-
26th September 2015, 08:02 PM
#831
Junior Member
Diamond Hubber
திண்டுக்கல் பாராளுமன்ற இடைதேர்தல் தகவல்களை பதிவிட்டு அசத்திய திரு ரூப்குமார் அவர்களுக்கு நன்றி... திரு கலைவேந்தன், திரு esvee அந்த தேர்தல் வெற்றி விசேசங்களை விவரித்தது சிறப்பு...
-
26th September 2015 08:02 PM
# ADS
Circuit advertisement
-
26th September 2015, 08:49 PM
#832
Junior Member
Diamond Hubber
நேற்று திருவண்ணாமலை நகரில் நடைபெற்ற மக்கள் திலகம் மன்றத்தின் 50வது ஆண்டு நிறைவு விழாவில் அம்மன்றத்தின் நிர்வாகி திரு கலீல் பாஷா அவர்களால் எனக்கு வழங்கப்பட்ட மக்கள் திலகத்தின் அழகிய படங்கள்.
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
Last edited by ravichandrran; 26th September 2015 at 09:00 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
26th September 2015, 09:00 PM
#833
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
26th September 2015, 09:05 PM
#834
Junior Member
Diamond Hubber

Courtesy : Face Book
-
Post Thanks / Like - 2 Thanks, 1 Likes
-
26th September 2015, 09:07 PM
#835
Junior Member
Platinum Hubber
நாளை (27/09/2015 ) இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில்
நடிக பேரரசர் எம்.ஜி.ஆர். வழங்கும் "நான் ஆணையிட்டால் : ஒளிபரப்பாகிறது.

தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர்.
-
Post Thanks / Like - 2 Thanks, 0 Likes
-
26th September 2015, 09:30 PM
#836
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
26th September 2015, 10:14 PM
#837
Junior Member
Veteran Hubber
30-09-15 தேதியிட்டு நேற்று (25-09-15) வெளியான ஜூனியர் விகடன் இதழில் "பெரியோர்களே - தாய் மார்களே" என்ற தொடரில், திரு. வி. க. அவர்களை நினைவு கூர்ந்து, எழுதப்பட்ட
கட்டுரையிலிருந்து :

உண்மை தான் ! இன்றைய அமைச்சர்கள் சிலருக்கு பொற்கால ஆட்சி தந்த நம் பொன்மனசெம்மலை பற்றியும், அவரின் சாதனைகளை பற்றியும் தெரியாத காரணத்தால், ஜூனியர் விகடன் இது போன்ற செய்தியை வெளியிட வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.
புரட்சித்தலைவர் அவர்கள் ஆட்சி காலத்தில் தான், பேரறிஞர் அண்ணா அவர்களின் பவள விழா ஆண்டும், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் நூற்றாண்டு விழாவும், அகிலமே போற்றும் விதத்தில் அற்புதமாக கொண்டாடப்பட்டது.
தலைவர்களையும், கலைஞர்களையும், புலவர்களையும், கவிஞர்களையும் கவுரவிக்க தெரிந்த கலை வேந்தன் தான், நம் மக்கள் திலகம் அவர்கள்.
-
Post Thanks / Like - 2 Thanks, 1 Likes
-
26th September 2015, 11:10 PM
#838
Junior Member
Platinum Hubber

காட்சிப் பிழை -செப்டம்பர் 2015
------------------------------------
தேவரின் பதினைந்து படங்களிலும் எம்.ஜி..ஆரும், அம்மாவும் இருப்பார்கள்.
அப்பா ஒரு சட்டத்தில் படமாக தொங்குவார். நாயகிக்கு அப்பா அல்லது அண்ணன்
இருப்பார். அம்மா கிடையவே கிடையாது. ஆனால் பதினைந்தில் பத்துப்
படங்களாவது 100 நாட்களுக்கு மேல் ஓடியிருக்கும். காரணம் திரைக்கதையின்
அமைப்பு. பெரும்பாலும் ஆரூர் தாசே கதை, திரைக்கதை , இரண்டையும் செய்துவிடுவார். சரியாகவும் செய்வார். அப்புறமாக தேவரே, "கதை " எழுதிவிடுவார்.
வசனம் ஆரூர் தாஸ் .
முகராசிக்கு கதை ஜி.பாலசுப்ரமணியம் , இவர் நிறையப் படங்களுக்கு
திரைக்கதை எழுதி இருப்பார். முகராசி, தாழம்பூ, ரகசிய போலிஸ் 115 என்று
நிறைய எம்.ஜி.ஆர். படங்கள்.
சார்லி சாப்ளின் நடித்த "THE KID " என்கிற ஆங்கிலப் படத்தின் தழுவலான
தேடி வந்த மாப்பிள்ளை படத்தில் எம்.ஜி.ஆர். கூட சார்லி சாப்ளின் போலவே
நடிப்பார், நடப்பார். தமிழில் நிறையப் படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதிய
ஆரூர் தாசின் தொடர் சுவாரஸ்யமானது. பெரிய நிறுவனங்களில் கதை இலாகா
என்று தனியே இருக்கும்.
எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் கதை இலாகாவில் ஆர். எம். வீரப்பன், நா. பாண்டுரங்கன்,
வித்வான் வே. லட்சுமணன் , எஸ். கே. டி. சாமி ஆகியோர் உண்டு. சத்யா
மூவிஸ் படங்களில் பெரும்பாலும் திரைக்கதை ஆர். எம். வீரப்பன் என்று
போடுவார்கள்.
நான் ஆணையிட்டால் படம் வெளிவருவதற்கு சில நாட்களுக்கு முன்னால்
தினமணி "சுடர்" சினிமா பகுதியில் அப்போது ஞாயிறு தோறும் வரும் "சுடர் "
மிகப் பிரபலமானது .நம்பகமான சினிமாச் செய்திகளும் படங்களும் நன்றாக
இருக்கும் . ஒரு செய்தி வந்தது. ஒவ்வொரு 3000 அடிக்கும் எம்.ஜி.ஆரின் நடை
உடை மேக் அப்புகளில் மாற்றம் வரும். ஒவ்வொரு 5000 அடிகளுக்கும் இடையே
நீங்கம் ஊகிக்க முடியாத திருப்பங்கள் வரும். அப்படி , இப்படி என்று ஆர். எம். வீரப்பன் பேட்டி அளித்து இருந்தார்.
சத்யா மூவிசின் முதல் படமான " தெய்வத்தாய் " ஒரு கூட்டுத் தயாரிப்பு.
நான் ஆணையிட்டால் படம் , ஆர். எம். வீரப்பனின் தனித் தயாரிப்பு.
அதனால் வேறு பயங்கர எதிர்பார்ப்பு. முன்பதிவிற்கே அப்படி ஒரு கூட்டம்.
வழக்கமாக ரிசர்வேஷன் டிக்கட்களை தியேட்டரின் அலுவலக அறையில்தான்
கொடுப்பார்கள். ஒவ்வொருவராக அவ்வப்போது சென்று வாங்கிக் கொள்ளலாம்.
இந்தப் படத்திற்கு வழக்கமான டிக்கட் போல , கவுண்டரில் வைத்துக் கொடுக்கும்
அளவுக்குக் கூட்டம். முதல் நாள் முதல் காட்சிக்கு டிக்கட் விலை பத்து மடங்கு அதிகம் போனது. முதலில் இந்தப் படத்திற்கு ,"புது மனிதன் " என்றே பெயர்
.வைக்கப்பட்டது . பின்னர் "நான் ஆணையிட்டால் " என்று பெயர் மாற்றப்பட்டது.
நல்ல கதை. அழகான படமாக எடுத்திருக்கலாம். சொதப்பியது என்னவோ
திரைக்கதைதான்.
இந்த அடியை நினைவு வைத்து, கொண்டோ என்னவோ, அடுத்து எடுத்த
காவல்காரன் அமுக்கமாக வந்து ஆர்ப்பாட்டமாக ஓடியது . சிம்பிளான
குழப்பமில்லாத திரைக்கதை .நேரடியான காட்சிகள். "நாம் " படத்திற்கு பிறகு
எம்.ஜி.ஆர். போடும் "பாக்ஸிங் " அமர்க்களமா இருக்கு என்று போனோமா, பார்த்தோமா, ரசிச்சோமா, வந்தோமா என்ற ரீதியிலான கதை. இதுவும்
ஆர். எம். வீரப்பன் திரைக்கதை தான் . "தெய்வத்தாய் " படம் ஒரு இந்திப் படத்தின் தழுவல்.
இயக்குனர் ஸ்ரீதரைப் பற்றி சொல்வதானால், தமிழின் சிறந்த திரைக்கதை
ஆசிரியர். எம்.ஜி.ஆரை வைத்து , உரிமைக்குரல் படம் எடுத்து பெரும் வெற்றி பெற்றவர். உரிமைக்குரல் படத்தில் எம்.ஜி.ஆருக்காகப் பல சருக்கல்களைச்
செய்திருந்தாலும் , எம்.ஜி.ஆர். - லதா உறவு மிகச் செல்லமாக சொல்லப்பட்டிருக்கும்.
இரட்டை வேடங்களில் இரண்டு கதாநாயகர்களும் இடம் மாறுவதுதான்
படத்தின் மையப்புள்ளி. அதை "நாடோடி மன்னன் " படத்தில் கண்ணதாசனும்,
ரவீந்திரனும் வித்தியாசமாக செய்திருந்தனர்.
கே. எஸ். கோபாலகிருஷ்ணன் எம்.ஜி.ஆரை வைத்து " தங்கத்திலே வைரம் "
என்று ஒரு படம் எடுப்பதாக விளம்பரம் செய்து , பேட்டியும் அளித்து இருந்தார்.
அந்தக் கதையின் நாயகன் ஒரு மகத்தான மனிதன்., சிறந்த வீரன் (பாகு பலி )
அப்படியானால், அவன் படத்தில் பேசும் வசனம் என்னவாக இருக்க வேணும் ?
மொத காரக்டரையும் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டுமல்லவா?
அப்படி எழுதி உருவாக்கப்போகிறேன் என்று சொல்லி இருந்தார் . இங்கே ரசிகர்கள்
பிரமாதமான படம் வெளிவரப் போகிறது என்று காத்திருந்தார்கள்.
ஆனால் வரவே இல்லை.
கே. எஸ். கோபாலகிருஷ்ணன் , எம்.ஜி.ஆரின் "சங்கே முழங்கு " படத்திற்கு
வசனம் எழுதி இருந்தார்.
வசனகர்த்தா சக்தி கிருஷ்ணசாமி , பாரதிதாசனின் முக்கிய சீடர். அவரைப் போலவே மீசை வைத்திருப்பார். பெரிய இடத்துப் பெண் , எங்க வீட்டுப் பிள்ளை
படங்களில் கதை தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கும். எங்க வீட்டுப் பிள்ளை யின்
வெற்றியே இதற்கு ஒரு சூப்பர் உதாரணம்.
திருடாதே படத்தில் நகைச்சுவை பகுதி எழுதிய மா. லட்சுமணன் ஒரு நல்ல திரைக் கதையாளர். கலங்கரை விளக்கம் இதற்கு ஒரு சிறந்த உதாரணம்.
ரீ மேக் படங்களுக்கு சிறப்பாக வசனம் எழுதக் கூடியவர் ஏ.எல். நாராயணன் .
எம்.ஜி.ஆரே சொர்ணம் மாயையில் இருந்து விடுபட்டு , ஏ. எல் . நாராயணனை
"மாட்டுக்கார வேலன் " படத்திற்கு எழுத வைத்தார். அது "ஜிக்ரி தோஸ்த் " என்கிற இந்தி படத்தின் ரீமேக்.
-
Post Thanks / Like - 3 Thanks, 0 Likes
-
26th September 2015, 11:10 PM
#839
Junior Member
Devoted Hubber
எமது அக்னிமலர்கள் மாதஇதழில் புரட்சித் தலைவரின் பல்வேறு சிறப்புக்களை அவரது தனிப் பாதுகாவலர்களில் ஒருவரான கேபி.ராமகிருஷ்ணன் அவர்களின் அனுபவ நிகழ்வுகள் எமது எழுத்தாக்கத்தில் தொடர்ந்து இனி -----
-
26th September 2015, 11:26 PM
#840
Junior Member
Devoted Hubber
-
Post Thanks / Like - 4 Thanks, 2 Likes
Bookmarks