Results 1 to 10 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

Threaded View

  1. #11
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கல்தூண்


    சிங்கார சிட்டுத்தான் என்ட புள்ளே
    சிறுவாணித்தண்ணீரு என்ட புள்ளே

    வார்த்தைகளும், வார்த்தைகளைஒலியாக்கிய குரலும்,குரலோடு கலந்து இனிமையாக்கிய இசையையும் இதுவரை கண்டிருக்கிறதா தமிழ்திரை?
    தாலாட்டானாலும் கம்பீரத்தையும் சேர்த்தே விதைப்பது கொங்கு மண்ணுக்கே உண்டான மரபு.
    அன்று"மணப்பாறை மாடுகட்டி மாயவரம் ஏறுபூட்டி" உழவுக்கும், உழவனுக்கும் பெருமை சேர்த்தது.
    சிஙகார சிட்டுத்தான் பாடல் பிறப்புக்கும் அதன் வளர்ப்புக்கும்
    பெருமை சேர்க்கிறது.
    பாடல் சிறப்பாயிருந்தால் மட்டும் போதுமா?அதன் பழம்பெருமை பேச வைக்க யாரால் முடியும்?

    தேவனாய் பிறந்து முதலியாரின் ஆதரவில் வளர்ந்து நாடாருக்கு பெருமை சேர்த்து பரமேஸ்வர கவுண்டராய் வாழ்ந்த நடிகர்திலகத்தால் மட்டுமே முடியும்.
    பாடலைப் பார்ப்போம்.

    சுற்றங்கள் சூழ்ந்திருக்க காப்பியத்தலைவன்(நடிகர்திலகம்)
    தள்ளி நின்றிருக்க நடுக்கூடத்தில் ஊஞ்சல் ஒன்று.சிவப்பு பட்டுடத்தி
    நாயகி(கே ஆர் விஜயா)குழந்தையை ஊஞ்சலிலே இட்டு மெல்ல ஊஞ்சலை ஆட்டிக்கொண்டே
    சிங்கார சிட்டுத்தான் என்ட புள்ள
    சிறுவாணித்தண்ணீரு என்ட புள்ளே கொங்கு நாட்டு அய்யாவு தந்த புள்ள
    கோடானு கோடியிலெ ஒத்த புள்ளே
    என்று பல்லவியில் ஆரம்பிக்கும் பாடல்.
    வட்டார பாஷையில் பாட வேண்டுமென்றால் நன்றாக அந்த பாஷையை கேட்டு பழகி பாடும்போது ஒன்று பாடல் வார்த்தைகளின் உச்சரிப்பில் அந்தப்பாடல் தவறில்லாமல் அமைந்திருக்கலாம்.அதே சமயம் வழக்கமான குரல் நளினம்இல்லாமல் போக வாய்ப்புண்டு. ஜீவன் இருந்தால்
    வட்டார பாஷை கேலிக்கூத்தாக மாறிவிட வாய்ப்புண்டு.அனுபவமும்,திறமையும் கொண்டவர்களுக்கே இது போன்ற பாடல்கள் பிடி கொடுக்கும்.இங்கே இரண்டும் சிறப்பாக அமைந்திருக்கும்.
    முதல் இரண்டு வரிகளுக்குப் பின்னே வரும் பிண்ணனி இசையில்.,வலது தோளை சிறிதாக மெல்ல அசைத்து
    சிறு அசைவில் தலையை ஆட்டி வலது கையை இடுப்பில் ஊன்றி நடிகர்திலகம் தன் இருப்பை காட்டும் விதம் அம்சமானது.இமை முடிஇமை திறப்பதற்குள் முடிந்து விடும் ஷாட்டானாலும் சரி,அதிலும் கூட நடிகர்திலகத்தின் அர்ப்பணிப்பு மெய் சிலிர்க்கும்.அதற்கு சிறு உதாரணம் இந்த பிரேம்.
    "அதுதான்யாநடிகர்திலகம் "
    இந்த வார்த்தைகளை திரையரங்கில் உச்சரிக்காத உதடுகள் உண்டா இத் தமிழ்நாட்டில்?

    மனதை மயக்கும் மதுரகானம் தொடர்கிறது..
    சிங்கார சிட்டுத்தான் என்டபுள்ளே
    சிறுவாணித்தண்ணீரு என்ட புள்ளே
    கொங்குநாட்டு அய்யாவு தந்த புள்ளே
    கோடானு கோடியிலே ஒத்தபுள்ளே

    1981 ஆம் வருடம் மே மாதம் 1ஆம் தேதி தமிழில் அதிகமாக ரசிக்கப்பட்ட
    வார்த்தை "கொங்கு நாட்டு அய்யாவு"ஆகத்தான் இருக்கும்.
    கொங்குநாட்டு அய்யாவு வார்த்தைகளின் போது நடிகர்திலகம் மீசையை முறுக்குவது போல் காட்சி வைத்தால் விசிலும் கைதட்டலும் பறக்குமே என்று அதை காட்சிப்படுத்தியதில் டைரக்டரின் "டச்அப்" அதில் தெரியும்.(டைரக்டர் மேஜர் நடிகர்திலகத்தின் கூடவே நெடுங்காலம் இருந்திருப்பதால் ரசிகர்களின் உணர்ச்சிகள் அவருக்கு நன்றாக தெரிந்திருக்குமே)
    மீசையை முறுக்கி ராஜகளையை காட்டும் அந்தக் காட்சியினால்,

    எங்க ஊர் ராஜா விஜயரகுநாத சேதுபதி மீசையை முறுக்குவது,
    ராஜ ராஜ சோழன் மீசையை முறுக்குவது,
    என்மகனில் ராமையாத்தேவன் மீசையை முறுக்குவது,
    கட்டபொம்மன் மீசையை முறுக்குவது,
    இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.அவர் செய்தது ஒன்றா இரண்டா எடுத்துச்சொல்ல....
    எல்லா உருவங்களும் அவரவர் சிந்தனைகளுக்கு தகுந்தபடி வந்து போகும்.
    காட்சிக்கு வருவோம்.

    அவங்க பாடிட்டாங்க நீங்க சும்மா நின்னுகிட்டு இருக்கீங்களே? நீங்க போயி உங்க சங்கதிய எடுத்து விடுங்க என்று சொந்தம் உசுப்பி விட,
    ஆஜானுபாகுவான அந்த உடம்பை குலுக்கி குலுக்கிஅதையே ஒரு நடனமாக்கி.,
    "இதோ வர்றேன் என்பாட்டை வச்சிக்கிறேன் "
    என்பது போல நடந்து செல்லும் அந்த நடைக்கு தியேட்டரில் இசை கேட்காது.கை தட்டலில் தான் காது கிழியும்.
    'இனி என் முறை' என்பது போல் ஆரம்பிப்பார்.

    நீல மலக் காத்தாக நான் பெத்த புள்ள
    மண்ணாளப் பொறந்தானடி

    நீல மலக் காத்தாக நான் பெத்த புள்ள
    மண்ணாளப் பொறந்தானடி
    அட நீ என்ன தாயாரு நான் தான்டி அப்பேன்
    என்னாலே வந்தானடி

    மழலை ஒன்று பிறக்கும் வரை மனைவியை தாங்குவான் கணவன்.
    மழலை வந்தபின் அதை கொஞ்சி
    சீராட்டும்போது தன் குழந்தைஎன்பதிலே சற்று கர்வம் காட்டுவான்.மனைவியிடத்திலே பாசம் கொண்டிருந்தாலும் தன் பேர் சொல்லும் வாரிசு என்று சொல்வதில் மனைவியை விட அதிக உரிமை தனக்குத்தான் என்பதில் சற்று அகந்தை வருவது கிராமத்து(நகரத்திலும்உண்டு) மனிதர்களிடம் இன்றும் காணப்படும்ஆணாதிக்க வழக்கம்.அதைத்தான் அழகாக பாடலில் நடிகர்திலகம் வெளிப்படுத்தியிருப்பார்.
    'அட நீ என்ன தாயாரு ' என்பதை
    கே ஆர்விஜயாவின் தலையில் முட்டி,
    பார்வையை குழந்தை மேல் வீசிக்காட்டி தகப்பனின் பெருமிதத்தை
    ' நான் தாண்டி அப்பன்'
    என்று பாடி ஒரு தகப்பனின்உணர்ச்சிகளைகாட்டும் அந்த நடிப்பில்தன்னிகரற்று விளங்க நடிகர்திலகததால் மட்டுமே முடியும்.
    'என்னால வந்தானடி '
    என்பது தகப்பனின் உறவையும்உரிமையையும் நிலை நாட்டும் சொல்.அது
    ஆண் கொள்ளும் கர்வம்.அதை வெளிப்படுத்தும்
    அவர் நடிப்பு "சபாஷ்" போட வைக்கும் ஆண்களை.


    இங்கிருந்து அங்கு அம்புஎய்தாகி விட்டது.தாய்க்குலம் விடுமா?யோசிக்கிறது,
    தந்தைக்குலம் தொடுத்த தாக்குதலுக்கு எப்படி எதிர்அம்பு விடுவது என்று.ஒன்றும் பிடிபடவில்லை.

    அட இதுக்கு என்னத்த ரோசனை? பெத்தெடுக்கிற யோக்யதை இல்லாட்டி ஆம்பளைக்கு எப்படி வரும் வீராப்பு?
    தாய்க்குலத்தின் மூத்தகுலம் சங்கதி
    எடுத்துக்கொடுக்க,

    ஆரம்பமாகிறது வார்த்தை யுத்தம்.

    பூமி வளமில்லாமே வெத என்ன ஆகும் ம்... ம்...
    !ஆ... பூமி வளமில்லாமே வெத என்ன ஆகும்*
    தாய் தானே முன்னாலய்யா
    பூமி வளமில்லாமே வெத என்ன ஆகும்*
    தாய் தானே முன்னாலய்யா
    போட்ட வெதை தப்பாமே தந்தாரு சாமி
    கருஉருவாச்சு என்னாலய்யா
    அய்யா உருவாச்சு என்னாலய்யா

    சத்தியத்தின் அடி வேர் எடுத்துக்காட்டப்படுகின்றன.யாரால் இதை மறுதலிக்க முடியும்?சரியான வார்த்தைகள் தானே இது?சாமியை வேறு துணைக்கு அழைக்கிறதே?
    என்ன செய்ய?சவுக்கடி கொடுத்தது தவறோ என்று மூளையை குழப்பச் செய்கிறது?தகப்பன் குலம் மிரண்ட வேளையில்,

    மனுஷனுக்கு விலாசம்அவனோட
    முகந்தான்.ஜாடையைப் பாரு.யாரப் போலய்யா இருக்கு?இதக் கேளப்பா,
    முதிர்ந்த குலம் உசுப்பி விட,

    சற்றுமுன் ஓடிப்போன கர்வம் இப்போது வந்து ஒட்டிக்கொள்ள
    தலையெடுக்கிறது தகப்பனின் வாய்ஜாலம்.

    ஆஹே ஓம் போல பொறந்தானா நான்பெத்த ராசா
    எம் போல இருக்கானடி
    அட ஓம் போல பொறந்தானா நான் பெத்த ராசா
    எம் போல இருக்கானடி
    ஒரு காலம் பொறக்கட்டும் எம் போல ஆவான்
    என் வாக்கு தப்பாதடி
    அடியே என் வாக்கு தப்பாதடி

    மாறி மாறி வீராப்பு பேசிக்கொண்டிருந்தால் குடும்பத்திற்கு ஆகுமா?நல்லகுடும்பம் விட்டுக்கொடுக்கும்.இருவருக்கும் புரிகின்றது.
    "என்ட புள்ளே "இப்போது "அம்மபுள்ளே "
    சிங்கார சிட்டுத்தான் அம்மபுள்ள
    சிறுவாணித்தண்ணீரு அம்மபுள்ள
    கொங்கு நாட்டு அய்யாவு தந்த புள்ளே
    கோடானு கோடியிலே ஒத்தப்புள்ளே
    ஜோஜோரி ஜோஜோரி ஜோஜோரி ஜோஜோரி ஜோஜொரிய்


    மேற்குதொடர்ச்சி மலை அடிவாரம்.கண்ணுக்கெட்டிய தூரம் வரைசெழுமையாகக் காட்சியளிக்கும் வயல்வெளிகள்.எங்கும் பசுமை.நீர்வளங்கள்.இது போன்ற இயற்கைச் சூழலைஅனுபவிக்கும் பாக்கியம் பெரும்பாலும் விவசாயக் குடும்பங்களுக்கே கிடைக்கும்.

    பாடல் ஆரம்பமாகிறது.
    செழித்து வளர்ந்த வயல்வெளிகள் எங்கும்.அதில் ஆகாய நிற த்தில் சட்டையும் வெள்ளை வேட்டியுமாய் நடிகர்திலகம்.வயல் வேலைகளை
    செய்து கொண்டு இருக்கிறார்.கஞ்சிப்பானையை தலையிலும்,குழந்தையை இடுப்பிலும் வைத்து கே ஆர் விஜயா நடந்து வருகிறார்.மனைவியை பார்த்ததும் உற்சாகம் தொற்றிக்கொள்கிறது.
    தலைதான் நரைக்கும்.
    ஆசையுமா?
    எடுத்து விடுகிறார்.

    கஞ்சிக்கலயம் கொண்டு வார புள்ளே
    கட்டாக நீ இருக்க ரெண்டு புள்ள
    என்று அவர் முடிக்க,

    விவசாயிக்கு தெரியும் மண்வாசனை
    மனைவிக்கு தெரியாமல் போகுமா புருஷனின் மன்மத வாசனை?
    இதற்கு வேண்டுமே எல்லை
    அதை மீறினால் தொல்லை
    என்ற அர்த்தத்தில்.,

    அத்தோடு நிற்கட்டும் நம்ம எல்ல
    அடுத்தொன்னு பொறந்துட்டா ரொம்ப தொல்ல
    என்று முடிக்க,

    உடனே சுதாரித்து, தான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என்ற
    கருத்தில்..
    கலங்காத என் தேவ இந்த பூமி
    கடசிப்புள்ள தாண்டி நம்ம பழனிச்சாமி

    பூமியைப் பெருக்கி
    குடும்பத்தை சுருக்கி
    வாழ்வைநிறைக்கலாம் எனும் அர்த்தத்தில் முடிப்பார்.

    பெண்புத்தி முன்புத்தி.
    ஆண்புத்தி அவசரபுத்தி..
    ஒரு வீம்புக்கு ஆசைஇல்ல ன்னு ஆம்பளையை தடுத்தா,
    சரிதானேன்னு ஆம்பள விலக,
    அதையே குத்திக்காட்டுது
    பொம்பள மனசு.

    இருந்தாலும் பொல்லாத ஆளு நீங்க
    இப்படித்தான் முந்தி கூட பேசுநீங்க
    என்று இடிப்பார்.

    நிற்க...

    தன்னந்தனிக்காட்டு ராஜா

    நடிகர்திலகத்தை தாண்டி யாராவது பயணிக்க முடியுமா என்ன?
    கையில் வைத்திருக்கும் மண் வெட்டியை கே ஆர் விஜயா வருவதைப் பார்த்ததும்,எத்தனை நேரந்தான் இதையே புடிச்சுட்டிருக்கிறது ன்னு அப்படியே வலது கையால தூக்கி எறிவார் பாருங்கள்.சிரிப்பும்,ரசனையும் வரவழைக்கும் நமக்கு.கவுண்டரா காட்டு வேலை செஞ்சாலும் நடிகர்திலகம் நடிப்புக்கு திலகம்தான்.மண்வெட்டி தூக்கி எறியும் ஸ்டைலே தனி.
    வேட்டியை ரெண்டு கையால தூக்கிக்கிட்டு வலது கால் மாத்தி இடதுகாலு,இடதுகால் மாத்தி வலதுகாலு ன்னு வயக்காட்டுல ஆடற அழகே அழகு. அதோட தொடர்ச்சியா தாளத்துக்கு ஏற்றமாதிரி அவர் ஆடிக்கொண்டே கொஞ்சம் லாங்கா டான்ஸ் ஆடிட்டு வர்ற அந்த கிரேன் ஷாட்டுல நடிகர்திலகத்தோட
    டான்ஸ் மூவ்மென்ட் படு எதார்த்தம்.

    படத்தில் டான்ஸ் ஆட ஸ்கோப் உள்ள ஒரே இடம் அதுதான்.கிடச்ச கேப்புல பூந்து விளையாடிருப்பார். அந்த ரெண்டே ஸ்டெப்ல படம் பார்க்கிற அத்தன பேரையும் ஆட வச்சுருவாரு.
    தலைமுடிக் கொண்டையும் கதிர் அரிவாளை ஞாபகப்படுத்தும் அந்த மீசையும்,வெகு பொருத்தம்.மேல் பட்டன் இரண்டும் போடாத நிலையில் சாதாரணசட்டைதான்
    அணிந்திருப்பார்.!ஆனாலும் அதில் இருக்கும் கம்பீரம் வியக்க வைக்கும்.

    தொடர்கிறது...

    பெற்றோரின் பெரும் சந்தோசங்களில் ஒன்று தங்கள் குழந்தை அம்மா என்றும் அப்பா என்றும் அழைக்கும் முதல் வார்த்தைகளுக்குத்தான்.
    பழனிச்சாமி என்று பெயர் வைக்கப்பட்ட அந்த குழந்தை சற்று
    பெரியவனாகி அம்மா அப்பா என்றழைக்கிறான்.
    இவ்விடத்தில ஒருஉண்மையான தகப்பனின் மனநிலையை நடிகர்திலகம் வெளிப்படுத்தும் அழகே அழகு.கிராமத்து பாமரனின் இயல்புத்தன்மை யை அப்படியே பிரதிபலிப்பார்.
    குழந்தை அப்பா என்று அழைத்ததைப் பார்த்ததும்
    " அட்ரா சக்கன்னானா ஓஹோய்"
    சத்தமிட்டு ஒத்தக்கால தூக்கி
    உற்சாக ஆட்டம் போடுவது
    அட்டகாசம்.

    நல்லா தான் பேசிப் புட்டான் நம்ம கொழந்தே
    நாலும் படிக்கப் போறான் நல்லா வளந்தே
    அட நல்லா தான் பேசிப் புட்டான் நம்ம கொழந்தே
    நாலும் படிக்கப் போறான் நல்லா வளந்தே
    பெண்அம்மாவை கும்பிட்டேன் அள்ளித் தான் கொடுத்தாள்
    ஆயிரம் பான வெச்சு பொங்கல் படைப்பேன்
    இருவர்அம்மாவை கும்பிட்டோம் அள்ளித் தான் கொடுத்தாள்
    ஆயிரம் பான வெச்சு பொங்கல் படைப்போம் ( இசை )
    இருவர்ஹஹ்ஹா... ஹஹ்ஹா... ஹஹ்ஹா... ஹஹ்ஹா...*
    ஹா... ஹா... ஹா... ஹா...*ஹா... ஹா...
    ஹா... ஹா... *ஹா... ஹா... ஹா...*

    சுபம்.
    நடிகர்திலகத்தின் நடிப்பு ஒரு கோணம்
    பாடலின் சிறப்பு ஒரு கோணம்
    கிராமியம் ஒரு கோணம்
    இந்த மூன்று கோணங்களும்
    கலந்து பயணிக்கும்
    மேற்கண்ட எழுத்து நடை.

    நன்றி..

    செந்தில்வேல்.


    கொங்கு நாட்டு அய்யாவு

    வயல்காட்டில் கொண்டாட்டம்

    அட்ராசச்கைன்னானேன்
    பாடல்:
    பல்லவி
    பெண்சிங்காரச் சிட்டுத் தான் என்டே புள்ள
    சிறுவாணித் தண்ணீரு என்டே புள்ள
    கொங்கு நாட்டையாவு தந்த புள்ள
    கோடான கோடியில ஒத்தப் புள்ள
    கொங்கு நாட்டையாவு தந்த புள்ள
    கோடான கோடியில ஒத்தப் புள்ள
    சிங்காரச் சிட்டுத் தான் என்டே புள்ள
    சிறுவாணித் தண்ணீரு என்டே புள்ள

    இசைசரணம் - 1
    ஆண்நீல மலக் காத்தாக நான் பெத்த புள்ள
    மண்ணாளப் பொறந்தானடி
    நீல மலக் காத்தாக நான் பெத்த புள்ள
    மண்ணாளப் பொறந்தானடி
    அட நீ என்ன தாயாரு நான் தான்டி அப்பேன்
    என்னாலே வந்தானடி
    அட நீ என்ன தாயாரு நான் தான்டி அப்பேன்
    என்னாலே வந்தானடி
    சிங்காரச் சிட்டுத் தான் என்டே புள்ள
    சிறுவாணித் தண்ணீரு என்டே புள்ள

    இசைசரணம் - 2
    பெண்பூமி வளமில்லாமே வெத என்ன ஆகும் ம்... ம்...
    ஆ... பூமி வளமில்லாமே வெத என்ன ஆகும்*
    தாய் தானே முன்னாலய்யா
    பூமி வளமில்லாமே வெத என்ன ஆகும்*
    தாய் தானே முன்னாலய்யா
    போட்ட வெதை தப்பாமே தந்தாரு
    கருஉருவாச்சு என்னாலய்யா
    அய்யா உருவாச்சு என்னாலய்யா

    இசைசரணம் - 3
    ஆண்அவ போல பொறந்தானா நீ பெத்த ராசா*
    கேள்றா டேய்
    ஆஹே ஓம் போல பொறந்தானா நான்பெத்த ராசா
    எம் போல இருக்கானடி
    அட ஓம் போல பொறந்தானா நான் பெத்த ராசா
    எம் போல இருக்கானடி
    ஒரு காலம் பொறக்கட்டும் எம் போல ஆவான்
    என் வாக்கு தப்பாதடி
    அடியே என் வாக்கு தப்பாதடி ( இசை )

    சரணம்4
    ஆண்:கஞ்சிக்கலயம் கொண்டு வார புள்ளே
    கட்டாக நீ இருக்க ரெண்டு புள்ள

    பெண்:அத்தோடு நிற்கட்டும் நம்ம எல்ல
    அடுத்தொன்னு பொறந்துட்டா ரொம்ப தொல்ல
    பெண்இருந்தாலும் பொல்லாத ஆளு நீங்க
    இப்படித் தான் முந்தி கூட பேசினீங்க
    இருந்தாலும் பொல்லாத ஆளு நீங்க
    இப்படித் தான் முந்தி கூட பேசினீங்க

    இருவர்:சிங்கார சிட்டுத்தான் அம்மபுள்ள
    சிறுவாணித்தண்ணீரு அம்மபுள்ள
    கொங்கு நாட்டு அய்யாவு தந்த புள்ளே
    கோடானு கோடியிலே ஒத்தப்புள்ளே
    ஜோஜோரி ஜோஜோரி ஜோஜோரி ஜோஜோரி ஜோஜொரிய்
    குழந்தைஅம்மா... அப்பா... அம்மா...

    ஆண்அட்ரா சக்கன்னானா ஓஹோய்...

    இசைசரணம் - 5
    ஆண்நல்லா தான் பேசிப் புட்டான் நம்ம கொழந்தே
    நாலும் படிக்கப் போறான் நல்லா வளந்தே
    அட நல்லா தான் பேசிப் புட்டான் நம்ம கொழந்தே
    நாலும் படிக்கப் போறான் நல்லா வளந்தே
    பெண்அம்மாவை கும்பிட்டேன் அள்ளித் தான் கொடுத்தாள்
    ஆயிரம் பான வெச்சு பொங்கல் படைப்பேன்
    இருவர்:அம்மாவை கும்பிட்டோம் அள்ளித் தான் கொடுத்தாள்
    ஆயிரம் பான வெச்சு பொங்கல் படைப்போம் ( இசை )

    இருவர்ஹஹ்ஹா... ஹஹ்ஹா... ஹஹ்ஹா... ஹஹ்ஹா...*
    ஹா... ஹா... ஹா... ஹா...*
    ஹா... ஹா... ஹா... ஹா... *ஹா... ஹா... ஹா...*
    பெண்ஹஹ்ஹா... ஹஹ்ஹா... ஹஹ்ஹா... ஹஹ்ஹா...*
    ஹா... ஹா... ஹா... ஹா...*

    படப் பதிவு: டி.எம்.சௌந்தரராஜன் Kalthoon (1981) 2:

  2. Thanks vasudevan31355 thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •