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஜனவரி 26 அன்று ஹிட்லர் உமாநாத் வெளியாகி ஓடிக் கொண்டிருக்க பிப்ரவரி 5-ந் தேதி ஊருக்கு ஒரு பிள்ளை வெளியாக மறுநாள் பிப்ரவரி 6 -ந் தேதி இந்தப் படத்தை அதுவும் சொந்தப் படத்தை ரிலீஸ் செய்ய யாருக்கு மனசு வரும்? இதெல்லாம் போதாதென்று அதே பிப்ரவரி 25-ந் தேதி கருடா சௌக்கியமா வேறு ரிலீஸ். உலகத்திலேயே இது போன்ற வணிக கட்டமைப்பு உள்ள [Producer -Distributor - Exhibitor set up] எந்த மொழிப் படமானாலும் சரி இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ள ஆரம்ப நிலை கதாநாயகன் கூட இப்படி ரிலீஸ் செய்வதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் நடிகர் திலகம் என்றைக்கு அதையெல்லாம் பார்த்தார்? In spite of all these things அவர் வெற்றிகளை குவித்தவர் அல்லவா?
இந்தப் படத்தின் முதல் பிரதி ரெடியானவுடன் படம் பார்த்த திரு.வி.சி.சண்முகம் அவர்கள் இயக்குனர் யோகானந்தை ஆரத் தழுவி சிவாஜி ப்ரொடக்ஷன்ஸ் சரித்திரத்தில் இந்த படம் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும். இந்த படம் எடுத்ததற்கு நான் பெருமைப்படுகிறேன் என்றாராம்.
நடிகர் திலகத்தின் அற்புதமான நடிப்பை. அனைத்து பத்திரிக்கைகளும் பாராட்டியிருந்தன. குறிப்பாக துக்ளக் இதழ் அவரது நடிப்பை பற்றி விவரித்து விட்டு சிவாஜியின் கால் நகத்தின் நடிப்புக்கு கூட யாரும் ஈடாக முடியாது என்று எழுதியிருந்தது. ஆனந்த விகடன் இதழும் வெகுவாக பாராட்டியது. குறிப்பாக நீங்கள் பதிவு செய்திருக்கும் எங்கள் வீட்டில் எந்த நாளும் கண்ணன் பாட்டுதான் இனிமேல் கிருஷ்ண ஜெயந்தி பாடலாக ஒலிக்கப் போகிறது என்றும் சொல்லியிருந்தார்கள். கவிஞர் வாலி நமது சொந்தப் படத்திற்கு முதன் முறையாக பாடல் எழுதியதும் இந்த வா கண்ணா வா படத்திற்குதான் [என நினைக்கிறேன்].
இந்த படம் வெளியானபோது அதற்கு முன்பே மதுரையிலிருந்து கிளம்பி விட்ட நான் பத்திரிக்கை விமர்சனங்களை படித்துவிட்டு நான் இருந்த இடத்திலிருந்து 70 கிலோமீட்டர் பயணம் செய்து இந்த படத்தை போய் பார்த்தேன். நான் இருந்த ஊருக்கு படம் வந்தபோதும் இரண்டு மூன்று முறை பார்த்தேன். கொஞ்சம் ஆந்திர வாடையை குறைத்திருந்தால் மக்களால் படத்தோடு மேலும் ஒன்றியிருக்க முடியும் என்பது என் எண்ணம். நல்ல பாடல் தந்ததற்கு நன்றி.
பொட்டு வைத்த முகமோ பாடல் பற்றி நான் என்ன சொல்ல? சொல்வதற்கு ஒன்றுமே பாக்கியில்லாமல் நீங்கள் எல்லாம் எழுதி விட்டீர்கள். மற்றவர்களும் எழுதி விட்டனர். சுமதி என் சுந்தரி பற்றி முன்பே நிறைய எழுதியிருக்கிறேன் மீண்டும் அதை எழுதினால் போரடிக்கும்.
ஆனால் இந்தப் படத்தின் இளமை quotient எந்த காலத்திலும் சிலிர்ப்பை தருவதோடு நீங்கள் குறிப்பிட்ட அந்த பின்னணி ஹம்மிங் மனதுக்குள் மழையாக பெய்து இறங்கும். சென்ற மாதம் நமது NT FAnS அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட மெல்லிசை மன்னருக்கு அஞ்சலி நிகழ்ச்சியில் எம்எஸ்வி அவர்களின் பின்னணி இசையின் மாற்றை எடுத்துக் காட்டும் ஒரு உதாரணமாக சுமதி என் சுந்தரி படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை திரையிட்டோம். மீண்டும் பெரிய திரையில் தியேட்டர் effect-ல் காட்சி விரிந்தபோது அந்த ஹம்மிங் கொடுத்த சந்தோஷமே அலாதி.
நடிகர் திலகத்தின் பல படங்களுக்கு பெருமைப்பட்டுக் கொள்வது போல இந்தப் படத்திற்கும் நாங்கள் மதுரைக்காரர்கள் பெருமை கொள்வோம். காரணம் படம் அதிகபட்ச நாட்கள் ஓடியது மதுரை அலங்காரிலும்தான். சென்னை சித்ராவிலும் அதே நாட்கள் [12-வது வாரம் முழுமையடையாமல்] என்று ராகவேந்தர் சார் சொல்வார். [கார்த்திக் இருந்திருந்தால் அவரும் சொல்லியிருப்பார்]. ஆனால் மதுரையின் பெருமை அதோடு முடியவில்லை. அதே நாள் வெளியான பிராப்தம் அதிகபட்ச நாட்களை கடந்ததும் எங்கள் மதுரை சென்ட்ரலில்தான்[10 வாரம் முழுமை பெறாமல்].
பல விஷயங்களை பேச வாய்ப்பளித்த உங்கள் பதிவிற்கு மீண்டும் நன்றி வாசு! .
அன்புடன்
வாசு, நேற்று இரவே இதை எழுதி முடித்து பதிவிட நினைத்தேன். சட்டென்று ஒரு செய்தி வந்தது. சன் லைஃப் சானலில் சுந்தரும் உமாவும் சாந்தியும் லைவ் ஆக வந்திருக்கின்றனர் என்று. அதன் பிறகு அவர்களை பார்க்காமல் இருக்க முடியுமா? அதனால் நேற்றிரவு பதிவு மிஸ் ஆகி இன்று செய்திருக்கிறேன்
-
Post Thanks / Like - 1 Thanks, 6 Likes
-
23rd September 2015, 09:12 PM
#1996
Senior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
23rd September 2015, 11:29 PM
#1997
Junior Member
Senior Hubber
சிவாஜி பாட்டு-15
காதல் மட்டும்தான்.. எச்சிலை
முத்தமாக்குகிறது.
காதல் மட்டும்தான்.. நடக்கும்
போதே பறக்கிற பிரமையைத்
தருகிறது.
நம் காதலுக்குரிய நடிகர் திலகத்தின் எண்ணற்ற காதல் பாடல்களில்., எனக்கு மிகவும்
பிடித்த பாடல்களில் ஒன்று-
இந்தப் பாடல்.
அந்த மென்மையிலும், மென்மையான புன்னகை ஒன்றை மட்டும் வைத்தே
உறுதியாகச் சொல்லலாம்..நம்
நடிகர் திலகம்.."ரோஜாவின்
ராஜா"தானென்று.
கனவுப் பாடலிது.
கனவுகள்,இங்கிதமில்லாதவை.
எப்போதும் கண்ணியமாகவே இருக்கக் கூடிய உத்தரவாதம்
இல்லாதவை. ஒழுக்கம் உணர்த்த வேண்டிய உலக நிர்ப்பந்தங்களுக்காக ஒளித்து
வைத்திருந்த அடி மனசின்
அழுக்கு எண்ணங்களையும் அதிரடியாய் வெளிப்படுத்த
வல்லவை.
ஆனால்,இந்தப் பாடல் போல
கனவு வந்தால்..அது வரம்
நமக்கு.
பள்ளிக் குழந்தைகளை ஏதேனும் நல்ல காரியத்துக்காக
ஊர்வலமாய் அழைத்துப் போவார்களே..!? அந்த ஊர்வலக் குழந்தைகளின் ஒழுங்கில் காணும் அழகை..
நடிகர் திலகத்தின் பாவனைகளில் காணலாம்.
கனவுதானே என்று சும்மா பிதற்றாமல் பாடலுக்குள் ஒரு
கவித்துவம் புகுத்தியிருக்கிறார்கள் ..பாடலோடு சம்மந்தப்பட்ட
எல்லோரும்.
சில நிமிடங்களில் பாடல் முழுவதுமாய் முடிந்த பிறகு..
மனசு பாடத் துவங்குமே..
அது..
பாமர ரசிகன், மெல்லிசை மன்னருக்குச் செலுத்தும்
ரகசிய அஞ்சலி.
-
Post Thanks / Like - 1 Thanks, 6 Likes
-
24th September 2015, 07:20 AM
#1998
Junior Member
Platinum Hubber
பக்ரீத் நல்வாழ்த்துக்கள்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
24th September 2015, 07:52 AM
#1999
Junior Member
Senior Hubber
பக்ரீத் நல்வாழ்த்துகள்.
இல்லாமை தீர்ந்ததென்ற
இணையற்ற சந்தோஷம்,
இசை வடிவமாயிற்று.
தியாகம்-
அதன் ஆதார ராகம்.
பசி தீர்ந்த, பசி தீர்த்த
மன நிறைவே பாடல் வரி.
பாராட்டி ஒலிக்கின்ற
கரவொலியே அதன் தாளம்.
இனிதான திருநாளில்
எல்லோர்க்கும்
இசையோடு
வாழ்த்துரைப்போம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
24th September 2015, 07:53 AM
#2000
Senior Member
Seasoned Hubber
மிக விரைவில்

விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
Bookmarks