-
27th September 2015, 08:44 AM
#2101
Junior Member
Veteran Hubber
Evergreen Hero ...Everlasting songs!
Dev Anand's Birthday reminiscence!
ஹிந்தி மார்க்கண்டேயன் தேவ் ஆனந்தின் 92 வது பிறந்தநாள் நினைவஞ்சலி!
ஹாலிவுட் கிரிகிரி பெக்கின் எதிரொலியான பாலிவுட்டின் தேவ் ஆனந்துக்கு பேஸ்மென்ட் ஸ்ட்ராங் தலை மட்டும் வீக்!! ஆடிக்கொண்டே இருக்கும்!!
நடிகர்திலகத்தின் சூப்பர் டூப்பர் ஹிட்டான அமரதீபத்தின் சிவாஜி தயாரிப்பான இந்திப் பதிப்பில் தேவ் சிவாஜி ரோலில்! ஜானி மேரா நாமின் தமிழ்ப் பதிப்பில் தேவ் ரோலில் ராஜாவாக சிம்மாசனமிட்டார் நடிகர்திலகம் !
Last edited by sivajisenthil; 27th September 2015 at 08:50 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
27th September 2015 08:44 AM
# ADS
Circuit advertisement
-
27th September 2015, 10:39 AM
#2102
Junior Member
Senior Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
27th September 2015, 10:59 AM
#2103
Junior Member
Junior Hubber
அன்பு நண்பர் ரவிகிரன் சார்
உங்கள் கருத்துக்களை மதிக்கிறேன்!
ஒரு விஷயம் நினைவிருக்கிறதா? கட்டபொம்மன் படத்துக்கு சாந்தி திரைஅரங்கு கொடுக்காமல் விக்ரம்பிரபு நடித்த இது என்ன மாயம் படத்துக்கு கொடுத்த
ஒரு சாதாரணமான விசயத்துக்கு எவ்வளவு ஆத்திரபட்டீர்கள்! இது என்ன மாயம் படம் dvd யில் கூட பார்க்க கூடாது, அந்த படத்துக்கு ஒரு ரூபாய் கூட செலவு
செய்ய கூடாது என்று நீங்கள் கூறவில்லையா? இத்தனைக்கும் விக்ரம்பிரபு சிவாஜியின் சொந்த பேரன்! ஆனாலும் உங்கள் கோபம் நியாயமானது என்று
உங்களுக்கு கைபேசியில் தொடர்புகொண்டு என் ஆதரவை தெரிவித்தேன்! உண்மை தானே சார்?
கட்டபொம்மன் சாந்தியில் வராமல் வேறு மவுண்ட் ரோடு திரையில் வெளிவந்தால் என்ன கெட்டு விட போகிறது? சிவாஜி நடித்த காலங்களில் மற்ற திரைகளில் அவர் நடித்த படங்கள் வெளியாகி 100 நாட்கள் ஓடிய நிகழ்வுகள் நிறைய உண்டே!
இதை இப்போது ஏன் சொல்லுகிறேன் என்றால் சிவாஜிக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்ற நியாயமான உங்கள் எண்ணங்களுக்காக ஒரு மிக
சாதாரணமான விசயத்துக்காக நீங்கள் அவரின் மகன்கள் பேரன் எல்லோரையும் துச்சமென தூக்கி எறியும் போது சிவாஜியின் அரசியல் தவறுகளால் இன்றைக்கும் அவரை ஒரு mla கூட ஆக லாயக்கில்லாதவர் என்று பொதுமக்களே கேலி பேசும் போது என்னை போன்ற அவரின் உண்மையான ரசிகர்களுக்கு
நெஞ்சில் எவ்வளவு ரணம் இருக்கும் என்பது உங்களை போன்றவர்களுக்கு புரியாது!
1989 இல் mgr அவர்களை ஆதரிக்க தான் கட்சி ஆரம்பித்தார் என்றால் அந்த கட்சியிலேயே போய் சேர வேண்டியதுதானே? ஏன் சொந்தமாக கட்சி
நடத்தி தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தையும் புகழையும் இழக்க வேண்டும்? பிரச்சாரத்தோடு நிற்காமல் ஏன் திருவையாறில் போட்டியிட வேண்டும்?
உங்களை போன்றவர்களுக்கு என்ன சொன்னாலும் புரியாது!
அவரின் அரசியலால் அவர் புகழ் பொதுமக்கள் மத்தியில் பெரிதும் பாதித்த நிலைதான் இன்றைக்கும் உள்ளது! மையம் திரியில் எழுதும் நம்மை போன்ற
சிலரின் எண்ணங்களை வைத்து எதையும் முடிவு செய்யவேண்டாம்! நீங்கள் மற்ற சிவாஜிரசிகர்கள், மற்ற கட்சியினர், பொதுமக்கள் போன்ற எல்லோரிடமும் உங்களுக்கு அவகாசம் கிடைக்கும் போது பேசி பாருங்கள்! நான் சொல்வது தான் எல்லோர் கருத்துமாகவும் இருக்கிறது என்ற உண்மை
உங்களுக்கு தெரியும்!
நன்றி !
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
27th September 2015, 11:14 AM
#2104
Senior Member
Diamond Hubber
கலை சார்,
தங்கள் பாராட்டிற்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி!
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
27th September 2015, 11:52 AM
#2105

Originally Posted by
RavikiranSurya
இதுபோன்ற விஷயங்களை நாம் விவாதிப்பது எப்படி இருக்கிறது தெரியுமா ?
நடுரோட்டில் கண் மூடி சென்றால்...லாரியில் அடிபட்டு இறப்பது சிறப்பா அல்லது பஸ்சில் அடிபட்டு இறப்பது சிறப்பா ? என்பது போல உள்ளது !
நடிகர் திலகம் அவர்களுக்கு முதல்வர் ஆகவேண்டும் என்ற எண்ணம் என்றுமே இருந்ததாக நாம் கருதவில்லை. அப்படி இருந்திருந்தால் இவ்வளவு பண்ணின நடிகர் திலகத்திற்கு அதற்க்கு தகுந்தாற்போல நடந்திருப்பார் என்பதே எனது கருத்து.
அவர் கட்சி தொடங்கியது, திரு mgr அவர்களுக்கு உதவுவதற்காக மட்டுமே என்பதுதான் உண்மை. அவர் மீது அந்தளவிற்கு அன்பும் மரியாதையும் பாசமும் வைத்திருந்திருக்கிறார் நடிகர் திலகம்.
ப்ரூக்ளின் ஆஸ்பத்திரியில் திரு mgr இருந்தபோது, பிரசாரத்திற்கு இப்போதைய தமிழக முதல்வரா போனார் ? இல்லையே ! போக முடியாது என்றல்லா இருந்தார் ? தமிழகம் முழுதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டது நடிகர் திலகம் அவர்கள் மட்டும்தானே !
நடிகர் திலகம் அவர்களுக்கு பதவி மேல் ஆசை இருந்தால் இதை ஒருக்காலும் செய்திருக்க மாட்டார் ! மேலும் திருமதி ஜானகி அவர்களுடன் எதற்கு கூட்டணி வைக்க வேண்டும் ? சந்தர்ப்பவாத அரசியல் செய்திருந்தால் சுலபமாக 35 இடங்களை நடிகர் திலகம் மிநிமும் வென்றிருப்பார் ! அதுகூட நடிகர் திலகம் செய்யவில்லை !
இந்த வாதம் மிகவும் நன்றாக இருக்கிறது.
மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். அவர்களை உயிராக மதித்த அவரது ரத்தத்தின் ரத்தமான தொண்டர்களில் ஒரு பகுதியினரே (பெரும்பகுதியினர்) தங்கள் அண்ணியார் வி.என்.ஜானகி அவர்களையும், தங்கள் தலைவரின் உயர்வுக்கு பெரும்பணி ஆற்றிய ஆர்.எம்.வீரப்பன் அவர்களையும் தோற்கடிக்க ஜெயலலிதாவின் பக்கம் நின்றபோது.......
எந்த எம்.ஜி.ஆர். அவர்களை எதிர்த்து காலமெல்லாம் தனக்காக பாடுபட்டார்களோ அந்த ரசிகர்களின் / தொண்டர்களின் உழைப்பை எம்.ஜி.ஆரின் மனைவியை அரியணையில் அமர்த்த நடிகர்திலகம் கட்சி ஆரம்பித்தாராம்.
கட்சி துவங்குவதிலும் இவர் வித்தியாசமானவர் தான்.
தமிழ்நாட்டில் அரசியல் என்றால் அது சந்தர்ப்பவாத அரசியல்தான். யார் செய்யவில்லை சந்தர்ப்பவாத அரசியல்?. எம்.ஜி.ஆர், அவர்களே 1977-ல் ஜனதாவை எதிர்த்து காங்கிரசுடனும், 1980-ல் காங்கிரசை எதிர்த்து ஜனதாவுடனும், 1984-ல் மீண்டும் காங்கிரசுடனும் கூட்டணி வைக்கவில்லையா?. கருணாநிதியும் 77-ல் ஜனதாவுடனும், 80-ல் காங்கிரசுடனும் பிற்பாடு பல சந்தர்ப்பங்களில் மாறி மாறி கூட்டணி வைக்கவில்லையா?. மக்கள் இவ்விரு கட்சிகளை நிராகரித்து விட்டார்களா?. இன்றைக்கும் தமிழகத்தில் முதலிரண்டு இடங்களை இவைதானே பிடித்து வைத்துள்ளன.
1989-ல் கருணாநிதி தருவதாக சொன்ன 35 இடங்களை பெற்று தேர்தலை சந்தித்திருந்தால் நிச்சயம் 25 இடங்களில் த.மு.மு. வென்றிருக்கும், வென்றிருக்கும், இவரும் வென்றிருப்பார். 'அரசியலில் தோற்றவர்' என்ற பழியும் ஏற்பட்டிருக்காது.
இதோ இன்றுவரை மாற்றுத்திரி நண்பர்கள் இவரை 'அரசியலில் தோற்றவர்' என்று கிண்டலடிப்பது அந்த 89 திருவையாறு தேர்தலை வைத்துதானே. யாருக்காக கட்சி ஆரம்பித்து தோற்றார், யாருடன் சேர்ந்து நின்றதால் தோற்றார், எந்த நட்புக்காக இந்த பழியை சுமந்தார் என்று அவர்கள நினைத்துப் பார்த்தால் இப்படி கிண்டலடிக்கத் தோன்றுமா?.
-
Post Thanks / Like - 3 Thanks, 4 Likes
-
27th September 2015, 01:16 PM
#2106
Senior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 6 Thanks, 9 Likes
-
27th September 2015, 09:02 PM
#2107
Junior Member
Junior Hubber
அன்பு நண்பர் நெய்வேலி வாசு சார்
நடிகர்திலகம் அளித்த நன்கொடைகள் விவரம் தாங்கள் பதிவு செய்தமைக்கு என் நன்றியும் வாழ்த்துக்களும்!
நம் ரசிகர்கள் அனைவரும் ஒரு முக்கியமான காரியம் உடனே செய்ய வேண்டும் என்பது என் வேண்டுகோள்!
தங்கள் பதிவில் உள்ள விவரங்களோடு இன்றைய ருபாய் மதிப்பையும் சேர்த்து நோட்டீஸ் அடித்து அவரின் பிறந்தநாள் விழாக்கள்,மற்றும் பழைய படங்கள்
வெளியிடும் திரைஅரங்குகளில் பொது மக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும்! முடிந்தவரை எல்லா சிவாஜி நிகழ்ச்சிகளிலும் இதை தொடர்ந்து செய்ய
வேண்டும்! அந்த உயர்ந்தமனிதன் செய்த தர்மங்களை நாம் விளம்பரபடுத்த வேண்டியது அவசியமான ஒன்று!
சிவாஜியின் அவதாரதினம் இன்னும் சில தினங்களில் வர இருக்கிறது! நாம் அந்த நல்ல காரியத்தை தொடங்கலாம்!
நன்றி வாசு சார்
-
Post Thanks / Like - 4 Thanks, 4 Likes
-
27th September 2015, 09:26 PM
#2108
Senior Member
Devoted Hubber
முகநூலில் இருந்து
தானமும் தர்மமும் தவமும் தனி மனிதனின் ஆத்ம திருப்திக்காக உணர்வுப்பூர்வமான சந்தோஷத்திற்காக இதில் விளம்பரம் தேவையில்லை என்பது என் கருத்து அப்பொழுதும் சரி இப்பொழ...ுதும் சரி நானும் பிரபுவும் சமூக சேவைக்கும் கஷ்டப் படும் மக்களின் மேம்பாட்டிற்கும் இயன்றதை செய்து வருகிறோம் இதற்காகவே சிவாஜி பிரபு சாரிட்டீஸ் டிரஸ்ட் என்ற தார்மீக ஸ்தாபனத்தை உருவாக்கியுள்ளோம் என் தாயார் தயாள குணமிக்கவர்கள் ஏழ்மையிலும் பிறருக்குக் கொடுத்து வாழ வேண்டும் என்பதை எங்கள் குடும்பக் கலாச்சாரமாக மாற்றி விட்டார்கள் அதையேதான் என் மனைவியும் செய்து வருகிறாள் ஆனால் எங்கள் யாருக்கும் இக்காரியங்களில் வரும் விளம்பரம் பிடிக்காது NADIGAR THILAGAM
நடிகர் திலகம் அவர்கள் விட்ட மகப்பெரிய தவறு தன்னுடன் ஒரு படப்பிடிப்பாளனையும்
செய்தி எழுதுபவனையும் கொண்டு திரியாதது
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 2 Thanks, 2 Likes
-
27th September 2015, 10:00 PM
#2109
Junior Member
Senior Hubber
மக்கள்தலைவர் சிவாஜியின் அன்பு இதயங்களே, மதுரை சென்ட்ரலில் மக்கள்தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு அக்டோபர் 2 வெள்ளி முதல் வெளியாகும் உத்தமன் திரைப்படத்திற்கு நமது இணையதளத்தில் உத்தமன் கொண்டாட்டம் என்ற தனிப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் உத்தமன் திரைப்படம் தொடர்பான அனைத்து தகவல்களும் இடம்பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல... எவரும் எட்டாத அதிசயம்.
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
27th September 2015, 10:03 PM
#2110
Junior Member
Senior Hubber
மக்கள்தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை சென்ட்ரல் திரையரங்கில் அக்டோபர் 2ந் தேதி முதல் நடிகர்திலகத்தின் மாபெரும் காதல் காவியம் உத்தமன் திரைப்படம் மதுரை சிவா மூவீஸ் சார்பாக வெளியிடப்படுகிறது. எப்பொழுதுமே வித்தியாசமான விளம்பரச் சுவரொட்டி மற்றும் பழைய திரைப்படங்களுக்கு புதிய திரைப்படங்களுக்கு இணையாக போட்டா காா்டு வைத்து அறிமுகப்படுத்திய மதுரை சிவா மூவீஸ் உத்தமன் திரைப்படத்திற்கு வைத்துள்ள போட்டோ கார்டு உங்கள் பார்வைக்கு....

மேலும் போட்டோ கார்டு காண www.sivajiganesan.in செல்லவும்.
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல... எவரும் எட்டாத அதிசயம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
Bookmarks