Results 1 to 10 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

Threaded View

  1. #11
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை !!

    பதிவு 1

    வாழ்க்கையில் மமதை நாம் எந்த நிலைமையில் இருந்தாலும் வரவேக்கூடாது என்பதை சித்தரிக்கும் பதிவு இது - கர்வம் (ஈகோ ) உள்ளவர்கள் கடைசி வரை நன்றாக இருந்தார்கள் என்று வரலாறே இல்லை - ராவணனை எடுத்துக்கொள்ளுங்கள் - அவனிடம் இல்லாத நல்ல குணங்களா ?? - ராமனை ஒரு சாதாரண மனிதன் என்று எடை போடும் அளவிற்கு அவனுக்கு மமதை வந்து விட்டது - பத்து தலைகள் இருந்தும் ஒன்றுமே அவன் சாவை தடுக்க முடியவில்லை - எல்லா தலைகளிலும் தேவைக்கு அதிகமான ஈகோவை சேர்த்து வைத்திருந்தான் - கம்சனும் அப்படியே , சிசுபாலனும் அப்படியே ! கழுகு எவ்வளவு மேலே மேலே பறந்தாலும் அதற்க்கு உணவு பூமியில் தான் - தலையை குனிந்துகொண்டுதான் பறக்க வேண்டும் ...



    🌲கண்ணன் ஒய்யாரமாகப் படுத்துக் கொண்டிருந்தான். உறங்கவில்லை. ஆனால், உறங்குவதுபோல் தோற்றம் காட்டிக் கொண்டிருந்தான்.

    🌴 அவன் உறங்குவதாக நினைத்து ஒருபக்கம் கருடனும், கண்ணன் கைச் சக்கரமும் ஏதோ பேசிக் கொண்டிருந்தன.

    🌲கண்ணன் ஒரு முறுவலுடன் அவற்றின் பேச்சைச் செவிமடுத்தான்.

    🌴கருடன் தன் மெல்லிய இறகுகளைக் கூர்மையான அலகால் கோதிக்கொண்டே பெருமை பொங்கச் சொல்லிற்று:

    💥 ""சக்கரமே! திருமால் தான் இப்போது கண்ணனாய் இங்கே வந்திருக்கிறார் தெரியுமல்லவா? அதனால் தான் அவருக்கு எப்போது நான் தேவைப்படுவேனோ என்று இங்கே காத்துக் கொண்டிருக்கிறேன்.

    🌴 கஜேந்திர மோட்சத்தின்போது என் உதவி இல்லாவிட்டால் அவரால் முதலையை வதம் செய்திருக்க முடியுமா என்ன? வாயு வேகம் மனோ வேகம் என்பார்களே, அப்படியல்லவா திருமால் நினைத்த மறுகணம் அவரைச் சுமந்துகொண்டு சம்பவம் நடந்த இடத்திற்குப் பறந்துசென்றேன்!''

    🌼இதைக் கேட்ட சக்கரம் ஒரு சுற்றுச் சுற்றிக்கொண்டே கடகடவென்று சிரித்தது. ""நீ என்ன வேகமாக அவரைத் தூக்கிக் கொண்டு பறந்தாலும் நான் மட்டும் இல்லாவிட்டால் அவர் எப்படி முதலையை வதம் செய்திருக்க முடியும்? என்னை வீசித்தானே அவர் முதலையைக் கொன்றார்?

    🌲நீ திருமாலுக்குச் செய்த உதவியின் பெருமையை விட நான் செய்த உதவியின் பெருமை தான் அதிகம்!''

    🌲கண்ணன் உள்ளூர நகைத்துக் கொண்டான். "இவ்விரண்டிற்கும் சக்தியைக் கொடுத்ததே நான் தான். அப்படியிருக்க இவைகளுக்குத் தான் எத்தனை ஆணவம்? எனக்கு இவை உதவி செய்ததாமே?'

    🌴அதற்குள் சலசலவெனப் பெண்களின் பேச்சுக் குரல் கேட்கவே, கண்ணனின் கவனம் குரல் வந்த பக்கம் திரும்பியது.

    🌴 பேசிக் கொண்டிருந்தவர்கள் அவனது ராணிகள் தான்.

    ( தொடரும் )

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •