சின்னா!
'இந்திரன் சந்திரன்.(தெலுங்கு ஒரிஜினல் 'இந்த்ருடு சந்த்ருடு'...'இந்தியில் "மேயர் சாப்")
நேற்று மாதிரியே கமல் நடித்த தெலுகு படத்தின் 'டப்'. அதே இளையராஜா இசை. ஆனா ஜோடி விஜயசாந்தி. கமல் ஹீரோ. மேயர் மற்றும் நாயகன்.
சின்னா சொன்னா 'நூறு' இதில் வரும். இதுவும் எனக்கு மிக மிக மிக பிடித்தமான பட்டு.
'நூறு நூறு நூறு முத்தம் பூப்போலே
ஹொயன்னா ஹொய்ன்னா...
கேளு கேளு கேக்கும் போது தந்தாலே
ஹொயன்னா ஹொய்ன்னா...
காதல் மன்னா கை மேல் மெய் பட்டு
கனியும் மொட்டு வாய்யா நீதான்
சூடும் இங்கு ஏற பாய் போட
நானும் இங்கு ஆனேன் ....
ஆரம்பத்தில் கமலும், விஜயசாந்தியும் பரிமாற்றுக் கொள்ளும் முத்தப் பரிமாற்றங்களுக்குதான் எவ்வவளவு சப்தம்! (முத்த சத்தம் கொடுத்த 'ராஜா' வுக்குத்தான் முத்தம் தர வேண்டும்... கையில்)![]()
பாலாவும் சித்ராவும் கலக்கல்.
சரண டியூன் அமர்க்களம்.
'அந்தியில் தென்றலில் பூ மணக்கும் நாழியாச்சு (சித்ரா பின்னுவார்)
தேன்துளி நான் தர தீண்டி மெல்ல ஆசையாச்சு
ஆசையின் ஒத்திகை இப்பதானோ
அட்டை போல் ஒட்டிடும் எண்ணம்தானோ
சின்ன மலர் தென் சொட்டாதோ
வண்ண மலர் தோள் தொத்தாதோ'
சித்ரா தொடர,
பாலா,
'பொன்னான ஒரே முத்தம் தந்து
புண்ணாச்சா மலர்ப்பாவை இதழே!' (என்னா ஒரு மொழி பெயர்ப்பு!)![]()
என்று அமர்க்களம் பண்ணுவார்.
சின்னா! பாலாவின் அந்த 'ச்சீ ச்சீ' வெட்கம் பொம்பளை மாதிரி அடி தூள். கமல் கால்களை அப்படி அகட்டி வைப்பார்.
தெலுங்கு வார்த்தைகளுக்கு உதட்டசைவுக்கு ஏற்ப தமிழில் வார்த்தைகள் போடுவது ரொம்பக் கடினம்தான். தெலுங்கில் அர்த்தம் வேறு. தமிழில் அர்த்தம் வேறு என்று இருக்கும். அதனால் நடிக நடிகையர் செய்யும் பாவனைகளுக்கும், பாட்டிற்கும் சில சமயங்களில் சம்பந்தம் இருக்காது.
'ஆசையின் ஒத்திகை இப்பதானோ
அட்டை போல் ஒட்டிடும் எண்ணம்தானோ'
வரிகளுக்கு கமல் செய்வதில் சம்பந்தமே இருக்காது. பின்னால் கையை சுட்டிக் காட்டுவார். தெலுங்கில் அர்த்தத்துக்குத் தக்கபடி அது சரியாக இருக்கும். (அங்கே 'நானாகாரு' வாட்ச் பண்றார் என்பது போல அர்த்தம்) தமிழில் 'அட்டை போல் ஒட்டிடும் எண்ணம்தானோ?' என்று சம்பந்தமில்லாத வரிகள் உதட்டசைவுக்காக வேற மாதிரி வந்து உட்கார்ந்து இருக்கும். அதனால் தமிழில் பார்க்கும் போது நடிப்பசைவுகள் மாறுவது போல் தெரியும்
எப்படியிருந்தால் என்ன! இசைக்கும், ரசனைக்கும் மொழி ஒருதடையே அல்ல.
அருமையான ராகமும், அமர்க்களமான மியூஸிக்கும் கொண்ட
ரொம்ப அற்புதமான சாங்.
'வாடைதான் என் நரம்பை வீணையாக மீட்டுமம்மா
கோதையின் பாட்டுதான் ஆசை அம்பு போடுமம்மா'
'நானும்தான் காணத்தான் ராஜலீலை
தாகமே கூடுது தொட்ட வேளை'
ரொம்ப அருமையான சாங்.
பி.எல்.நாராயணா
நடுநடுவில் இருவரையும் மறைந்து வாட்ச் பண்ணி கண்டக்டர் விசில் ஊதி டைரெக்ட் பண்ணப் பார்க்கும் அந்த ஒல்லி தெலுகு நடிகர் பி.எல்.நாராயணா செம இன்ட்ரெஸ்ட்டிங்![]()
இதுவே தெலுங்கு ஒரிஜினல் 'இந்த்ருடு சந்த்ருடு' வில். பெண்குரல் ஜானகி.
'Dora Dora Donga Muddu Dobuchi in Indrudu Chandrudu'
தமிழ்ப் பாட்டுக்கு ஈஸியா அலசி பதிவு போட்டுடலாம் சின்னா! ஆனா இந்த தெலுகு டப்பிங் பாட்டிற்கு பா(ட்)டு பட வேண்டியதா இருக்கு. ஒவ்வொன்னையும் பார்த்து பார்த்து தப்பில்லாம தரணுமே!
எனக்குப் புடிச்ச பாடல் அப்படிங்கறதால பாலா பாடல் ஆய்வு போல பெரிசாப் போச்சு.பாலா பாடல் ஆய்வு போலவும் ஆச்சு.
Bookmarks