-
11th October 2015, 08:35 PM
#1
Junior Member
Seasoned Hubber
நன்றி திரு.சுகராம் அவர்களே. கூண்டுக்கிளி படத்தின் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் அவர்கள் தான் என்பது மிகச் சரியானதே. மலைக்கள்ளன் படத்தின் இசையமைப்பாளர் s.m.சுப்பையாநாயுடு என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக M.S.சுப்பையா நாயுடு என்று தினமலர் வீடியோவில் தவறாக குறிப்பிடப்பட்டிருந்ததை சுட்டிக்காட்ட முயன்றபோது ஏற்பட்ட தவறுக்கு வருந்துகிறேன். தவறை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.கே.வி.மகாதேவன் அவர்கள் இசையமைத்த மயக்கும் மாலைப் பொழுதே பாடல் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்த குலேபகாவலி படத்தில் இடம் பெற்றது என்ற தகவலும் சரியானதே. ஆனால் இரு திலகங்களின் போட்டியால் இந்தப் பாடல் கைவிடப் படவில்லை. படத்தில் டூயட் வைக்க வாய்ப்பில்லாததால் அந்தப் பாடல் கைவிடப்பட்டதாக படத்தின் இயக்குநர் ராமண்ணா அவர்கள் தினதந்திக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். தனது மனம் கவர்ந்த அந்தப் பாடலை பின்னர் குலேபகாவலி படத்தில் பயன்படுத்திக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Last edited by jaisankar68; 12th October 2015 at 04:45 AM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
11th October 2015 08:35 PM
# ADS
Circuit advertisement
Bookmarks