-
11th October 2015, 11:12 PM
#11
Junior Member
Platinum Hubber

Originally Posted by
ravichandrran
மக்கள் திலகத்தின் பக்தரும் மக்கள் திலகத்தின் 30 படங்களின் கோவை மாவட்ட உரிமையை வைத்து தொடர்ந்து கோவையில் திரையிட்டு பொன்மனசெம்மலின் ரசிகர்களை மகிழ்வித்து வருபவரும் எனது அன்பு நண்பருமான திரு உலகப்பன் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தாம் பணியாற்றி வந்த நிறுவனத்தில் இருந்து பணி ஓய்வு பெற்றார். அதற்காக (மக்கள் திலகத்தின் திருக்கரங்களால் திறக்கப்பட்ட) தாய் ஹோட்டல் - கோவையில் விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அவ்விழாவில் நானும் மக்கள் திலகத்தின் பக்தர்களும் கலந்துகொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து நினைவு பரிசளிதோம்.
வருகின்ற நாட்களில் மேலும் மக்கள் திலகத்தின் அதிக படங்களின் கோவை உரிமையைப் பெற்று இன்னும் அதிக படங்களை கோவையில் திரையிட இருப்பதாக அவர் என்னிடம் தெரிவித்தார். தற்பொழுது கோவை ராயல் திரை அரங்கில் வெற்றிகரமாக ஓடி வரும் பல்லாண்டு வாழ்க திரைக்காவியம் இவர் உரிமை பெற்றதாகும். நமது திரியின் சார்பாக அவர் பல்லாண்டு வாழ்ந்து மக்கள் திலகத்தின் பல படங்களை திரும்ப திரும்ப கோவையில் திரையிட்டு அனைவரையும் மகிழ்விக்கட்டும்.
அன்புடன்
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
நண்பர் திரு.ரவிச்சந்திரன் அவர்களுக்கு வணக்கம்.
திரு. உலகப்பன் அவர்களை கடந்த ஆண்டில், சென்னையில் கொருக்குபேட்டையில்
திரைப்பட விநியோகஸ்தர் திரு. நீலகண்டன் அவர்களின் குடும்ப திருமண நிகழ்ச்சியில்நேரில் சந்தித்து உரையாடியது பசுமையான நினைவுகள்.
திரு. உலகப்பன் அவர்கள் நீண்ட ஆயுளுடன், வளமான, நலமான, சந்தோஷமாக
குடும்பப் பணியில் ஈடுபடுவதோடு, நேரம் கிடைக்கும்போதெல்லாம் புரட்சி தலைவர்
புகழ் பாடும் பணியில் தன்னை அர்பணித்துக் கொண்டு ரசிகர்களை மகிழ்விப்பார்
என்கிற நம்பிக்கையோடு நல்வாழ்த்துக்கள்.
தயவு செய்து என்னுடைய வாழ்த்துக்களை , கோவையில் அவரை சந்திக்கும்போது
நேரில் தெரிவிக்கும்படி அன்பு வேண்டுகோள்.
ஆர். லோகநாதன்.
-
11th October 2015 11:12 PM
# ADS
Circuit advertisement
Bookmarks